Tuesday, January 13, 2009

@ 6:47 PM Labels: , , எழுதியவர்: வரவனையான்

சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் ! வேகும் போதும் தமிழ் மணந்து வேக வேண்டும் ! என்று கனவு கண்டான் ஒரு தமிழ்க்கவிஞன்.

ஒடையிலே என் சாம்பல் ஓடும் போதும் ஓங்கு தமிழே சலசலத்து ஓடவேண்டும் என்றான் உணர்ச்சி பாவலன் காசி ஆனந்தன்.

தமிழ்க்கவிஞர்களின் கனவினை சிரமேற்கொண்டு நனவாக்கி வருகிறான் ரஜபக்சே. தமிழ் படித்துக்கொண்டே சாகிறோமோ இல்லை ஒடையில் சலசலத்து ஓடுகிறோமோ தெரியவில்லை. ஏகாதிபத்தியங்களின் ஆயுத சோதனை மைதானமாகி கிடக்கிறது எம் தமிழீழம். ஒளியும் பங்கருக்குள்ளும் ஊடுறுவி வெடிக்கிறது வல்லாதிக்க குண்டுகள். உயிருக்கு அஞ்சி ஒடும் காணியெங்கும் நொடியில் கருக வைத்து செடியொடும் கொடியொடும் ஊஞ்சலாடிய மரத்தோடும் ஒன்றாய் எரித்து போடுகிறது கொத்தணிக்குண்டுகள். ஒரு வார தாக்குதலில் 3 ல் ஒருவர் குழந்தைகள் என கணக்குச்சொல்லி கவலைப்படுகிறது பாலஸ்தீனம் குறித்து பி.பி.சி.

புகைப்பிடிப்பது புற்றுநோயினை கொண்டு வரும் என்பது உலகறிந்த ஒன்று, அதற்கிடான ஒன்றை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. 6 கோடி தமிழர்களின் கோபத்திற்கு நிகழிலும் எதிர்காலத்திலும் ஆளாகப்போகும் முட்டாள்தனத்தை செவ்வனே செய்து வருகிறது.

ஆயிரம் ஆனாலும் தமிழனுக்கு இருக்கிற நகைச்சுவை உணர்ச்சிக்கு அளவேயில்லைன்னுதான் சொல்லனும். தமிழ் படிப்பு, ஓடையில் சலசலப்பு இதையெல்லாம்விட சிரித்துக்கொண்டெ சாவது சிறப்பல்லவா!

உலக ஊடகங்களும் நாடுகளும் எம்பக்கம் கவனத்தை திருப்பும் முன் ஒன்றை மட்டும் இப்போது செய்யலாம். சிரிச்சுகிட்டே செத்துபோகலாம்.

மசுரு பொங்கலுக்கு வாழ்த்து ஒரு கேடா ?













3 மறுமொழிகள்:

  1. உண்மைதான்!

    இழவு வீட்டில் விழவு ஏது?

    இதையும் கூட விளக்கிக் கூற வேண்டியிருக்கிற அவலம் இந்த இனத்திற்கு வாயத்தது என்னே!

  1. ம்ம்ம்ம்ம்ம்ம்

  1. 4:29 PM  
    Anonymous said...

    மெயில் சுவாரசியமா இருக்கு.