Wednesday, November 26, 2008

@ 12:38 PM எழுதியவர்: வரவனையான்நாளொரு போராட்டம் பொழுதொரு ஆர்ப்பாட்டம் மணிக்கொரு போர்ப்பாட்டு என

தாய்த்தமிழகம் துடித்து நிற்கிறது. உண்ணாவிரதம் நடைபெறாத ஊரில்லை கண்டன

பேரணிகள் காணாத சாலைகளில்லை என்றே இருக்கிறது தமிழ்நாடு. ஊடக வேசிகள் தன்

சரசரக்கும் சேலைகளிட்டு செய்திகளை மறைத்தாலும் தமிழுணர்வு மங்காத தமிழர்கள்

வீதிகளில் இறங்கி தங்கள் உணர்வுகளை பதிவு செய்தே வருகின்றனர்.

பெருநகரம் துவங்கி

மாநகரம்,நகரம்,பேரூராட்சிகள்,ஊராட்சிகள்,கிராமங்கள் என பட்டி தொட்டி எங்கு ஒலிக்கிறது

ஈழத்தமிழனுக்கு ஆதரவான தாய் தமிழினத்தின் குரல். இது இதுவரை இல்லாத அளவு, இது

வரை காணாத அளவு கரை தாண்ட போகும் வெள்ளத்திற்கு இணையாய் பொங்கி

பிரவாகமெடுத்து ஓடுகிறது. "எமக்காகவும் பேசுங்களேன் " என்று தாய்மண்ணிடம் கேட்ட

ஈழத்துகுரலுக்கு உமக்காக பேசாமல் எமக்கிந்த மொழி எதற்கு என புறப்பட்டிருக்கின்றனர்

தமிழ்மக்கள்.

பழத்தட்டு வியாபாரிகள் சங்கமானாலும் சரி கிராம கோயில் பூசாரிகள்

சங்கமாயினும் சரி அதன் உறுப்பினர்கள் அதன் தலைமைகளை " நாம் எப்போது போராட

போகிறோம், இப்போது போராடாமல் பின் எப்போது போராட போகிறோம் என பிடறியை

உலுப்பி தொப்புள் கொடி உறவுகளின் துயரினை போக்க தங்களால் இயன்றளவு பணியாற்றி

கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு நீட்சியாக தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் நடை

பெற்ற ஈழத்தமிழருகான நிவாரண நிதிக்கு ஆதரவு திரட்டிட தமிழகமெங்கும் பிரச்சார பயணம்

மேற்கொண்டிருக்கும் தோழர்கள் மருத்துவர்.எழிலன் தலைமையில் திண்டுக்கல் வந்திருந்தனர்.

புயல் கோடியக்கரை அருகே கரையைக்கடப்பதால் கடும் காற்றும் பெருஞ்சாரலும் நகரினை

மையமிட்டிருந்தாலும் அந்த நிலையிலும் மக்கள் பிரச்சார பயணத்தினருக்கு ஆதரவு தரும்

வகையில் கூடி நின்று அவர்களின் ஊரையை செவிமடுத்தனர்.வாகனங்களில் சிங்கள இனவெறி ராணுவத்தினரின் கொடுஞ்செயலால் பலியான தமிழ்மக்களின்

புகைப்படும் ஒட்டபட்டிருந்தை பார்த்த இரு மூதாட்டிகள் "து*****க்குடிக்கி" என்று துவங்கிய

தூசன அர்ச்சனைகளை சிங்களவன் கேட்டிருந்தால் தூக்கு மாட்டி செத்திருப்பான்.


video
video
video
video

7 மறுமொழிகள்:

 1. நன்றிகள் நன்றிகள் நன்றிகள்..

 1. நல்ல தொகுப்பு

 1. தோழர்களே உங்களால் பெருமையுற்றோம்.

 1. 9:53 PM  
  எல்லாளன் said...

  தமிழக உறவுகளுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்

 1. வீடியோ இப்போது தான் பார்த்தேன்.... எமக்காம பேசவும் உறவுண்டு என மனம் ஆறுதல் அடைகின்றது..

 1. காலத்தின் தேவை உணர்ந்த குரல் வரவேற்கத்தக்கது!

 1. 11:11 PM  
  Anonymous said...

  Romba nanringa anna....