Tuesday, January 27, 2009

@ 4:38 PM எழுதியவர்: வரவனையான்


ராமுக்கு வயசு எவ்வளவுன்னு தெரியல ! ஆனாக்க ரொம்ப கெழடுதான் அது. ஒரு காலத்தில இந்த தெருவுல அது அட்டகாசம் ரொம்ப இருந்துச்சாம். நல்லவன் கெட்டவன்னுலாம் அதுக்கு தெரியாதாம் "என் கடன் கடித்துக்கொண்டே இருப்பதாம்" அப்படிங்கிற மாதிரி அமைதியா பின்னால வந்தி லப்புன்னு கடிச்சு வச்சுட்டு போயிடுமாம். இந்த தெருவுக்கு வந்ததுல இருந்து தட்சினாமூர்த்தியை மட்டும் அதுக்கு பிடிக்கவே பிடிக்காதாம் தட்சினாமூர்த்தி இல்லாத போதும் கூட அவரு பேரை சொன்னாலே ஒரே குலை குலைச்சு கோவத்தை காட்டுமாம். இந்த லூசு நாயி ஒரு தடவை அதுக்கு பொறை வாங்கி பொட்ட தட்சினாமூர்த்தியை கடிச்சதுதான் தெரு காரங்களுக்கு எல்லாம் கடுப்பாகிடுச்சு. சொறி நாயா இருந்தாலும் பாவம்ன்னு விட்டு வச்சதால இவ்வளோ இம்சைன்னு அடிச்சு துரத்தி விட்டுட்டாங்க. எப்பாவாது ஆடிக்கொருக்க அம்மாவாசைக்கொருக்க மாலினி அக்கா வீட்டு பக்கம் வந்து ஊளையிடும், சமயதில "ரத்னா" ராம் அண்ணன் வீட்டு கொல்லைபுறதிலையும் இருந்து ஊளையிடும் அப்போதான் தெரியும் இந்த நாயி இன்னுமும் உசிரோடா இருக்கிறது. இன்னைக்கு போண்டா மணிதான் சொன்னான் அந்த ராமு நாயி மண்ணு லாரில அடிபட்டு செத்து போச்சாம்.

ச்சே சட்ட ஒழுங்கே சரியில்லப்பா.....

9 மறுமொழிகள்:

  1. val val val

  1. செத்தது யாரு?

  1. 5:45 PM  
    Anonymous said...

    என்ன உங்க கோஷ்டி பூரா இன்று ஒரே நாய் புராணம். இனப்பாசம் இழுக்கிறதோ.

  1. நல்ல பதிவு.

  1. 6:52 PM  
    காட்டுக்குதிரை said...

    இந்த நாய் மட்டும் இல்ல, இப்ப எல்லா உயிரினங்களும் சேர்ந்து தட்சினாவை கடிக்குது.

  1. புரியலை...

  1. // Thooya said...
    புரியலை... //


    புரியுற அளவிற்கு பெரிய செய்தியல்ல. ஒரு கிழட்டு நாய் செத்து போச்சு. அவ்வளவுதான்.

  1. 6:29 PM  
    Anonymous said...

    http://sify.com/tamil/fullstory.php?id=14845551


    இந்த செய்திக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இருக்கா......

  1. அய்யோ பாவம்!

    ஆர்.வெங்கட்டராம அய்யர் செத்துட்டாரா?

    இத்தனை நாள் உயிரோடு இருந்தாரா?

    சரி...அஞ்சலி செலுத்துவோம்.