Monday, January 28, 2008

@ 4:17 PM எழுதியவர்: வரவனையான் 19 மறுமொழிகள்

எனக்கு ஒன்னும் இதுக்கு முன்ன இந்த அனுபவம் இல்லைனாலும், கூட வந்த ஆளு கரை கண்டிருப்பாரு போல. யோவ் வேணாம்யா யாருக்காவது தெரிஞ்சா கேவலம்ன்னு சொன்னாலும் கேக்கிற மாதிரி இல்லை. உள்ள போனதும் குப்புன்னு வேர்க்குது. யோவ் வேர்க்குதுயா போலாம்ன்னு சொன்னா விடமாட்டேங்கிறாரு. "அதுக்குதான்யா வந்திருக்குறதே அதுங்காட்டியும் போலாம்ன்னு சொன்ன எப்படி"ன்னு எகிறுறாரு.

கைலி கட்டி ஒரு சின்னப்பையன் வந்தான் " எத்தனை வேணும்" எதோ அதட்டலா கேட்டான். நம்மாளு அவன் காதுல மட்டும் விழுற மாதிரி எதோ சொன்னாரு. அத கேட்டு அவன் "அதுலாம் பழசா போயிடுச்சு, புதுசா ரெண்டு வந்திருக்கு சும்மா கிண்ணுனு இருக்கும், ஒரு தடவை மட்டும் பாருங்க அப்புறம் விடமாட்டிங்க"னு சொல்லி உள்ள போயிட்டான்.

நான் "யோவ் இதுலாம் ரொம்ப நாளாவதுயா அதும் போக எனக்கும் தொட்டவுடன ...... போதும் நிறுத்து "தலைப்புக்கே பதிவு சூடான இடுகைல வரும் இதுல ஸ்டார்லாம் போட்டு எழுத தேவையில்லை"ன்னு சொல்லிட்டு, இதுக்கு அந்த தம்பிட்டயே வைத்தியம் இருக்குன்னு சொல்லி சிரிச்சான். அது எப்படின்னு நான் முழிச்ச போது உள்ள வந்தான் அந்த சின்னதம்பி ( பெயர்தாங்க ) . அவன் கிட்ட நம்மாளு போயி பழையபடி காதுகிட்ட கிசுகிசுன்னு எதோ சொன்னாரு, இதெல்லாம்மா சொல்லுவாங்க, எனக்கு கடுப்பாகிருச்சு. யோவ் வேணாம்யா இத போயி அவன் கிட்ட ஏன்யா சொல்லுறன்னு கேட்டேன் அதுக்கு அவரு" நாம போனதுக்கப்புறம் பாவம் அவந்தானே எல்லாத்தையும் கிளீன் பண்ணனும்" அதுனாலதான் சொல்லி ஐடியா கேட்டேன்ன்னு சொல்லுறாரு.

அவன் என்னமோ விஞ்ஞானி மாதிரி தாவாங்கொட்டையில கைவச்சு யோசிச்சு நம்மாளு காதுல எதோ சொல்லிட்டு " போயி எடுத்தாரேன்னு " என் காதுல படுற போல சொல்லிட்டு போக நான் ஆவல் தாங்காம என்னானு கேடதுக்கு நம்மாளு சொல்லுறாரு "இல்லப்பா முனையில எண்ணையை நல்லா தடவுனா அது மாதிரிலாம் ஆகாதாம் அதான் எடுத்தார போயிருக்கான்னு சொன்னாரு.

" டேய் என்ன இப்ப மஸாஜா பண்ணப்போறிங்க அஔஇலு பவுடர்லாம் போட்டுன்னு கேட்க அந்த பையன் கடமையே கன்ணாக கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம டக்குன்னு திறந்து முனையில எண்ணையை தடவி கபகபன்னு ஊத்தினாரு என்ன ஆச்சரியம் ஒரு சிங்கிள் டிராப் நுரை கூட வரலை . சபாஷ் தம்பி கலக்கிட்டியேன்னு பார் டெண்டர் சின்னத்தம்பிக்கு கைகொடுத்துட்டு ஆளுக்கொரு பீர் மக் கை கையிலெடுத்தோம்

குறிப்பு: பீர் பாட்டிலின் வாய் பகுதியில் ஆட்காட்டி அல்லது ஸௌகரிய பட்ட விரலில் நன்னா எண்ணை எடுத்து தடவிட்டு அதுக்கு பின்ன பீரை மொட்டை மாடியிலர்ந்து ஊத்தினாக்கூட நுரை வாராது ஓய். குடிக்கலாம்ன்னு நினைச்சு மூடி திறக்கும் போது புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு பொங்கி வழியுமே பீர் அதுக்கு பேர்தானே Premature Ejaculation எங்க ஊரு பக்கம் அப்படித்தான் சொல்லுவோம். நீங்க வேற நினைச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல

"Premature Ejaculation in Beer "

தலைப்பு இப்படி இருந்திருக்கனும் ஹிஹி கண்டுக்காதிங்க

மற்றபடி நான் இவ்விடயத்தில் தோழர் தமிழச்சியின் தீவிர ஆதரவாளன். "யோனி" "அல்குல்" என்று இலக்கிய அல்லது புனைவின் போர்வையில் எதை வேண்டுமானாலும் வார்த்தையாடிவிட்டு அதையே வழக்கு ரீதியாய் சொல்லும் அல்லது எழுதுபவரை கண்ண்டிப்பது ஒன்றும் யோக்கியமான செயல் அல்ல. அதுக்கு தையிரியமா " போடா .....டைன்னு கூட திட்டிட்டு போயிறலாம்" வலையுலக போலிஸாக இலக்கிய குண்டர்களாக வேலை பார்ப்பவர்களை. குறிப்பாய் எந்த நண்பர்களையும் குறிப்பிடவில்லை மேலுள்ள பத்தியில்.


சூடான இடுகையில் வரவைப்பது எனப்து எப்படி என்று இரண்டு திராவிட ராஸ்கல்களும் ஒரு டெரித்தாவின் ரசிகர் மன்ற போட்டிக்குழுவின் செயலாளரும் தி.நகர் நடேசன் பூங்காவில் சந்தித்து பேசிய ரகசியா ச்சே ரகசிய சந்திப்பு படங்களூம் உண்டு


Photobucket

Photobucketஅதென்னப்பா போட்டோ எடுக்கும்போது மட்டும் டம்ளரையும் சரக்கையும் மறச்சுகிட்டிங்க ரெண்டு பேரும்.Photobucket என்ன கொடுமை சார் !!!

Tuesday, January 15, 2008

@ 8:31 PM எழுதியவர்: வரவனையான் 8 மறுமொழிகள்


மருதைக்கு டான்சு பாக்க போன
பாப்புபுள்ளை ஆட்டகாரியை கூட்டியாந்து
ஒம்போது புள்ளை பெத்துட்டு ந்தா... அங்கன நிக்கிறாரு

டான்சுகாரிக்கு பொறந்த புள்ளையில ஒன்னு
மந்திரியாச்சு.பொண்டாட்டிக்கு பொறந்த
மவேன் கணக்கு வேளைக்கு போயி சிட்டா அடங்கல்
தூக்கிட்டு திரியிறான்

இவ என்னைக்கு கெழடு தட்டுவாளோன்னு ஊருல
உள்ள குடியான பொம்பளைக கரிச்சு கொட்டுற
சுறும்பாயி வெட்டி வெட்டி கொடம் தூக்கி தண்ணிக்கு போறா
"எக்கோய் அடுத்த வாளி நான் இறைக்கிறேன் நம்ம எல்லாம் சீலைக்காரி
கும்புடுறுவுக தானே"ன்னு சொன்னவள தோளுல தாவாங்கொட்டயால இடிச்சி
பேசாம போறா பாக்கியத்தம்மா

பனமரத்துல பாதியாய் நிக்கிறாரு பாருங்க
உய்யகோண்டாத்தேவரு ... பச்ச புள்ளையாட்டம். தண்ணி
சீட்டு பொம்பளை வெத்தலை பொடின்னு எந்த கழுதையும் கெடையாது
என்னா தெனம் வண்டிகட்டி மணப்பாறை போயி சீட்டு மட்டும் ஆடுவாரு அம்பூட்டுதான்

"என்னாடா இது ஒவ்வொரு மொடக்குலையும் ஒரு வண்டு வருது"
சாணார்தோப்பில் பழநிச்சாமியிடம் சலிச்சுகிறாரு வேலுச்சாமி
"சும்மா குடிங்க தொரை என்னமோ விட்டைமீனாமே அது இதுதான்" மீச
பொசுங்கினா பொசுங்குதுன்னு பீடியை ஒட்ட இழுக்குறாரு பழநிச்சாமி

வேட்டி கிழிய குசுவ போட்டுபுட்டு " ஒரு தாயம்"னு சாவடில
உருட்டுறாரு ரெங்கசாமி ரெட்டியாரு. மயிலம்பட்டி
பங்காளி கோமணம் பெருசு வீட்டுல காயிற ஊரரிஞ்ச
ரகசியத்த அந்தாளூ செவுட்டுகாதுல யாரு சொல்லுறது

Monday, January 14, 2008

@ 6:25 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்வர்றீகளா மாடு பிடிக்க போலாமா .... தடையை மீறி ? :)


உலகத்தமிழரை ஓரணியில் இணைக்கின்ற வலிமை தமிழ் மொழிக்கு அடுத்த படியாய் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு உண்டு.பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்றினைப்போல் இது தமிழரின் மே தினம் ஆகும். ஒரளவுக்கு நல்ல மழை பெய்துள்ளது. இதன் மகிழ்ச்சி இந்த பொங்கல் விழாவில் தமிழக்த்தில் தெரியும். கலைஞரின் தை 1 இனி தமிழ்ப்புத்தாண்டு என்கிற அறிவிப்பு சர்க்கரை பொங்கலாய் இனிக்கிறது. சமாதான உடன்படிக்கையை கிழித்து குண்டி தொடைத்து கிழே போட்டிருக்கும் சிறீலங்காவை "காந்திதேசம்" இன்னும் சும்மானாச்சிக்கு கூட கண்டிக்காத வேளையில் "பிரபாகரன் எங்கள் வழிகாட்டி" எனும் பாடல் தென்கிழக்கே கேட்கதுவங்கிருக்கிறது. ஓயாத அலைகள் 3 போது யாழ்ப்பாணம் பிடிபடப்போகும் வேளையில் கொச்சிலிருந்து தன் போர்கப்பல்களை கன்யாகுமரி அருகே கொண்டு சென்று பயிற்சி என்கிற போர்வையில் "அழுத்தம்" கொடுத்த இந்திய ராஜ தந்திரங்கள் வரும் காலத்தில் இருக்காது என்று நம்புவோமாக .

இந்த பொங்கலில் இருந்து பஞ்சாயத்து போர்டு லெவல் பிரச்சினைகளுக்கூட புரட்சிப்புயல் தலைமை ஏற்று "களம்" காண மாட்டார் என்றும் நம்புவோமாக.


அது என்ன எழவோ தெரியலை இந்திய "உச்சா"நீதிமன்றங்கள் கொஞ்சகாலமா தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் கசப்பு உணர்வுகளை தன் தீர்ப்புகளின் மூலம் ஊட்டிக்கொண்டிருக்கு. இது எதுல போயி முடியுதோ தெரியலை. தமிழ்ப்பண்பாட்டு விதயமான ஏறுதழுவலில்( ஜல்லிக்கட்டு) கைவச்சுருக்கு இப்போ புதுசா. இல்லாத ராமன் கட்டியதா சொல்லுற பாலத்தை மக்களின் உணர்வுகள் என்கிற காரணம் சொல்லி நிறுத்தி வச்ச மன்றம் இதை எந்த கோணத்துல முடிவெடுத்துச்சோ தெரியலை.இப்ப்தைக்கு ம்ம்ம்ம் கொட்டிட்டு அடுத்த வேளையை பார்க்கலாம்.

பல்வேறு விடியல்களையும் புதிய வாழ்வையும் இந்த தை அளிக்கும் என்கிற நம்பிக்கையுடன் பாவேந்தரின் கவிதை ஒன்றின் துவக்க வரிகளான " பொங்கல் அமிழ்துதான்; பொய்யில்லை" என்று சொல்லி தமிழினத்துக்கும் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் வாழ்த்துகளை
சொல்லிக்கொள்கிறேன்.
Tuesday, January 01, 2008

@ 2:27 PM எழுதியவர்: வரவனையான் 7 மறுமொழிகள்
ஃபுல் மப்பில் பிளாட்டாகி கிடக்கும் இந்த அக்காக்கும் சேர்த்து