Sunday, September 13, 2009

@ 8:20 PM Labels: எழுதியவர்: வரவனையான்

ஆயினும் அடுத்த நாள் காலையில் அனைத்து நாளிதழ்களிலும் அவன் தப்பியோடியதாய் செய்தி முதன்மையாய் இருந்தது. முதல் வெட்டு ஆய்வாளர் சென்பகராசனுக்கு இடது கையில் விழுந்தது. உதவி ஆய்வாளர் "ரைபிள்" சுரேசுக்கு வலது மணிக்கட்டில் வெட்டுக்காயம் மற்றும் ஏட்டு வெள்ளைச்சாமிக்கு தோளில் ஆழமாய் ஒரு கத்திகுத்து விழுந்துள்ளது. காயம்பட்ட அனைவரும் திருச்சி அரசு பொதுமருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரினாவுக்கு அப்பாவின் மேல் கடும் கோவம், யாருக்குத்தான் வராது. சினிவாசனுக்கு தெரியாது அவன் சுடப்படப்போவது. நினைக்கையில் எல்லாம் உவ்வே என்று குமட்டிக்கொண்டு வந்தது. குளிச்சு எத்தனை நாள் ஆச்சோ அவள், அம்மா வீட்டு உள்ள கூட அனுமதிக்கமாட்டாள் அவளை, அவளை போய் சுவரோரமாய் நிற்க வைத்து. துணியை தூக்கி பார்த்தார் டி.ஐ.ஜி அனில் குமார் ஜாட்டியா. வெல்டன் பாய்ஸ் ! என்றார் சுற்றி நிற்கும் "பிரஸ்"க்கு கேட்கும்படி. "இது ஒரு துவக்கம்தான் இனி இந்த நாட்டின் இறையான்மைக்கு பங்கம் செய்வதற்கு யாராகிலும் மனதால் நினைத்தால் கூட சட்டம் கையை கட்டிக்கொண்டு இருக்காது". எனஃப் பிரண்ட்ஸ் என்றபடி அம்பாசிடருக்குள் நுழைந்து வேர்வை ஒற்றிக்கொண்டு "கோ டூ தி ஹாஸ்பிடல், ஐயாம் கேவிங் அனதர் ஸ்டேஜ் டூ பிளே" என்றார். காலையில வீட்டுல இருந்து கெளம்பி கட்சி அலுவலகம் போகும் போதுதான் பாத்தேன் அந்த சுவரொட்டியை. கிர்ர்ர்ர்ர்ன்னு கோவம் தலைக்கு ஏறுது ! முந்தாநாளு காங்கிரசுல சேர்ந்த ஒரு சுள்ளான் "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாய் பேசிய வைகோ சீமான் அமீரை கைது செய்" அப்படின்னு சுவரொட்டி அடிச்சு ஒட்டிருக்கான்யா. வக்காலி இன்னைக்கு ஓட ஓட மிதிச்சாதான்யா சரிப்படும். இன்னுமும் ராஜிவ் பொணத்த வச்சுகிட்டு இந்த கேவல அரசியல் எவ்வளவு நாளு பண்ணுவானுங்கன்னு பார்க்கலாம்ன்னு போனை போட்டேன்.

யோவ் சீயான் ! எங்கையா இருக்க ?

என்ன ராசா ! இவ்வளவு வெள்ளன கூப்புடுற -

மொதல்ல கெளம்பி பஸ்ஸான்ட் வா -

டொக்

தோழர் எங்கருகிங்க !

வீட்லடா குண்டு !

பஸ்ஸான்ட்க்கு வாங்க உடனே !

கோபி சீயான் வரும்போதே சுவரொட்டியை பாத்துட்டாரு போல! "கொட்டையை நசுக்கி கஞ்சியாக்கி விட்டுருலாமான்னு" ஒரு திகிலூட்டும் தண்டனையை அந்த சுள்ளானுக்கு முன்மொழிந்தவாறே வந்தமர்ந்தார். தோழர் வாசு குனிந்த தலை நிமிராமல் நடப்பவர்! அவர் வந்தபின் விளக்கப்பட்டது.

டேய்ய் ! சாயங்காலம் புரட்சிகர எழுச்சி இளைஞர் சங்கம் சார்பில ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் இருக்கு தோழர்."புரோட்டா" பாண்டியன் வரச்சொல்லிருக்காரு. அதுக்கு போயிட்டு அதுக்கு பிறகு பேசி எதுனா செய்யலாம்டா. அவசரபடாதிங்கடா" வயசுக்கு தகுந்த பொறுமையுடன் சொல்லிட்டுருந்தாரு "мамка му на Исус мамка му на света Майната ви на всички дяволите Луната дяволите Всемогъщия" என்றபடி மலையுச்சியில் இருந்து குதித்தான் மாரிமுத்து. ஒரு தடவைக்கு மேல் தற்கொலை முயற்சியில் இறங்கியவர்கள் பின் என்றைக்கும் சந்தேகத்துக்குரிவர்களே என்பது அவனது திண்ணமான எண்ணம். சமயங்களில் சொல்லுவான் முதல் முயற்சிகளில் செத்து போனவர்கள் பாக்கிவான்கள் என்று. "பிரஸ்"காரர்களுக்கு கவர் வழங்கப்பட்டது. சரி எல்லாரும் வந்து வண்டியில ஏறுங்க ! நேரா ஆரியாஸ்க்கு போய் மதியான சாப்பாடு' என்றார் மக்கள் தொடர்பு அதிகாரி. "ஏண்ணே தப்பிச்சு ஓடுறவேன் பேண்ட் ஜிப்புல்லாம் அவுத்து போட்டா ஓடுவான்" வெவரம் தெரியாமல் கேட்டவனை முறைத்தான் வண்ணம் டி.வி செல்வம். "வேக மசுரா கவரு மட்டும் வாங்கி உள் பைக்குள்ள வைக்க தெரியுதுல இந்த வியாக்கியான *** தியெல்லாம் அங்க கேக்கவேண்டியதானே புடுக்காண்டி" பூட்டேஜ் சரியில்லாத கடுப்பு அவனுக்கு. அம்மா வரட்டும் இன்னைக்கு பெரிய பிரச்சினை பண்ணினால்தான் சரிப்படும் ஹரினா நினைத்துக்கொண்டாள். சபேஷ் என்று டிஸ்பிளேவில் தெரியவும் ஒரே ரிங்கில் எடுத்தாள் . ஹாய் லுலு ! ஹாய் பாட் கேர்ள் ! ஸ்பார்கில் வெயிட் பண்ணுறேன்.

"புன்டையிலோக்க
வாழைக்கண்ணு வாங்கி வச்சுருக்கேன், ரீமாண்ட் பண்ணிட்டாய்ங்கன்னா பிரபாகரனா வந்து
வாழை நடுவாரு" பதட்டத்துடன் தோழர் வாசு அலறினார்

உங்க இனத்துல பொறந்ததுக்கு அவரு வாழை விவசாயியாவோ மீம்பிடிக்கவோ போயிருக்கலாம் தோழர்.கோபி கொந்தளித்தார்

பாலக்காடு தாண்டி வரும்போது தமிழ்நாடு போலிசு ஒக்கார வச்சுருச்சாம், துலுக்கக்கூதிகளுக்கு இந்நேரம் என்ன மசுர புடுங்கிற வேலையாலே" வர்ண,மொழி.இனம்,மத பாகுபாட்டுடன் கூடிய தோரனையுடன் மாயத்தேவர் ,எஸ்.அய்'யின் குரல் கேட்டது. ரெண்டு பிட்பாக்கெட்ட பொச்ச கிழிச்சு ஒக்கார வச்சுருக்கேன்யா'

பொச்ச கிழிக்கிறதுன்னா என்னான்னு மாரிமுத்து நேரில பாத்த போது குண்டியில பீ தள்ளியிருச்சு


- நேரங் கெடைக்கிறதப்போ பேசலாம்

11 மறுமொழிகள்:

 1. super !!!!

 1. //செந்தழல் ரவி said...

  super !!!!
  //  நெசமாத்தான் சொல்றீயா................
  :P

 1. சிரிப்பு தாங்க முடியல..:))

  நடைமுறை பேச்சு வழக்கை எழுத்தில் கொண்டு வந்தது சூப்பர் :)))

  வாழ்த்துக்கள்

 1. 9:40 PM  
  Anonymous said...

  ஒரு பிள்ளப்பூச்சிய தொவச்சு தொங்கப்போட்டுட்டீங்க.முடிஞ்சா எங்க பேன்டு சார் கிட்ட மோதிப்பாருங்கய்யா.

 1. :)

  கலக்கறீங்க வரவனையான்.

 1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

 1. //"мамка му на Исус мамка му на света Майната ви на всички дяволите Луната дяволите Всемогъщия" //

  தமிழ்ல எழுதுனதே புரியல!
  இதுல இது வேறயா!?

 1. //Anonymous said...
  ஒரு பிள்ளப்பூச்சிய தொவச்சு தொங்கப்போட்டுட்டீங்க.முடிஞ்சா எங்க பேன்டு சார் கிட்ட மோதிப்பாருங்கய்யா.//  த்தோடா.... மறுபடியும் மொதல்ல இருந்தா ?

  போதும்டா போய் புள்ள குட்டிய படிக்க வைய்ங்கடா....

 1. புனைவா நிகழ்வா என்று பாகுபடுத்த முடியாத படிக்கு வட்டார மொழியில் துவங்கி நவீன வாழ்வின் கூறுகளையும் எள்ளலுடன் அங்கதம் விரவ பதிவு செய்திருக்கும் விதம் அற்புதம் தலைவா

 1. மாப்புள...அருமையாக்கீது. ஒத்தவரி போதும் ;)
  இப்போ மாத்திரையில ;) இருக்கதுனால வீக்கெண்டுல தெளிவா போடுறேன்.

 1. 1:29 PM  
  Anonymous said...

  //இப்போ மாத்திரையில ;) இருக்கதுனால வீக்கெண்டுல தெளிவா போடுறேன்.//

  பொட்டிக்கடை சார், நீங்க என்ன டிரக் அடிக்டா? வீக்கெண்டுல எதைப் போடுவீங்க? தெளிவா சொல்லுங்க சார்.