Saturday, October 10, 2009

@ 6:55 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்ரொம்ப நாளைக்கு பிறகு தோழர்.போண்டா கணேசனை பார்த்தேன் தனது நிரந்திர அடிமை டி.வி.எஸ்.அம்பதில் ஒரு செஞ்சட்டை தோழரோடு போய்க்கொண்டிருந்தான். அந்த தோழரையும் எனக்கு பரிச்சியம் உண்டு அவரிடம் இருப்பது அந்த சிவப்பு சட்டையும் வெள்ளையிலிருந்து பழுப்பாய் நிறம் மாறிக்கொண்ட வேட்டி மட்டும்தான், ஆனால் அந்த தோழரை பற்றி மேலும் ஒரு தகவல் அவர் பக்கதிலிருக்கும் ஒரு மலைப்பகுதியில் போண்டா சார்ந்திருக்கும் தேர்தல் இடதுசாரி அமைப்பின் கிளை பொறுப்பாளராய் உள்ளார் அந்த மலையில் உள்ள ஒரே சிவப்புத்தோழர் அவர் மட்டுமே. இதில் முதன்மையான விதயம் என்னவென்றால் அவர் செய்யும் தொழில் டவுணில் 60 ரூவாய் என்கிற விலையில் ஒரு குவார்டரை வாங்கிக்கொண்டு மலையில் உள்ள பழங்குடியினரிடம் 150 ரூபாய்க்கு விற்பதே. அவர்களாக காய்ச்சினால் அதை மதுவிலக்கு காவல்துறையினரிடம் போட்டுக்கொடுப்பது உபவேலையாக செய்தி வருகிறார். வழக்கமாய் போண்டாவைத்தான் இழுத்து வச்சு லந்த கொடுப்பேன் இன்றைக்கு மாற்றாய் அந்த தோழரிடம் உரண்டை இழுக்கலாம் என்று முடிவு செய்து போண்டாவின் எண்ணுக்கு அழைத்து அந்த தோழரிடம் "ஏன் தோழர் "உபரி மதிப்பு" விதயத்தில் காரல் மார்க்சையே திக்கிமுக்காட வைக்கிறீர்களே 60 ரூவா குவார்ட்டரை 150 ரூவாய்க்கு வித்து இது எப்படி சாத்தியம்" இன்னாவோ பேசுறானுவப்பா என்றபடி போனை போண்டாவிடம் கொடுத்துவிட்டார்.


இனி போண்டாவின் முதல் குரல் வழி செவ்வி

sen- bonda.wav -

Sunday, September 13, 2009

@ 8:20 PM Labels: எழுதியவர்: வரவனையான் 11 மறுமொழிகள்

ஆயினும் அடுத்த நாள் காலையில் அனைத்து நாளிதழ்களிலும் அவன் தப்பியோடியதாய் செய்தி முதன்மையாய் இருந்தது. முதல் வெட்டு ஆய்வாளர் சென்பகராசனுக்கு இடது கையில் விழுந்தது. உதவி ஆய்வாளர் "ரைபிள்" சுரேசுக்கு வலது மணிக்கட்டில் வெட்டுக்காயம் மற்றும் ஏட்டு வெள்ளைச்சாமிக்கு தோளில் ஆழமாய் ஒரு கத்திகுத்து விழுந்துள்ளது. காயம்பட்ட அனைவரும் திருச்சி அரசு பொதுமருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரினாவுக்கு அப்பாவின் மேல் கடும் கோவம், யாருக்குத்தான் வராது. சினிவாசனுக்கு தெரியாது அவன் சுடப்படப்போவது. நினைக்கையில் எல்லாம் உவ்வே என்று குமட்டிக்கொண்டு வந்தது. குளிச்சு எத்தனை நாள் ஆச்சோ அவள், அம்மா வீட்டு உள்ள கூட அனுமதிக்கமாட்டாள் அவளை, அவளை போய் சுவரோரமாய் நிற்க வைத்து. துணியை தூக்கி பார்த்தார் டி.ஐ.ஜி அனில் குமார் ஜாட்டியா. வெல்டன் பாய்ஸ் ! என்றார் சுற்றி நிற்கும் "பிரஸ்"க்கு கேட்கும்படி. "இது ஒரு துவக்கம்தான் இனி இந்த நாட்டின் இறையான்மைக்கு பங்கம் செய்வதற்கு யாராகிலும் மனதால் நினைத்தால் கூட சட்டம் கையை கட்டிக்கொண்டு இருக்காது". எனஃப் பிரண்ட்ஸ் என்றபடி அம்பாசிடருக்குள் நுழைந்து வேர்வை ஒற்றிக்கொண்டு "கோ டூ தி ஹாஸ்பிடல், ஐயாம் கேவிங் அனதர் ஸ்டேஜ் டூ பிளே" என்றார். காலையில வீட்டுல இருந்து கெளம்பி கட்சி அலுவலகம் போகும் போதுதான் பாத்தேன் அந்த சுவரொட்டியை. கிர்ர்ர்ர்ர்ன்னு கோவம் தலைக்கு ஏறுது ! முந்தாநாளு காங்கிரசுல சேர்ந்த ஒரு சுள்ளான் "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாய் பேசிய வைகோ சீமான் அமீரை கைது செய்" அப்படின்னு சுவரொட்டி அடிச்சு ஒட்டிருக்கான்யா. வக்காலி இன்னைக்கு ஓட ஓட மிதிச்சாதான்யா சரிப்படும். இன்னுமும் ராஜிவ் பொணத்த வச்சுகிட்டு இந்த கேவல அரசியல் எவ்வளவு நாளு பண்ணுவானுங்கன்னு பார்க்கலாம்ன்னு போனை போட்டேன்.

யோவ் சீயான் ! எங்கையா இருக்க ?

என்ன ராசா ! இவ்வளவு வெள்ளன கூப்புடுற -

மொதல்ல கெளம்பி பஸ்ஸான்ட் வா -

டொக்

தோழர் எங்கருகிங்க !

வீட்லடா குண்டு !

பஸ்ஸான்ட்க்கு வாங்க உடனே !

கோபி சீயான் வரும்போதே சுவரொட்டியை பாத்துட்டாரு போல! "கொட்டையை நசுக்கி கஞ்சியாக்கி விட்டுருலாமான்னு" ஒரு திகிலூட்டும் தண்டனையை அந்த சுள்ளானுக்கு முன்மொழிந்தவாறே வந்தமர்ந்தார். தோழர் வாசு குனிந்த தலை நிமிராமல் நடப்பவர்! அவர் வந்தபின் விளக்கப்பட்டது.

டேய்ய் ! சாயங்காலம் புரட்சிகர எழுச்சி இளைஞர் சங்கம் சார்பில ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் இருக்கு தோழர்."புரோட்டா" பாண்டியன் வரச்சொல்லிருக்காரு. அதுக்கு போயிட்டு அதுக்கு பிறகு பேசி எதுனா செய்யலாம்டா. அவசரபடாதிங்கடா" வயசுக்கு தகுந்த பொறுமையுடன் சொல்லிட்டுருந்தாரு "мамка му на Исус мамка му на света Майната ви на всички дяволите Луната дяволите Всемогъщия" என்றபடி மலையுச்சியில் இருந்து குதித்தான் மாரிமுத்து. ஒரு தடவைக்கு மேல் தற்கொலை முயற்சியில் இறங்கியவர்கள் பின் என்றைக்கும் சந்தேகத்துக்குரிவர்களே என்பது அவனது திண்ணமான எண்ணம். சமயங்களில் சொல்லுவான் முதல் முயற்சிகளில் செத்து போனவர்கள் பாக்கிவான்கள் என்று. "பிரஸ்"காரர்களுக்கு கவர் வழங்கப்பட்டது. சரி எல்லாரும் வந்து வண்டியில ஏறுங்க ! நேரா ஆரியாஸ்க்கு போய் மதியான சாப்பாடு' என்றார் மக்கள் தொடர்பு அதிகாரி. "ஏண்ணே தப்பிச்சு ஓடுறவேன் பேண்ட் ஜிப்புல்லாம் அவுத்து போட்டா ஓடுவான்" வெவரம் தெரியாமல் கேட்டவனை முறைத்தான் வண்ணம் டி.வி செல்வம். "வேக மசுரா கவரு மட்டும் வாங்கி உள் பைக்குள்ள வைக்க தெரியுதுல இந்த வியாக்கியான *** தியெல்லாம் அங்க கேக்கவேண்டியதானே புடுக்காண்டி" பூட்டேஜ் சரியில்லாத கடுப்பு அவனுக்கு. அம்மா வரட்டும் இன்னைக்கு பெரிய பிரச்சினை பண்ணினால்தான் சரிப்படும் ஹரினா நினைத்துக்கொண்டாள். சபேஷ் என்று டிஸ்பிளேவில் தெரியவும் ஒரே ரிங்கில் எடுத்தாள் . ஹாய் லுலு ! ஹாய் பாட் கேர்ள் ! ஸ்பார்கில் வெயிட் பண்ணுறேன்.

"புன்டையிலோக்க
வாழைக்கண்ணு வாங்கி வச்சுருக்கேன், ரீமாண்ட் பண்ணிட்டாய்ங்கன்னா பிரபாகரனா வந்து
வாழை நடுவாரு" பதட்டத்துடன் தோழர் வாசு அலறினார்

உங்க இனத்துல பொறந்ததுக்கு அவரு வாழை விவசாயியாவோ மீம்பிடிக்கவோ போயிருக்கலாம் தோழர்.கோபி கொந்தளித்தார்

பாலக்காடு தாண்டி வரும்போது தமிழ்நாடு போலிசு ஒக்கார வச்சுருச்சாம், துலுக்கக்கூதிகளுக்கு இந்நேரம் என்ன மசுர புடுங்கிற வேலையாலே" வர்ண,மொழி.இனம்,மத பாகுபாட்டுடன் கூடிய தோரனையுடன் மாயத்தேவர் ,எஸ்.அய்'யின் குரல் கேட்டது. ரெண்டு பிட்பாக்கெட்ட பொச்ச கிழிச்சு ஒக்கார வச்சுருக்கேன்யா'

பொச்ச கிழிக்கிறதுன்னா என்னான்னு மாரிமுத்து நேரில பாத்த போது குண்டியில பீ தள்ளியிருச்சு


- நேரங் கெடைக்கிறதப்போ பேசலாம்

Wednesday, July 22, 2009

@ 10:08 AM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்அறுத்தெறிவோம் வாரீர் !! என அண்ணன் சீமான் அழைத்தான், அது ஒரு பொதுக்கூட்டத்திற்கான அழைப்பே ஆகும். 90களில் வைகோ அவர்களின் கூட்டதிற்கு மட்டுமே அவ்வளவு கூட்டம் சேரும் மதுரை மேலமாசி வீதி - வடக்கு மாசி வீதி சந்திப்பு நிறைவதற்கு 5000 மக்கள் தேவை கூட்டமோ இருமடங்கு அரசியல் சாராத, தானிருக்கும் இயக்க கொடி பிடிக்காமல் முகாம்கள் எனும் போர்வையில் சிங்கள அரசின் சிறைக்கூடங்களில் வதையுறும் 3,50,000 மக்களை மீட்டெடுக்க பத்தாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கூடி முழங்கினர். அதன் புகைப்படங்கள் இங்கே !
செல்லப்பா பாடுவது யாழ் / முத்தவெளியா அல்லது மேலமாசி வீதியா என்கிற சந்தேகம் எழுப்பியது அவரின் முன்னால் பறந்த தமிழீழ தேசியக்கொடி
மதுரை "நாம் தமிழர்" பொதுக்கூட்டம்

Monday, July 06, 2009

@ 10:46 PM எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்

ஊடும் பாவுமாய் நீரிலையும்
வண்ணத்துப்பூச்சியின் உடலாய்
வாழ்க்கை - நிலம் பார்த்து விரிந்து கிடக்கும்
சிறகினில் மெல்ல கவிழும் இருள்
சலனமற்று பார்த்தவாறே இருக்கிறான்
காலக்கிழவன்

Sunday, July 05, 2009

@ 4:02 PM Labels: எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்இல்லண்ணே சொல்லுங்க..

பின்ன என்னாதுக்குய்யா அத்தன தடவ கூப்பிட்டும் போனை எடுக்கலை, சரி அத விடு கரகாட்டம் பார்க்க வர்ரீயா என் கோபால் கூப்பிட மாரிமுத்து ஜகா வாங்கினான், காரணம் கோபால் ஜொள்ளு உலகறிந்த விதயம் அதிலும் மாரிமுத்துவோ இயல்பாகவே சபை கூச்சம் அதிகம் உள்ளவன் அவன் இலக்கிய கூட்டங்களுக்கு குறைந்தபட்சம் கட்டிங்காவது போட்டுவிட்டு போவதற்கு காரணமே அந்த சபை கூச்சம்தான், இலக்கிய கூட்டத்திற்கே அஞ்சுபவன் நடுத்தெருவில் கரகாட்டத்தினை ஒரு நாள் கூட நின்று பார்த்ததில்லை. இவன் வேறு இப்போது கூப்பிடுகிறான் வரவில்லை என தட்டிகழிக்கவும் முடிந்து தொலையாது இவனது ஸ்டராங்கான "அரசியல் சோர்சே" கோபால் ஒருத்தன் தான் ( மாரிமுத்து " தமிழக கரகாட்டம், காபரே,ஸ்டிரிப்டீஸ், வட இந்திய,பாகிஸ்தானிய மற்றும் ஆப்கானிய முஜ்ராக்கள் பற்றிய ஒரு திறனாய்வு" என்கிற தலைப்பில் சாணி பேப்பரில் பதினாறு பக்க வெளியீடு ஒன்றை தனது வானம் வெளீயீட்டகம் சார்பில் கொணர்ந்தான் அதன் மொத்த விற்பனை உரிமையும் அர்ஜுனனிடம் கொடுத்து "வந்த விலைக்கு வித்துருங்க, விலை 5 ரூவாதான் போட்டுருக்கேன்" என்று சொல்லி கொடுத்தான். அர்ஜுனன் பொது நிகழ்ச்சிகளில் புத்தகம் விற்பனை செய்பவர், மறுநாள் மாரிமுத்துவை தேடிபிடித்து " என்னய்யா தலைப்பு எதோ வித்தியாசாமா இருக்கு சரி விக்கிற வரைக்கும் விக்கட்டும் நம்ம தோழர்தானென்னு வாங்கிட்டு போனா உள்ள பூராம் அம்மணக்குண்டி படமா இருக்கு, இதுவரைக்கும் பிரபாகரன் படம் வித்துதான்யா உள்ளார போயிருக்கேன், சீன் படம் விக்க வச்சு உள்ள அனுப்பிடாத" என்று அவனது முதல் வெளியீட்டை திரும்ப கொடுத்து விட்டு போனது கோபால் வர்ரீயா எனக்கேட்ட நொடியில் அவனுக்கு நினைவுக்கு வரவில்லை)Tuesday, June 09, 2009

@ 8:17 PM Labels: எழுதியவர்: வரவனையான் 5 மறுமொழிகள்


மாரிமுத்துக்கு கோபாலிடமிருந்து வரும் அழைப்பை போல அலுப்பான விதயம் வேறொன்றுமில்லை. கோபால் இடமிருந்து அழைப்பு வந்தாலே ஒரு வித நடுக்கம் கொஞ்ச நாளாய் தனக்கு வருவதை அறிந்திருந்தான்.

"துயரத்தில் துயரம் பெருந்துயரம் அத்துயரம்
துயரத்தில் எல்லாம் தலை"ன்னு

இவனா அவனுக்குன்னு எழுதிய குறள் வேறு நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. காரணம் என்னான்னா கோபால் மாரிமுத்துவின் ஊரில் மிக பெரிய"தல" ஒன்றின் ஓட்டுநராக இருந்தான். மாரிமுத்துவோ அவ்வப்போது அந்த தலைக்கு "சொம்படித்து" பொழைப்பை பார்த்து வருபவன். எனவே கோபாலின் தேவைக்கு இவனுக்கு வேண்டியதாய் இருந்தது. எவனாவது காது கொடஞ்சுகிட்டே "அப்புறம் "தல" எங்க'ன்னு சும்மானாச்சுக்கும் கேட்ட கூட "பூஸ்டர்" பேக் போட்டிருக்கிற மொபைல எடுத்து "ண்ணா எங்கண்ணா இருக்கிங்க"ன்னு கேட்டு ஒரு வித தோடுடன் "கவுஞ்சிகிட்ட இருக்காங்கலாம், அரை மணி நேரத்துல வீட்டுல இருப்பாராம் போய் பாருங்க'ன்னு சீன் போடுவான். ஆனா உண்மையில் அவன் பேசியது கோபாலிடம் அந்த உரையாடல் இப்படியாய்த்தானிருக்கும்.

"ண்ணா எங்கண்ணா இருக்கிங்க"

"யோவ் சும்மா நொய்யு நொய்யின்னு கால் மணிக்கு ஒரு தடவை போன் பண்ணாதேன்னு எவ்வளவு தடவையா சொல்லுறது; அரை மணி நேரத்துல தல வீட்டுக்கு வா"

இப்படி எரிந்து விழும் கோபால் "தல" ஊருக்கு போயிட்டாலோ அப்படியே டிட்டோவாக மாறிவிடுவான் "எங்கையா போயிட்ட ஆளே காணாம், நீ ரொம்ப பிசியான ஆளு எங்களையெல்லாம் கண்டுக்குவியா... நீயிதான் பெரிய தொழிலதிபர் ஆயிட்ட ( "தல" மாரிமுத்துக்கு ஒரு டூபாக்கூர் அரசு அலுவலகத்துக்கு முன் டீக்கடை நடத்திக்கொள்ள அனுமதி வாங்கி கொடுத்திருந்தார். அந்த ஆபீஸோ மதியம் 2 மணிக்கெல்லாம் ஈ,காக்காகூட பறக்காத ஏரியாவாகிவிடும். அவன் கேட்டது அரசு பொதுமருத்துவமனையில், தமிழ்நாட்டில் பிசியாக இருக்கும் ஒரே அரசுத்துறை அதுதானே, அதனால் அங்கு கேட்டான். ஆனால் அந்த இடத்தை "நடிகர்" கட்சியிலிருந்து மொத நாள் வந்தவனுக்கு கொடுத்துவிட்டு, மாரிமுத்துக்கு இந்த பாடாவதி இடத்தை மாரிமுத்துவின் தலையில் கட்டிவிட்டார். "நடிகர்" கட்சியிலிருந்து வந்தவன் தன் பெயருக்கு டீக்கடை மாறியவுடன் "தலை"யின் வாயில் வாழைப்பழத்தை வைத்துவிட்டு மீண்டும் தாய்க்கழகத்துக்கு போய்விட்டான் என்பது இப்பிரதியின் கிளை வயித்தெறிச்சல்) ஒரு போன்கூட பண்ணுறதுல்ல

இப்படி தொடங்கும் உரையாடல் மேற்படி மேட்டரில் வந்து முடியும், ஏன்யா கெமினோ'ன்னு ஒரு சரக்கு இருக்கே அது நல்லாருக்குமா.

மாரிமுத்து Old monk கட்டிங் வாங்கிதாரேன்னு சொன்னா கூட அது 40 கிலோ மீட்டர் தூரமாய் இருந்தாக்கூட மிதிவண்டியில கொரங்கு பெடல் போட்டே போய் குடிச்சுட்டு வருபவன் என்றாலும் "உலக சரக்கு"கள் பற்றி ஒரு விரிவுரை நடத்துமளவுக்கு "விஷய" ஞானம் உள்ளவன். "தல"க்கு வந்த சக்கரை நோயினால் அவருக்கு வரும் இறக்குமதி சரக்குகளை ஒரு வித வயித்தெறிச்சலுடன் தல கோபாலிடம் கொடுத்துவிடுவார். கோபால் அதன் லேபிளில் இருக்கும் பெயரை கடினபட்டு எழுத்துக்கூட்டி படித்து மாரிமுத்துவிடம் அவற்றின் குலம் கோத்திரம் தெரிந்து சபையில் பீலா விட்டுக்கொள்வான்.

தல ஊரிலிருக்கும் போது மாரிமுத்து கோபாலை போன் பண்ணி டார்ச்சர் கொடுத்தால் "தல" போன பிறகு அவன் இவனை போன் பண்ணி இப்படியான இம்சைகளை கூட்டுவான்.

ஜானி வோக்கர் புளு லேபிள் நல்லா இருக்குமாய்யா ? இப்படி ஒரு நாள் கேட்டா மறுநாள் "ரெமி மார்டின் நல்லா இருந்துச்சுய்யா நேத்து; உன்னைய கூப்பிடனும்னே இருந்தேன் மறந்தே போயிட்டேன்"என்பான். மாரிமுத்து ஓசி கட்டிங்கே ஏழுமலை ஏழுகடல் தாண்டி போற ஆளாச்சா, இப்படி ஒசத்தி சரக்குன்னா சந்திரமண்டலத்துகே போவான்,இந்த வெறுப்பையெல்லாம் வச்சு அன்னைக்கு நைட் எச்சா ஒரு குவார்ட்டரு செலவாகும் .

இப்படித்தான் ஒரு நாள் போனில் அழைத்தான் கோபால்.

நேத்து நைட்டுதான்யா "தல" பாண்டியன்ல போனாரு, உன்ன கூட கேட்டாருய்யா. எதோ நர்ஸ் டிரான்ஸ்பர் கேட்டு இருந்தியாம்ல, அந்த பேப்பர கூட மறக்காம வாங்கிட்டு போனாருய்யா என்றபடி மொக்கையை போட ஆரம்பித்தவன், வழக்கம் போல் சாராயப்பேச்சை ஆரம்பித்தான். ஏன்யா சதர்ன் கம் பாடுன்னு ஒரு அயிட்டம் இருக்காய்யா? எப்படிய்யா இருக்கும். இன்னைக்கு மதியம் அதைத்தான் போடலாம்ன்னு இருக்கேன். அந்த மாணிக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் முத்துசாமி "தலை"க்கு கொடுத்துட்டு போனாரு. நல்லாருக்குமா? என்றான்.

ண்ணே அது செமையா இருக்கும்ண்ணே ! ஆனா பேரு சதர்ன் கம்பொர்ட்'ண்ணே. எங்க அண்ணன் ஒருத்தர் ஜேர்மனியில இருக்காரு அவரு வாங்கியாந்து கொடுத்தாரு.

அது எப்படிய்யா எந்த சரக்கு பத்தி கேட்டாலும் அது பத்தி புல் டீடெயில்லு சொல்லுற, உலகத்தில இருக்கிற எல்லா மேட்டரையும் டேஸ்டாவது பாத்திருக்கிற ஆச்சரியமா இருக்குய்யா என்று ஒரு மைல்டான வயித்தெறிச்சலுடன் சொன்னான் கோபால்

( ...ம்க்கும் ப்லாக் மட்டும் எழுதிப்பாரு அண்டார்டிக்கால இருந்து கூட சரக்கு வரும், ஆனா பொட்டீக்கடை'ன்னு ஒருத்தன் இருக்கான் அவன் மட்டும் மணியாட்டிகிட்டு வருவான். இங்க வந்தும் பிஃப்த் லெக் வைன்'தான் வேணும் "ஃபோர்த் பூல்" (POOL'ங்க :P ) ஸாம்பெயின்னு தான் வேனும்ன்னு அடம்புடிப்பான் அப்புறம் சைனா பஜாரு பர்மா பஜாருன்னு அலையனும் - மாரிமுத்துவின் ஆஆஆஆழ்மனசு)

இப்படியான உரையாடல் இருவேறு விதமான பொச்செரிச்சலுடன் முடிந்த அன்று மாலை மறுபடி கோபால் அழைத்தான், "அப்புறம் நண்பா, வேலையா இருக்கியா ( மாரிமுத்து கோழிக்கு மயிறு புடுங்கும் வேலையில்கூட நிலையாய் இருந்ததில்லை என்பது வேறுவிதயம், அது கோபாலுக்கும் தெரியும். ஒரு பேச்சுக்கே அப்படி கேட்பான். எப்போதெல்லாம் அப்படி கோபால் கேட்கிறானோ அப்போதெல்லாம் நொனங்க ஒரு வேலை சொல்லி மாரிமுத்துவின் பெண்டை நிமுத்தி பார்ப்பதில் அலாதி பிரியம் அவனுக்கு)


தொடர்வேன் -

Saturday, May 30, 2009

@ 4:06 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்


பூனைகள் மெல்ல வெளிக்கு
வருகின்றன - கண்களில்
நிலைத்த பயத்தில் மாற்றமில்லை
பின்னிரவு நேரத்தில் மெல்ல
போர்வைக்குள் நுழைந்து
தூக்கம் கலைக்கும்
அறிதுயில் நேரங்களில்
குரல் எழுப்பி சோம்பல்
முறிக்கும் அழகு
பிடிக்குமெனக்கு
.....................
.....................
மென்பஞ்சு பாதங்களில்
கூர் நகம் காட்டி
கொடும் பல் மிளிர
"புலி சேர்ந்த கல்லுளை" விட்டு
புதிதாய் வெளிவரும்
பூனைகளின் முகங்கள்
ரசிப்பதாயில்லை

Wednesday, May 27, 2009

@ 3:33 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்

ஏம்மா உனக்குத்தான் சுகர் இருக்கே, நேரத்துக்கு சாப்பிடலைன்னா இனிமேல் இன்சுலின் ஊசி போடனுன்ம்னு டாக்டர் போன வாரமே திட்டிதானே அனுப்பினாரு.

பேசாம இரு செந்தி, எப்படிப்பா சாப்பிட முடியும் அது அவருதான்னு சொல்லுறங்க டீவீல, பயமா இருக்கு. வீட்டுல மூத்த புள்ள செத்து போன மாதிரி கெடக்கு மனசுக்கு... எப்படிட சாப்பிட முடியும் நெஞ்சை வந்து வந்து அடைக்குதுடா

"அப்பாயீ... அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது... நீ சாப்பிடு. அவருக்கு ஒண்ணுமில்லையாம்
சித்தா சொல்லுச்சுல்லா" அவரின் பேரன் தேற்றிக்கொண்டு இருந்தான்

( உலகு வாழும் தமிழன்னைக்கெல்லாம் அவன் தலைப் பிள்ளை - கவிஞர் தமிழ்நதி)

வேறு ஒருவரை தொடர்பு கொண்டு உறுதி படுத்தி வரலாமென கிளம்பி போனேன்

தொடர்பில் அவர் வராமலிருக்கவே, மனசு தவியாய் தவித்தது.

"அண்ணே நான் பத்திர எழுத்தாளர் பிரிட்டோ பேசுறேன்ணே, இங்க வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்தேன்ணே. டிவீ பார்த்தேன் உண்மையாண்ணே" விசும்பி அழும் ஒலி கேட்கிறது. இந்த நபரை ஒரு உணர்வாளராக அறிந்ததில்லை அதுவரை.

"மாதா கிட்ட வேண்டிருக்கேன்ணே ஒண்ணும் தப்பாயிடாதுண்ணே"

அப்பாடா ஒருவழியாய் தொடர்பு கிடைத்தது. நிம்மதி பிறந்தது

வீட்டுக்கு தொடர்பெடுத்தேன்.

அவரு நலமாயிருக்காரும்மா !

பின்னால் ஒரு குரல் கேட்டபடியிருந்தது.

"அப்பாயீ கவலை படாத ஒண்ணு ஆகியிருக்காது, நான் சொல்லுறேன்ல" அது அவரின் பேரன் "பிரபாகரனின்"குரல்
Wednesday, April 15, 2009

@ 1:58 PM எழுதியவர்: வரவனையான் 3 மறுமொழிகள்

தமிழனாய் இருப்பதா அல்லது மனிதனாய் இருப்பதா ? "இந்தியனாய்" என்கிற கேள்வி இங்கு தேவையற்றது. "நான் எந்தளவுக்கு உலகனோ, எந்தளவுக்கு ஆசியனோ, எந்தளவுக்கு இந்தியனோ அதைவிடக் கூடுதலாய் தமிழன்" என்று பாவேந்தரின் மாணாக்கர் ஈரோடு தமிழன்பன் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த கூடுதலான தமிழர்களில் ஒருவனாய் என்னை இணைத்துக்கொள்ளும் வேளையில் சிலவற்றை முன்வைக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

தமிழக அரசியலில் இதுவரையில் கலைஞரின் நிலைப்பாட்டினையும் அவரது பல்வேறு செயல்களுக்கும் ஆதரவாய் எழுதியும் பேசியும் வந்த ( சமயங்களில் "கொட்டை தாங்கியும்" ) என் போன்ற கூடுதல் தமிழர்கள் இன்று கருணாநிதியின் அரசியலுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய காலமிது.

"நான் நினைத்தால் என்றோ பிரதமராயிருக்க முடியும்" "என் உயரம் எனக்கு தெரியும்" இவை கலைஞர் என்கிற தனக்கிடப்பட்ட விலங்கை தானே மெச்சிக்கொள்ளும் ஒரு விசுவாச அடிமை தன்னை பற்றி சொல்லிக்கொண்ட வரிகளாகும். திமுக ஆதரித்தால் முழுமையாய் ஆதரிக்கும் எதிர்த்தால் முழுமையாய் எதிர்க்கும் என்று சொல்லி சொல்லி கூட்டணி சேர்ந்து அன்று பாரதிய ஜனதா கட்சியின் நரந்திர மோடி குஜராத்தில் 3000 ஆயிரம் முஸ்லிம்களை கொன்றொழித்த இனப்படுகொலைகளின் போது பொத்திக்கொண்டு "முழுமையாய்" ஆதரித்தது. மேற்குவங்கத்தில் சி.பி.எம் நிகழ்த்திய நந்திகிராம் படுகொலைகளை கண்டும் காணாமல் தன் கூட்டணி கட்சியின் பச்சை படுகொலைகளை "முழுமையாய்" ஆதரித்தது. இன்று தனது கட்சி ஆட்சியில் பங்கு வகிக்கும் , தனது ஆட்சிக்கும் முண்டு கொடுக்கும் காங்கிரசுக்கு ஆதரவாய் வரலாற்று துரோகமாய் தன் ரத்த சொந்தங்களை துடிக்க துடிக்க கொல்லும் காங்கிரசுக்கு ஆதராவாய் நிலையெடுத்திருக்கிறது.

ஆட்சியதிகாரம் என்கிற போதை தன் கோவணத்தையும் இழக்க வைக்கும். அன்மையில் இழந்தவர் கருணாநிதி. அவர் பன்முக கலைஞர் என்பதில் நமக்கு மாற்று கருத்தில்லை ஆனால் அவரின் அணுக்கத்தொண்டனும் அசந்து போகுமளவிற்கு சுப.தமிழ்ச்செல்வனுக்கு கண்ணீர் அஞ்சலி கவிதை, அன்டன் பாலசிங்கதிற்கு இரங்கல், பிரபாகரனிற்கு "சர்வாதிகாரி"பட்டம் என ஆல்ரவுண்டர் ஆட்டம் இனி தமிழ்க்களங்களில் செல்லுபடியாகாது என்பதே நிதர்சனமான உண்மை.

நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார் ? இப்படி ஒரு கேள்வி கலைஞரிடத்தில் முன்வைக்கபட்டது அதறி அவர் சொன்ன பதில் "ஃபிடல் காஸ்ட்ரொ" என்று.

பிடலை முதன் முதலாய் சந்தித்த பொழுது சே சொல்லிய முதல் அறிவுரை "துரோகிகளை ஒழியுங்கள்" என்பதுதான், இன்றைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியில் தேங்கி நிற்கும் திராவக சொட்டாய் கூபா என்கிற பொதுவுடைத்தேசம் உயிர்த்து இருப்பது புரட்சியின் போது "துரோகிகளை" அப்புறப்படுத்தியதுதன். இன்றளவும் கூபா ஒரு பாட்டாளிவர்க்க "சர்வதிகார"நாடாகவெ இருக்கிறது இது கலைஞருக்கும் தெரியாமலிருக்காது; என்ன இருந்தாலும் "சகோதர யுத்தம்" கூடாதுதானே. மாமன் மச்சான் யுத்தமென்றாலும் சமாதான படுத்தி விடலாம், சகோதர யுத்த பலன்களை நாளும் தன் வீட்டிலேயே பார்ப்பவர்தானே. புளித்து போன தயிர் சாதத்தையே நினைவுபடுத்துகிறது கருணாநிதி அவர்களின் 80'களில் தேங்கிப்போன ஈழம் தொடர்பான அறிக்கைகளும் விளக்கங்களும். ஆனால் அவருக்கு நடப்பது ஏதும் தெரியாமலில்லை தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டவரை என்னவென்று சொல்வது


என்னை பொறுத்தவரை ஈழப்பிரச்சினையின் தாக்கத்தை ஏற்படுத்தியவர் கலைஞர் என்பதே உண்மை. 80,களின் தினகரன் நாளிதழின் இரண்டாம் பக்கம் திருப்பினால் வைகோ பாராளுமன்றத்தில் முழக்கம். இந்திய அரசுக்கு கேள்வி என்றெல்லாம் செய்தி வரும். இரண்டாம் பக்கத்தில் டெசோ தொடர்பிலான அறிக்கைகள் இருக்கும். கலைஞரின் பேச்சே தமிழுணர்வு கொண்ட பல்லாயிரம் பெயர்களை ஈழத்தின் பால் கவனம் கொள்ளச்செய்தது. இவ்வளவு ஏன் திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்று "இலங்கைத்தமிழரை என்றும் காப்போம்" என்பதுதான். "எப்படி இருந்தா நான் இப்படியாகிட்டேன்" விவேக்கின் காமடியைப்போல் ஈழத்தமிழ்ரை இவர்கள் காங்கிரசோடு சேர்ந்து காக்கும் லட்சணம் இதுதான் போலிருக்கிறது.


தி.மு.கவில் எஞ்சியிருந்த தமிழின உணர்வாளர்களின் கடைசி நம்பிக்கையாய் கருணாநிதியின் வார்த்தையிருந்தது. என்ன இருந்தாலும் இந்திய ராணுவத்தை வரவேற்க போகமாட்டேன்னு சொன்னவருதானே என்று அந்த நம்பிக்கையும் ரஜபக்சேவை அலக்சாண்டருடன் ஒப்பீட்டு பேசிய போதே தகர்ந்து போனது. செய்திகளையும் கணிப்புகளையும் கடந்து வெற்றி பெறுவது கடந்த காலங்களில் கலைஞரின் இயல்பு. அவரே இந்திய பிராந்திய வல்லாதிக்க ஆளும் காங்கிரசு அரசின் போலி பரப்புரைகளுக்கு புதிய ஊதுகுழலாய் மாறியது கொடுமைத்தான். வஞ்சக விடம் தோய்ந்த அந்த வரிகளிலும் ஒரு வரலாற்று உண்மையை ஊருக்கு உரைத்திருக்கிறார் கருணாநிதி. என்னாதான் அலக்சாண்டர் மாவீரனாக போற்றப்பட்டாலும் அவனும் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளன் தாம், போரஸ் பூர்விககுடிக்கு சொந்தக்காரன். புலிகளின் ரத்தம் கலந்த ஈழ மண்ணில் புற்களுக்கு மாறாய் இனி புலிகளே முளைப்பர். வரலாற்று அவப்பெயரை இன்று சுமந்து நிற்கும் வேளையில் அதை துடைக்கும் ஒரே வழி ஈழவிடுதலையை ஆதரிப்பதுதான். அதை விடுத்து சந்திரகாசன் போன்ற ஃபபூன்களை வைத்து காது குடையச்சொல்லி சுகம் கண்டு கொண்டிருந்தால் 60 ஆண்டுக அரசியல் வரலாறு ஒரு துரோக வரலாறாய் மாறிப்போகும்.

<ச்ட்ரொங்>இதோ தாய்த்தமிழகத்தின் கண்களுக்கு எதிரிலேயே ஒரு இனப்படுகொலை துவங்கிவிட்டது என்ன செய்யப்போகிறார் "தமிழின தலைவர்" கருணாநிதி.

Friday, March 20, 2009

@ 6:37 AM எழுதியவர்: Thooya 0 மறுமொழிகள்

Testing..

Tuesday, March 10, 2009

@ 8:46 PM எழுதியவர்: வரவனையான் 6 மறுமொழிகள்

தனக்கு எதிரான எந்த ஒரு சிறு முனகலை கூட பாசிசம் அனுமதிக்காது. முனகலையும் பெருமூச்சையும் கண்டாலே துடித்து போய் அதனை அடக்க முற்படும் பாசிசம், குரலினை எப்படி விடும். அப்படியொரு நிகழ்வுதான் அன்மையில் கருணாநிதி என்கிற கரங்கொண்டு பேராயம் நிகழ்த்த துவங்கியுள்ள கைதுகள். சீமான் துவங்கி கொளத்தூர் மணி அண்ணன், நாஞ்சில் சம்பத் என நீண்டு செல்லும் கைதுக்காட்சிகள். கருணாநிதியின் கரம் என சொல்லுவதால் அவர் இதில் ஒரு கருவி மட்டுமே என இங்கு நான் சொல்ல வரவில்லை. தன்னை ராவணனாகவும் கடைசியாய் இயக்கத்தை விட்டு பிரிந்து போன "உடன்பிறப்பை" வீபிடணாகவும் பொருத்தி பேசுவது கருணாநிதியின் வாடிக்கை, தன்னை ராவணனாகவும் கும்பகர்ணனாகவும் விளித்துக்கொண்ட கருணாநிதியே "வீபிட" வேலைகளில் இறங்கிய "எதிர்பாராத" திருப்புமுனை காட்சிக்கு இந்த தமிழினம் கொடுத்த விலை 3000 ஈழத்தமிழ் உயிர்களும் ஆற்ற இயலா கோபத்தோடு எரியூட்டிக்கொண்ட தாய்த்தமிழக உறவுகளுமே.

அன்மையில் திண்டுக்கல்லில் "தேசிய ஒருமைப்பாட்டு"க்கு எதிராய் கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரை ஒளிக்குறுந்தகடாய் வெளி வந்துள்ளது. இதில் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் அன்று ஆற்றிய உரையுள்ளது. ஒன்றை செய்யாதே என்றால் அதை எதிர்த்து நூறாய் செய்வதும் ஒரு போராட்ட குணமே. எந்த பேச்சு கலகமூட்ட கூடியது என அதிகார வர்க்கம் கலங்கியதோ அந்த பேச்சு, வெறும் இருநூறு பேர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய பேச்சு இன்று ஆயிரமாயிரம் மக்களை இந்த குறுந்தகட்டின் வாயிலாக சென்றடைந்து கொண்டுள்ளது.

Sunday, March 08, 2009

@ 4:28 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்


சிரிப்பு, அழுகை, பசி, உறக்கம் போன்றவை இயற்கையான உணர்வுகள். காலிலே அடிபட்டால் கண்களில் நீர் வரும். தன் உறவுகளின் நிலை எண்ணி அழுவதற்கு கூட கருணாநிதி அரசு தடை போடுவதை என்ன சொல்வது.

தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் வாழ்க !!!குறிப்பு: இந்த தடை பற்றி ஆய்வாளர் தொலைபேசியில் சொன்ன பொழுது தோழர்.துரை.சம்பத் சொன்னார் "வேணும்னா சிரிக்கிற போராட்டமா மாத்திகிறோம்" என்று. ஆய்வாளர் மறுமுனையில் அசடு வழிந்தது தெரிந்தது.


மேலும் ஒரு குறிப்பு : போராட்டம் வெற்றிகரமாய் நடைபெற்றது.

Tuesday, February 24, 2009

@ 3:30 PM எழுதியவர்: வரவனையான் 2 மறுமொழிகள்Thursday, February 05, 2009

@ 1:18 PM எழுதியவர்: வரவனையான் 2 மறுமொழிகள்

இன்று திண்டுக்கல்லில் நடந்த வழக்கறிஞர் சங்க ஆர்ப்பாட்டத்தில் மகிந்த,ங்கோத்தாபாய மற்றும் பொன்சேகா ஆகிய போர்வெறியர்களின் கொடும்பாவிகளும் சிங்கள கொடியும் எறிக்கப்பட்டது.

video


From Sril lanka flag burned

மகிந்த மாமா போட்டிருப்பது உண்மையாகவே சந்திரஹாசனின் ஜிப்பாவாகும். சந்திரகாசனின் அந்தியந்த முந்நாள் சீடர் லவட்டிக்கொண்டு வந்த அந்த ஜிப்பா மகிந்தவிற்கு அணிவித்து எரியூட்டப்பட்டது.

மூம்மூர்த்திகள் சாவதுக்கு முன்னால்
From Sril lanka flag burned


மகிந்தாகூட கடைசி புகைப்படம்

Tuesday, February 03, 2009

@ 8:25 PM எழுதியவர்: வரவனையான் 9 மறுமொழிகள்

ஈச்சம்பட்டி கிராமத்துல ஒரு கணக்கபிள்ள இருந்தானாம்.ஊருல பூராம் படிக்காத பயபுள்ளைகளா இருந்த காலம்.அந்த ஊரோட சிட்டா அடங்கல் பத்துங்கீழ் பொத்தகம், ஒலைசுவடில எழுதுன நிலபத்திரம்ன்னு எல்லாமே அந்தாளுகிட்ட தான் இருந்துச்சு. படிக்கலைன்னாலும் மக்கள் பூராம் ஒத்துமையாத்தான் இருந்தாங்க இந்தாளு பொறுப்புக்கு வர வரைக்கும். எவனுக்கு எவ்வளவு நெலம்ன்னு அந்தாளுட்ட கேட்டாதான் தெரியும்.ஒழுங்க வெவசாயம் பண்ணிட்டு இருக்கிறவன் தோட்டத்தை அடுத்தவனோடதுன்னு சொல்லி சண்டையிழுத்து விடுறதே பொழப்பு. மனிசன் வந்த நாளைல இருந்து ஒருத்தனுக்கு ஒருத்தேன் சிண்டு முடிஞ்சுவிட்டு சட்டைய கிழிச்சுக்க வைக்கிறதே வேலையா பார்த்துகிட்டு இருந்துருக்கான். இப்படியே ஒரு முப்பது நாப்பது வருசம் ஓட்டிருக்கான் வாழ்க்கைய என்னைக்கினாலும் உண்மை தெரியாம போகுமா. இப்ப ஊருகாரனுங்க தெளிவாகிட்டானுங்க. இந்தாள மதிக்கிறதே இல்ல. வயசும் ஆகிப்போச்சு. ஒரே மகன் வேற. எங்கட நம்ம செத்த பிறகு நம்ம புள்ளைக்கு இதே கணக்கு வேலை ஊருக்காரனுங்க தாராம போயிடுவானுங்களோன்னு நெனச்சு ஒரு திட்டம் போட்டான். மறுநாளு ஊரு கூட்டம் கூட்டி "எல்லாருகிட்டையும் மன்னிப்பு கேட்டுகிறேன். எம்புட்டோ குண்டுமாத்து குழிமாத்து செஞ்சு உங்களையெல்லாம் அடிச்சுகிட வச்சேன்.இன்னைக்கு ஊரு காலில உழுந்து கும்பிட்டு கேட்டுகிறேன்,இருந்தாலும் நான் செஞ்ச பாவம் தீராது அதுக்கு ஒரு வழி நானே சொல்லுறேன்னு'சொல்லி "நான் செத்த அன்னிக்கு என் குண்டியில பெரிய ஆப்பு ஒண்னை சொருகி அதுல வைக்கோல் பிரில செஞ்ச கயிறால கட்டி ஊருல இருக்கிற எல்லா தெருவு வழியாவும் இழுத்துகிட்டு போயி அடக்கம் பண்ணுங்கன்னு" கேட்டுகிட்டாரு

ஊருகாரனுங்க என்னாடாது கணக்கபுள்ள இப்படி திருந்திட்டாருன்னு சொல்லி சரிங்க சாமி! அப்படியே செஞ்சுடுறோம்ன்னு சொன்னாங்க. ஒரு மாசத்துல கணக்கபுள்ளையும் செத்து போயிட்டாரு சாக முன்ன புள்ளையை கூப்பிட்டு காதுல எதோ சொல்லிட்டு செத்து போயிட்டாரு. ஊருகாரனுங்களும் சரி கணக்கபுள்ள கேட்டுகிட்ட மாதிரி அவரு குண்டியில பெரிய ஆப்பா பாத்து சொருகி வைக்கோல் கயித்துல கட்டி தெருத்தெருவா இழுத்துகிட்டு போக ஆரம்பிச்சுருகானுங்க. ரெண்டு தெருவுதான் போயிருப்பானுங்க, ஒரு போலீஸ் வண்டி வந்து இறங்கிருக்கு, உள்ள இருந்து இறங்கின வெள்ளைக்கார இன்ஸ்பெக்டருக்கு தமிழ் தெரியாது. ஊருகாரனுங்களை பாத்து என்னாட பண்ணிட்டு இருகிங்கன்னு கேட்க கணக்கபுள்ள கடைசி ஆசைய நெறவேத்துறோம்ன்னு சொல்லிருக்கானுங்க.

புடிச்சு எல்லாத்தையும் வண்டியில ஏத்துங்கன்னு ஆர்டர் போட்டுடாரு. என்ன சாமீ செஞ்சோம்ன்னு ஊருகாரனுங்க கேட்க . கணக்க புள்ளைய குண்டியில ஆப்பு வச்சு கொன்னதுக்கு புடிச்சேன்னு சொல்லிருக்காரு, இப்படி சாகம்போது கூட அடுத்தவனுங்களுக்கு இம்சை கொடுத்து சாகிறவனுங்களை' இவன் ஈச்சம்பட்டி கணக்கன் மாதிரித்தான்யா செய்யிருறான்னு எங்க ஊரு பக்கம் சொல்லுவானுங்க.

அய்யா கருணாநிதி இப்ப உங்களையும் அப்படித்தான் சொல்லுறானுங்க. இதுக்கு பொச்ச மூடிட்டு சும்மா இருந்துருக்கலாமேன்னு சொல்லுவாய்ங்கல்ல அப்படித்தான் சொல்லத்தோணுச்சு உங்க செயற்குழு கூட்டம் முடிவ படிச்சபோது.எனகென்னமோ நல்லதா படலை சாமி உங்க போக்கு

Monday, February 02, 2009

@ 7:06 PM Labels: எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்ஈழ மக்களுக்கு ஆதரவாய் திரளும் மாணவர்களின் எழுச்சியை கண்டு அதனை மழுங்கடிக்கும் நோக்கில் அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி மூடி விடுதி மாணவ மாணவிகளையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றி ஒரு "அரசின்" குணத்தை வெளிப்படுத்தியுள்ளது காங்கிரசால் முண்டு கொடுக்கப்பட்டு நிற்கும் திமுக அரசு.

video

கல்லூரிகளை மூடிய போதிலும் இன்றும் திண்டுகல்லில் மாணவர்களும் மாணவிகளும் தன்னெழுச்சியாக கூடி ஒரு கண்டன பேரணி நடத்தி சிங்கள அரசுக்கும் அதற்கு உதவி புரியும் இந்திய அரசுக்கும் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

From Students struggle


From Students struggleஅதே வேளை திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் விடுதியிலிருந்து வெளியேற மறுத்து 150 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் துவங்கியுள்ளனர். மாணவர்களை சந்தித்து வாழ்த்து சொல்ல சென்ற தமிழக மாணவர் கூட்டமைப்பு தோழர்களை அப்பல்கலையின் பார்ப்பன நிருவாகம் உள்நுழைய அனுமதி மறுத்துள்ளது.

Sunday, February 01, 2009

@ 9:19 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்


min


இடம் : சிறுமலை முகாம் - திண்டுக்கல் மாவட்டம்

Saturday, January 31, 2009

@ 3:38 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்


இன்று காலை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி என்கிற ஊரை சேர்ந்த தோழர் ரவி என்பவர் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் இன்னலினையும் அதற்கு சிங்கள இனவெறி அரசுக்கு இந்தியா செய்யும் ராணுவ உதவிகளை கண்டித்தும் தமிழக அரசு வாய் முடி மௌனியாக இருப்பதை கண்டித்தும் எரிணெய் ஊற்றி தன்னை கொளுத்திகொண்டார். செய்தியறிந்த தோழர்களும் தமிழின உணர்வாளார்களும் அந்த உறவைக்காண புறப்பட்டுகொண்டிருந்த வேளையில் ஊடகவியலாளார்களூக்கு தமிழக காவல் துறையால் தீ வைத்து கொண்ட அந்த தோழரை பற்றி தவறான தகவல்கள் பறப்பபட்டுகொண்டிருந்தது. அவர் மேல் கொலை வழக்கு நிலுவையிலிருக்கிறது, கடன் தொல்லை என்றெல்லாம் அவதூறாய் செய்தி சொல்லி இச்செய்திக்கு முக்கியத்துவம் அளித்து போடவேண்டாம் என்றும் சொல்லி வந்த வேளையில். காவல் துறையின் இச்செயலை கண்டித்து மதுரை வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் போது செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன் "என் தந்தை முத்துகுமரன் ஈகை கண்டு பெரிதும் துயருற்று இருந்தார், நேற்று பகல் முழுவதும் அவரது செய்தியையே தொலைக்காட்சியில் பார்த்தவாறே இருந்தார். அவர் ஈழத்தமிழர்களின் பால் பெரிதும் அன்பும் உணர்வும் கொண்டவர் என்று தெரிவித்தார்.


தீக்குளித்த அந்த தோழரின் மகன் பெயர் "பிரபாகரன்"

இது ஒன்றும் போதுமே அவர் எதற்கு இச்செயலில் இறங்கினார் என்கிறா உண்மை உலகறிய
தோழர் இது வரை அபாய கட்டத்தில் இருப்பதாகவே அறிகிறேன்

Friday, January 30, 2009

@ 4:00 PM எழுதியவர்: வரவனையான் 3 மறுமொழிகள்அதிர்ந்து பேசிக்கூட நான் பார்த்ததில்லை இந்த நண்பரை, இவ்வளவு உணர்வாளராக இருப்பார் என்று தெரியாமல் போய்விட்டது நாட்கள்.

தன்னந்தனியனாய் போராட்டத்தினை துவக்கியுள்ளார். அடுத்த கட்ட போராட்டம் குறித்து திண்டுக்கல் வழக்குரைஞர்கள் சங்கத்தின் ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இவர் போராட்டம் துவக்கிய செய்தி எட்டியது. பின்னர் வழக்குரைஞர்கள் அனைவரும் இவர் போராட்டம் துவக்கியுள்ள சாணர்பட்டி( திண்டுக்கல்லில் இருந்து 15 கி.மீற்றர்) சென்று வாழ்த்துகளை தெரிவித்தும் அவ்ரின் உறுதியையும் தமிழின உணர்வினையும் பாராட்டி தங்களின் முழு ஒத்துழைப்பு உண்டு என அறிவித்துள்ளனர். இவரின் போராட்ட செய்தியறிந்த பல்வேறு அரசியற்கட்சியினரும் தமிழ் உணர்வாளார்களும் அவருக்கு வாழ்த்து சொல்ல விரைந்த வண்ணமுள்ளனர்.


இவருக்கு சர்க்கரை மற்றும் இருதய நோய்கள் இருப்பதுதான் என்னை கவலைகொள்ள செய்கிறது.

Thursday, January 29, 2009

@ 10:27 PM எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்


தட்டுக்கும் வாய்க்குமே பயணித்து கொண்டிருந்த எங்கள் கைகளை தடுத்து மார் தட்ட வைத்தவன் திருச்சி அப்துல் ரவூப் , நீ இன்னொரு முறை தட்ட வைத்திருக்கிறாய். போய் வா உறவே ! வீர வணக்கங்கள் தமிழ்நாட்டு தமிழனுக்கும் சுரணை உண்டு உலகறிய செய்த உறவே ! வீர வணக்கம் வீர வணக்கம்

Tuesday, January 27, 2009

@ 4:38 PM எழுதியவர்: வரவனையான் 9 மறுமொழிகள்


ராமுக்கு வயசு எவ்வளவுன்னு தெரியல ! ஆனாக்க ரொம்ப கெழடுதான் அது. ஒரு காலத்தில இந்த தெருவுல அது அட்டகாசம் ரொம்ப இருந்துச்சாம். நல்லவன் கெட்டவன்னுலாம் அதுக்கு தெரியாதாம் "என் கடன் கடித்துக்கொண்டே இருப்பதாம்" அப்படிங்கிற மாதிரி அமைதியா பின்னால வந்தி லப்புன்னு கடிச்சு வச்சுட்டு போயிடுமாம். இந்த தெருவுக்கு வந்ததுல இருந்து தட்சினாமூர்த்தியை மட்டும் அதுக்கு பிடிக்கவே பிடிக்காதாம் தட்சினாமூர்த்தி இல்லாத போதும் கூட அவரு பேரை சொன்னாலே ஒரே குலை குலைச்சு கோவத்தை காட்டுமாம். இந்த லூசு நாயி ஒரு தடவை அதுக்கு பொறை வாங்கி பொட்ட தட்சினாமூர்த்தியை கடிச்சதுதான் தெரு காரங்களுக்கு எல்லாம் கடுப்பாகிடுச்சு. சொறி நாயா இருந்தாலும் பாவம்ன்னு விட்டு வச்சதால இவ்வளோ இம்சைன்னு அடிச்சு துரத்தி விட்டுட்டாங்க. எப்பாவாது ஆடிக்கொருக்க அம்மாவாசைக்கொருக்க மாலினி அக்கா வீட்டு பக்கம் வந்து ஊளையிடும், சமயதில "ரத்னா" ராம் அண்ணன் வீட்டு கொல்லைபுறதிலையும் இருந்து ஊளையிடும் அப்போதான் தெரியும் இந்த நாயி இன்னுமும் உசிரோடா இருக்கிறது. இன்னைக்கு போண்டா மணிதான் சொன்னான் அந்த ராமு நாயி மண்ணு லாரில அடிபட்டு செத்து போச்சாம்.

ச்சே சட்ட ஒழுங்கே சரியில்லப்பா.....

@ 3:45 PM எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்

Um wen es angeht:

PLEASE STOP den Völkermord an Tamilen in SRILANKA

Ich möchte Sie bitten, um eine dringende Maßnahme, um den Völkermord an den Tamilen in Sri Lanka und die eine sofortige Waffenruhe, um das Leben unschuldiger Zivilisten.
Mehr als 50000 Srilankan Armee umgeben haben die Tamilen in dicht besiedelten Gebieten Mullaitivu, Sri Lanka. Ihre ständige Bombardierung und Artilleriebeschuss Tötung sind die wehrlosen und unschuldigen Menschen Tamil. Obwohl sie nennen es "den Krieg gegen den Tamil Tigers", es ist eindeutig bewiesen, dass es sich um einen Völkermord an den Tamilen. Mehr als 300 Zivilisten ihr Leben verloren haben, mehr als 1000 werden schwer verletzt, nur in den letzten Tagen und 400.000 Zivilisten Tamil werden Vertriebenen täglich. Was kommt nach Angriffen der Armee sind vor allem die Sicherheit Zonen, Krankenhäuser und andere Zivilisten besiedelten Gebieten.
Artillerie-, Multi-Brand-Lauf und Mörtel von der srilankischen Armee in Richtung Sicherheit Zonen (von der Regierung) in Mullaitivu Bezirk wird beschrieben als "die unmenschlichen Angriffe auf Völkermord Zivilbevölkerung".

Medizinische Behörden, sagte der Situationen, die außerhalb der Kontrolle der Krankenhäuser haben unter Angriffen und Patienten sind hilflos, ohne medizinische Versorgung.

Bitte nehmen Sie sich unschuldige Menschen das Leben in ernsthaft in Erwägung gezogen werden. Tamilen sind in der sehr kritischen Situation in Bezug auf Sicherheit, Lebensmittel und Medikamente - die Grundlagen für ein Mensch.Unschuldige Tamilen im Nordosten von Sri Lanka werden verhaftet und gefoltert Srilankan von der Armee. Die Regierung von Sri Lanka hat ignoriert und vertrieben die Menschen und Organisationen die internationale Gemeinschaft auf, sich in diesem Völkermord, ohne Aufmerksamkeit zu jedermann.

Es ist sehr sehr traurig, dass die internationale Gemeinschaft einschließlich der Menschenrechte Organisationen und der Rest der Welt schließen ihre Augen, und nicht unter einer schweren Maßnahmen, um das Leben der Unschuldigen und um Frieden zu Tamilen.

Wir, die Millionen von Tamilen auf der ganzen Welt, bitte, fragen Sie auf, unverzüglich Maßnahmen zu senden, einen Menschenrechtsrat einzusetzen, Organisation oder einer internationalen Gemeinschaft Vertreter Offiziere der Tamilen Vertriebenen in Mullaitivu, um zu sehen, ihre Kämpfe in Person. Mehr deutlich, wir wollen, dass Sie bestimmte Bereiche, wie Sicherheit und Gebiete, die Regierung nicht angreifen. Um alle Maßnahmen Frieden, einen Waffenstillstand werden muss zwischen den beiden Tamil Tigers und der Regierung so bald wie möglich.
Wir, die Tamilen in diesem Land, fordern Sie Ihre Mitarbeiter gut zu tun, Ihren Teil zu retten, die verloren gehen täglich. Tamilen auf der ganzen Welt haben Vertrauen zu Ihnen, wie Sie es sich von uns. Bitte haben Sie Verständnis, das Leiden und die Schwierigkeiten der Tamilen in Sri Lanka.

Mit freundlichen Grüßen

ein tamilian