Thursday, September 11, 2008

@ 7:44 PM எழுதியவர்: வரவனையான்

வெக்கம் மானம் சூடு சொரனை இதுல்லாம் இருக்குன்னு சொல்லிட்டு திரியறவன் செய்யிற வேலையா இது நீங்களே சொல்லுங்க மக்கா...

Injured Indians still in hospital

இத போயி நாம கேட்டாக்க அண்டைநாடு பிராந்திய நலன் காக்கும் ராஜ தந்திரநடவடிக்கை அது இது சல்ஜாப்பு சொல்லுவாங்க.ஏற்கனவே ஒரு தடவ டவுசர கழட்டி அனுப்புனாங்கங்கிற ஒரு காரணத்த வச்சுகிட்டு சும்மா அவங்கள போயி நோண்டிகிட்டு இருந்தா இப்படித்தான் பொடனியோட ஒன்னு போட்டு அனுப்புவாங்க.

நம்ம இந்திய அதிகாரிகள் போயி ஈழத்துல அல்லக்கை வேலை பாக்கிறதைதான் சொல்லுறேன் மக்கா. தெரியாமத்தான் கேக்கிறேன் அவங்க தனிநாடு வாங்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை. எதுக்கு "பேஸ்மட்டம் (பசெமென்ட்) வீக்"க்குன்னு வடிவேலு ஆட்டிகாட்டுறது மாதிரி ஊரு பூராம் ஆட்டிகாட்டுறீங்க.உடனே அவர்கள் வாங்கினால் தமிழ்நாட்டு தமிழர்களும் கேட்பார்கள் அப்படின்னு ரூம் போட்டு சிரிக்கிற மாதிரி ஒரு பதிலு வேற சொல்லுவிங்க. அப்போ பங்களாதேஷ்'ன்னு ஒரு நாட்ட தனியா வாங்கி கொடுத்த பிறகு இத்தனை வருஷமா இந்தியாவின் வங்காள மக்கள் தனிநாடு கேட்கலையே, இத என்னான்னு சொல்லுறது. சரி "இந்த பிராந்திய வல்லரசு"ன்னு சொந்த செலவுல நாமளே பிடப்பு கொடுத்தாலும் தலைக்கு மேல செவப்புகொடி (நேபாளத்தில்) ஏறினப்போ சும்மாத்தானே பாஸு இருந்திங்க. உள்ளார பூந்து மன்னராட்சியை காப்பாத்தி கொடுத்திங்களா. செஞ்சுருந்திங்கன்னா கேவலமாயிருக்கும் ஏன்னா அங்க மக்களும் போராளிகளின் பக்கத்தில்தான் இருந்தாங்க இப்போ ஈழத்தில இருக்கிறத போல.


இப்படி ஒரு அருமையான வலிமையான ராணுவ ரீதியான பதிலை குள்ள நரி அரசியல் நடவடிக்கை மேற்கொள்ளும் வல்லாதிக்க நாடுகளுக்கு எந்த விடுதலை அமைப்பும் வழங்கியிருக்காது.

"வவுனியா படைத்தளத்தில் இந்திய அதிகாரிகள் பணியாற்றியதனை ஒப்புக்கொண்டது இந்திய தூதரகம்"


மயில்சாமி ஒரு படத்தில் பெல்ட்டுக்கு பதிலா தேங்காநார் கயிறு கட்டிருப்பாரு கூட இருக்குற நண்பர்கள் அதை பப்ளிக்குல அவுத்து விட்டுருவாங்க கூட இருக்குற நண்பர்கள். அவரும் பஸ் ஸாண்டுல "பெப்பரப்பே"ன்னு காட்டிக்கிடு நிப்பாரு அது மாதிரித்தான் நீங்க இப்போ நிக்கிறீங்க இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களே.

ஒரு நாட்டுல வாழுறது அந்தநாட்டு மக்களுக்கு பெருமையா இருக்கனும், குறைந்த பட்சம் மக்களையும் அவர்களின் இன மொழி அடையாளங்களையும் உணர்வுகளையும் மதிக்கிற வகையில இருக்கனும். அப்படி இல்லாம போச்சுன்னா ஏன்டா இங்க பொறந்து தொலைச்சோம்ன்னு தலையில அடிச்சுகிட்டுத்தான் வாழுவாய்ங்க( இப்போ நான் அடிச்சுகிற மாதிரி ) அப்படி அடிச்சுக்கிறது நாட்டுக்கு நல்லதில்லை.ஒரு சூட் ரூம் போட்டு 4 புல் வாங்கி வச்சு யோசிங்க மக்கா.....

6 மறுமொழிகள்:

 1. 11:41 AM  
  Anonymous said...

  will said !!!

 1. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

 1. அண்ணே சூடு கொஞ்சம் பத்தல! இன்னும் நாக்கை புடுங்கிக்கிறமாதிரி நாலு கேள்வி கேளுங்க!!!

 1. உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

 1. நீங்க எவ்வளவு சூடா சொன்னாலும் நம்ம நாராயணனுக்கு உரைக்காதுங்க. அந்தாளு பாகிஸ்தான் பர்வேஸ் முஷ்ரப்புக்கு முட்டுக்கொடுத்துகிட்டு திரியிறாரு. அதுல இருந்தே தெரிஞ்சுகங்க. இவரு சொல்றத எல்லாம் கேட்டுகிட்டு ஆடுற நம்ம மத்திய அரசையும் , அந்த அரசுக்கு முண்டு கொடுத்துகிட்டு நிக்குற கடிதர் கருணாநிதி ( தட்டச்சு பிழை அல்ல) மாதிரி ஆளுங்க இருக்க வரைக்கும் என்ன செய்ய முடியும்?

 1. அண்ணே பின்னீ டீங்க போங்க!!!

  - உங்களைப் போன்று தலையில் அடித்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டு தமிழன்!!!