Tuesday, October 21, 2008

@ 1:32 PM எழுதியவர்: வரவனையான்


அது ஒரு பொதுவுடமை கட்சியின் மாவட்ட அலுவலகம், உள்ளே நுழைந்தவுடன் பெரிதாய் லெனின் மக்களுடன் உரையாற்றும் ஓவியம், இடது பக்கம் ஸ்டாலின் சிரிப்புடன்.

வாடா ! நேத்திகே வாரேன்னு சொன்ன என்றபடி "போண்டா" கணேசன் அழைத்து போய் நாற்காலியில் இருக்க சொல்லிவிட்டு கொஞ்சம் பொறு நகர் மாநாடு நடந்துட்டு இருக்கு ஒரு 10 நிமிசத்துல முடிஞ்சுடும்ன்னு சொன்னான்.

"நகர் மாநாடு" முடிஞ்சு 7 பேர் வெளியே வந்தனர். "தோழர், அவங்க உங்களுக்கு வேண்டியவங்க தனியா "பார்த்துட்டாங்கன்னு" முதல்லே சொல்லிருக்கலாம்ல" என்றபடி கெழட்டு காம்ரேட்டுகள் கலைந்து போக போண்டா அழைத்தான்.

நகர பொறுப்பில் உள்ளவரையும் , எங்கள் தொகுதி ச.ம.உ'வையும் சந்திக்க போயிருந்தேன். குறும்பட இயக்குநரும் வலைப்பதிவருமாகிய சோமிதரனின் "எரியும் நினைவுகள்" படத்தை ஒரு ஒருங்கமைந்த திரையிடலுக்கு எற்பாடு செய்திட இந்த சந்திப்பு.

வாங்க, நல்லாருக்கிங்களா, தோழர் இவரை தெரியுதா இறந்து போனாருல்ல மாவட்ட துணைசெயலாளர் அவரு பையன் என்றபடி என்னை ச.ம.உ'வுக்கு அறிமுகம் செய்து வைச்சார்.

ஆமா தோழர், நீங்க அந்த பெரியார் தி.க சம்பத்து கூடத்தானே சுத்துவிங்க

ஆமாங்க சம்பத்தண்ணன் தாமரைக்கண்ணன் மட்டுமில்லைங்க எல்லாரோடையும்தாங்க சுத்துவேய்ன்.

தோழர், இவரு எதோ சி.டி கொடுத்திருக்காராம் மா.மு.ச.மு சார்பில அதை திரையிடனுமாம்' என்று ச.ம.உ'விடம் சொல்லிவிட்டு


எது பத்தின படங்க இது ! என்றார்

யாழ் நூலக எரிப்பு சமந்தமா வெளி வந்திருக்கிற ஒரே ஆவன படம்ங்க இது - நான்

ஓ, ஏங்க தோழரு இந்த பிரச்சினை எப்பங்க முடியும், தெனம் செத்துகிட்டுதாங்க இருக்காங்க அந்தூருல. ஒரு முடிவே கெடையாதா என்றவரை ச.ம.உ இடைமறித்து


ஜெவிபி'ன்னு நம்மள மாதிரி ஒரு அமைப்பு அங்க இருக்குல்ல தோழர், அவங்க எம்.பி ஒருத்தரை கூட நம்ம தோழர். இந்து ராம் கூட ஒரு கூட்டத்தில பார்த்திருக்கேன். விடுதலைப்புலிகள் பாசிஸ அடிப்படையில செயல் படுறாங்கன்னுதான் நினைக்கிறேன், இல்லைங்களா ? என்றார் என்னைய பார்த்து

ம்ம்ம் அதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லைங்க இது பக்கசார்பில்லாம எடுக்கப்பட்ட படம், கண் எதிரிலையே ஒரு வரலாறு அழிக்கப்பட்டதுக்கு சாட்சிங்க - இது நான்

என்னங்க அஜித் படம் மாதிரி சொல்லிட்டுருக்கிங்க - தேவையற்ற "சோக்கடித்தார்" தோழர்

இல்லைங்களா பின்னே, 90,000 புத்தகங்கள் எரிக்கபட்டுருக்குங்க 15000 பாதுகாக்கபடவேண்டிய ஓலைச்சுவடிகள் எரிக்கப்பட்டுருக்குங்க அது பற்றிய ஆவணம் தாங்க இந்த குறும்படம்.

நீங்க "இஸ்கரா" படிக்கிறதில்லையா தோழர், அதுல எல்லாமே வந்துருமே. வெனிசூலாவிலா சாவேஸ் குசு போட்டாக்கூட "இஸ்கரா"ல டர்ர்ர்ர்ர்ர்ருன்னு கிழியும் தெரியுமா ? ஆமா தோழர் இந்த லைப்பெரிரி எரிச்சது எப்போ ? நான் ரெகுலரா படிச்சுட்டுதான் வாரேன் தோழர் இந்த சிலோன் மேட்டரு எல்லாம் என் கண்ணுல படலையே.... சரி கொடுத்திட்டு போங்க படத்த பாத்துட்டு சொல்லியணுப்புறோம்.

சரிங்க நா வரேன், அப்புறம் தோழர் ஒரு விஷயம். புலிகள் பாசிஸ்ட்டுகள்ன்னு சொல்லுற அளவுக்கு அரசியல் தெரியுறதுக்கு வாழ்த்துக்கள். இந்த யாழ் நூலகத்த எரிச்சு 25 வருசமாச்சு மொதல்ல அதை தெரிஞ்சுக்குங்க.
**********************************************************************************


உங்களை மாதிரி ஆளுங்க இருக்கிறவரைக்கும்

மசுர கூட புடுங்க முடியாது

8 மறுமொழிகள்:

 1. 5:32 PM  
  தோழருக்கு தோழர் said...

  என்னது யாழ் நூலகத்த எரிச்சிட்டாங்களா.. எப்போ

 1. பதிவை படித்த பின்னர் மறுமொழி வரும்...

 1. புரட்சிகர பின்னூட்டக்கயமை

 1. தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கின்றோம்...

 1. 10:21 AM  
  தோழரின் பகைவன் said...

  பதிவு அருமை.
  தலைப்பு அதைவிட அருமை. பதிவின் இறுதியில் வந்த தலைப்பை தான் சொன்னேன்.

 1. 1:48 PM  
  Anonymous said...

  நன்றி

 1. எல்லாத் தோழர்களும் நல்லக்கண்ணு இல்ல.

 1. அய்யகோ!
  நீங்க அவர்களிடம் அதிகமாக எதிர்பார்த்துவிட்டீர்களோ என்று தோனுது. எல்லா அரசியல் வாதிகளும், வாசிப்பு அனுபவம் உள்ளவர்கள் அல்லர். பாவம் அவர்களுக்கு கேரளாவுக்கும்,மேற்கு வங்கத்துக்கும் போராடவே நேரம் பத்தவில்லை. இதுல தமிழர்களுக்கு எப்படி நேரம் ஒதுக்குவது.