இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி என்கிற ஊரை சேர்ந்த தோழர் ரவி என்பவர் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் இன்னலினையும் அதற்கு சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா செய்யும் ராணுவ உதவிகளை கண்டித்தும் தமிழக அரசு வாய் முடி மௌனியாக இருப்பதை கண்டித்தும் எரிணெய் ஊற்றி தன்னை கொளுத்திகொண்டார். செய்தியறிந்த தோழர்களும் தமிழின உணர்வாளார்களும் அந்த உறவைக்காண புறப்பட்டுகொண்டிருந்த வேளையில் ஊடகவியலாளார்களூக்கு தமிழக காவல் துறையால் தீ வைத்து கொண்ட அந்த தோழரை பற்றி தவறான தகவல்கள் பறப்பபட்டுகொண்டிருந்தது. அவர் மேல் கொலை வழக்கு நிலுவையிலிருக்கிறது, கடன் தொல்லை என்றெல்லாம் அவதூறாய் செய்தி சொல்லி இச்செய்திக்கு முக்கியத்துவம் அளித்து போடவேண்டாம் என்றும் சொல்லி வந்த வேளையில். காவல் துறையின் இச்செயலை கண்டித்து மதுரை வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் போது செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன் "என் தந்தை முத்துகுமரன் ஈகை கண்டு பெரிதும் துயருற்று இருந்தார், நேற்று பகல் முழுவதும் அவரது செய்தியையே தொலைக்காட்சியில் பார்த்தவாறே இருந்தார். அவர் ஈழத்தமிழர்களின் பால் பெரிதும் அன்பும் உணர்வும் கொண்டவர் என்று தெரிவித்தார்.
தீக்குளித்த அந்த தோழரின் மகன் பெயர் "பிரபாகரன்"
இது ஒன்றும் போதுமே அவர் எதற்கு இச்செயலில் இறங்கினார் என்கிறா உண்மை உலகறிய
தோழர் இது வரை அபாய கட்டத்தில் இருப்பதாகவே அறிகிறேன்
Saturday, January 31, 2009
@
3:38 PM
எழுதியவர்:
வரவனையான்
Subscribe to:
Post Comments (Atom)


0 மறுமொழிகள்:
Post a Comment