Tuesday, February 24, 2009

@ 3:30 PM எழுதியவர்: வரவனையான் 2 மறுமொழிகள்Thursday, February 05, 2009

@ 1:18 PM எழுதியவர்: வரவனையான் 2 மறுமொழிகள்

இன்று திண்டுக்கல்லில் நடந்த வழக்கறிஞர் சங்க ஆர்ப்பாட்டத்தில் மகிந்த,ங்கோத்தாபாய மற்றும் பொன்சேகா ஆகிய போர்வெறியர்களின் கொடும்பாவிகளும் சிங்கள கொடியும் எறிக்கப்பட்டது.

video


From Sril lanka flag burned

மகிந்த மாமா போட்டிருப்பது உண்மையாகவே சந்திரஹாசனின் ஜிப்பாவாகும். சந்திரகாசனின் அந்தியந்த முந்நாள் சீடர் லவட்டிக்கொண்டு வந்த அந்த ஜிப்பா மகிந்தவிற்கு அணிவித்து எரியூட்டப்பட்டது.

மூம்மூர்த்திகள் சாவதுக்கு முன்னால்
From Sril lanka flag burned


மகிந்தாகூட கடைசி புகைப்படம்

Tuesday, February 03, 2009

@ 8:25 PM எழுதியவர்: வரவனையான் 9 மறுமொழிகள்

ஈச்சம்பட்டி கிராமத்துல ஒரு கணக்கபிள்ள இருந்தானாம்.ஊருல பூராம் படிக்காத பயபுள்ளைகளா இருந்த காலம்.அந்த ஊரோட சிட்டா அடங்கல் பத்துங்கீழ் பொத்தகம், ஒலைசுவடில எழுதுன நிலபத்திரம்ன்னு எல்லாமே அந்தாளுகிட்ட தான் இருந்துச்சு. படிக்கலைன்னாலும் மக்கள் பூராம் ஒத்துமையாத்தான் இருந்தாங்க இந்தாளு பொறுப்புக்கு வர வரைக்கும். எவனுக்கு எவ்வளவு நெலம்ன்னு அந்தாளுட்ட கேட்டாதான் தெரியும்.ஒழுங்க வெவசாயம் பண்ணிட்டு இருக்கிறவன் தோட்டத்தை அடுத்தவனோடதுன்னு சொல்லி சண்டையிழுத்து விடுறதே பொழப்பு. மனிசன் வந்த நாளைல இருந்து ஒருத்தனுக்கு ஒருத்தேன் சிண்டு முடிஞ்சுவிட்டு சட்டைய கிழிச்சுக்க வைக்கிறதே வேலையா பார்த்துகிட்டு இருந்துருக்கான். இப்படியே ஒரு முப்பது நாப்பது வருசம் ஓட்டிருக்கான் வாழ்க்கைய என்னைக்கினாலும் உண்மை தெரியாம போகுமா. இப்ப ஊருகாரனுங்க தெளிவாகிட்டானுங்க. இந்தாள மதிக்கிறதே இல்ல. வயசும் ஆகிப்போச்சு. ஒரே மகன் வேற. எங்கட நம்ம செத்த பிறகு நம்ம புள்ளைக்கு இதே கணக்கு வேலை ஊருக்காரனுங்க தாராம போயிடுவானுங்களோன்னு நெனச்சு ஒரு திட்டம் போட்டான். மறுநாளு ஊரு கூட்டம் கூட்டி "எல்லாருகிட்டையும் மன்னிப்பு கேட்டுகிறேன். எம்புட்டோ குண்டுமாத்து குழிமாத்து செஞ்சு உங்களையெல்லாம் அடிச்சுகிட வச்சேன்.இன்னைக்கு ஊரு காலில உழுந்து கும்பிட்டு கேட்டுகிறேன்,இருந்தாலும் நான் செஞ்ச பாவம் தீராது அதுக்கு ஒரு வழி நானே சொல்லுறேன்னு'சொல்லி "நான் செத்த அன்னிக்கு என் குண்டியில பெரிய ஆப்பு ஒண்னை சொருகி அதுல வைக்கோல் பிரில செஞ்ச கயிறால கட்டி ஊருல இருக்கிற எல்லா தெருவு வழியாவும் இழுத்துகிட்டு போயி அடக்கம் பண்ணுங்கன்னு" கேட்டுகிட்டாரு

ஊருகாரனுங்க என்னாடாது கணக்கபுள்ள இப்படி திருந்திட்டாருன்னு சொல்லி சரிங்க சாமி! அப்படியே செஞ்சுடுறோம்ன்னு சொன்னாங்க. ஒரு மாசத்துல கணக்கபுள்ளையும் செத்து போயிட்டாரு சாக முன்ன புள்ளையை கூப்பிட்டு காதுல எதோ சொல்லிட்டு செத்து போயிட்டாரு. ஊருகாரனுங்களும் சரி கணக்கபுள்ள கேட்டுகிட்ட மாதிரி அவரு குண்டியில பெரிய ஆப்பா பாத்து சொருகி வைக்கோல் கயித்துல கட்டி தெருத்தெருவா இழுத்துகிட்டு போக ஆரம்பிச்சுருகானுங்க. ரெண்டு தெருவுதான் போயிருப்பானுங்க, ஒரு போலீஸ் வண்டி வந்து இறங்கிருக்கு, உள்ள இருந்து இறங்கின வெள்ளைக்கார இன்ஸ்பெக்டருக்கு தமிழ் தெரியாது. ஊருகாரனுங்களை பாத்து என்னாட பண்ணிட்டு இருகிங்கன்னு கேட்க கணக்கபுள்ள கடைசி ஆசைய நெறவேத்துறோம்ன்னு சொல்லிருக்கானுங்க.

புடிச்சு எல்லாத்தையும் வண்டியில ஏத்துங்கன்னு ஆர்டர் போட்டுடாரு. என்ன சாமீ செஞ்சோம்ன்னு ஊருகாரனுங்க கேட்க . கணக்க புள்ளைய குண்டியில ஆப்பு வச்சு கொன்னதுக்கு புடிச்சேன்னு சொல்லிருக்காரு, இப்படி சாகம்போது கூட அடுத்தவனுங்களுக்கு இம்சை கொடுத்து சாகிறவனுங்களை' இவன் ஈச்சம்பட்டி கணக்கன் மாதிரித்தான்யா செய்யிருறான்னு எங்க ஊரு பக்கம் சொல்லுவானுங்க.

அய்யா கருணாநிதி இப்ப உங்களையும் அப்படித்தான் சொல்லுறானுங்க. இதுக்கு பொச்ச மூடிட்டு சும்மா இருந்துருக்கலாமேன்னு சொல்லுவாய்ங்கல்ல அப்படித்தான் சொல்லத்தோணுச்சு உங்க செயற்குழு கூட்டம் முடிவ படிச்சபோது.எனகென்னமோ நல்லதா படலை சாமி உங்க போக்கு

Monday, February 02, 2009

@ 7:06 PM Labels: எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்ஈழ மக்களுக்கு ஆதரவாய் திரளும் மாணவர்களின் எழுச்சியை கண்டு அதனை மழுங்கடிக்கும் நோக்கில் அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி மூடி விடுதி மாணவ மாணவிகளையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி ஒரு "அரசின்" குணத்தை வெளிப்படுத்தியுள்ளது காங்கிரசால் முண்டு கொடுக்கப்பட்டு நிற்கும் திமுக அரசு.

video

கல்லூரிகளை மூடிய போதிலும் இன்றும் திண்டுகல்லில் மாணவர்களும் மாணவிகளும் தன்னெழுச்சியாக கூடி ஒரு கண்டன பேரணி நடத்தி சிங்கள அரசுக்கும் அதற்கு உதவி புரியும் இந்திய அரசுக்கும் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

From Students struggle


From Students struggleஅதே வேளை திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் விடுதியிலிருந்து வெளியேற மறுத்து 150 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் துவங்கியுள்ளனர். மாணவர்களை சந்தித்து வாழ்த்து சொல்ல சென்ற தமிழக மாணவர் கூட்டமைப்பு தோழர்களை அப்பல்கலையின் பார்ப்பன நிருவாகம் உள்நுழைய அனுமதி மறுத்துள்ளது.

Sunday, February 01, 2009

@ 9:19 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்


min


இடம் : சிறுமலை முகாம் - திண்டுக்கல் மாவட்டம்