
பூனைகள் மெல்ல வெளிக்கு
வருகின்றன - கண்களில்
நிலைத்த பயத்தில் மாற்றமில்லை
பின்னிரவு நேரத்தில் மெல்ல
போர்வைக்குள் நுழைந்து
தூக்கம் கலைக்கும்
அறிதுயில் நேரங்களில்
குரல் எழுப்பி சோம்பல்
முறிக்கும் அழகு
பிடிக்குமெனக்கு
.....................
.....................
மென்பஞ்சு பாதங்களில்
கூர் நகம் காட்டி
கொடும் பல் மிளிர
"புலி சேர்ந்த கல்லுளை" விட்டு
புதிதாய் வெளிவரும்
பூனைகளின் முகங்கள்
ரசிப்பதாயில்லை
Saturday, May 30, 2009
@
4:06 PM
எழுதியவர்:
வரவனையான்
4 மறுமொழிகள்:
-
எந்த போனும் எடுக்கவில்லை. நம்பர் தரவும்.
-
புதிதாய் வரும் பூனைகளின் பாதம்
அவற்றின் அசுத்தமான சுவடுகள் அந்த கண்களில் தெரியும் அரசியல்
எனக்கும் கூட பிடிக்கவில்லை கவிஞரே
அருமையான கவிதை..! -
நீங்க திண்டுக்கல் காரரா?
நானும் திண்டுக்கலில்தான் வசிக்கிறேன் \
தற்சமயம் நைஜீரியாவில் வேலை
ஊருக்கு வரும்போது உங்களை சந்திக்கp பிரியம்
Subscribe to:
Post Comments (Atom)


நல்லாருக்கு....