Thursday, October 09, 2008

@ 10:36 AM எழுதியவர்: வரவனையான்

குயிலியை மறக்க முடியுமா ! தமிழ் குலம் உள்ளவரையில் அவர்களின் தியாகமும் வீரமும் எந்நாளும் போற்றுதலுக்குரியதல்லவா. இன்றைக்கு 228 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளையரின் அடிமைத்தளையறுக்க வாள் பிடித்து களம் கண்ட வேலு நாச்சியாரின் மெய்காவலராய் இருந்தவர்தாம் குயிலி.

" பகையே எம்மை மண்ணில் புதைத்தாய் எம் மண்ணை எங்கே புதைப்பாய்"
என்கிற உணர்ச்சி வரிகளை காசி ஆனந்தனை பாட செய்த செம்மணி படுகொலைகளை புரிந்து கணக்கில்லா தமிழர்களை உயிருடன் புதைத்து எக்காள சிரிப்புடன் வலம் வந்து கொண்டிருந்த இன எதிரியை "கடவுள் மறந்தாலும் , கரும்புலிகள் மறப்பதில்லை" என்கிற வரிகளை உண்மையாக்கி களம்காணும் புலிப்போத்துகளின் ஆதித்தாயல்லவா குயிலி.

8 ஆண்டுகள் மறைவு வாழ்க்கைக்கு பின் தொடர்ந்த தாக்குதல்களில் வெள்ளையரை விரட்டி தாய்நிலத்தை மீட்டு வெற்றி வாகை சூடிவரும் வேளையில் இன்னும் சிவகங்கையை மட்டுமே மீட்க படவேண்டியிருந்தது. மீட்டால் மீண்டும் நாடு சமைத்துவிடலாம். சிவகங்கைக்கோட்டையோ காவல் பலமிகுந்தது. கோட்டைக்குள் யாருக்கும் அனுமதியில்லை மரபுவழி போருக்கும் வாய்ப்பில்லை. வேலுநாச்சியாரிடம் போதிய ஆட்களில்லை. ஒரு கெரில்லா வகை தாக்குதல் மட்டுமே சாத்தியம். அதே வேளை கோட்டையையும் கைப்பற்றியாக வேண்டும்.

அப்போது ஒரு செய்தி வருகிறது கோட்டைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை விஜயதசமி அன்று தரிசிக்க பெண்களை மட்டும் அனுமதிக்க வெள்ளையர் முடிவு செய்துள்ளதாக. வேலு நாச்சியார் இறுதி தாக்குதலுக்கு ஆயுத்தமாகிவிட்டார். அவர்களுக்கு ஒரே பிரச்சினை கோட்டை மேலிருக்கும் துப்பாக்கி காவலர்களும் அவர்களுக்கு கரிமருந்தும் தோட்டாவும் வழங்கும் ஆயுத தளவாட அறையுமே. ஆனால் இதை விட்டால் வேறுவாய்ப்பில்லை என்பதே தளபதிகளாய் இருந்த மருது சகோதரர்களின் கருத்து. விஜயதசமி காலை எளிமையான தோற்றத்தில் வேலுநாச்சியாரும் அவரை பின்பற்றி குயிலியும் சிறு பெண்கள் படையுடன் உள்ளே நுழைந்து கோவிலருகே சென்று அம்மனை வணங்கியவாறே முதல் தாக்குதலை தொடுத்தனர். கடும் சண்டை துவங்கியது. களமாடிய அரசி குயிலியை தேடுகிறார். காணவில்லை சற்று நேரத்தில் மருது சகோதரர்களின் படை உதவிக்கு உள்ளே நுழையுமுன் கோட்டை சுவற்றிலொரு பெண் சீலையெல்லாம் நெய்யினை ஊற்றிக்கொண்டு ஆயுத கிடங்கினில் குதித்தாள். வெடித்து சிதறியது கிடங்கு. வெள்ளையர் ஓட வென்றது தமிழ்ப்படை.

தமிழ்க்குலத்தின் முதல் தற்கொடைதாரிதான் வீரமறத்தி குயிலி. அவரின் நினைவுநாள் இன்று.


*************************************************************************************

அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறான் சோ. ஊடகமெல்லாம் பி.ஜெ.பி கூட்டணி குறித்து பேச போனார் என்றே செய்தியடிக்கிறது. ஆனால் உண்மையில் இல்லாத குடுமியை ஆட்டிக்கொண்டு அது ஓடியது ஜெயலலிதாவின் அன்மைய அறிக்கையை கண்டுதான். ஜெயலலிதா ஒரு கடும்போக்காளர், அவரின் பலநடவடிக்கைகள் எனக்கு ஏற்பில்லாதவைதாம் இருப்பினும் அவர் ஏதேனும் ஒரு முடிவெடுத்தால் திடமாய் இருப்பார் என்று உலகறியும் அது சரியானாலும் தவறானாலும். ஈழப்பிரச்சினையில் ஜெயலலிதா அம்மையாரின் அன்மைய அறிக்கை தமிழ்மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவரின் மனமாற்றம் ஈழப்பிரச்சினைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் நன்மையே.

இந்திய பார்ப்பனிய அதிகார வர்க்கதின் நைந்து போன குரலான சோ அலறியடித்து ஒடுகிறான். முதலில் சொல்லிப்"பார்ப்பான்" பிறகு மிரட்டிப்பார்ப்பான், நாமும் பார்ப்போம் சோவின் மிரட்டலா அல்லது ஜெவின் பிரபல "அசட்டு துணிச்சலா" என்று.

22 மறுமொழிகள்:

 1. நீங்க என்ன நினைசிங்களோ அதேதான் :P  பின்னூட்ட மாறிமொள்ளத்தனம்தான்

 1. தமிழ்க்குலத்தின் முதல் தற்கொடைதாரிதான் வீரமறத்தி குயிலி. அவரின் நினைவுநாள் இன்று.


  pathindhamaikku nandri.

 1. தக்க சமயத்தில் மீண்டும் களத்தில் குதித்திருக்கும் அண்ணன் வரவனையான் வாழ்க!

 1. குயிலி - புதிய தகவல் - தரவிற்கு நன்றி

 1. //சயந்தன் said...
  குயிலி - புதிய தகவல் - தரவிற்கு நன்றி//
  சயந்தன், புலம் பெயர் மக்கள் குயிலியின் ஈகைத்திறனை நாடகமாய் மாவீரர் நிகழ்வுகளின் போது நடத்திவருவது உங்களுக்கு தெரியாதா ?

 1. //தமிழ்க்குலத்தின் முதல் தற்கொடைதாரிதான் வீரமறத்தி குயிலி. அவரின் நினைவுநாள் இன்று.
  //

  சின்ன வயதில் இவரில் கதையை அடிக்கடி கேட்டிருக்கின்றேன்.. எம்மினம் எப்போதும் எதிரிக்கு தலை குனியாது என்பதை அன்று அவர்கள் நிரூபித்தார்கள்..இன்று எம் உறவுகள் நிரூபிக்கின்றார்கள்..

 1. ஐயா வரவணையான், சோ ஒரு மூத்த பத்திரிக்கையாளர் மேலும் உங்களை விட வயதில் பெரியவர். உங்களுக்கு அவருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். அல்லது உங்களுக்கு அவரை பிடிக்காதிருக்கலாம். ஒரு பொது தளத்தில் எழுதும் பொது அடிப்படை நாகரிகத்தை கடைபிடிக்கவும். அதுதான் உங்கள் வளர்ச்சிக்கு ஆரம்பம். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் இரண்டொரு வருடங்களுக்கு முன் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கலைஞர் அவர்களே ஒரு கேள்விக்கு பதிலில் சோ என்னுடைய சிறந்த நண்பர் என்று கூறியுள்ளதை நினைவில் கொள்ளவும்.

 1. 3:58 PM  
  அப்படி_போடு said...

  வரவணை,
  குயிலி பற்றிய தகவலுக்கு நன்றி!

  நான் கூட முன்னாள் கவர்ச்சி நடிகை பற்றித்தான் எழுதியிருப்பீர்கள் என நினைத்தேன். :) (அவரும் அவாள் தான்)

  ஜெ யின் அறிக்கை அவரின் உண்மையான் உளப்பூர்வமானதென்றா நினைக்கிறீர்கள்?

  //நாமும் பார்ப்போம் சோவின் மிரட்டலா அல்லது ஜெவின் பிரபல "அசட்டு துணிச்சலா" என்று.//

  மிரட்டல் பலித்துவிட்டதே :)

  காஷ்மிர் பண்டிட்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை இங்கே விட்டிருக்கார் பாருங்க. சங்க பரிவாரமெல்லாம் தோத்துடும் :)

 1. 4:02 PM  
  அப்படி_போடு said...

  இந்த சந்திப்பு என்று நடந்த்தது?

 1. //அப்படி_போடு said... //  எக்கோய் நீயாக்கா இது

  //இந்த சந்திப்பு என்று நடந்த்தது?//  ரெண்டு நாளைக்கு முன்ன

 1. ///ஐயா வரவணையான், சோ ஒரு மூத்த பத்திரிக்கையாளர் மேலும் உங்களை விட வயதில் பெரியவர். உங்களுக்கு அவருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். அல்லது உங்களுக்கு அவரை பிடிக்காதிருக்கலாம். ஒரு பொது தளத்தில் எழுதும் பொது அடிப்படை நாகரிகத்தை கடைபிடிக்கவும். அதுதான் உங்கள் வளர்ச்சிக்கு ஆரம்பம். ///

  அன்புள்ள ராஜாராம் சார். இனிமேல் இவர் வளர்வதற்கு வாய்ப்பில்லை என்றே யாம் கருதுகிறோம்...அதனால் தானோ என்னவோ, குட்டபுஸுக்கி என்று ப்ளாக் வைத்துள்ளார்...எதற்கும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பேசவும்...


  ////நினைவில் கொள்ளுங்கள் இரண்டொரு வருடங்களுக்கு முன் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கலைஞர் அவர்களே ஒரு கேள்விக்கு பதிலில் சோ என்னுடைய சிறந்த நண்பர் என்று கூறியுள்ளதை நினைவில் கொள்ளவும்.///

  நீங்களும் இரண்டொரு வருடங்களுக்கு முன் டாக்டர் அய்யா அம்மையாரை அன்பு சகோதரி என்று கூறியதை நினைவில் கொண்டு கூட்டணிக்காக வெயிட் செய்யவும்....

 1. பின்னூட்ட டாபர்த்தனம்...

 1. //அதுதான் உங்கள் வளர்ச்சிக்கு ஆரம்பம்.//


  ராஜாராம் அய்யா ! முன்ன விட இப்போ கொஞ்சம் Civilized ஆகிட்டதாலத்தான் இப்படி எழுதிருக்கேன். கொஞ்சம் பின்னோக்கி போயி என் பின்னூட்டத்தையெல்லாம் பாருங்க.

  சோ வை மரியாதையாக பேசித்தான் நான் வளரனும் என்றால் நான் இன்னும் கொஞ்சம் டரியல் ஆகிவிடுகிறேனே. அந்த "வளர்ச்சி" வேண்டாமே தல

 1. நான் வலையுலகத்துக்கு புதிது.. மேலும் நான் பிராமணன் இல்லை.. ஆமாம் அது என்ன குட்டபுசுக்கி..

 1. நான் வலையுலகத்துக்கு புதிது.. மேலும் நான் பிராமணன் இல்லை.. ஆமாம் அது என்ன குட்டபுசுக்கி.. Moreover I express my comment in general not for any specific individual. Thank you.

 1. //Rajaraman said...
  நான் வலையுலகத்துக்கு புதிது.. மேலும் நான் பிராமணன் இல்லை.. //


  அஸ்கு புஸ்கு பாஸ்வேர்டு தப்பு ! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

 1. வீரமங்கை வேலு நாச்சியாரின் அருமை மெய்காவலர் குயிலியைப் பற்றி மிகச் சிலருக்குத்தான் தெரியும். அவரது தியாகம் அளவிட முடியாத ஒன்று. அதை எல்லோருக்கும் தெரியப்படுத்திய செந்தி அண்ணாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  செயலலிதாவை நம்பி இவ்வளவு விரைவில் பாராட்டிவிட வேண்டாம். விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வருவதால் கூட அப்படி பேசியிருக்கலாம்.

 1. :)))))))))

  பாஸ்வேர்டு தப்பு தப்பு...

 1. குயிலி எனக்கும் புதிய தகவல்தான் பகிர்ந்தமைக்கு நன்றி

 1. ஐயா வரவணையான், கலைஞர் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் மேலும் நம் அனைவரையும் விட வயதில் பெரியவர். கொண்டைகளுக்கு அவருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். அவர்களுக்கு அவரை பிடிக்காதிருக்கலாம். இணையம் போன்ற ஒரு பொது தளத்தில் எழுதும் போது அடிப்படை நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும். அதுதான் அவர்களது வளர்ச்சிக்கு ஆரம்பம். அவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். பண்ணிரண்டு வருடங்களுக்கு முன்பு சோ ராமசாமி கடற்கரையில் கலைஞருக்கு அடித்த ஜால்ராவை.

 1. குயிலியின் நினைவுநாள் இம்மாதம் ஒன்பதாம் நாள்.
  பத்தாம் நாள் 'தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்'.
  என்ன ஒற்றுமை பார்த்தீர்களா?

  தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் வீரச்சாவடைந்த முதலாவது பெண் போராளி 2ஆம். லெப். மாலதி வீரச்சாவடைந்த நாளே தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக நினைவுகூரப்படுகிறது.

  10-10-1987 அன்றுநாவற்குழியிலிருந்து கோப்பாய் நோக்கி முன்னேறிய இந்திப் படையினருடனான மோதலில்தான் மாலதி வீரச்சாவடைந்தார்.

  --------------
  இடுகைக்கு நன்றி.

 1. வன்னியன், மாலதி அக்கா குறித்த செய்திகளுக்கு நன்றி.அவரின் புகைப்படத்தினை அருச்சுனா இணையத்தில் பார்த்திருக்கிறேன்.

  அவர் தமிழகத்தில் பயற்சி எடுத்தவர் என்றும் கேள்வியுற்றிருகிறேன்.