Friday, January 16, 2009

@ 6:52 PM எழுதியவர்: வரவனையான்ராஜீவ்காந்தியின் மரணத்திற்கு பிறகு ஒரு கவிதை எழுதிய குற்றத்திற்காய் பாவலேறு பெருஞ்சித்திரனாரை "தடா" வழக்கில் சிறையிலிட்டனர். அவரை சிறையிலடைத்ததற்கு காவல்துறை சொன்ன காரணம் அவர் கவிதையை ஒரு கொலை மிரட்டல் என்று.

பாவலேறுவிடம் இது பற்றி ஒரு முறை கேட்டபோது சொன்னார் "நான் அறம் பாடினேன், அவன் செத்து போனான்"என்று . " முண்டையின் மகனே முண்டையின் மகனே; இறந்து தொலைவாயோ" என்று துவங்கும் அந்த கவிதையை அவர் எழுதி முடித்த ஆறே மாதங்களில் ராஜீவ் செத்துபோனார். ஆனாலும் அக்கவிதை எந்த சூழலில் எழுதப்பட்டது என்று பார்க்கும் போது தன் இனமக்களை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாத படுபாதக கொலைகளையும் கேடுகெட்ட பாலியல் வல்லுறவுக்குற்றங்களையும் செய்த படையினரையும் அதனை தடுக்காமல் குரூரமாக வேடிக்கை பார்த்த அரசன் மீதான ஒரு ஏழை தமிழ்க்கவிஞனின் ஆற்றாமைக்கோபம் இப்படித்தான் வெளிப்படும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

அவர் ஒன்றும் யோக்கியமானவர் அல்ல , அமைதி தவழும் முகத்தினோடு புகைப்படங்களில் தெரியும் அவரின் கருணை அவர் பதிவியேற்ற சில தினங்களிலே வெளிப்பட்டது. அவரின் தாயார் கொல்லப்பட்ட பொழுது அவரை கொன்றது ஒரு சீக்கியன் என்ற காரணதிற்காய் ( ஒரு இனத்தின் நம்பிக்கையின் மீது சப்பாத்துகள் பட்டதற்காய்) 3000திற்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். கன்ணில் பட்டவர்கள் எல்லாம் வெட்டப்பட்டும் அடித்தும் கொல்லப்பட்டனர். அதன் பின் இவர் பிரதமராய் ஆன பொழுது பத்திரிக்கையாளர்கள் கேட்டனர் " அப்பாவி சீக்கியர்கள் இவ்வளவு பேர் கொல்லபட்டுள்னரே"என்று, அதற்கு அவர் சொன்ன பதில் "பெரிய ஆலமரம் விழும் போது கீழே இருக்கும் புற்கள் பாதிக்கப்படத்தான் செய்யும்" என்று. அவரின் கருணை கண்டு நாடே திகைத்தது.

மானுடத்திற்கு எதிராய் இந்தியா என்கிற நிலப்பரப்புக்குள் இருப்பவை முன்று விதயங்கள் " காதி, காவி, காக்கி" என்கிற முன்றுதான் அவை. முதலாளிகளுக்கு முட்டுக்கொடுக்க காதியும், மனுநீதியை அடிப்படையாயக்கொண்ட சனாதனங்களை கட்டிக்காக்க காவியும், மேற்சொன்ன இரண்டுக்கும் அடியாள் வேலை பார்க்க முன்றாவதான காக்கியும் இருக்கிறது. பேராயக்கட்சியின் முதன்மைப்பணியே முதலாளித்துவத்துக்கு கொட்டை தாங்குவதுதான், கூடுதலாய் கொஞ்சம் பார்ப்பனியத்துக்கும். இந்திராவின் காலத்தில் அவரின் சோசலிச பாசம் இங்குள்ள இடதுசாரிகளுக்கே தங்களை கொஞ்சம் கிள்ளி பார்த்துக்கொள்கூடிய அளவில் இருந்தது. அவர் போனபின் வந்து சேர்ந்த ராசீவ் காந்தியோ தன் முட்டாள்தனங்களினால் ஈழச்சிக்கலை இடியாப்ப சிக்கலாக்கி செத்து போனார். இந்திய ராணுவத்தை அனுப்பி சொல்லெனாத்துயருக்கு ஆளாக்கியதோடு மட்டுமில்லாமல் இந்திய வெளியுறவுக்கொள்கையிலும் ஒரு வரலாற்று பிழை செய்கிறோம் என்று தெரியாமல் ஜெ.ஆர் ஜயவர்தன பெங்களூர் மாநாட்டில் என்ன சொன்னானோ அதையே இந்திய தேசத்தின் வெளியுறவுக்கொள்கையாய் மாற்றி வைத்ததன் விளைவு தனி ஈழக்கோரிக்கைக்கு இன்றளவிலும் இந்திய அதிகாரிகளின் மத்தியில் பெருந்தடையாய் இருக்கிறது.

ஒரு அண்டை நாட்டு அரசதிபர் சொல்வதை கேட்டு தனது நாட்டு அயலுறவுக்கொள்கையை மாற்றிய ஒரே கோமாளி தலைவர் இவராய்தான் இருப்பார். ஊழல் குற்றச்சாட்டினால் பதவியிழந்த ராசீவ் காந்தி கொல்லப்பட்ட பின் இன்று வரை காங்கிரசு கோமாளிகளின் குரூர நகைச்சுவை நாடகங்கள் முடிந்தபாடில்லை. அன்மையில் "ராஜீவின் ஆவியே மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்கமாட்டோம்' என்று விட்ட பீலாவாகட்டும் திமுக'வின் முதுகிலேறிய நிலையிலேயே திருமாவளவருடன் வம்பிழுத்து "வாங்கிக்கட்டி"கொண்டதாகட்டும் ( பாவம் இதில் சுபவீயைத்தான் இணைய "சொம்புகள்" அடியாள் பட்டம் கட்டியுள்ளனர். சத்தியமூர்த்தி பவனுக்குள் வர முடியுமா என்று சவால் வேறு. அதானே அது அவர்கள் அடித்துக்கொள்ளவென்றே கட்டப்பட்ட மைதானம். அடுத்தவர்கள் வந்து அடிக்க முடியுமா என்ன ! ) இன்னும் இன்னும் நிறைய "ஸ்லாப்ஸ்டிக்" வகை நகைச்சுவைகாட்சிகள். இதில் மிகவும் பிரசித்தி பெற்றது "கோபாலபுரத்துக்கு எடுக்கும் காவடி". எங்கையாவது வாயிருக்க மாட்டாமல் பேசி எங்கே நாடளுமன்ற தேர்தலில் கூட்டணி துரோகத்தால் டவுசர் கழட்டப்படுமோ என பயந்து அணி அணியாய் பால் காவடி பன்னீர் காவடி என கண்கொள்ளா காவடிகள்.


ஃபபூன்கள் சிரிக்க வைக்கமட்டும் எப்போதும் செய்வதில்லை சமயங்களில் "வைத்தி" வேடங்களிலும் வெளுத்து வாங்குகின்றனர். ஹசன் அலி ஞானசேகரன் என பலருக்கும் அதில் போட்டி வேறு. ஓட்டு பொறுக்கும் இந்த ஒட்டுண்ணிகளுக்கு புரியும் மொழி ஒன்று உண்டு அது அவர்களுக்கான வாக்கை மறுப்பதுதான். மறுப்பது மட்டுமல்ல அவர்களின் அதிகாரம் மறுபடியும் அவர்களின் கைகளில் சேரா வண்ணம் பார்த்துக்கொள்ளுதலும்தான். எனக்கு வந்த ஒரு பின்னூட்டத்தினை போல் ஒவ்வொரு மானமுள்ள தமிழன் வீட்டிலும் "தமிழீழ விடுதலையை ஆதரிப்பவர்களுக்கே எங்கள் வாக்கு" என எழுதி வைப்பதே சரி.


ஒரு மாதம் முன்பு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சென்றிருந்தேன். ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அனுமதி வாங்குவது தொடர்பாக. 2000 பேர் கூடும் ஆர்ப்பாட்டத்துக்கு துணை ஆய்வாளரே அனுமதி வழங்கும் போது. எங்களை போல "சர்ச்சைக்குரியவர்களும்" மார்க்சிய லெனிஸ்டு மற்றும் ம.க.இ.க போன்ற தோழமை அமைப்புகளுக்கு (சி.பி.எம்,க்குலாம் ஏட்டைய்யாவே சைக்கிள்ல வந்து ஒரு "ரெட் சல்யூட்" வைத்து கொடுத்திட்டு போவாரு) டி.எஸ்பிய பாரு டிஐஜிய பாரு டிஜிபிய பாருன்னு அலக்கழிப்பார்கள். "ஏன் தோழர் ஒரு 1 மணீ நேரம் ஓலு ஓலுன்னு கத்த போறம் இதுக்கு இம்முட்டு இசுமைய கூட்டுறாங்களே" வழக்கம் போல் அலுத்துக்கொள்ளும் தோழரும் நானும் தேநீர் குடித்துகொண்டிருந்தோம். தேநீர் குடிக்க வந்த நண்பர் ஒருவர் அடையாளம் கண்டுகொண்டு நண்பா உன்னைத்தான் பார்க்க வரலாம்ன்னு இருந்தேன்,

இங்க வந்து பாரு நண்பா !ன்னு சொல்லி காவல்துறை கண்காணிப்பாளர் அறை முன்பிருந்த அறிவிப்பு பலகையி ஒட்டிருந்த ஒரு கடிதத்தை காட்டினார். அது கிழ்வருமாறு இருந்தது.


மிக மிக கமுக்கத்துறை


தனி சுற்றுக்கு மட்டும்
இந்தியாவின் தென்கிழக்கே இருக்கும் இலங்கையில் இனப்பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்திருப்பது தெரிந்ததே. அதை வைத்து இங்கும் தமிழர்களுக்கு ஆதரவாக மீண்டும் பெருமளவிலான ஆதரவுக்குரல்கள் எழுந்திருப்பது இந்தியாவின் நலனுக்கு ஆபத்து.இதை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும் .தமிழீழம் அமையுமானால் அது இந்தியாவின் ஒரு மாநிலம் பிரிந்து போவதற்கு ஒப்பானதாகும்.
எல்லாம் சரிதான் ஆனா இதை போயி எந்த முட்டாப்பயடா இங்க ஒட்டினதுன்னு வெவரம் தெரிஞ்ச அதிகாரி பின்னாடி ஒரு நாள் கேக்க போற கேள்வி காதில் விழ சிரித்துக்கொண்டே வெளிவந்தோம் அனுமதி வாங்கிய பின்.23 மறுமொழிகள்:

 1. 7:07 PM  
  Anonymous said...
  This comment has been removed by a blog administrator.
 1. கதர்ச்சட்டை தொண்டர்கள் கொதித்தெழபோகிறார்கள் கவனம்.

 1. 7:08 PM  
  Anonymous said...

  எலேய் பாடைய ரெடி பண்ணூங்க. திருமாவுக்கு ராமதாஸோ இல்ல நெடுமாறனோ ஜூஸ் கொடுக்க சொல்லுங்க இல்லன்னா இந்த கருணா கிழவன் திருமாவை சைலண்டா இருந்தே கொன்னுருவான்

 1. //சாத்திரி said...
  கதர்ச்சட்டை தொண்டர்கள் கொதித்தெழபோகிறார்கள் கவனம்.//

  இது கருப்புச்சட்டை அண்ணா கலங்காது!

 1. 7:15 PM  
  Anonymous said...

  அவுஸ்திரேலெசிய அமுக சரக்கில் இருந்தாலும் வார்த்தைகளை கவனமாக கையாளும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்

 1. 7:25 PM  
  பேரா முக்கியம் said...
  This comment has been removed by a blog administrator.
 1. 7:30 PM  
  பேரே முக்கியமல்ல said...

  சரிங்க தோழர் ! உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்

 1. 7:30 PM  
  Anonymous said...

  //
  Blogger சாத்திரி said...

  கதர்ச்சட்டை தொண்டர்கள் கொதித்தெழபோகிறார்கள் கவனம்.//

  கொதித்தெழ அவிங்க என்ன சுடுதண்ணியா...சும்பைப் பயலுக.

 1. 7:34 PM  
  Anonymous said...

  இந்த கதர்சட்டை ரெவுடிகளின் வீரமெல்லாம் வெத்துகாகிதத்தில் மட்டும்தான். உண்மையிலேயே நெஞ்சுரம் இருந்தால் மணிசங்கரய்யனை வழிமறிச்சி அடிச்சப்போ திருப்பி அடிச்சிருக்கனும். இல்ல ப.சிதம்பரத்திற்கு பல வகையான் பெண் குறிகளைத் தூக்கிக் காட்டியபோது கொள்ளிக்கட்டைய சொருகியிர்ந்தா இவனுங்க வீரம் தெரியும். தயவு செஞ்சு கருணாநிதி, ராமதாசு, காங்கிரஸ் மறுபடியும் கூட்டணி வெச்சு மே மாதம் நடக்கற தேர்தல்ல பெத்த ஆப்பு வாங்க்னும் என்பது தான் என் அவா.

 1. 7:36 PM  
  Anonymous said...
  This comment has been removed by a blog administrator.
 1. இங்கு அனாவசியமாக எங்கல் தைலாபுரத்தார் பெயர் அடிபடுவதை வண்மையாக கண்டிக்கிறோம்

 1. 7:38 PM  
  Anonymous said...

  இந்த பதிவுக்கு மட்டும் ஏன் நிறைய அனானி பின்னூட்டங்கள்?

  நமக்கு நாமே திட்டமா சார்?

 1. 7:39 PM  
  பிடல் said...
  This comment has been removed by a blog administrator.
 1. 7:39 PM  
  ஒத்தைப்புடுக்கன் said...

  //நமக்கு நாமே திட்டமா சார்?//

  இதக் கேக்கற நீயே ஒரு அனானி என்பது தான் ஒரு ஸ்லாப்ஸ்டிக் காமெடி

 1. 7:43 PM  
  சே said...
  This comment has been removed by a blog administrator.
 1. 7:45 PM  
  பைக்கி(கார்க்கிக்கு எதிரல்ல) said...

  என் நிலைப் பற்றி எனக்கேத் தெரியாத நிலையில் நான் திருமாவை அவன் இவன் என்று விளிப்பதில் தவறில்லை தானே.

  பைக்கி

 1. 4:43 PM  
  ஷ்யாம் said...

  தமிழருக்கும் தமிழ் இனத்துக்கும் எப்போதும் எதிராகவே நிற்கும் இந்த மனிதர்களை வரலாறு என்றைக்கும் மன்னிக்காது

 1. 5:28 PM  
  கலைஞர் said...

  நமக்கு நாமே திட்டம் நான் கொண்டு வந்த திட்டமாச்சே! அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.

 1. 5:35 PM  
  ராஜாத்தி அம்மாள் said...

  பாராளுமன்ற தேர்தல் வரை ஈழப்பிரச்சனையை இழுக்க முடியுமான்னு பாருங்க.

 1. 5:35 PM  
  ஜெ said...

  //கலைஞர் said...
  நமக்கு நாமே திட்டம் நான் கொண்டு வந்த திட்டமாச்சே! அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.//  அந்த திட்டம்தான் இப்போ ஒட்டு மொத்த தமிழருக்கு எதிராய் "நமக்கு நாமமே" திட்டமாக உங்கள் தோழர்கள் காங்கிரசால் செயல்படுத்த படுகிறது. வரும் தேர்தலில் மக்கள் உங்களுக்கும் இலவச நாமம் அடிக்க போவது உறுதி

 1. 5:37 PM  
  கனிமொழி said...

  நண்பர் சீமானையாவது வெளிய விடுங்கப்பா

 1. 5:42 PM  
  கலைஞர் said...

  //கனிமொழி said...
  நண்பர் சீமானையாவது வெளிய விடுங்கப்பா//  அவன் கிடக்கிறான். அவனையெல்லாம் பயன்படுத்திக்கிட்டு விட்டுடனும்.

 1. 5:47 PM  
  தயாளு அம்மாள் said...

  ஈழத்துக்கு ஆதரவா என் மவன் ஸ்டாலினை உண்ணாவிரதம் இருக்கவச்சு முதலமச்ச்சர் ஆக்கச் சொல்லிகிட்டிருக்கேன். எப்ப பண்ண போறீங்க.