ஏம்மா உனக்குத்தான் சுகர் இருக்கே, நேரத்துக்கு சாப்பிடலைன்னா இனிமேல் இன்சுலின் ஊசி போடனுன்ம்னு டாக்டர் போன வாரமே திட்டிதானே அனுப்பினாரு.
பேசாம இரு செந்தி, எப்படிப்பா சாப்பிட முடியும் அது அவருதான்னு சொல்லுறங்க டீவீல, பயமா இருக்கு. வீட்டுல மூத்த புள்ள செத்து போன மாதிரி கெடக்கு மனசுக்கு... எப்படிட சாப்பிட முடியும் நெஞ்சை வந்து வந்து அடைக்குதுடா
"அப்பாயீ... அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது... நீ சாப்பிடு. அவருக்கு ஒண்ணுமில்லையாம்
சித்தா சொல்லுச்சுல்லா" அவரின் பேரன் தேற்றிக்கொண்டு இருந்தான்
( உலகு வாழும் தமிழன்னைக்கெல்லாம் அவன் தலைப் பிள்ளை - கவிஞர் தமிழ்நதி)
வேறு ஒருவரை தொடர்பு கொண்டு உறுதி படுத்தி வரலாமென கிளம்பி போனேன்
தொடர்பில் அவர் வராமலிருக்கவே, மனசு தவியாய் தவித்தது.
"அண்ணே நான் பத்திர எழுத்தாளர் பிரிட்டோ பேசுறேன்ணே, இங்க வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்தேன்ணே. டிவீ பார்த்தேன் உண்மையாண்ணே" விசும்பி அழும் ஒலி கேட்கிறது. இந்த நபரை ஒரு உணர்வாளராக அறிந்ததில்லை அதுவரை.
"மாதா கிட்ட வேண்டிருக்கேன்ணே ஒண்ணும் தப்பாயிடாதுண்ணே"
அப்பாடா ஒருவழியாய் தொடர்பு கிடைத்தது. நிம்மதி பிறந்தது
வீட்டுக்கு தொடர்பெடுத்தேன்.
அவரு நலமாயிருக்காரும்மா !
பின்னால் ஒரு குரல் கேட்டபடியிருந்தது.
"அப்பாயீ கவலை படாத ஒண்ணு ஆகியிருக்காது, நான் சொல்லுறேன்ல" அது அவரின் பேரன் "பிரபாகரனின்"குரல்
Wednesday, May 27, 2009
@
3:33 PM
எழுதியவர்:
வரவனையான்
Subscribe to:
Post Comments (Atom)


:)