Monday, November 10, 2008

@ 6:50 PM எழுதியவர்: வரவனையான்

From திண்டுக்கல்






திண்டுக்கல் ஈழத்தமிழர் துயர்துடைப்பு குழுவின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர் ஆதரவு அமைதிப்பேரணி மக்களின் பேராதரவோடு நடைபெற்றது. திண்டுக்கல் குமரன் பூங்காவில் துவங்கி தந்தை பெரியார் சிலை அருகே நிறைவுறும் என அறிவிக்கபட்டிருந்த பேரணி காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் கணக்கிட்டு இருந்த எண்ணிக்கையினை விட பலமடங்கி உயர்ந்து பெரும் பேரணியாய் நகர மக்களிடையே இன்றைய ஈழ மக்களின் துயரை கொண்டு செல்லும்விதமாய் தனது நோக்கத்தில் வெற்றியடைந்தது. எந்த ஒரு அரசியற்கட்சியினையும் அழைக்காமல் தமிழ் உணர்வாளர்கள் யாராகிலும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கபட்டிருந்தது, இந்நிலையில் ஆசிரியர்கள் மானவிகள் கிருத்துவ கன்னிமார்கள் என பல தரப்பினரும் தன்னார்வத்தோடு கலந்து கொண்டு தொப்புள்கொடி உறவுகளின் விழிநீர் துடைக்க தாய் தமிழகத்தின் கைகள் நீளாது என்ன செய்யும் என பதிவு செய்தனர். சற்றேறக்குறைய 8 கிலோ மீற்றர் தொலைவு நிகழ்ந்த பேரணியில் ஒழுங்கு குலையாது தாய்மார்கள் நடந்து வந்தனர். 300 நபர்களின் எண்ணிக்கையை எதிர்பார்த்தாகவும் ஆனால் தமிழுணர்வோடு 1000 பேர் கலந்துகொண்டனர் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் துரை.சம்பத் தெரிவித்தார்.










video








video

5 மறுமொழிகள்:

  1. தமிழன் என்றும் தமிழன் தான். இந்த அவசரக்யுகத்திலும் அவனது ஈரம் இன்னும் காயவில்லை.

  1. பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள்..

  1. சந்தோஷமாயிருக்கிறது....

    பதிவுக்கு நன்றிகள்.

  1. விடியோ, போட்டோக்களுடன் கூடிய நிகழ்வு வர்ணனைக்கு நன்றி!

  1. எங்களிற்காய் குரல் கொடுக்கும் உறவுகளிற்கும். அந்தச்செய்தியை அறியத்தந்த வரவனையானிற்கும் நன்றிகள்.