ஈழ மக்களுக்கு ஆதரவாய் திரளும் மாணவர்களின் எழுச்சியை கண்டு அதனை மழுங்கடிக்கும் நோக்கில் அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி மூடி விடுதி மாணவ மாணவிகளையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி ஒரு "அரசின்" குணத்தை வெளிப்படுத்தியுள்ளது காங்கிரசால் முண்டு கொடுக்கப்பட்டு நிற்கும் திமுக அரசு.
கல்லூரிகளை மூடிய போதிலும் இன்றும் திண்டுகல்லில் மாணவர்களும் மாணவிகளும் தன்னெழுச்சியாக கூடி ஒரு கண்டன பேரணி நடத்தி சிங்கள அரசுக்கும் அதற்கு உதவி புரியும் இந்திய அரசுக்கும் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
| From Students struggle |
| From Students struggle |
அதே வேளை திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் விடுதியிலிருந்து வெளியேற மறுத்து 150 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் துவங்கியுள்ளனர். மாணவர்களை சந்தித்து வாழ்த்து சொல்ல சென்ற தமிழக மாணவர் கூட்டமைப்பு தோழர்களை அப்பல்கலையின் பார்ப்பன நிருவாகம் உள்நுழைய அனுமதி மறுத்துள்ளது.


0 மறுமொழிகள்:
Post a Comment