Tuesday, September 30, 2008

@ 8:43 PM எழுதியவர்: வரவனையான்


எங்கயிருந்துதான் இப்படி யோசனைலாம் வருதோ தெரியலை... உண்மையாவே ஒக்காந்து யோசிப்பாங்களோ. மேட்டர் ஒன்னுமில்லை. நம்ம "இம்சை மந்திரி 13ம் பவர்கேசி" ( சோர்ஸ் : லூசுப்பையன், ஆ வி ) புண்ணியத்துல 90 களீன் துவக்ககால யாழ்ப்பாணம் மாதிரி ஒட்டுமொத்த தமிழ்நாடும் மாறிகிட்டு வருது. இதுல ஆட்டைய போடுறவனுங்களோ செம குஜாலா பப்பரப்பான்னு ஜன்னல திறந்து போட்டு வீராச்சாமிய திட்டிகிட்டே படுத்துருக்கிறவன் வீடா பார்த்து குச்சி வழியா ஹேங்கர்ல தொங்குற சட்டையில ஐம்பதுகாசுகூட மிச்சம் வைக்காம லவட்டிருறானுங்க. எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் வீட்டு ஜன்னல் வழியா குச்சி விட்டு காசு எடுக்க பாத்துருக்கானுங்க சட்டை பையில இருந்ததோ 40 ரூவா, ஆனாலும் இவன் கவலையா இருந்தான் ஏண்டான்னு கேட்டா திருடவிட்ட குச்சி முனையில தார் தடவியிருந்துருக்கானுங்க. வோன் ஹுசைன் சேர்ட் 2300 ரூவாயாம் கே..கொள்ளேன்னு அழுவ நம்மாளு.

இது பத்தாதுன்னு இன்னோன்னு பண்ணிருக்கானுங்க பாருங்க அது இத விட கொடுமை . அறிவிக்கபட்ட மின்வெட்டு நடமுறைக்கு வந்த நாலாம் நாளூ காலையில 6 - 9 சாயங்காலம் 6 - 7 ராத்திரி 11 - 12ன்னு கரைக்ட்டா கட் பண்ணிட்டு இருந்தாய்ங்களா. லகுடபாண்டிக ஐடியா போட்டு ஒரு 400 மீட்டருக்கு வயர வெட்டிட்டு போயிட்டானுங்க இன்னைக்கு அதோட சந்தை மதிப்பு3 1/2 லட்சமாம். தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேசனுக்கு வேற வேலையா போயிருந்தப்போ ஜட்டியோட ஒக்கார வச்சு வெளுத்துகிட்டு இருந்தாய்ங்க கம்பிய அறுத்தவனையும் வாங்கின கடைக்காரனையும் அப்போ கிடைச்ச ஸ்கூப் இது. "ஐடியா மணி"ங்களை ரொம்ப அடிக்காதிங்கன்னு கேட்டுகிட்டேன்.

16 மறுமொழிகள்:

 1. ஏனுங்க... இது பின்னூட்ட கயமைன்னு வேற சொல்லோனுமாக்கும்

 1. ஏனுங்க... இது பின்னூட்ட கயமைன்னு வேற சொல்லோனுமாக்கும்

 1. 9:16 PM  
  Jay said...

  ஹிஹிஹி :)

 1. வாங்க ஜெய்.. வருகைக்கு நன்றி

 1. பின்னூட்ட மொள்ளமாரித்தனம்னு வேற சொல்லுனுமாக்கும் ம்கும்

 1. Thala Ennanga idhu ippudi ezhudhi puttinga? oru velai neenga vaakapadaliyo?

 1. இங்கு அடிக்கப்படும் கும்மி ஏன் தமிழ்மணத்தில் வருவதில்லை ????

 1. //வரவனையான் said...
  இங்கு அடிக்கப்படும் கும்மி ஏன் தமிழ்மணத்தில் வருவதில்லை ????
  //

  ஆடிக்கொருவாட்டி அமாவசைக்கொரு வாட்டி வந்து கும்மியடிச்சா இப்படித்தான் :-)

 1. 2:14 PM  
  மொள்ளமாரி said...

  ஏனுங்க... இது பின்னூட்ட கயமை, மொள்ளமாரித்தனம்னு வேற சொல்லோனுமாக்கும்

 1. தோழர்!

  சற்று நேரம் இங்கே இளைப்பாறலாமா? "இம்சை மந்திரி 13ம் பவர்கேசி" புண்ணியத்தில் பவர் கட். ஏசி வேலை செய்யவில்லை :-(

 1. This comment has been removed by the author.
 1. // லக்கிலுக் said...
  தோழர்!

  சற்று நேரம் இங்கே இளைப்பாறலாமா? "இம்சை மந்திரி 13ம் பவர்கேசி" புண்ணியத்தில் பவர் கட். ஏசி வேலை செய்யவில்லை :-( //

  "எவ்வளவோ பண்ணியாச்சு... இத பண்ணமாட்டோமா என்னா.."


  :))))))))))))))))

 1. 2:44 PM  
  சினேகா உல்லல் said...

  தோழர்!

  தோழர் ஜட்டீக்கடை சனிக்கிழமை சென்னை வருகிறாரே? நீங்களும் கும்மி ஜோதியில் ஐக்கியம் ஆகுவீர்களா?

 1. பெங்களூர் ரூமை கேன்ஸல் பண்ணவைத்துவிட்டாரே இந்த பொட்டி ?

 1. //இங்கு அடிக்கப்படும் கும்மி ஏன் தமிழ்மணத்தில் வருவதில்லை ????/

  தமிழ்மணத்துக்கு உங்க மேல் கோவம் போல.. :P

 1. 7:41 PM  
  காட்டுக்குதிரை said...

  வாக்கப்படுறத கண்டுபிடிச்ச நாதாறி ஜெயகாந்தன் ஸ்டேட்மண்டை பாருங்க தோழர்.

  //காமராஜரை மிகப்பெருமையாகப் பேசுவீர்கள்.இன்றைக்கு இருக்கிற தலைவர்களில் அவர் அளவுக்கு பெருமைக்குரியவராக யாரையாவது கருதுகிறீர்களா?

  வேறுபாடுகள் எவ்வளவு இருந்தாலும் கலைஞர் கருணாநிதியையே சொல்வேன்//