Saturday, April 10, 2010

@ 5:51 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்

எச்சரிக்கை
18 வயதுக்கு குறைந்தோர் தூசனை சொற்களுக்கு முகம் சுழிப்போர் இதன் கீழ் படிக்க தகுதியற்ற பதிவிதுமுழு முதுகும் செவுத்தில் படும்படி ஒக்கார வைச்சானுங்க மொதல்ல. பாலு ஏட்டய்யா அவன விசாரிங்க என்றார் துணை ஆய்வாளர்.குருநாதன். எம்புட்டு சைக்கிள்டா திருடிருக்க, மடார் மாடருன்னு அடி விழுந்தது.மாரிமுத்துவுக்கு மனிதர்களின் அலறல் பிடித்த ஒன்றாகிவிட்டிருந்தது. அது ஒரு குறுஞ்செய்தி படித்த பின் அப்படியாகிவிட்டது " பிள்ளைக்கு கூடுதலாய் இரண்டு பாணுக்கு என்னை விற்றுக்கொண்டிருக்கிறேன் முடிந்தால் விடுவி அல்லது மறந்து விடுங்கள். உயிரொடு இருக்கிறேனா என்றெல்லாம் அடிக்கடி போனெடுத்து சோதிக்க வேண்டாம்" வழக்கறிஞர் வண்டு முருகனின் ( மாரிமுத்து மட்டும் அப்படி அவரை அழைப்பான்) அக்காள் தேர்ந்த ஆங்கிலத்தில் அனுப்பிருந்தாள் நலன்புரி நிலையம் ( ! ) ஒன்றிலிருந்து.அடித்த அடியில் கை வீங்க ஆரம்பிச்சுருச்சு, ஏலேய் ! நோனி மவனே ரீமாண்ட்டுக்கு கூட்டிக்கு போகும் போது மாஜிஸ்ரேட்டு கேட்டா அடிச்சானுங்க நொட்டுனானுங்கன்னு சொன்ன மறுபடியும் கஸ்டடி எடுத்து சூத்துக்குள்ள லத்திவிட்டு கொடஞ்சுருவேய்ன், அய்யா போலிசுகாரங்க வெரட்டி புடிக்க வந்த போது கீழ விழுந்துடேன்னு சொல்லனும் புரியுதா...கோபாலும் மாரிமுத்தும் அய்ட்டம் போட போய்க்கொண்டிருந்தார்கள்,அதாவது கோபால் அந்த வேலையாக போய்க்கொண்டிருக்கையில் மாரிமுத்துவின் விதி அந்த பஜிரோவில் அவனை ஏற்றிவிட்டது. மாரிமுத்துக்கு அவ்வழக்கம் இல்லை என்றாலும் கோபால் கியர் அப் ஆவதற்காக எப்படியும் ஒரு ரெமி மார்ட்டின் எடுத்து வருவான் ரெண்டு லார்ஜ் போட்டுவிட்டு அய்ட்டம் போட கோபால் அடுத்த அறைக்கு போனவுடன் மீதமிருக்கும் முக்கால் போத்தல் ரெமியை மாடு கழனித்தண்ணியை குடிப்பது மாதிரி மாரிமுத்து மண்டிக்கொண்டிருப்பான்,முடித்துவிட்டு கோபால் வந்து "ஏய்ன்யா காஞ்ச மாடு கம்பங்கொல்லையில விழுந்த கணக்க, இப்படி குடிச்சுகிருக்க" என்று லேசான எரிச்சல் காட்டினால் உடனே அதற்கு "இதுக்கு பேசாமல் நான் வெளக்கு புடிக்க போயிருக்கலாம்"ன்னு உள்ளார போன சரக்கின் தெம்பில் எகிற கோபால் அமைதியாவான்.எந்தூருடா நீயி !

அய்யா, சந்தமநாய்க்கன்பட்டிய்யா

இங்க என்ன ஊம்புற வேலையா, எதுக்குட இங்க வந்த

கல்யாண சமையல் வேலைக்கு போவேய்ங்கய்யா, அதுக்கு வந்துட்டு பஸ்ஸை விட்டுடேய்ங்கய்யா

ஏண்டா ! அவுசாரி மகனே... ஆடி மாசத்துல ங்கொத்தா புருசனா கல்யாணம் வைய்ப்பான்.. ம்ம்ம் இது சரிப்படாது யோவ் ஜோம்ஸ்... பாலு ஏட்டய்யா இவனுக்கு "உருளை"யை கட்டி தொங்கவிட்டாத்தான் உண்மப்புண்டையெல்லாம் சொல்லுவான். கயித்த கொண்டியில மாட்டுங்க.

மாரிமுத்துவை நோக்கி திரும்பி நேத்து இப்படித்தான் பங்காளி ஒரு பிட்பாக்கெட்காரன சும்ம வெசாரிக்க தொங்கவிட்டேன் 1/2 மணி நேரந்தான் அய்யா இங்க பக்கத்துல வாங்கன்னு கூப்பிட்டு லைன் போட்டுகொடுத்தான் ( லைன் போட்டு கொடுப்பது என்றால் அடிதாங்க முடியாமல் தான் செய்யவிட்டாலும் தன் உறவினனையோ அல்லது தொழில் கூட்டாளியையோ காட்டி கொடுத்துவிடுவது) சர்ச்சிங் போய் பாத்தாக்க 220 பவுண் நகை. அப்புறம் என்ன செஞ்சுத்தொலையறது ஏட்டம்மா செல்வியக்கா மகளுக்கு கலியாணம் வச்சுருந்தது அதுக்கு ஒரு முப்பது பவுனு 2000 ருவா ரேட்டுக்கு கொடுத்துட்டு ஸ்டேசன் செலவு ஒரு 40 பவுணு போக கோர்ட்ல ஒரு 100 பவுணு ரெக்கவரி காட்டுனோம். இந்த பாரு எல்லாப்பேப்பருலையும் வந்துருக்கு.

கோபாலுக்கும் மாரிமுத்துவுக்குமான உரையாடல் Master - Slave'க்குமான தொனியிலிருந்தாலும் இருவருக்கிடையே ஒரு ஆழ்ந்த நட்பிருந்தது. கோபாலும் வித விதமான் டிக்கட்டுகளையேல்லாம் சுற்றியுள்ள பல்வேறு தேசங்களிருந்தும் இறக்குமதி செய்த போதெல்லாம் மாரிமுத்து சலனப்படாமல் இருப்பது பற்றி ஒரு பெரிய வியப்பே மிஞ்சியிருந்தது. அது ஒருநாள் நிவர்த்தியாகிவிட்டது கோபாலுக்கு. முதலிலேயே அந்த பிகரிடம் சொல்லி இப்போ உன்ன பிக் அப் பண்ண வாரவேய்ன் ரொம்ப உத்தமன் வேசம் போடுறான் ஆட்டோவுகுள்ளேயே வச்சு ரெடி பண்ணிப்பாரு எனக்கு அவன் வேணும்னு செய்யிறானா இல்லை இம்போடன்டான்னு தெரியனும். நண்பா பஸ்ஸடாண்டு அவுட் போஸ்ட் போலிஸ் ஸ்டேசன்கிட்ட ஆரஞ்சு கலர் சேல கட்டி ஒண்ணூ நிக்கும் பிக்-அப் பண்ணிட்டு டிரவலர்ஸ் பங்களா வந்துரு, மாரிமுத்து போனான் அவளோடு ஒரு 50 வயது கிழவியும் வந்திருந்தாள்.இருவர் நடுவிலும் ஆட்டோவில் பயனியர் விடுதி வந்து சேர்ந்தான்.கோபாலின் அறைக்குள் அந்த கன்யாகுமரி ( ? ) பிகர் போனவுடன் மாரிமுத்து மீதமுள்ள சரக்குடன் பக்கத்து நான் ஏ/சி அறைக்குள் போன இரு மணி நேரத்தில் வெளியே வந்து போலாமாய்யா எனக்கேட்க மாரிமுத்து இல்லண்ணே இங்கே இருக்கேன் முதன் முறையா சொல்லியதை கேட்டு குஷியாகி சரிய்யா காலையில போன் போடு இவுகளுக்கு காசு கொடுத்தனும்ப்பனும்னு சொல்லிடு போனான்.

அய்யா, கஞ்சா வாங்க காசில்லையா, அதுனாலதான் சைக்கிள உருட்டிட்டு போனேன் வாழ்க்கையில மொத மொத இப்போதான்ய தப்பு பண்ணுறேன்

ஏண்டா ங்கொக்காலி, இப்போத்தான் சமையல் வேலைக்கு போயிட்டு வந்தேன், சமையுற வேலைக்கு போயிட்டு வந்தேன்னு சொன்ன சரி சரி ய்வொவ் 3296 அவன செவுத்தொரமா ஒக்கார வையி... டீ சொல்லுட்டுமா பங்காளி ; ஏய்ன் பங்காளி அந்த காலத்து சினிமாலெல்லாம் 503,208ன்னு கூப்பிடுவாய்ங்க இப்ப பாரு வண்டி நம்பரு சொல்லுற மாதிரி 3296 4114ன்னு ஆகிப்போச்சு - துணை ஆய்வாளர் குருநாதனின் கிண்டல் குறையா அமுதம்.

செவுத்தில் முதுகு வைத்து கால்களை நேராய் நீட்டி ஒக்கார வச்சாரு 3296. குருநாதன் நிலைய வாசலில் யாருடனோ தொலைபேசிக்கொண்டிருந்தார் தேநீருக்கு காத்திருந்தபடி. பொச்சை கிழிக்கும் நிகழ்வு துவங்கியது பாலு ஏட்டய்யா ஒரு பெரிய லத்தியை அவன் அல்லது அந்த விளிம்பின் மேல் நெஞ்சில் வைத்து முன் பக்கம் சாயாமல் அழுத்திக்கிட ஜேம்ஸும், 3296ம் இரு கால்களையும் இரண்டு பக்கமாய் விரிக்க துவங்கினர், அவனின் அலறல் மாரிமுத்துவிற்கு ஏகாந்த இசையாய் இருந்தது.

எலே கத்தாதட கத்தினா ஒத்த கால்ல மட்டும் கட்டி உத்திரத்துல தொங்கவுட்டுறுவேய்ன், அப்புறம் உன் பொண்டாடிகிட்ட படுக்க முடியாது - பாலு ஏட்டய்யா இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாய் அவனை லத்தியால் அழுத்தியபடி மிரட்டிக்கொண்டிருந்தார், அப்பொது அவன் கால்கள் 90 டிகிரியிலிருந்து 45 டிகிரிக்கு வந்திருந்தது. அவன் குறியும் விதைப்பையும் தரையில் கிடந்தது.

டேய் டேய் ஏண்டா இவ்வளவு சத்தம், ஏய்ன் ஏட்டய்யா அவன கத்தவுடுறீங்க, போன் பேசிட்டு இருக்கேன்ல வெளியெ பப்ளிக் வேற எதோ நாம கொல பண்ணுற மாதிரி பாத்துட்டு போறாய்ன்ங்க.

அய்ய்யோஓஓஓஓ

இப்போது கால்கள் 30 டிகிரி கோணத்திலிருந்தது

எலேய் ! கத்தினா ஒரே மிதி, அவனது கொட்டைகளின் மீது பூட்ஸினை வைத்து அதுகளை கூழாங்கற்களைப்போல் உருட்டிக்கொண்டு, ம்ம்ம் இங்க ஒரு விசாரனை நீ சொல்ற மாப்பிள குற்றாலம் சீசன் எப்படி.... இப்போது அவனது முதுகு குண்டி மற்றும் இரு கால்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டிலிருந்தது

ம்ம்ம் போதும் ஏட்டய்யா விடுங்க

அவன் அப்படியே அரை மயக்கத்தில் சாய்ந்தான்

இந்த டைப் இருக்க்குள்ள பங்காளி ரொம்ப வலி இருக்காது, என்னா பொழந்து விட்ட காலை மறுபடியும் சேர்க்கவும் முடியாது பொழந்த வாக்குல வச்சுருக்கவும் முடியாது ஒரு கா மணி நேரத்துக்கு இதுலையும் சொல்லலைன்னாத்தான் அடுத்த டைப்புக்குல்லாம் போறது.

காலை 7.30

என்னய்யா இன்னுமா தூக்கம்.. இதுல்லாம் புதுசா பாத்தா இப்படித்தான்யா சரி சரி கிளம்பி வா போர்டிகோவுல வாட்ச்மேன் கிட்ட 10 ரூவா கொடுத்துருக்கேன் வாங்கி அவளுகளுக்கு கொடுத்து அனுப்பிரு சரியா... பாவம் வெள்ளன வீட்டுக்கு போவட்டும்

ண்ணே...

என்னய்யா

ஒரு 500 ருவா எச்சா வேணும்ண்ணே

எதுக்குய்யா

கூட வந்திருக்குல ஒரு ஆன்ட்டி அதுக்கு கொடுத்தனுப்பனும்ணே

அதான் பத்தாயிர ரூவா கொடுத்துருக்கேன்லய்யா

இல்லண்ணே இது நான் தரவேண்டிய டிப்ஸ்ண்ணே ! மாரிமுத்து இழுத்தான்

தேவிடியாளுக எம்புட்டு கொடுத்தாளும் இந்த டிப்ஸு மசுர கேக்காம போவமாட்டாளுக

கூட வந்த கிழவிக்குண்ணே... கன்யா எனக்கு 1000 டிப்ஸ் கொடுத்தா அதுல கூட 500
போட்டு அந்த கிழவிக்கு கொடுக்கத்தாண்ணே...


டேய்ய் அதப்போய்யா தொட்ட.. கோபால் எகிற

ஆமாண்ணே ஆனா செம கம்பெனிண்ணே...

**************************************************************************************

கட் பண்ணா :

கோபால், 120/200 உங்க பிரஷ்ர் ரேட் அப்புறம் ஏன் தலை வலிக்காது ! ப்பீட்டோலாக் 50 சாப்பிடுங்க கூட ரனிடிட்டின் எடுத்துகங்க வயித்றெரிச்சலை குறைக்கும்

இல்ல டாக்டர் என்னாச்சுன்னா....

.


மொக்கை பின்னோரு நாளில் -