அதிர்ந்து பேசிக்கூட நான் பார்த்ததில்லை இந்த நண்பரை, இவ்வளவு உணர்வாளராக இருப்பார் என்று தெரியாமல் போய்விட்டது நாட்கள்.
தன்னந்தனியனாய் போராட்டத்தினை துவக்கியுள்ளார். அடுத்த கட்ட போராட்டம் குறித்து திண்டுக்கல் வழக்குரைஞர்கள் சங்கத்தின் ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இவர் போராட்டம் துவக்கிய செய்தி எட்டியது. பின்னர் வழக்குரைஞர்கள் அனைவரும் இவர் போராட்டம் துவக்கியுள்ள சாணர்பட்டி( திண்டுக்கல்லில் இருந்து 15 கி.மீற்றர்) சென்று வாழ்த்துகளை தெரிவித்தும் அவ்ரின் உறுதியையும் தமிழின உணர்வினையும் பாராட்டி தங்களின் முழு ஒத்துழைப்பு உண்டு என அறிவித்துள்ளனர். இவரின் போராட்ட செய்தியறிந்த பல்வேறு அரசியற்கட்சியினரும் தமிழ் உணர்வாளார்களும் அவருக்கு வாழ்த்து சொல்ல விரைந்த வண்ணமுள்ளனர்.
இவருக்கு சர்க்கரை மற்றும் இருதய நோய்கள் இருப்பதுதான் என்னை கவலைகொள்ள செய்கிறது.
Friday, January 30, 2009
@
4:00 PM
எழுதியவர்:
வரவனையான்
Subscribe to:
Post Comments (Atom)


As a Sri Lankan Tamil We are very thankful for your support. WE NEVER FORGET BROTHERS AND SISTERS.