Wednesday, July 22, 2009

@ 10:08 AM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்அறுத்தெறிவோம் வாரீர் !! என அண்ணன் சீமான் அழைத்தான், அது ஒரு பொதுக்கூட்டத்திற்கான அழைப்பே ஆகும். 90களில் வைகோ அவர்களின் கூட்டதிற்கு மட்டுமே அவ்வளவு கூட்டம் சேரும் மதுரை மேலமாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்பு நிறைவதற்கு 5000 மக்கள் தேவை கூட்டமோ இருமடங்கு அரசியல் சாராத, தானிருக்கும் இயக்க கொடி பிடிக்காமல் முகாம்கள் எனும் போர்வையில் சிங்கள அரசின் சிறைக்கூடங்களில் வதையுறும் 3,50,000 மக்களை மீட்டெடுக்க பத்தாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கூடி முழங்கினர். அதன் புகைப்படங்கள் இங்கே !
செல்லப்பா பாடுவது யாழ் / முத்தவெளியா அல்லது மேலமாசி வீதியா என்கிற சந்தேகம் எழுப்பியது அவரின் முன்னால் பறந்த தமிழீழ தேசியக்கொடி
மதுரை "நாம் தமிழர்" பொதுக்கூட்டம்

Monday, July 06, 2009

@ 10:46 PM எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்

ஊடும் பாவுமாய் நீரிலையும்
வண்ணத்துப்பூச்சியின் உடலாய்
வாழ்க்கை - நிலம் பார்த்து விரிந்து கிடக்கும்
சிறகினில் மெல்ல கவிழும் இருள்
சலனமற்று பார்த்தவாறே இருக்கிறான்
காலக்கிழவன்

Sunday, July 05, 2009

@ 4:02 PM Labels: எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்இல்லண்ணே சொல்லுங்க..

பின்ன என்னாதுக்குய்யா அத்தன தடவ கூப்பிட்டும் போனை எடுக்கலை, சரி அத விடு கரகாட்டம் பார்க்க வர்ரீயா என் கோபால் கூப்பிட மாரிமுத்து ஜகா வாங்கினான், காரணம் கோபால் ஜொள்ளு உலகறிந்த விதயம் அதிலும் மாரிமுத்துவோ இயல்பாகவே சபை கூச்சம் அதிகம் உள்ளவன் அவன் இலக்கிய கூட்டங்களுக்கு குறைந்தபட்சம் கட்டிங்காவது போட்டுவிட்டு போவதற்கு காரணமே அந்த சபை கூச்சம்தான், இலக்கிய கூட்டத்திற்கே அஞ்சுபவன் நடுத்தெருவில் கரகாட்டத்தினை ஒரு நாள் கூட நின்று பார்த்ததில்லை. இவன் வேறு இப்போது கூப்பிடுகிறான் வரவில்லை என தட்டிகழிக்கவும் முடிந்து தொலையாது இவனது ஸ்டராங்கான "அரசியல் சோர்சே" கோபால் ஒருத்தன் தான் ( மாரிமுத்து " தமிழக கரகாட்டம், காபரே,ஸ்டிரிப்டீஸ், வட இந்திய,பாகிஸ்தானிய மற்றும் ஆப்கானிய முஜ்ராக்கள் பற்றிய ஒரு திறனாய்வு" என்கிற தலைப்பில் சாணி பேப்பரில் பதினாறு பக்க வெளியீடு ஒன்றை தனது வானம் வெளீயீட்டகம் சார்பில் கொணர்ந்தான் அதன் மொத்த விற்பனை உரிமையும் அர்ஜுனனிடம் கொடுத்து "வந்த விலைக்கு வித்துருங்க, விலை 5 ரூவாதான் போட்டுருக்கேன்" என்று சொல்லி கொடுத்தான். அர்ஜுனன் பொது நிகழ்ச்சிகளில் புத்தகம் விற்பனை செய்பவர், மறுநாள் மாரிமுத்துவை தேடிபிடித்து " என்னய்யா தலைப்பு எதோ வித்தியாசாமா இருக்கு சரி விக்கிற வரைக்கும் விக்கட்டும் நம்ம தோழர்தானென்னு வாங்கிட்டு போனா உள்ள பூராம் அம்மணக்குண்டி படமா இருக்கு, இதுவரைக்கும் பிரபாகரன் படம் வித்துதான்யா உள்ளார போயிருக்கேன், சீன் படம் விக்க வச்சு உள்ள அனுப்பிடாத" என்று அவனது முதல் வெளியீட்டை திரும்ப கொடுத்து விட்டு போனது கோபால் வர்ரீயா எனக்கேட்ட நொடியில் அவனுக்கு நினைவுக்கு வரவில்லை)