Tuesday, June 09, 2009

@ 8:17 PM Labels: எழுதியவர்: வரவனையான் 5 மறுமொழிகள்


மாரிமுத்துக்கு கோபாலிடமிருந்து வரும் அழைப்பை போல அலுப்பான விதயம் வேறொன்றுமில்லை. கோபால் இடமிருந்து அழைப்பு வந்தாலே ஒரு வித நடுக்கம் கொஞ்ச நாளாய் தனக்கு வருவதை அறிந்திருந்தான்.

"துயரத்தில் துயரம் பெருந்துயரம் அத்துயரம்
துயரத்தில் எல்லாம் தலை"ன்னு

இவனா அவனுக்குன்னு எழுதிய குறள் வேறு நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. காரணம் என்னான்னா கோபால் மாரிமுத்துவின் ஊரில் மிக பெரிய"தல" ஒன்றின் ஓட்டுநராக இருந்தான். மாரிமுத்துவோ அவ்வப்போது அந்த தலைக்கு "சொம்படித்து" பொழைப்பை பார்த்து வருபவன். எனவே கோபாலின் தேவைக்கு இவனுக்கு வேண்டியதாய் இருந்தது. எவனாவது காது கொடஞ்சுகிட்டே "அப்புறம் "தல" எங்க'ன்னு சும்மானாச்சுக்கும் கேட்ட கூட "பூஸ்டர்" பேக் போட்டிருக்கிற மொபைல எடுத்து "ண்ணா எங்கண்ணா இருக்கிங்க"ன்னு கேட்டு ஒரு வித தோடுடன் "கவுஞ்சிகிட்ட இருக்காங்கலாம், அரை மணி நேரத்துல வீட்டுல இருப்பாராம் போய் பாருங்க'ன்னு சீன் போடுவான். ஆனா உண்மையில் அவன் பேசியது கோபாலிடம் அந்த உரையாடல் இப்படியாய்த்தானிருக்கும்.

"ண்ணா எங்கண்ணா இருக்கிங்க"

"யோவ் சும்மா நொய்யு நொய்யின்னு கால் மணிக்கு ஒரு தடவை போன் பண்ணாதேன்னு எவ்வளவு தடவையா சொல்லுறது; அரை மணி நேரத்துல தல வீட்டுக்கு வா"

இப்படி எரிந்து விழும் கோபால் "தல" ஊருக்கு போயிட்டாலோ அப்படியே டிட்டோவாக மாறிவிடுவான் "எங்கையா போயிட்ட ஆளே காணாம், நீ ரொம்ப பிசியான ஆளு எங்களையெல்லாம் கண்டுக்குவியா... நீயிதான் பெரிய தொழிலதிபர் ஆயிட்ட ( "தல" மாரிமுத்துக்கு ஒரு டூபாக்கூர் அரசு அலுவலகத்துக்கு முன் டீக்கடை நடத்திக்கொள்ள அனுமதி வாங்கி கொடுத்திருந்தார். அந்த ஆபீஸோ மதியம் 2 மணிக்கெல்லாம் ஈ,காக்காகூட பறக்காத ஏரியாவாகிவிடும். அவன் கேட்டது அரசு பொதுமருத்துவமனையில், தமிழ்நாட்டில் பிசியாக இருக்கும் ஒரே அரசுத்துறை அதுதானே, அதனால் அங்கு கேட்டான். ஆனால் அந்த இடத்தை "நடிகர்" கட்சியிலிருந்து மொத நாள் வந்தவனுக்கு கொடுத்துவிட்டு, மாரிமுத்துக்கு இந்த பாடாவதி இடத்தை மாரிமுத்துவின் தலையில் கட்டிவிட்டார். "நடிகர்" கட்சியிலிருந்து வந்தவன் தன் பெயருக்கு டீக்கடை மாறியவுடன் "தலை"யின் வாயில் வாழைப்பழத்தை வைத்துவிட்டு மீண்டும் தாய்க்கழகத்துக்கு போய்விட்டான் என்பது இப்பிரதியின் கிளை வயித்தெறிச்சல்) ஒரு போன்கூட பண்ணுறதுல்ல

இப்படி தொடங்கும் உரையாடல் மேற்படி மேட்டரில் வந்து முடியும், ஏன்யா கெமினோ'ன்னு ஒரு சரக்கு இருக்கே அது நல்லாருக்குமா.

மாரிமுத்து Old monk கட்டிங் வாங்கிதாரேன்னு சொன்னா கூட அது 40 கிலோ மீட்டர் தூரமாய் இருந்தாக்கூட மிதிவண்டியில கொரங்கு பெடல் போட்டே போய் குடிச்சுட்டு வருபவன் என்றாலும் "உலக சரக்கு"கள் பற்றி ஒரு விரிவுரை நடத்துமளவுக்கு "விஷய" ஞானம் உள்ளவன். "தல"க்கு வந்த சக்கரை நோயினால் அவருக்கு வரும் இறக்குமதி சரக்குகளை ஒரு வித வயித்தெறிச்சலுடன் தல கோபாலிடம் கொடுத்துவிடுவார். கோபால் அதன் லேபிளில் இருக்கும் பெயரை கடினபட்டு எழுத்துக்கூட்டி படித்து மாரிமுத்துவிடம் அவற்றின் குலம் கோத்திரம் தெரிந்து சபையில் பீலா விட்டுக்கொள்வான்.

தல ஊரிலிருக்கும் போது மாரிமுத்து கோபாலை போன் பண்ணி டார்ச்சர் கொடுத்தால் "தல" போன பிறகு அவன் இவனை போன் பண்ணி இப்படியான இம்சைகளை கூட்டுவான்.

ஜானி வோக்கர் புளு லேபிள் நல்லா இருக்குமாய்யா ? இப்படி ஒரு நாள் கேட்டா மறுநாள் "ரெமி மார்டின் நல்லா இருந்துச்சுய்யா நேத்து; உன்னைய கூப்பிடனும்னே இருந்தேன் மறந்தே போயிட்டேன்"என்பான். மாரிமுத்து ஓசி கட்டிங்கே ஏழுமலை ஏழுகடல் தாண்டி போற ஆளாச்சா, இப்படி ஒசத்தி சரக்குன்னா சந்திரமண்டலத்துகே போவான்,இந்த வெறுப்பையெல்லாம் வச்சு அன்னைக்கு நைட் எச்சா ஒரு குவார்ட்டரு செலவாகும் .

இப்படித்தான் ஒரு நாள் போனில் அழைத்தான் கோபால்.

நேத்து நைட்டுதான்யா "தல" பாண்டியன்ல போனாரு, உன்ன கூட கேட்டாருய்யா. எதோ நர்ஸ் டிரான்ஸ்பர் கேட்டு இருந்தியாம்ல, அந்த பேப்பர கூட மறக்காம வாங்கிட்டு போனாருய்யா என்றபடி மொக்கையை போட ஆரம்பித்தவன், வழக்கம் போல் சாராயப்பேச்சை ஆரம்பித்தான். ஏன்யா சதர்ன் கம் பாடுன்னு ஒரு அயிட்டம் இருக்காய்யா? எப்படிய்யா இருக்கும். இன்னைக்கு மதியம் அதைத்தான் போடலாம்ன்னு இருக்கேன். அந்த மாணிக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி "தலை"க்கு கொடுத்துட்டு போனாரு. நல்லாருக்குமா? என்றான்.

ண்ணே அது செமையா இருக்கும்ண்ணே ! ஆனா பேரு சதர்ன் கம்பொர்ட்'ண்ணே. எங்க அண்ணன் ஒருத்தர் ஜேர்மனியில இருக்காரு அவரு வாங்கியாந்து கொடுத்தாரு.

அது எப்படிய்யா எந்த சரக்கு பத்தி கேட்டாலும் அது பத்தி புல் டீடெயில்லு சொல்லுற, உலகத்தில இருக்கிற எல்லா மேட்டரையும் டேஸ்டாவது பாத்திருக்கிற ஆச்சரியமா இருக்குய்யா என்று ஒரு மைல்டான வயித்தெறிச்சலுடன் சொன்னான் கோபால்

( ...ம்க்கும் ப்லாக் மட்டும் எழுதிப்பாரு அண்டார்டிக்கால இருந்து கூட சரக்கு வரும், ஆனா பொட்டீக்கடை'ன்னு ஒருத்தன் இருக்கான் அவன் மட்டும் மணியாட்டிகிட்டு வருவான். இங்க வந்தும் பிஃப்த் லெக் வைன்'தான் வேணும் "ஃபோர்த் பூல்" (POOL'ங்க :P ) ஸாம்பெயின்னு தான் வேனும்ன்னு அடம்புடிப்பான் அப்புறம் சைனா பஜாரு பர்மா பஜாருன்னு அலையனும் - மாரிமுத்துவின் ஆஆஆஆழ்மனசு)

இப்படியான உரையாடல் இருவேறு விதமான பொச்செரிச்சலுடன் முடிந்த அன்று மாலை மறுபடி கோபால் அழைத்தான், "அப்புறம் நண்பா, வேலையா இருக்கியா ( மாரிமுத்து கோழிக்கு மயிறு புடுங்கும் வேலையில்கூட நிலையாய் இருந்ததில்லை என்பது வேறுவிதயம், அது கோபாலுக்கும் தெரியும். ஒரு பேச்சுக்கே அப்படி கேட்பான். எப்போதெல்லாம் அப்படி கோபால் கேட்கிறானோ அப்போதெல்லாம் நொனங்க ஒரு வேலை சொல்லி மாரிமுத்துவின் பெண்டை நிமுத்தி பார்ப்பதில் அலாதி பிரியம் அவனுக்கு)


தொடர்வேன் -