Tuesday, February 03, 2009

@ 8:25 PM எழுதியவர்: வரவனையான்

ஈச்சம்பட்டி கிராமத்துல ஒரு கணக்கபிள்ள இருந்தானாம்.ஊருல பூராம் படிக்காத பயபுள்ளைகளா இருந்த காலம்.அந்த ஊரோட சிட்டா அடங்கல் பத்துங்கீழ் பொத்தகம், ஒலைசுவடில எழுதுன நிலபத்திரம்ன்னு எல்லாமே அந்தாளுகிட்ட தான் இருந்துச்சு. படிக்கலைன்னாலும் மக்கள் பூராம் ஒத்துமையாத்தான் இருந்தாங்க இந்தாளு பொறுப்புக்கு வர வரைக்கும். எவனுக்கு எவ்வளவு நெலம்ன்னு அந்தாளுட்ட கேட்டாதான் தெரியும்.ஒழுங்க வெவசாயம் பண்ணிட்டு இருக்கிறவன் தோட்டத்தை அடுத்தவனோடதுன்னு சொல்லி சண்டையிழுத்து விடுறதே பொழப்பு. மனிசன் வந்த நாளைல இருந்து ஒருத்தனுக்கு ஒருத்தேன் சிண்டு முடிஞ்சுவிட்டு சட்டைய கிழிச்சுக்க வைக்கிறதே வேலையா பார்த்துகிட்டு இருந்துருக்கான். இப்படியே ஒரு முப்பது நாப்பது வருசம் ஓட்டிருக்கான் வாழ்க்கைய என்னைக்கினாலும் உண்மை தெரியாம போகுமா. இப்ப ஊருகாரனுங்க தெளிவாகிட்டானுங்க. இந்தாள மதிக்கிறதே இல்ல. வயசும் ஆகிப்போச்சு. ஒரே மகன் வேற. எங்கட நம்ம செத்த பிறகு நம்ம புள்ளைக்கு இதே கணக்கு வேலை ஊருக்காரனுங்க தாராம போயிடுவானுங்களோன்னு நெனச்சு ஒரு திட்டம் போட்டான். மறுநாளு ஊரு கூட்டம் கூட்டி "எல்லாருகிட்டையும் மன்னிப்பு கேட்டுகிறேன். எம்புட்டோ குண்டுமாத்து குழிமாத்து செஞ்சு உங்களையெல்லாம் அடிச்சுகிட வச்சேன்.இன்னைக்கு ஊரு காலில உழுந்து கும்பிட்டு கேட்டுகிறேன்,இருந்தாலும் நான் செஞ்ச பாவம் தீராது அதுக்கு ஒரு வழி நானே சொல்லுறேன்னு'சொல்லி "நான் செத்த அன்னிக்கு என் குண்டியில பெரிய ஆப்பு ஒண்னை சொருகி அதுல வைக்கோல் பிரில செஞ்ச கயிறால கட்டி ஊருல இருக்கிற எல்லா தெருவு வழியாவும் இழுத்துகிட்டு போயி அடக்கம் பண்ணுங்கன்னு" கேட்டுகிட்டாரு

ஊருகாரனுங்க என்னாடாது கணக்கபுள்ள இப்படி திருந்திட்டாருன்னு சொல்லி சரிங்க சாமி! அப்படியே செஞ்சுடுறோம்ன்னு சொன்னாங்க. ஒரு மாசத்துல கணக்கபுள்ளையும் செத்து போயிட்டாரு சாக முன்ன புள்ளையை கூப்பிட்டு காதுல எதோ சொல்லிட்டு செத்து போயிட்டாரு. ஊருகாரனுங்களும் சரி கணக்கபுள்ள கேட்டுகிட்ட மாதிரி அவரு குண்டியில பெரிய ஆப்பா பாத்து சொருகி வைக்கோல் கயித்துல கட்டி தெருத்தெருவா இழுத்துகிட்டு போக ஆரம்பிச்சுருகானுங்க. ரெண்டு தெருவுதான் போயிருப்பானுங்க, ஒரு போலீஸ் வண்டி வந்து இறங்கிருக்கு, உள்ள இருந்து இறங்கின வெள்ளைக்கார இன்ஸ்பெக்டருக்கு தமிழ் தெரியாது. ஊருகாரனுங்களை பாத்து என்னாட பண்ணிட்டு இருகிங்கன்னு கேட்க கணக்கபுள்ள கடைசி ஆசைய நெறவேத்துறோம்ன்னு சொல்லிருக்கானுங்க.

புடிச்சு எல்லாத்தையும் வண்டியில ஏத்துங்கன்னு ஆர்டர் போட்டுடாரு. என்ன சாமீ செஞ்சோம்ன்னு ஊருகாரனுங்க கேட்க . கணக்க புள்ளைய குண்டியில ஆப்பு வச்சு கொன்னதுக்கு புடிச்சேன்னு சொல்லிருக்காரு, இப்படி சாகம்போது கூட அடுத்தவனுங்களுக்கு இம்சை கொடுத்து சாகிறவனுங்களை' இவன் ஈச்சம்பட்டி கணக்கன் மாதிரித்தான்யா செய்யிருறான்னு எங்க ஊரு பக்கம் சொல்லுவானுங்க.

அய்யா கருணாநிதி இப்ப உங்களையும் அப்படித்தான் சொல்லுறானுங்க. இதுக்கு பொச்ச மூடிட்டு சும்மா இருந்துருக்கலாமேன்னு சொல்லுவாய்ங்கல்ல அப்படித்தான் சொல்லத்தோணுச்சு உங்க செயற்குழு கூட்டம் முடிவ படிச்சபோது.எனகென்னமோ நல்லதா படலை சாமி உங்க போக்கு

9 மறுமொழிகள்:

 1. Kalakkal

 1. Hi

  We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

  Please check your blog post link here

  If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Sincerely Yours

  Valaipookkal Team

 1. ***இதுக்கு பொச்ச மூடிட்டு சும்மா இருந்துருக்கலாமேன்னு சொல்லுவாய்ங்கல்ல அப்படித்தான் சொல்லத்தோணுச்சு உங்க செயற்குழு கூட்டம் முடிவ படிச்சபோது.***

  அப்படிப் போடு ........!

 1. குடும்பத்திற்காகவும்,பதவிக்காகவும் அலைகிறார் கலைஞர் என்னும் கழுதைப்புலிகளின் பிரச்சாரம் உண்மையாக இருக்குமோ என்று முதன்முறையாக எண்ணத்தலைப்படுகிறேன்.தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப்பார்த்து கலைஞர் இன்று மத்திய அரசிலிருந்து விலகிக்கொள்ளும் முடிவை எடுத்திருக்க வேண்டும்.

 1. "கோமாளி கருணாநிதி"யிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்த்தது உங்கள் தவறு.

 1. "எனகென்னமோ நல்லதா படலை சாமி உங்க போக்கு"
  எல்லாருக்கும் தான்!

 1. இந்த ஆள இன்னும் 'கலைஞர்'னு அழைக்கனுமா? கயவன் கருணானிதி என்பதே பொருத்தமாக இருக்கும். அதேவேளை ஜெயலலிதாவை 'வப்பாட்டி' ஜெயலலிதா என்று இணையத்தில் விளிக்க வேண்டும்.
  அது போல, 'கோமாளி' கோபால்சாமி, 'அரசியல் வேசி' ராமதாஸ் போன்ற அடை மொழிகளை பயன்படுத்த வேண்டும்.

  இந்த பொறம்போக்கு நாய்களை கட்டாயம் தோலுரிக்க வேண்டும். அதை இணையத்தில் இருந்தேனும் தொடங்குவோம். சோமாறி, கொட்டைதாங்கிகளுக்கும் ஆப்படித்து அடக்க வேண்டும்.

  -----------------
  தறுதலை
  (தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)

 1. ரொம்ப நல்லாச் சொன்னீங்க. அதே போல ஈழத்தமிழர் என்றுகூடச் சொல்லப் பயந்து இலங்கைத் தமிழர் (பாதுகாப்பு இயக்கம்) என்று சுருதியைக் குறைத்து விட்ட பிற இயக்கங்களையும் அம்பலப்படுத்த வேண்டும். விடுதலைப்புலிகள் தோழமைக் கழகம் மறந்துபோய்விட்டது. தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு மறையத் தயாராகிவிட்டது. 29.01.2009 வரை ஈழத்தமிழராக இருந்தவர்கள் இப்போது இலங்கைத் தமிழராகி விட்டார்கள். வார்த்தையளவில் இருந்த ஈழத்தைக்கூட ஈழ ஆதரவாளர்களே மாற்றிவிட்டார்கள். இனி ஸ்ரீலங்கா தமிழர் என விளிக்கப்படும் கொடுமையும் நடக்கும். திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு டாக்டர் இராமதாசும், திருமாவளவனைக் கண்டித்து தங்கபாலு நடத்திய உண்ணாவிரதத்துக்கு கோ.க. மணியும் நேரடியாகச் சென்று வாழ்த்திப் பேசுகின்றனர். இந்திய தேசியத்திற்கோ, இந்திய அரசிற்கோ, குறைந்த அளவு காங்கிரசுக்காரனுக்கோ கூட எந்த தொல்லையும் வராமல் நடக்கும் போராட்டங்களால் என்ன பயன் கிடைக்கப்போகிறது? கையாலாகாமல், ஆத்தமாட்டாமல் பந்த், உண்ணாவிரதம் என நாமும் செய்து வருகிறோம். அந்த தைரியத்தில்தான் கலைஞரும் துணிச்சலாகத் இனத்துரோகத்தை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்.

 1. 5:56 PM  
  Anonymous said...

  hahahah u r right