Saturday, January 31, 2009

@ 3:38 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்


இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி என்கிற ஊரை சேர்ந்த தோழர் ரவி என்பவர் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் இன்னலினையும் அதற்கு சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா செய்யும் ராணுவ உதவிகளை கண்டித்தும் தமிழக அரசு வாய் முடி மௌனியாக இருப்பதை கண்டித்தும் எரிணெய் ஊற்றி தன்னை கொளுத்திகொண்டார். செய்தியறிந்த தோழர்களும் தமிழின உணர்வாளார்களும் அந்த உறவைக்காண புறப்பட்டுகொண்டிருந்த வேளையில் ஊடகவியலாளார்களூக்கு தமிழக காவல் துறையால் தீ வைத்து கொண்ட அந்த தோழரை பற்றி தவறான தகவல்கள் பறப்பபட்டுகொண்டிருந்தது. அவர் மேல் கொலை வழக்கு நிலுவையிலிருக்கிறது, கடன் தொல்லை என்றெல்லாம் அவதூறாய் செய்தி சொல்லி இச்செய்திக்கு முக்கியத்துவம் அளித்து போடவேண்டாம் என்றும் சொல்லி வந்த வேளையில். காவல் துறையின் இச்செயலை கண்டித்து மதுரை வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் போது செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன் "என் தந்தை முத்துகுமரன் ஈகை கண்டு பெரிதும் துயருற்று இருந்தார், நேற்று பகல் முழுவதும் அவரது செய்தியையே தொலைக்காட்சியில் பார்த்தவாறே இருந்தார். அவர் ஈழத்தமிழர்களின் பால் பெரிதும் அன்பும் உணர்வும் கொண்டவர் என்று தெரிவித்தார்.


தீக்குளித்த அந்த தோழரின் மகன் பெயர் "பிரபாகரன்"

இது ஒன்றும் போதுமே அவர் எதற்கு இச்செயலில் இறங்கினார் என்கிறா உண்மை உலகறிய
தோழர் இது வரை அபாய கட்டத்தில் இருப்பதாகவே அறிகிறேன்

Friday, January 30, 2009

@ 4:00 PM எழுதியவர்: வரவனையான் 3 மறுமொழிகள்அதிர்ந்து பேசிக்கூட நான் பார்த்ததில்லை இந்த நண்பரை, இவ்வளவு உணர்வாளராக இருப்பார் என்று தெரியாமல் போய்விட்டது நாட்கள்.

தன்னந்தனியனாய் போராட்டத்தினை துவக்கியுள்ளார். அடுத்த கட்ட போராட்டம் குறித்து திண்டுக்கல் வழக்குரைஞர்கள் சங்கத்தின் ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இவர் போராட்டம் துவக்கிய செய்தி எட்டியது. பின்னர் வழக்குரைஞர்கள் அனைவரும் இவர் போராட்டம் துவக்கியுள்ள சாணர்பட்டி( திண்டுக்கல்லில் இருந்து 15 கி.மீற்றர்) சென்று வாழ்த்துகளை தெரிவித்தும் அவ்ரின் உறுதியையும் தமிழின உணர்வினையும் பாராட்டி தங்களின் முழு ஒத்துழைப்பு உண்டு என அறிவித்துள்ளனர். இவரின் போராட்ட செய்தியறிந்த பல்வேறு அரசியற்கட்சியினரும் தமிழ் உணர்வாளார்களும் அவருக்கு வாழ்த்து சொல்ல விரைந்த வண்ணமுள்ளனர்.


இவருக்கு சர்க்கரை மற்றும் இருதய நோய்கள் இருப்பதுதான் என்னை கவலைகொள்ள செய்கிறது.

Thursday, January 29, 2009

@ 10:27 PM எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்


தட்டுக்கும் வாய்க்குமே பயணித்து கொண்டிருந்த எங்கள் கைகளை தடுத்து மார் தட்ட வைத்தவன் திருச்சி அப்துல் ரவூப் , நீ இன்னொரு முறை தட்ட வைத்திருக்கிறாய். போய் வா உறவே ! வீர வணக்கங்கள் தமிழ்நாட்டு தமிழனுக்கும் சுரணை உண்டு உலகறிய செய்த உறவே ! வீர வணக்கம் வீர வணக்கம்

Tuesday, January 27, 2009

@ 4:38 PM எழுதியவர்: வரவனையான் 9 மறுமொழிகள்


ராமுக்கு வயசு எவ்வளவுன்னு தெரியல ! ஆனாக்க ரொம்ப கெழடுதான் அது. ஒரு காலத்தில இந்த தெருவுல அது அட்டகாசம் ரொம்ப இருந்துச்சாம். நல்லவன் கெட்டவன்னுலாம் அதுக்கு தெரியாதாம் "என் கடன் கடித்துக்கொண்டே இருப்பதாம்" அப்படிங்கிற மாதிரி அமைதியா பின்னால வந்தி லப்புன்னு கடிச்சு வச்சுட்டு போயிடுமாம். இந்த தெருவுக்கு வந்ததுல இருந்து தட்சினாமூர்த்தியை மட்டும் அதுக்கு பிடிக்கவே பிடிக்காதாம் தட்சினாமூர்த்தி இல்லாத போதும் கூட அவரு பேரை சொன்னாலே ஒரே குலை குலைச்சு கோவத்தை காட்டுமாம். இந்த லூசு நாயி ஒரு தடவை அதுக்கு பொறை வாங்கி பொட்ட தட்சினாமூர்த்தியை கடிச்சதுதான் தெரு காரங்களுக்கு எல்லாம் கடுப்பாகிடுச்சு. சொறி நாயா இருந்தாலும் பாவம்ன்னு விட்டு வச்சதால இவ்வளோ இம்சைன்னு அடிச்சு துரத்தி விட்டுட்டாங்க. எப்பாவாது ஆடிக்கொருக்க அம்மாவாசைக்கொருக்க மாலினி அக்கா வீட்டு பக்கம் வந்து ஊளையிடும், சமயதில "ரத்னா" ராம் அண்ணன் வீட்டு கொல்லைபுறதிலையும் இருந்து ஊளையிடும் அப்போதான் தெரியும் இந்த நாயி இன்னுமும் உசிரோடா இருக்கிறது. இன்னைக்கு போண்டா மணிதான் சொன்னான் அந்த ராமு நாயி மண்ணு லாரில அடிபட்டு செத்து போச்சாம்.

ச்சே சட்ட ஒழுங்கே சரியில்லப்பா.....

@ 3:45 PM எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்

Um wen es angeht:

PLEASE STOP den Völkermord an Tamilen in SRILANKA

Ich möchte Sie bitten, um eine dringende Maßnahme, um den Völkermord an den Tamilen in Sri Lanka und die eine sofortige Waffenruhe, um das Leben unschuldiger Zivilisten.
Mehr als 50000 Srilankan Armee umgeben haben die Tamilen in dicht besiedelten Gebieten Mullaitivu, Sri Lanka. Ihre ständige Bombardierung und Artilleriebeschuss Tötung sind die wehrlosen und unschuldigen Menschen Tamil. Obwohl sie nennen es "den Krieg gegen den Tamil Tigers", es ist eindeutig bewiesen, dass es sich um einen Völkermord an den Tamilen. Mehr als 300 Zivilisten ihr Leben verloren haben, mehr als 1000 werden schwer verletzt, nur in den letzten Tagen und 400.000 Zivilisten Tamil werden Vertriebenen täglich. Was kommt nach Angriffen der Armee sind vor allem die Sicherheit Zonen, Krankenhäuser und andere Zivilisten besiedelten Gebieten.
Artillerie-, Multi-Brand-Lauf und Mörtel von der srilankischen Armee in Richtung Sicherheit Zonen (von der Regierung) in Mullaitivu Bezirk wird beschrieben als "die unmenschlichen Angriffe auf Völkermord Zivilbevölkerung".

Medizinische Behörden, sagte der Situationen, die außerhalb der Kontrolle der Krankenhäuser haben unter Angriffen und Patienten sind hilflos, ohne medizinische Versorgung.

Bitte nehmen Sie sich unschuldige Menschen das Leben in ernsthaft in Erwägung gezogen werden. Tamilen sind in der sehr kritischen Situation in Bezug auf Sicherheit, Lebensmittel und Medikamente - die Grundlagen für ein Mensch.Unschuldige Tamilen im Nordosten von Sri Lanka werden verhaftet und gefoltert Srilankan von der Armee. Die Regierung von Sri Lanka hat ignoriert und vertrieben die Menschen und Organisationen die internationale Gemeinschaft auf, sich in diesem Völkermord, ohne Aufmerksamkeit zu jedermann.

Es ist sehr sehr traurig, dass die internationale Gemeinschaft einschließlich der Menschenrechte Organisationen und der Rest der Welt schließen ihre Augen, und nicht unter einer schweren Maßnahmen, um das Leben der Unschuldigen und um Frieden zu Tamilen.

Wir, die Millionen von Tamilen auf der ganzen Welt, bitte, fragen Sie auf, unverzüglich Maßnahmen zu senden, einen Menschenrechtsrat einzusetzen, Organisation oder einer internationalen Gemeinschaft Vertreter Offiziere der Tamilen Vertriebenen in Mullaitivu, um zu sehen, ihre Kämpfe in Person. Mehr deutlich, wir wollen, dass Sie bestimmte Bereiche, wie Sicherheit und Gebiete, die Regierung nicht angreifen. Um alle Maßnahmen Frieden, einen Waffenstillstand werden muss zwischen den beiden Tamil Tigers und der Regierung so bald wie möglich.
Wir, die Tamilen in diesem Land, fordern Sie Ihre Mitarbeiter gut zu tun, Ihren Teil zu retten, die verloren gehen täglich. Tamilen auf der ganzen Welt haben Vertrauen zu Ihnen, wie Sie es sich von uns. Bitte haben Sie Verständnis, das Leiden und die Schwierigkeiten der Tamilen in Sri Lanka.

Mit freundlichen Grüßen

ein tamilian

@ 3:08 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்

À qui de Mai Concern:

S'IL VOUS PLAÎT arrêter le génocide des Tamouls EN SRI LANKA
Je voudrais vous demander de bien vouloir prendre d'urgence des mesures pour faire cesser le génocide des Tamouls au Sri Lanka et de mettre immédiatement un cessez-le-feu pour sauver les vies des civils innocents.

Plus de 50.000 Srilankan armée ont encerclé les zones densément peuplées de Tamouls à Mullaitivu, au Sri Lanka. Leur continu de bombardements et de tirs d'artillerie sont en train de tuer les innocents et sans défense Tamil People. Bien qu'ils appellent «la guerre contre le LTTE», il est clairement prouvé que c'est un génocide des Tamouls. Plus de 300 civils ont perdu la vie, plus de 1000 sont gravement blessés seulement dans les derniers jours et de 400.000 civils tamouls sont déplacés tous les jours. Qu'est-ce que sous les attaques de l'armée sont essentiellement des zones de sécurité, les hôpitaux et les autres zones peuplées de civils.Artillery, multi-canon et de mortier de feu par l'armée sri-lankaise en direction des zones de sécurité (fixé par le gouvernement) dans le district de Mullaitivu est décrit comme «la plus inhumaine de génocide sur la population civile des attaques».

Les autorités médicales ont dit que la situation au-delà du contrôle que les hôpitaux ont fait l'objet d'attaques et les patients sont impuissants, sans assistance médicale.

S'il vous plaît de prendre la vie des gens innocents dans un examen sérieux. Les Tamouls sont en situation extrêmement critique en termes de sécurité, de nourriture et de médicaments - les bases pour un être humain.
Innocent Tamouls dans le nord-est du Sri Lanka sont arrêtés et torturés par la Srilankan armée. Le gouvernement du Sri Lanka a ignoré et a expulsé les organisations des droits de l'homme et la communauté internationale à s'engager dans ce génocide, sans prêter attention à personne.

Il est extrêmement triste que la communauté internationale, y compris les organisations des droits humains et le reste du monde sont en train de fermer les yeux et ne pas prendre de sérieuses mesures pour sauver la vie des innocents et à apporter la paix aux Tamouls.

Nous, les millions de Tamouls du monde entier, de bien vouloir, vous demander de prendre immédiatement des mesures pour envoyer une organisation des droits de l'homme ou de tout représentant de la communauté internationale des officiers de Tamouls déplacés des zones à Mullaitivu leurs luttes pour voir en personne. Plus important encore, nous voulons que vous vous fixer des domaines particuliers comme les zones de sécurité et de charger le gouvernement de ne pas les attaquer. Afin de prendre toutes les actions liées à la paix, un cessez-le-feu doit être mis entre les Tigres tamouls et le gouvernement dès que possible.Nous, les Tamouls dans ce pays, incite les agents à votre bon de faire votre part pour sauver les vies qui sont perdues chaque jour. Les Tamouls du monde entier ont confiance en vous, comme vous le feriez stand par nous. S'il vous plaît comprendre les souffrances et les difficultés des Tamouls au Sri Lanka.

Cordialement

un tamilian

Friday, January 16, 2009

@ 6:52 PM எழுதியவர்: வரவனையான் 23 மறுமொழிகள்ராஜீவ்காந்தியின் மரணத்திற்கு பிறகு ஒரு கவிதை எழுதிய குற்றத்திற்காய் பாவலேறு பெருஞ்சித்திரனாரை "தடா" வழக்கில் சிறையிலிட்டனர். அவரை சிறையிலடைத்ததற்கு காவல்துறை சொன்ன காரணம் அவர் கவிதையை ஒரு கொலை மிரட்டல் என்று.

பாவலேறுவிடம் இது பற்றி ஒரு முறை கேட்டபோது சொன்னார் "நான் அறம் பாடினேன், அவன் செத்து போனான்"என்று . " முண்டையின் மகனே முண்டையின் மகனே; இறந்து தொலைவாயோ" என்று துவங்கும் அந்த கவிதையை அவர் எழுதி முடித்த ஆறே மாதங்களில் ராஜீவ் செத்துபோனார். ஆனாலும் அக்கவிதை எந்த சூழலில் எழுதப்பட்டது என்று பார்க்கும் போது தன் இனமக்களை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாத படுபாதக கொலைகளையும் கேடுகெட்ட பாலியல் வல்லுறவுக்குற்றங்களையும் செய்த படையினரையும் அதனை தடுக்காமல் குரூரமாக வேடிக்கை பார்த்த அரசன் மீதான ஒரு ஏழை தமிழ்க்கவிஞனின் ஆற்றாமைக்கோபம் இப்படித்தான் வெளிப்படும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

அவர் ஒன்றும் யோக்கியமானவர் அல்ல , அமைதி தவழும் முகத்தினோடு புகைப்படங்களில் தெரியும் அவரின் கருணை அவர் பதிவியேற்ற சில தினங்களிலே வெளிப்பட்டது. அவரின் தாயார் கொல்லப்பட்ட பொழுது அவரை கொன்றது ஒரு சீக்கியன் என்ற காரணதிற்காய் ( ஒரு இனத்தின் நம்பிக்கையின் மீது சப்பாத்துகள் பட்டதற்காய்) 3000திற்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். கன்ணில் பட்டவர்கள் எல்லாம் வெட்டப்பட்டும் அடித்தும் கொல்லப்பட்டனர். அதன் பின் இவர் பிரதமராய் ஆன பொழுது பத்திரிக்கையாளர்கள் கேட்டனர் " அப்பாவி சீக்கியர்கள் இவ்வளவு பேர் கொல்லபட்டுள்னரே"என்று, அதற்கு அவர் சொன்ன பதில் "பெரிய ஆலமரம் விழும் போது கீழே இருக்கும் புற்கள் பாதிக்கப்படத்தான் செய்யும்" என்று. அவரின் கருணை கண்டு நாடே திகைத்தது.

மானுடத்திற்கு எதிராய் இந்தியா என்கிற நிலப்பரப்புக்குள் இருப்பவை முன்று விதயங்கள் " காதி, காவி, காக்கி" என்கிற முன்றுதான் அவை. முதலாளிகளுக்கு முட்டுக்கொடுக்க காதியும், மனுநீதியை அடிப்படையாயக்கொண்ட சனாதனங்களை கட்டிக்காக்க காவியும், மேற்சொன்ன இரண்டுக்கும் அடியாள் வேலை பார்க்க முன்றாவதான காக்கியும் இருக்கிறது. பேராயக்கட்சியின் முதன்மைப்பணியே முதலாளித்துவத்துக்கு கொட்டை தாங்குவதுதான், கூடுதலாய் கொஞ்சம் பார்ப்பனியத்துக்கும். இந்திராவின் காலத்தில் அவரின் சோசலிச பாசம் இங்குள்ள இடதுசாரிகளுக்கே தங்களை கொஞ்சம் கிள்ளி பார்த்துக்கொள்கூடிய அளவில் இருந்தது. அவர் போனபின் வந்து சேர்ந்த ராசீவ் காந்தியோ தன் முட்டாள்தனங்களினால் ஈழச்சிக்கலை இடியாப்ப சிக்கலாக்கி செத்து போனார். இந்திய ராணுவத்தை அனுப்பி சொல்லெனாத்துயருக்கு ஆளாக்கியதோடு மட்டுமில்லாமல் இந்திய வெளியுறவுக்கொள்கையிலும் ஒரு வரலாற்று பிழை செய்கிறோம் என்று தெரியாமல் ஜெ.ஆர் ஜயவர்தன பெங்களூர் மாநாட்டில் என்ன சொன்னானோ அதையே இந்திய தேசத்தின் வெளியுறவுக்கொள்கையாய் மாற்றி வைத்ததன் விளைவு தனி ஈழக்கோரிக்கைக்கு இன்றளவிலும் இந்திய அதிகாரிகளின் மத்தியில் பெருந்தடையாய் இருக்கிறது.

ஒரு அண்டை நாட்டு அரசதிபர் சொல்வதை கேட்டு தனது நாட்டு அயலுறவுக்கொள்கையை மாற்றிய ஒரே கோமாளி தலைவர் இவராய்தான் இருப்பார். ஊழல் குற்றச்சாட்டினால் பதவியிழந்த ராசீவ் காந்தி கொல்லப்பட்ட பின் இன்று வரை காங்கிரசு கோமாளிகளின் குரூர நகைச்சுவை நாடகங்கள் முடிந்தபாடில்லை. அன்மையில் "ராஜீவின் ஆவியே மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்கமாட்டோம்' என்று விட்ட பீலாவாகட்டும் திமுக'வின் முதுகிலேறிய நிலையிலேயே திருமாவளவருடன் வம்பிழுத்து "வாங்கிக்கட்டி"கொண்டதாகட்டும் ( பாவம் இதில் சுபவீயைத்தான் இணைய "சொம்புகள்" அடியாள் பட்டம் கட்டியுள்ளனர். சத்தியமூர்த்தி பவனுக்குள் வர முடியுமா என்று சவால் வேறு. அதானே அது அவர்கள் அடித்துக்கொள்ளவென்றே கட்டப்பட்ட மைதானம். அடுத்தவர்கள் வந்து அடிக்க முடியுமா என்ன ! ) இன்னும் இன்னும் நிறைய "ஸ்லாப்ஸ்டிக்" வகை நகைச்சுவைகாட்சிகள். இதில் மிகவும் பிரசித்தி பெற்றது "கோபாலபுரத்துக்கு எடுக்கும் காவடி". எங்கையாவது வாயிருக்க மாட்டாமல் பேசி எங்கே நாடளுமன்ற தேர்தலில் கூட்டணி துரோகத்தால் டவுசர் கழட்டப்படுமோ என பயந்து அணி அணியாய் பால் காவடி பன்னீர் காவடி என கண்கொள்ளா காவடிகள்.


ஃபபூன்கள் சிரிக்க வைக்கமட்டும் எப்போதும் செய்வதில்லை சமயங்களில் "வைத்தி" வேடங்களிலும் வெளுத்து வாங்குகின்றனர். ஹசன் அலி ஞானசேகரன் என பலருக்கும் அதில் போட்டி வேறு. ஓட்டு பொறுக்கும் இந்த ஒட்டுண்ணிகளுக்கு புரியும் மொழி ஒன்று உண்டு அது அவர்களுக்கான வாக்கை மறுப்பதுதான். மறுப்பது மட்டுமல்ல அவர்களின் அதிகாரம் மறுபடியும் அவர்களின் கைகளில் சேரா வண்ணம் பார்த்துக்கொள்ளுதலும்தான். எனக்கு வந்த ஒரு பின்னூட்டத்தினை போல் ஒவ்வொரு மானமுள்ள தமிழன் வீட்டிலும் "தமிழீழ விடுதலையை ஆதரிப்பவர்களுக்கே எங்கள் வாக்கு" என எழுதி வைப்பதே சரி.


ஒரு மாதம் முன்பு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் சென்றிருந்தேன். ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அனுமதி வாங்குவது தொடர்பாக. 2000 பேர் கூடும் ஆர்ப்பாட்டத்துக்கு துணை ஆய்வாளரே அனுமதி வழங்கும் போது. எங்களை போல "சர்ச்சைக்குரியவர்களும்" மார்க்சிய லெனிஸ்டு மற்றும் ம.க.இ.க போன்ற தோழமை அமைப்புகளுக்கு (சி.பி.எம்,க்குலாம் ஏட்டைய்யாவே சைக்கிள்ல வந்து ஒரு "ரெட் சல்யூட்" வைத்து கொடுத்திட்டு போவாரு) டி.எஸ்பிய பாரு டிஐஜிய பாரு டிஜிபிய பாருன்னு அலக்கழிப்பார்கள். "ஏன் தோழர் ஒரு 1 மணீ நேரம் ஓலு ஓலுன்னு கத்த போறம் இதுக்கு இம்முட்டு இசுமைய கூட்டுறாங்களே" வழக்கம் போல் அலுத்துக்கொள்ளும் தோழரும் நானும் தேநீர் குடித்துகொண்டிருந்தோம். தேநீர் குடிக்க வந்த நண்பர் ஒருவர் அடையாளம் கண்டுகொண்டு நண்பா உன்னைத்தான் பார்க்க வரலாம்ன்னு இருந்தேன்,

இங்க வந்து பாரு நண்பா !ன்னு சொல்லி காவல்துறை கண்காணிப்பாளர் அறை முன்பிருந்த அறிவிப்பு பலகையி ஒட்டிருந்த ஒரு கடிதத்தை காட்டினார். அது கிழ்வருமாறு இருந்தது.


மிக மிக கமுக்கத்துறை


தனி சுற்றுக்கு மட்டும்
இந்தியாவின் தென்கிழக்கே இருக்கும் இலங்கையில் இனப்பிரச்சினை மீண்டும் தீவிரமடைந்திருப்பது தெரிந்ததே. அதை வைத்து இங்கும் தமிழர்களுக்கு ஆதரவாக மீண்டும் பெருமளவிலான ஆதரவுக்குரல்கள் எழுந்திருப்பது இந்தியாவின் நலனுக்கு ஆபத்து.இதை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும் .தமிழீழம் அமையுமானால் அது இந்தியாவின் ஒரு மாநிலம் பிரிந்து போவதற்கு ஒப்பானதாகும்.
எல்லாம் சரிதான் ஆனா இதை போயி எந்த முட்டாப்பயடா இங்க ஒட்டினதுன்னு வெவரம் தெரிஞ்ச அதிகாரி பின்னாடி ஒரு நாள் கேக்க போற கேள்வி காதில் விழ சிரித்துக்கொண்டே வெளிவந்தோம் அனுமதி வாங்கிய பின்.Tuesday, January 13, 2009

@ 6:47 PM Labels: , , எழுதியவர்: வரவனையான் 3 மறுமொழிகள்

சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் ! வேகும் போதும் தமிழ் மணந்து வேக வேண்டும் ! என்று கனவு கண்டான் ஒரு தமிழ்க்கவிஞன்.

ஒடையிலே என் சாம்பல் ஓடும் போதும் ஓங்கு தமிழே சலசலத்து ஓடவேண்டும் என்றான் உணர்ச்சி பாவலன் காசி ஆனந்தன்.

தமிழ்க்கவிஞர்களின் கனவினை சிரமேற்கொண்டு நனவாக்கி வருகிறான் ரஜபக்சே. தமிழ் படித்துக்கொண்டே சாகிறோமோ இல்லை ஒடையில் சலசலத்து ஓடுகிறோமோ தெரியவில்லை. ஏகாதிபத்தியங்களின் ஆயுத சோதனை மைதானமாகி கிடக்கிறது எம் தமிழீழம். ஒளியும் பங்கருக்குள்ளும் ஊடுறுவி வெடிக்கிறது வல்லாதிக்க குண்டுகள். உயிருக்கு அஞ்சி ஒடும் காணியெங்கும் நொடியில் கருக வைத்து செடியொடும் கொடியொடும் ஊஞ்சலாடிய மரத்தோடும் ஒன்றாய் எரித்து போடுகிறது கொத்தணிக்குண்டுகள். ஒரு வார தாக்குதலில் 3 ல் ஒருவர் குழந்தைகள் என கணக்குச்சொல்லி கவலைப்படுகிறது பாலஸ்தீனம் குறித்து பி.பி.சி.

புகைப்பிடிப்பது புற்றுநோயினை கொண்டு வரும் என்பது உலகறிந்த ஒன்று, அதற்கிடான ஒன்றை இந்தியா செய்து கொண்டிருக்கிறது. 6 கோடி தமிழர்களின் கோபத்திற்கு நிகழிலும் எதிர்காலத்திலும் ஆளாகப்போகும் முட்டாள்தனத்தை செவ்வனே செய்து வருகிறது.

ஆயிரம் ஆனாலும் தமிழனுக்கு இருக்கிற நகைச்சுவை உணர்ச்சிக்கு அளவேயில்லைன்னுதான் சொல்லனும். தமிழ் படிப்பு, ஓடையில் சலசலப்பு இதையெல்லாம்விட சிரித்துக்கொண்டெ சாவது சிறப்பல்லவா!

உலக ஊடகங்களும் நாடுகளும் எம்பக்கம் கவனத்தை திருப்பும் முன் ஒன்றை மட்டும் இப்போது செய்யலாம். சிரிச்சுகிட்டே செத்துபோகலாம்.

மசுரு பொங்கலுக்கு வாழ்த்து ஒரு கேடா ?

Monday, January 12, 2009

@ 10:24 PM எழுதியவர்: வரவனையான் 3 மறுமொழிகள்


ஜெவிக்கிறது மேட்டரே இல்ல, அப்படின்னு முணு பதிவுக்கு முன்னாலயே எழுதியாச்சு! இருந்துதாலும் உள்ளார ஒரு அரிப்பு இருந்துக்கே இருக்குப்பா....

சரி நம்ம பங்காளி ஒருத்தேன் பொழம்பிருக்கான் அதை கீழ போட்டுருக்கேன் , இதேயே தான் வேற மாதிரி ஜேஜே பொழம்பிட்டுஇருக்கான் தமிழுல என்கிட்ட லைவா. "சரி பாப்போம்".


Very First thing I respect our heroes But I am wondering We captures Many Areas like a LTTE's hold very strong places like a Mallawi, Poonarin, Mannar, Madu, Vedithalathivu, Mankulam, Puliyankulam, Alampil, Finally LTTE heart Kilinochchi not only that now even EPS how it’s great? But I am extremely wondering we didn't see any civilian, Any LTTE member or even what happen Kilinochcchi Hospital where they took whole nurses, Doctors and critical patients and other people??? Also I heard Sir Sarath Fonseka says we are targeting to destroy LTTE carders not intending to capture land but now what we can see it only opposite’s way. I know Our Army commander is well experience like our Late Commander Sir Denzil Kobbekaduwa but still I am worry why we couldn’t see clear picture about this war and why LTTE is withdrawing from their lands. This is the third air strip army has captured but where is the air crafts? And government forces lost EPS and pooneryn 1999 and 2000 and lost thousands of soldiers lot of military equipments artilary guns,huge weapons[Ack Ack guns and five zeros, billions of ammunition etc] after the LTTE’s wave 2 and 3rd wave operation they found and hand over more than 1000 soldiers death bodies to red cross in 2000 during our CAURA RAJINA’s time[Chandrika]but two days a go our brave forces re captured these places and found few BATTOS only. So this situation is too complicated and very questionable?????? Sir Sarath made with ITN speech I have listened that too which is published in defense news site. So still I am weird with this situation now LTTE’s limited to specific area around 120 squire KM’s. So I hope at least our brave soldiers will find soon their huge guns, Artillery guns, Armories with air crafts with Prabakaran and Nadeya’s with whole carders.If not this war wont be a End!!!

Posted By: Harshana from Katugasthota-Kandy

Thursday, January 08, 2009

@ 9:31 PM எழுதியவர்: வரவனையான் 15 மறுமொழிகள்

தூங்கும் புலியை பறைகொண்டெழுப்ப சொன்னார் பாரதிதாசன் ! தூய தமிழரை தமிழ் கொண்டு எழுப்பவும் சொன்னார்.

மானாடும் மயிலாடும் கிறக்கத்தில் கிடக்கும் தமிழரை இப்படித்தான் அடி வயிற்றிலிருந்து குரல் எழுப்பி எழச்செய்ய வேண்டி கிடக்கு.....

Dindugul -

நிகழ்வு : ஈழத்தமிழருக்கும் இந்திய தமிழருக்கும் தொடர்ந்து ”அல்வா” கொடுத்து வரும் மத்திய,மாநில அரசுகளின் துரோகச்செயலை கண்டித்து திண்டுக்கல்லில் 7/01/09 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்ட போர்ப்பாட்டின் காணொளி

அமைப்பு - தமிழிழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு

Tuesday, January 06, 2009

@ 4:46 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்

Saturday, January 03, 2009

@ 5:51 PM எழுதியவர்: வரவனையான் 5 மறுமொழிகள்

நேற்று மாலை பள்ளிவிடுமுறை என்றாலும் அழகான முக பாவனைகளுடன் றைம்ஸ் பாடிக்கொண்டிருந்த அண்டை வீட்டு குழந்தையின் முகம் நினைவிற்கு வருகிறது.


London Bridge is falling down,
Falling down, falling down,
London Bridge is falling down,
My fair Lady.
”விடுதலைப்புலிகள் தப்பி ஓட்டம்” எத்தனை நாட்களாய் தலைப்பு செய்தியின் இடத்தை காலியாக வைத்திருக்க சொல்லி கொழும்பிலிருந்து தகவல் ”வரும் வரும்” என காத்திருந்ததோ தினமலம். இன்று தேதியிட்டு சொல்லி மகிழ்கிறது. "Kilinochi fallen down :( " என்று நிலைச்செய்தியில் ( Status Msg ) வருத்தப்படுகிறான் நண்பன். என்னடா இப்படி ! வருத்தப்படுகிறான் ஜே.ஜே. முதலில் என்னை சுற்றியுள்ள நண்பர்களுக்கும் தமிழிழ விடுதலையை ஆதரிக்கும் தோழர்களுக்கும் தேறுதல் சொல்லவே மதியமாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் செத்துபோய்விட்டான் என்று நான் நம்பிக்கொண்டிருந்த சு.சாமி என்கிற சுப்பிரமணியன்சாமி திடீரென தோன்றி கருத்து சொல்லிக்கொண்டிருந்தான். இன்னும் இன்னும் அபத்த கூத்துகளை வட இந்தியாவிற்கு மட்டும் நடத்தும் ஆங்கில தொலைக்காட்சிகள் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றன. where is He என்று தமிழிழ தேசியத்தலைவரை மையம் வைத்து எதிர் தரப்பின் சார்பில் விடையளிக்க ஆளில்லாமல் ஒற்றை குதிரை பந்தயம் நடக்கிறது ஆங்கில ஊடங்களில்.


தமிழன தலைவர்களும் தொண்டர்களும் திருமங்கலத்தில் பணத்தை கொடுத்து கேடுகெட்ட சனநாயகத்தை இன்னும் கெடுக்கும் பணியில் தீவிரமாய் இருக்கிறார்கள். இவனுகளுக்கு கிளிநொச்சியாவது மண்ணாங்கட்டியாவது எல்லாம் அந்த ஒற்றை சட்டமன்ற உறுப்பினர் பதவிதான் இப்போதைய குறி. அதிகம் போனால் நாளை ஒரு கவிதையை எதிர்பார்க்கலாம். இவையெல்லாவற்றையும் விடக்கொடுமை அம்மையார் இஸ்ரேலால் தாக்கபட்ட பாலஸ்தீனியர்களுக்கு உதவிபொருட்களை உடனே அனுப்ப வேண்டுகோள் வைத்திருக்கிறார். என்னே கருனை !

இழப்பு உண்மை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இது இறுதியல்ல, இனமானம் தன்மானம் உள்ள கடைசி தமிழன் உள்ளவரை இது இழப்பல்ல, இதுவே ஒரு இழப்பல்ல. தன்னத்தனியனாய் தமிழருக்கு என ஒரு நாடு சமைக்க பிரபாகரன் வீட்டை விட்டு கிளம்பியபோது நெஞ்சில் நம்பிக்கை மட்டுமே இருந்தது. அந்த நம்பிக்கைதான் இத்தனை குறுகிய காலத்தில் ஒரு வீரவரலாறை படைத்துள்ளது. இப்போது எம்மிடம் இருப்பது அவர் மீதான நம்பிக்கை மட்டுமல்ல , அவரிடம் இருந்து படித்துக்கொண்ட நம்பிக்கையும் கூட.

7 நாடுகளின் நேரடி ராணுவ ஒத்துழைப்பு, இந்தியா தன் சொந்த மக்களையே ஏமாற்றி அளிக்கும் உபகரண உதவிகள். நாளும் அடித்துக்கொள்ளும் பாகிஸ்தானும் இந்தியாவும் இணைந்து செய்யும் பொருண்மிய மற்றும் ஆயுத உதவிகள் என வீழ்ச்சிக்கான காரணங்களை
பட்டியலிடலாம். இவை அனைத்தையும் விட புலிகள் தனது ஆளணி வலிமையை காத்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இது ஒரு விடுதலைப்போராட்டம் பின்னடைவும் வெற்றியும் மட்டுமே லட்சியமல்ல. அயர்லாந்தின் விடுதலைப்போராட்டம் எத்தனை நூற்றாண்டுகள் நீடித்தது. ஆனாலும் அம்மக்களின் விடுதலை தாகத்தை அடக்க முடியவில்லையே. கிளிநொச்சியின் மீதான ராணுவ ஆக்கிரமிப்பு சிங்களவர்க்கு இனி தூங்கா இரவுகளை பரிசளித்து சென்றுள்ளது என்றே கொள்ளலாம். கொழும்பில் வெடிக்க துவங்கியிருக்கும் குண்டுகளே அதற்கு சாட்சி.

தமிழரின் தாகம் தமிழருகென்று ஒரு தாயகம்
தாகம் தீரும் நாள் - வந்தே தீரும்

*************************************************************************************
விழிகள் உருட்டி உருட்டி பாடிய அக்குழந்தையின் றைம்ஸில் கூட செய்தி இருக்கத்தான் செய்கிறது


London Bridge is falling down,
Falling down, falling down,
London Bridge is falling down,
My fair Lady.


Build it up with wood and clay,
Wood and clay, wood and clay,
Build it up with wood and clay,
My fair Lady.

Wood and clay will wash away,
Wash away, wash away,
Wood and clay will wash away,
My fair Lady.

Build it up with bricks and mortar,
Bricks and mortar, bricks and mortar,
Build it up with bricks and mortar,
My fair Lady.


Bricks and mortar will not stay,
Will not stay, will not stay,
Bricks and mortar will not stay,
My fair Lady.


Build it up with iron and steel,
Iron and steel, iron and steel,
Build it up with iron and steel,
My fair Lady.