Saturday, March 29, 2014

@ 5:21 PM எழுதியவர்: வரவனையான்
சார்லியின் லூனா மொபட்டில் கடற்கரையும் சார்லியும் நகரத்தை

நோக்கி போய்க்கொண்டிருந்தனர். பசி வயிற்றைக் கிள்ளியது. ”8 மணிக்கே

வெயில் கொலை வெறியாய் அடிக்குது. இன்னைக்கு பொழுதுக்கும்

அடிக்கிற வெயிலு இப்பவே அடிச்சு முடிப்பது போல அடிக்குது”

என்றார்.ஆமாங்க சாமி ! என்று சார்லியும் ஒத்துக்கொள்ள இனி இவனிடம்

அமொதிக்கிற மாதிரி எதுவும் கேக்கக்கூடாது, எத சொன்னாலும்

வில்லுப்பாட்டுல துணையாளு மாதிரி ‘ஆமடி தங்கம்’ போடுவான்

என்று நினைத்தார். பிடிக்கும் என்றாலும் இப்போதைக்கு அவர் இருக்கும்

மனநிலையில் இது போன்ற ஜால்ரா சத்தத்தை விரும்பவில்லை. அவரின்

மனசெல்லாம் பெரியாம்பிளை ஏட்டய்யா ஏன் இப்படி செஞ்சாருன்னு

தெரியவரணும். அவருலாம் டூட்டியில இல்லாம போறது இந்த பகுதி

போலிசுக்குத்தான் சிரமம். களவு போன இடத்தை பாத்தோன்னே

சொல்லுவாரு “அய்யா பாத்தீங்களா அந்த கணக்கன்பட்டியான் பெயிலில்

வந்துட்டான் போல”ன்னு . எவன் எவன் எப்படி திருடுவான்னு

அத்தனையும் அவருக்கு அத்துப்படி. ஒரு தடவ இண்டர்-செக்கிங்

வந்த ஆங்கிலோ இந்திய டிஎஸ்பி இவரு திறமையை பாத்து என்

கூட மெட்ராஸ் வந்திடுய்யான்னு கூப்பிட்டாரு “இல்லைங்கய்யா என்

திறமையெல்லாம் இந்த பக்கத்து தெல்லவாரி நாய்ககிட்ட தான்ய்யா

வேலையாகும்” என்று மறுத்து விட்டவர்.


ஒம்போது ஒம்போதறைக்குல்லாம் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்

கொடுத்துருவாய்ங்க. நாம நேத்து அங்கின இருந்தாவாது எதாவது

சொல்லி காப்பாத்தி கொடுத்திருக்கலாம். சரி முதல்ல வீட்டில போய்

குளிச்சிட்டு பெரியாஸ்பத்திரிக்கு ஓடலாம்ன்னு முடிவு செய்தார்.

வண்டிதான் அவரோட மனசு வேகத்துக்கு ஒத்துழைக்கவில்லை.

ரோட்டின் ஓரத்தில் பனம்பழங்கள் கொத்தோடு சீந்துவாரற்று கிடந்தன.

தெக்கத்தி பக்கம் மாதிரி இங்கிட்டு பனம்பழத்தையெல்லாம் சாப்பிட

மாட்டேங்கிறாங்க. தூத்துக்குடி வள்ளியூரு செந்தூர் பக்கமெல்லாம்

இதை வச்சு இனிப்பே செய்வாங்க. இவனுங்க பாலையை சீவி கள்ளு

வடிச்சு குடிச்சிட்டு குப்புறபடுக்கத்தான் லாயக்கு.சீந்துவாரற்று கிடந்த பனம்பழங்களை பார்த்ததும் “செருப்பு

தெருவில் கிடப்பதும், சிறுக்கி சந்தில் திரிவதும் குத்துவாரற்று

குத்துவாரற்று” நேற்று இரவு ரயில் கழிப்பறையில் எழுதியிருந்த

வாசகம் நினைவுக்கு வந்து சிரிப்பு வந்தது . செருப்புக்கும் குத்துவார்

இல்லாட்டி போடமுடியாது, சிறுக்கிக்கும் குத்துவார் இல்லாட்டி

பொழப்போடாதுன்னு சொல்றான். கக்கூசு கக்கூசுக்கு இதுவே

வேலையா திரியுறாய்ங்க கிறுக்குப்பயலுக. அன்னைக்கு அப்படித்தான்

காசு கொடுத்து பேல்ற கக்கூசுல அந்த பக்கம் ஆம்பிளைக வரிசையில

கடைசி கக்கூசுல இருந்து இந்த பக்கம் பொம்பளைக கக்கூசுக்கு

வந்த தண்ணி பைப்ப சுத்தி ஆணியை வச்சு ஓட்டைய பெரிசு பண்ணி

பாத்திருக்கான் ஒருத்தன். அவனை புடிச்சாந்தாய்ங்க. ஏண்டா கால் இஞ்ச்

ஓட்டை வழியா மசுருகூட தெரியாதே எதுக்குடா இந்த வேலைன்னு

சூத்துலேயே மிதிச்சா “அய்யா பீடி வாசனை வந்ததுங்கய்யா,

என்னான்னு பாக்கனும்ன்னு ஆவலாயிடுச்சு:ங்கிறான். ஒரே நாள்

எப்படிடா அவ்வளவு நீள சொவத்துல ஓட்டை போட்டேன்னு கேட்டா 40-

50 நாளா டெய்லி கொஞ்சம் கொஞ்சமா நோண்டினேன்னான்.


பத்து காசு கக்கூசு அது . காசு கொடுத்து போறதுன்னாலும்

ஒரு அளவு இருக்கில்லையா போனவன் அரை மணி நேரமா

காணாமேன்னு கூப்பிட்டு பாத்திருக்கான். தட்டியும் பாத்திருக்கான்,வேற

வழியில்லாம கதவுல எட்டி பாக்கும்போது அய்யா ஆயிரத்தில் ஒருவன்

நம்பியாரு குழாய் பைனாக்குலரில பாக்குறது போல பொம்பளைக

கக்கூசை பாத்த்திட்டு இருந்துருக்கான். அங்ககே பொடனில நாலு

போட்டு வெரட்டி விடவேண்டிதானே பெரிய மனோகர சிவாஜிய

புடிச்சாரா மாதிரி இந்த வெண்ணைக்கு நாலைஞ்சு பேரு. போங்கடா

பொழப்பத்தவய்களான்னு விரட்டியதும் நினைவுக்கு வந்தது.”யோவ் நேரு, இவனை பி.எஸ்.ஆர் சர்ச் பண்ணி அண்ணாகயித்த

அத்து ஒக்கார வையி.. இவன் பேருல என்ன சுதந்திர போரட்ட

கேஸா போடமுடியும், தண்ணிய போட்டு அநாகரீகமா பேசுனான்னு

நியூசென்ஸ் கேஸை போட்டு கோர்ட்டுக்கு அனுப்பிவுடு””காசு வச்சிருக்கியாடா முன்சீப் அய்யா 20 – 30 ரூவா அவரு மூடை

பொறுத்து பைன் போடுவாருன்னு” கேட்டபடியே கான்ஸ்டபிள் நேரு

அவனது சட்டை டவுசர் பைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.


அய்யா இவன்கிட்ட இதாங்கய்யா இருக்குது என்று கைவிரித்து

காட்டினார் நேரு. 20 காசு ஐந்தும் 10 காசு ஐந்தும் மூன்று

வாரயிதழ்களில் கிழிக்கப்பட்ட தாள்களும் இருந்தன.


ஒரு தாளில் ”யோக்” பாடி பிரா விளம்பரம். ஒரு பெண் பாடியுடன்

நின்றிருந்தாள். மற்றொன்றில் இரட்டை ஜடை போட்ட ஒரு பெண்

ஊஞ்சலாடும் தொடர்கதை ஒன்றின் ஓவியம். இன்னொன்றில்

ஒய்.கே.சரோஜா என்கிற நடிகை அம்மனாக நடித்த படத்தின் ஸ்டில்

இருந்தது. ’ ரெண்டு ரூவா அம்பது காசுதான் இருக்கு, ரீமாண்ட்தாண்டி,

நீ போயி ஜெயிலில் களி தின்னுகிட்டே கக்கூசில ஓட்டை போட்டு

ஒண்ணுக்கடிக்கிறத சீன் பாத்த கதையை சொல்லு’ என்றபடியே இந்த

படத்தயெல்லாம் எதுக்குடா வச்சிருக்கிற என்றார்.


 இல்லங்ய்யா எப்பையாவது எடுத்து பாத்துகுவேய்ங்க என்றான். “

அய்யா, இவனை விசாரிட்டேன், பஸ்ஸ்டாண்ட சுத்தியிருக்கிற தெருவோர

ஓட்டலில எல்லாம் ராத்திரி பாத்திரம் வெளக்கி கொடுக்குறானாம், இவன்

பட்ட பெயரு கைமூட்டி கந்தசாமியாம்”ஓகோ அப்ப இந்த படமெல்லாம் அய்யா அப்பகைப்ப ’கரவேல் போற்றி’

பாடத்தானா, பாடி பிரா வெளம்பரம் சரி , இது எதுக்குடா பொண்ணு

ஊஞ்சலாடுறது. அத பாத்து என்னாவப்போவுது.


இல்லங்கய்யா ஒருதடவ சொந்தகார பொண்ண ஊஞ்சலாட்டிகிட்டு

இருந்தேன், அப்பத்தான் மொத மொத விசுக்குன்னு காத்துல பாவாடை

தூக்கனப்ப பாத்துபுட்டேன். அதனால தப்பான வேலை செய்யும்போது

ஞாபகம் வர்றதுக்காக இந்த படம் வச்சிருக்கென்.


குபுக்கென்று சிரிப்பு வந்தது. இது போன்ற அனுபவம் கடற்கரைக்கும்

ஒரு ஓடையொன்றில் ஏற்பட்டிருக்கிறது. குளித்து விட்டு எழுந்த ஒன்று

விட்ட அக்கா கையிலிருந்து விழப்போன துவைத்த துணியை பிடிக்கும்

முயற்சியில் வாயில் கவ்வியிருந்த பாவாடையை விட்டுவிட ஈர

உடம்பில் வெயில்பட்டு தகதகக்கும் பெண்ணின் மேனிதான் தெரிந்தது

உறவு முறையெல்லாம் மூளைக்கு எட்டவில்லை.


அதென்னாடா மூணாவதா சாமி படம், செய்யறதை செஞ்சிட்டு தலைய

செரச்சிட்டா போதுங்கிற மாதிரி மன்னிப்பு கேக்கவா என்றார் கடற்கரை.

'இல்லைங்க இந்த படம் ஒரு நாளைக்குன்னா அது ஒரு நாளைக்கு "

என்று கைமூட்டி கந்தசாமி சொல்லிக்கொண்டிரும்போதே நேரு போலீஸ்

லத்தியால் அவனின் முதுகில் அடிக்க ஆரம்பித்தார்.


” ஏண்டா கை அடிக்கிறதே தப்பு இதுல அம்மன் வேஷத்தில இருக்கிற

பொம்பிளை படத்த பாத்து வேற அடிப்பியான்னு” சுத்தி சுத்தி வந்து

அடித்துக்கொண்டிருந்தார்.


தனக்கு கீழ் வேலை பார்க்கும் போலீசார் விசாரணையின் போது

அடித்தால் கடற்கரை தடுப்பதில்லை. தடுத்தால் பின்னர் வேறு

விசாரனைகளின் போது ஒத்துழைக்கமாட்டார்கள். கடற்கரை

விசாரித்துக்கொண்டிருக்கையில் கைக்கடிகாரத்தை மேலேற்றினால்

பக்கத்தில் நிற்கும் போலீசார் அடிக்க வேண்டும் என்பது அந்த

கச்சேரியில் விதி. அது போல அவருக்கு கீழான போலீஸ்

அடித்துக்கொண்டிருக்கும் போது தடுக்ககூடாதென்பதும்

எழுதப்படாத விதி. தடுத்தால் இன்ஸ்பெக்டர் அய்யா நல்லவரு அந்த

போலீசுகாரன்தான் அடிச்சுகிட்டே இருந்தான் என்று பேச்சு கிளம்பும்.  ரொம்ப

ஓவராக போகும் போது மட்டும் ,  செத்துற போறாய்ன்யா என்பதான் கோர்ட்

வேர்ட், அப்பவும் அடி உடனே நிக்காது கொஞ்சம் கொஞ்சமாகத்தான்

குறையும்.


நேரு போலீஸ் சாமியாடி, அந்தாளு குலதெய்வம் கோயிலுல இவருதான்

பூசாரி வேற. மாசி செவன் ராத்திரிக்கு 21 நாளைக்கு முன்னாடி

இருந்தே கையில கங்கணம் மாலைன்னு ஸ்டேசனையும் சாமியார்

மடம் மாதிரி ஆக்கிருவாங்க. கூட தொணைக்கு பெரியாம்பிளையும்

சேர்ந்துகுவாப்ல. அந்தாளும் நேரு போலீசும் சாமி கும்புடற வகையில

மாமன் மச்சினைங்க. இதுல பெரியாம்பிளை பொண்டாட்டி பக்கம் பெரிய

கூட்டம் செய்முறை செஞ்சே தாலியந்து கெடக்குறாப்ல.


சின்ன போலீசு அடிக்கிறதை நிப்பாட்ட ஒரே வழி யோவ் அங்கிட்டு

கூட்டிட்டு போய் விசாரிங்கய்யான்னு சொல்லுறதுதான். அதுதான்

சிக்னலு. ஆனாலும் அவன் அந்த அம்மன் வேஷம் போட்ட நடிகையோட

படத்தையும் பாடி பிரா வெளம்பர மாதிரிதான்னு அந்த நேரத்தில

பயன்படுத்துறேன்னு சொன்னது கடற்கரைக்கு வியப்புத்தான் வந்தது.


இருக்காதா பின்ன பஸ் ஸ்டாண்டில பாத்திரம் வெளக்குற வெம்போடுக்கும்

டிகிரி முடிச்சி வேலைக்கு சேர்ந்து எஸ்.ஐயிலிருந்து இன்ஸ்பெக்டரான

தனக்கும் ஒரே ரசனை .இதை எந்த வகையில் சேர்ப்பது.


அன்னைக்கு ஒரு நாள் வடக்கே இருந்து மத்திய அமைச்சரும் அவரு

பொண்டாட்டியும் கொடைக்கானலுக்கு வந்து காஷ்மீரத்து சிங்கம்

வீட்டுச்சிறையாக அடைக்கப்பட்டிருந்த கோஹினூர் மாளிகையில்

தங்கி விட்டு டிரெய்ன் ஏற கொடைரோடு ரயில்வே ஸ்டேசனுக்கு

வர இருந்தனர். பந்தோபஸ்துக்காக திடீரென்று கடற்கரையை போக

சொல்லி மைக் ஒன்னிலிருந்து வயர்லெஸ்ஸில் தகவல். மைக்

ஒன் என்பது பெரியய்யா ஆபிஸு வயர்லெஸ். மைக் டூ என்பது

பெரிய்யாவொட வயர்லெஸ். போதையில சகதியில பொரள்ற

எருமையாட்டம் பொரண்டுகிட்டு இருந்தாலும் எந்த போலீஸ்காரனுக்கு

“மைக் ஒன் காலிங் “ என்றோ மைக் டூ காலிங் என்றோ வயர்லெஸின்

குரல் கேட்டால். சட்டுனு பூராப்போதையும் வடிஞ்சிடும். விவிஐபி

விசிட்டுக்குலாம் இப்படித்தான் திடீர்ன்னுதான் பந்தோபஸ்த் டுயூட்டி

போடுவாங்க. முன்னக்கூடி சொன்னா எதும் சதி செயலுக்கு துணை

போயிருவாங்கன்னு இந்த ஏற்பாடு. ஆனா ஸ்பாட்டுக்கு எஸ்.பி

இன்ஸ்பெக்டர், ( எஸ்.பி இன்ஸ்பெக்டர் என்பவர் எஸ்.பிக்கு மட்டும் பதில்

சொல்லும் கடமைப்பட்டவர் )  ரிசர்வ் போலீசுலாம் மொதல்லவே

போயிருவாங்க.

பெரியய்யாவுக்கு நம்பிக்கையான ஆளுதான் எஸ்.பி இன்ஸ்பெகடராக

இருப்பாங்க.

கடற்கரையை பந்தோபஸ்துக்கு போக சொல்லி வயர்லெஸ் தகவல்

வந்த அடுத்த நிமிசமே விஐபி எஸ்கார்ட் வண்டியில இருந்து

வயர்லெஸ் தகவல் வந்தது “வத்தலகுண்டு பாஸிங் ஓவர்” என்று.

ஏன்யா சின்னாளப்பட்டி ஸ்டேசன் இன்ஸ்பெகடர் என்ன வயசுக்கு

வந்திட்டானாமா, அவன் ஸ்டேசனிலிருந்து கொடைரோடு பத்து கிலோ

மீட்டருதானே, இங்கிருந்து 25 கிலோமீட்டரு இப்பவே வத்தலகுண்டு

தாண்டிட்டாய்ங்களாம், நம்ம உசிரத்தான்யா வாங்குறாய்ங்க என்ரு

டிரைவரிடம் அலுத்துக்கொண்டே ஜீப்பில் ஏறினார்.

கொடைரோடு ரயில்வே ஸ்டேசன் போனா பெரிய கூட்டமெல்லாம்

ஒன்ணுமில்லை. பெருசுகளா நாப்பது அம்பது பேரு இருந்தாங்க தாமிர

பட்டயத்துக்கு மனுக்கொடுக்க நின்னுகிட்டு இருந்தாங்க. மந்திரி

ரயிலுக்கு 2 நிமிசம் முன்னாடிதான் வந்தார். மந்திரி அஞ்சு அஞ்சரை

அடி இருப்பாரு, அவரு பொண்டாட்டி 6 அடிக்கு மேல இருக்கும்

கடற்கரைய விட உயரம்.

டிரையினில் ஏத்திவிட்ட பிறகு பென்சன் கேட்டு மனுக்குடுக்க வந்திருந்த

தியாகி ஒருத்தர் “ மினிஸ்டர் பொண்டாட்டி நல்ல கெடா சிறுக்கியா

இருக்கா, இவளை கட்டி மேய்க்கலாம் நமக்கு சத்து பத்தாதுப்பா, குண்டிய பாரு நல்ல பிரியாணி தேக்சாவாட்டம்  ” என்று

சொல்லிட்டே போனத கேட்டு ஆச்சரியமா ஆகிப்போனது. கிழடு

தட்டி தடுமாறி நடந்து போகும் தியாகி நினைத்ததைதான் நல்ல

ஓங்குதாங்கான ஆளான கடற்கரையும் நினைத்தார். பிடித்த பென்ணிடம்

ஒரு நிமிடம் மனதுக்குள் வாழ்ந்துவிடும் கெட்டபழக்கம் கடற்கரைக்கு

இருந்தது. அன்று தன்னை போன்ற மற்றொருவரை கண்டார்.


சரி சரி ! நீ எந்த ஊருடா’ என்று கைமூட்டி கந்தசாமியிடம் கேட்டார்.

படுகளம் அய்யா என்றான்.

ஊராளியா ?

ஆமாங்கய்யா…

 சரி இனிமே இங்கதான் இருக்கனும். தெனமும் ஸ்டேசனை கூட்டி

பெருக்கி வெள்ளிக்கிழமையாச்சுன்னா கழுவியுடனும் . போலீசார் டீ கீ

வாங்கியாரச் சொன்னா வாங்கியாந்து துணைக்கு இருக்கனும். சம்பளம்

தர சொல்லுறேன். யோவ் ஊட மாட வேலைக்கு வச்சுக்கங்க என்று

நேருவிடம் கந்தசாமியை கூட்டிட்டு போக சொன்னார். கந்தசாமியை

கடவுளை நினைத்து கையடிப்பவனாடா நீ என்று கொலைவெறியுடன்

முறைத்தவாறே அழைத்து போனார் நேரு போலீஸ்.


நடந்து போனாவனின் நடையை பார்த்து “டேய் இங்க வா ! அது

என்னாடா நெளிஞ்சுகிட்டே நடந்து போற “ன்னாரு

ரயிலிலே இருந்து கிழ விழுந்து இடுப்பில அடிவுழுந்து இப்படியாகி

போச்சுங்கய்யா என்றான்.

’சரி போங்கள் நெளிசல்’ என்றார் கிண்டலாக. இப்படித்தான் கைமூட்டி

கந்தசாமியின் நாமகரணம் நெளிசல் என்று மாறியது.


நிறுத்து நிறுத்து என்றார் சார்லியிடம். யாகப்பன்பட்டி போஸ்டாபீஸ்

வாசலில் இறங்கி உள்ளே போனார். போஸ்டாபீஸும் அதுதான் மாஸ்டர்

வீடும் அதுதான். சார்லி சத்தம் கொடுக்க மாஸ்டர் உள்ள இருந்தவாறே

எகத்தாளமாக என்ன என்று கேட்க இன்ஸுபெக்டர் அய்யா வந்திருக்காக

என்று கத்தினான். போஸ்டல் துறையிலும் இன்ஸ்பெக்டர் உண்டு

என்பதால் தடால்புடால் என ஓடி வந்தார் மாஸ்டர். வந்து கடற்கரையை

பார்த்து நிம்மதியானவர். சார் வாங்க, வாங்க என்று நாற்காலியை தானே

போய் தூக்கிவந்து துண்டால் தட்டி உட்காரச்சொன்னார்.


ஒரு போன் பண்ணனும் என்று கடற்கரை சொல்லவும் இடுப்பிலிருந்த

சாவியை எடுத்து போஸ்டாபிஸை திறந்தார். வீட்டுக்குள் போயும்

போகலாம். சார்லியை பார்த்தவுடன் இந்த வழியை திறக்கிறார் என்று

கண்டுகொண்டார்.


வீட்டு டெலிபோன் எண் 123 என்று இருந்தது ஒரு சௌகரியம்

மறக்கமாட்டோம். பழைய எண் 23 என்று இருந்தது. இதுதான் சுலபம்

ஒன்னு ரெண்டு மூணு சொல்லிகிட்டே டயல் செய்தார்.


மகனிடம் விபரங்கள் கேட்டுவிட்டு பெரியாஸ்பத்திரி நம்பர் கேட்டு

வாங்கி அங்கு டயல் செய்தார். பி.எம் ரிப்போர்ட் பெரிய டாக்டர்

கையெழுத்துக்காக வச்சிருக்கு, அவரு காலையிலதான் வருவாரு.

இன்னைக்கு மதுரை பெரியாஸ்பத்திரில ஆப்பரேஷனாம் அங்க

போயிருக்காரு என்று தகவல் கிடைத்தது.


அப்பாடா என்று இருந்தது. கொஞ்சம் நிம்மதி .


ரெண்டு ரூபா ஆச்சுங்க, ஆனா வேணாம் என்றார் போஸ்ட் மாஸ்டர்

ஏன்யா நோணாம் கஞ்சா கிஞ்சா விக்கிறீயா என்றார் பேண்டில்

தூளாவிக்கொண்டே.


இரண்டு ஒரு ரூபாய் எடுத்து சார்லி கையில் கொடுத்து மாஸ்டர்

கையில கொடுய்யா என்றபடி வெளியே வந்தார்.

பின்னாடியே வந்த சார்லியிடம், இங்க எங்கன சாராயம் விக்கிறாய்ங்க

என்றார்.


அய்யா… ஊருக்கு வெளிய விக்கிறாய்ங்கய்யா


வாய் மாத்த என்ன வைச்சுருக்காங்க


மொளகா வத்த கொழம்பும் அவிச்ச வாத்துமுட்டையுங்கய்யா


சரி போஸ்ட் மாஸ்டர் வீட்டில ஒரு சொம்பு வாங்கிட்டு போயி நான்

கேட்டேன்னு சொம்பு நிறைய சாராயம் வாங்கிக்க, ஏய்ம் பேர சொல்லி

நீயும் சாப்பிட்டுக்கா ரெண்டு முட்டையை அறுத்து மொளகா குழம்பு

ஊத்தி வாங்கிட்டு வா !

( தொடரும் )

1 மறுமொழிகள்:

  1. 7:31 PM  
    Anonymous said...


    தல,

    நெடுங் தொடரா எழுதப் போறீங்களா?
    டீடெய்லிங் அட்டகாசம்.