Saturday, January 03, 2009

@ 5:51 PM எழுதியவர்: வரவனையான்

நேற்று மாலை பள்ளிவிடுமுறை என்றாலும் அழகான முக பாவனைகளுடன் றைம்ஸ் பாடிக்கொண்டிருந்த அண்டை வீட்டு குழந்தையின் முகம் நினைவிற்கு வருகிறது.


London Bridge is falling down,
Falling down, falling down,
London Bridge is falling down,
My fair Lady.
”விடுதலைப்புலிகள் தப்பி ஓட்டம்” எத்தனை நாட்களாய் தலைப்பு செய்தியின் இடத்தை காலியாக வைத்திருக்க சொல்லி கொழும்பிலிருந்து தகவல் ”வரும் வரும்” என காத்திருந்ததோ தினமலம். இன்று தேதியிட்டு சொல்லி மகிழ்கிறது. "Kilinochi fallen down :( " என்று நிலைச்செய்தியில் ( Status Msg ) வருத்தப்படுகிறான் நண்பன். என்னடா இப்படி ! வருத்தப்படுகிறான் ஜே.ஜே. முதலில் என்னை சுற்றியுள்ள நண்பர்களுக்கும் தமிழிழ விடுதலையை ஆதரிக்கும் தோழர்களுக்கும் தேறுதல் சொல்லவே மதியமாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் செத்துபோய்விட்டான் என்று நான் நம்பிக்கொண்டிருந்த சு.சாமி என்கிற சுப்பிரமணியன்சாமி திடீரென தோன்றி கருத்து சொல்லிக்கொண்டிருந்தான். இன்னும் இன்னும் அபத்த கூத்துகளை வட இந்தியாவிற்கு மட்டும் நடத்தும் ஆங்கில தொலைக்காட்சிகள் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றன. where is He என்று தமிழிழ தேசியத்தலைவரை மையம் வைத்து எதிர் தரப்பின் சார்பில் விடையளிக்க ஆளில்லாமல் ஒற்றை குதிரை பந்தயம் நடக்கிறது ஆங்கில ஊடங்களில்.


தமிழன தலைவர்களும் தொண்டர்களும் திருமங்கலத்தில் பணத்தை கொடுத்து கேடுகெட்ட சனநாயகத்தை இன்னும் கெடுக்கும் பணியில் தீவிரமாய் இருக்கிறார்கள். இவனுகளுக்கு கிளிநொச்சியாவது மண்ணாங்கட்டியாவது எல்லாம் அந்த ஒற்றை சட்டமன்ற உறுப்பினர் பதவிதான் இப்போதைய குறி. அதிகம் போனால் நாளை ஒரு கவிதையை எதிர்பார்க்கலாம். இவையெல்லாவற்றையும் விடக்கொடுமை அம்மையார் இஸ்ரேலால் தாக்கபட்ட பாலஸ்தீனியர்களுக்கு உதவிபொருட்களை உடனே அனுப்ப வேண்டுகோள் வைத்திருக்கிறார். என்னே கருனை !

இழப்பு உண்மை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இது இறுதியல்ல, இனமானம் தன்மானம் உள்ள கடைசி தமிழன் உள்ளவரை இது இழப்பல்ல, இதுவே ஒரு இழப்பல்ல. தன்னத்தனியனாய் தமிழருக்கு என ஒரு நாடு சமைக்க பிரபாகரன் வீட்டை விட்டு கிளம்பியபோது நெஞ்சில் நம்பிக்கை மட்டுமே இருந்தது. அந்த நம்பிக்கைதான் இத்தனை குறுகிய காலத்தில் ஒரு வீரவரலாறை படைத்துள்ளது. இப்போது எம்மிடம் இருப்பது அவர் மீதான நம்பிக்கை மட்டுமல்ல , அவரிடம் இருந்து படித்துக்கொண்ட நம்பிக்கையும் கூட.

7 நாடுகளின் நேரடி ராணுவ ஒத்துழைப்பு, இந்தியா தன் சொந்த மக்களையே ஏமாற்றி அளிக்கும் உபகரண உதவிகள். நாளும் அடித்துக்கொள்ளும் பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து செய்யும் பொருண்மிய மற்றும் ஆயுத உதவிகள் என வீழ்ச்சிக்கான காரணங்களை
பட்டியலிடலாம். இவை அனைத்தையும் விட புலிகள் தனது ஆளணி வலிமையை காத்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இது ஒரு விடுதலைப்போராட்டம் பின்னடைவும் வெற்றியும் மட்டுமே லட்சியமல்ல. அயர்லாந்தின் விடுதலைப்போராட்டம் எத்தனை நூற்றாண்டுகள் நீடித்தது. ஆனாலும் அம்மக்களின் விடுதலை தாகத்தை அடக்க முடியவில்லையே. கிளிநொச்சியின் மீதான ராணுவ ஆக்கிரமிப்பு சிங்களவர்க்கு இனி தூங்கா இரவுகளை பரிசளித்து சென்றுள்ளது என்றே கொள்ளலாம். கொழும்பில் வெடிக்க துவங்கியிருக்கும் குண்டுகளே அதற்கு சாட்சி.

தமிழரின் தாகம் தமிழருகென்று ஒரு தாயகம்
தாகம் தீரும் நாள் - வந்தே தீரும்

*************************************************************************************
விழிகள் உருட்டி உருட்டி பாடிய அக்குழந்தையின் றைம்ஸில் கூட செய்தி இருக்கத்தான் செய்கிறது


London Bridge is falling down,
Falling down, falling down,
London Bridge is falling down,
My fair Lady.


Build it up with wood and clay,
Wood and clay, wood and clay,
Build it up with wood and clay,
My fair Lady.

Wood and clay will wash away,
Wash away, wash away,
Wood and clay will wash away,
My fair Lady.

Build it up with bricks and mortar,
Bricks and mortar, bricks and mortar,
Build it up with bricks and mortar,
My fair Lady.


Bricks and mortar will not stay,
Will not stay, will not stay,
Bricks and mortar will not stay,
My fair Lady.


Build it up with iron and steel,
Iron and steel, iron and steel,
Build it up with iron and steel,
My fair Lady.

5 மறுமொழிகள்:

 1. எங்கள் அவலங்கள் புரியாதவை அல்ல; கவனிக்கப்படாதவை; இந்த அவலங்களை வைத்து அன்னியம் அரசியல் செய்கிறது; ஓட்டு சேகரிக்கிறது; வெட்ட வெட்ட தழைப்பதும், வீழ்த்த வீழ்த்த எழுவதும் தான் ஈழத் தமிழனின் போராட்டம் என்பது. அது இன்னும் முடியவில்லை. ஈழம் கிடைத்த பின் தான் அது ஓயும்.

 1. 10:00 PM  
  Anonymous said...

  கலைஞர் அவர்களே!

  இனிமேல் முகர்ஜிக்கு இலங்கை செல்லவேண்டாம் என கஅவசரக்கடிதம் எழுதவேண்டும்.

  உங்களுக்கு மானம், இன உணர்வு இருந்தால் முகர்ஜிக்கு, மன்மோகனுக்கு, சோனியாவுக்கு எழுதுங்கள்.

  மானமுள்ள தமிழர்கள்

 1. மழழையும் மாந்தரும் ஆங்கே வெந்து மண்ணாவது கண்ட பின்னும் மௌனம் காணும் இவ்வினம் இருந்தென் இறந்தென்?

 1. நிச்சயம் எமக்கு விடிவு வரும்..

 1. சூப்பர் !!!!!!!