Tuesday, March 10, 2009

@ 8:46 PM எழுதியவர்: வரவனையான்

தனக்கு எதிரான எந்த ஒரு சிறு முனகலை கூட பாசிசம் அனுமதிக்காது. முனகலையும் பெருமூச்சையும் கண்டாலே துடித்து போய் அதனை அடக்க முற்படும் பாசிசம், குரலினை எப்படி விடும். அப்படியொரு நிகழ்வுதான் அன்மையில் கருணாநிதி என்கிற கரங்கொண்டு பேராயம் நிகழ்த்த துவங்கியுள்ள கைதுகள். சீமான் துவங்கி கொளத்தூர் மணி அண்ணன், நாஞ்சில் சம்பத் என நீண்டு செல்லும் கைதுக்காட்சிகள். கருணாநிதியின் கரம் என சொல்லுவதால் அவர் இதில் ஒரு கருவி மட்டுமே என இங்கு நான் சொல்ல வரவில்லை. தன்னை ராவணனாகவும் கடைசியாய் இயக்கத்தை விட்டு பிரிந்து போன "உடன்பிறப்பை" வீபிடணாகவும் பொருத்தி பேசுவது கருணாநிதியின் வாடிக்கை, தன்னை ராவணனாகவும் கும்பகர்ணனாகவும் விளித்துக்கொண்ட கருணாநிதியே "வீபிட" வேலைகளில் இறங்கிய "எதிர்பாராத" திருப்புமுனை காட்சிக்கு இந்த தமிழினம் கொடுத்த விலை 3000 ஈழத்தமிழ் உயிர்களும் ஆற்ற இயலா கோபத்தோடு எரியூட்டிக்கொண்ட தாய்த்தமிழக உறவுகளுமே.

அன்மையில் திண்டுக்கல்லில் "தேசிய ஒருமைப்பாட்டு"க்கு எதிராய் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை ஒளிக்குறுந்தகடாய் வெளி வந்துள்ளது. இதில் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் அன்று ஆற்றிய உரையுள்ளது. ஒன்றை செய்யாதே என்றால் அதை எதிர்த்து நூறாய் செய்வதும் ஒரு போராட்ட குணமே. எந்த பேச்சு கலகமூட்ட கூடியது என அதிகார வர்க்கம் கலங்கியதோ அந்த பேச்சு, வெறும் இருநூறு பேர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய பேச்சு இன்று ஆயிரமாயிரம் மக்களை இந்த குறுந்தகட்டின் வாயிலாக சென்றடைந்து கொண்டுள்ளது.

6 மறுமொழிகள்:

 1. Pls don't justify Rajiv's murder! LTTE are not saints anyway. You mentioned about Fascism - doesn't LTTE adopt the same strategy? Can any Tamilian survive in Eelam or Srilanka after opposing LTTE's principles or views?

 1. thagavalukku nandri

 1. 3:51 AM  
  Anonymous said...

  Good

 1. ராஜீவ் கொலையை நியாயப்படுத்துவதோ, அப்பழியை காங்கிரஸ்காரர்கள் போலவே புலிகள் மீது வீசுவதோ அறிவார்ந்த செயல் ஆகாது. உசுப்பேத்தி விடுவதற்கு வேண்டுமானால் அது பயன்படும்.

  புலிகளே பல விசயங்களில் அடக்கி வாசிக்கும்போது, தேவையில்லாமல் நிலைமையை சிக்கலாக்குவது இத்தகைய பொறுப்பற்ற பேச்சுகள்தான்.
  குட்டி குரைத்தால் நாய் தலையில் தான் அதுவிடியும் என்பார்கள். அப்படி நமது நோக்கத்திற்கு.. உணர்ச்சி வயப்பட்டோ, திட்டமிட்டோ.. பேசும் பேச்சுகள் எல்லாம் ஈழத் தமிழர் பிரச்சினையை மேலும் மேலும் சிக்கலுக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை நாம் உணராமலும், உணர்ந்து திருந்தாமலும் பலியாகிக் கொண்டிருக்கிறோம்..

  எதை பார்ப்பனர்களும் பார்ப்பன ஊடகங்களும் எதிர் பார்க்கின்றனவோ, அதை அவர்களுக்கு இனிப்பாகத் தந்துவிட்டு, எளிமையாகத் தந்துவிட்டு... இதில் பெருமையடிப்பதில் எந்தப் பயனும் இல்லை.

  ஈழத் தமிழர் படுகொலையை முன்னிறுத்தி, அதற்கான அனுதாபத்தை உலகம் முழுக்க திரட்ட வேண்டிய தருணத்தில், வீராவேசம் பேசுவதெல்லாம் வேண்டாம் என்றுதான் புலிகளே தாங்கள் பெற்றுவரும் வெற்றிகளைக் கூட வெளிக்காட்டாமல் போராடி வருகிறார்கள்.

  ஆனால் இங்கு இந்த வீராவேசப் பேச்சுகள்தான் பிரச்ச்சினையை, கவனத்தை திசை திருப்புவனவாக அமைகின்றன.

 1. 8:16 AM  
  Anonymous said...

  புலிகள் இராஜீவை கொலை செய்திருந்தால் பாராட்டுவோம் என்றுதான் பேசியுள்ளார். புலிகள் மீது பழிபோடவில்லை. குருட்டுபிரின்ஸே காதும் போச்சா?

  புலிகளை உருவாக்கியவர் கொளத்துார் மணி. உங்கள் ஜால்ரா வீரமணி துரோகி கருணாவிடம் பேசுவது போல அடிக்கடி அவ்வப்போது தலைவர் பிரபாகரனிடம் பேசுபவர். சீமானும் அப்படித்தான். விசயம் தெரியாமல் கத்துக்குட்டியாக கத்தாதே. புலிகள் ஆதரவு இணையதளங்களிலே இந்தியாதான் போரை நடத்துகிறது என வெளிப்படையாக குற்றம்சாட்டி கட்டுரைகள் வந்துவிட்டன. நீயும் உன் தலைமை ஜால்ராவும் மட்டும்தான் இந்தியாவையும் இந்திய உளவுநிறுவனப் பார்ப்பனர்களையும் ஜாக்கிபோட்டு நிறுத்துகின்றீர்கள்.

  உன் தலைமை ஜால்ராவுக்கு இருக்கும் சொத்தைப் பாதுகாத்து தன் மகனுக்கு சேஃப்டி பண்ணனும்ங்கற பொறுப்பு இருக்கு. அதில் ஏதாவது நாமும் கொஞ்சம் சுரண்டித்திங்கலாம்கிற பொறுப்பான எண்ணம் உனக்கு இருக்கு.

  எங்களைப்போன்ற வெறும் தொண்டர்களுக்கு மானம் ரோசம் மட்டும்தான் இருக்கு. மனதுக்கு பட்டதை வெளிப்படையாகப் பேசத்தான் செய்வோம். எங்களுக்கு என்ன கஷ்டம் வரும் என்ற யோசனை இல்லாமல் தமிழனுக்கு தேவையானதை தேவையான நேரத்தில் பேசத்தான் செய்வோம்.

  கொளத்துார் மணி பேசியபேச்சைக் கேட்டு பல ஊர்களில் புதிதாகத் தோழர்கள் உருவாகி வருகிறார்கள். திருமண வீடுகளில் அப்பேச்சு ஒளிபரப்பப்படுகிறது. டி.வி.டி தாம்பூலமாக வழங்கப்படுகிறது. கேட்டவர்கள் அனைவரும் புலிகளுக்கு ஆதரவாக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றுதான் கேட்கிறார்கள்.

  உங்களைப்போல சொத்தைக் காப்பாற்றவேண்டும், சுரண்டித்திங்க வேண்டும் என்று பொறுப்பாக அமைதியாக இருப்பவர்களின் ஜிகினா வேலைகளால் உங்கள் இயக்கத்தில் இருக்கும் பல நுாறுபேர் தி.க வை விட்டு விலகிவிட்டார்கள் தெரியுமல்லவா?

  ஈழம் தொடர்பாக நடக்கும் வெறும் ஆர்ப்பாட்டச் செய்திகளைக் கூட விடுதலையில் வெளியிட மறுக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டை கூறி விடுதலையின் திருச்சி ஆசிரியர் உங்களிடமிருந்து விலகுவதாக கடிதமே கொடுத்துள்ளார் என்பது எமக்குத் தெரியும்.

  ஈழச்சிக்கலில் முதுகெலும்பில்லாத கலைஞர் என்றும், இதயம் இல்லாத மன்மோகன் என்றும் குறுஞ்செய்தி அனப்பியதற்காக ஒரு தோழரை தி.க விலிருந்து விலக்கியுள்ளீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும்.

  பிரபாகரன் பிறந்தநாளுக்கு இனிப்பு வழங்கிய குற்றத்திற்காக திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் திருத்துறைப்பூண்டி மாணவர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்ட செய்தியும் தெரியும்.

  தமிழீழத்துக்கு ஒரு கருணா
  தமிழ்நாட்டுக்கு ஒரு வீரமணி

  இந்த வரலாற்றை நோக்கி தி.க செயல்படுவது தெரிகிறது. உங்கள் எச்சில்இலைக்கு அலையும் நாய்புத்தியை நியாயப்படுத்தி பேசாதே.

  முடிந்தால் கொளத்துார் மணி போல பேச, செயல்பட பழகு. முடியாவிட்டால் உன் ஜால்ரா வேலையை மட்டும் பார். ஈழம் பற்றியெல்லாம் பேசாதே. மக்கள் உங்களைப்பார்த்து சிரிக்கிறார்கள். மக்களைப் புரிந்துகொள்.

 1. பிரின்சுக்கு பதில் எழுதியது நான்தான்