Tuesday, September 09, 2008

@ 4:52 PM எழுதியவர்: வரவனையான்

உண்மையாவே நல்லாத்தான்யா இருக்குது இந்த நோன் ப்ளோக்கிங். பொட்டீக்கடைதான் மொதல்ல சொன்னான், நிம்மதியா இருக்கு நண்பா'ன்னு. சரி நாமலும் கொஞ்ச நாளைக்கு ஏறக்கட்டுவோம்ன்னு ஒரு மையமிழந்த மனநிலையில முடிவு எடுத்து தூயாக்கு கூட சொல்லாம ஜூட் விட்டாச்சு. விட்டுட்டு பாத்தா ஜெமோங்கிறாங்க ரெமோங்கிறாங்க, சாரு வேற ரெகுலர ப்ளோக் படிக்கிறாருன்னு அவருக்கு கடிதமெழுதி கலாய்க்கிறாய்ங்க, கொஞ்கம் டர்ராத்தான் இருந்துச்சு.


நோ கமண்ட்ஸ்....

லக்கியும் அதிஷாவும்





இதுல இந்த பக்கம் தெனமும் "அன்பா" போனில மரியாதையா மறுபடி ப்ளோக் எழுதப்போறியா இல்லையான்னு தூயா வேண்டுகோள் வைத்துக்கொண்டிருக்க, அலுவலத்திலிருந்து தினமும் " நீயே ப்ளோக் பக்கம் போறதில்லைங்கிறது ரொம்ப பெருமையா இருக்குடான்னு" கண்ணுல வர தண்ணிய தொடச்சுகிட்டு பிறேம் என்னை ஒரு தியாகி ரேஞ்சுக்கு பேச. நான் "ஏய்" பட வடிவேலு மாதிரி "எந்த பஸ்லையும் அண்ணே கம்பியை பிடிச்சதேயில்லைனு" நான் ப்ளோக்கின்னா ( நான் ப்ளோக்கின் பண்ணமாட்டேன்னு அர்த்தம்ன்னு ஒலக சீன் போட்டுகிட்டு இருந்த வேளையில செந்தழல்ட்ட இருந்து போன் மறுபடி எழுதப்போறிங்க போல வாழ்த்துக்கள்ன்னு, எவவேய்ன் சொன்னான்னு கேட்டபோதுதான் தெரிஞ்சது நான் மறுபடியும் எழுத வந்துட்டேனாம்

நீதி : என்னாதான் உயிர்த்தோழியா இருந்தாலும் பாஸ்வேர்டு கொடுக்ககூடாது இல்லைன்ன அவங்க சொல்லுறத கேட்டுக்கனும் என்னைய மாதிரி ஜபுரு காட்டினா இப்படித்தான் செந்தழல் போன் பண்ணி எனக்கு நான் மறுபடி வந்தது தெரிஞ்ச கதை ஆகிப்போயிடும்


யாரோ குசும்பு பிடிச்ச ப்ளோக்கர் "வெல்கம் பேக்"ன்னு இந்த படத்த மெயில்ல அனுப்பிருக்காங்க


9 மறுமொழிகள்:

  1. ஆமா நீங்க யாரு?

  1. வாங்க தோழர் வாங்க :-)))

    ஜோதியிலே வந்து கலந்துக்குக்கங்க!!

  1. வாங்க, நாமெல்லாம் கும்மி அடித்த பொற்காலத்தை நினைத்தேன், மகிழ்ந்தேன்.

    நாம் காட்டிய வழியில் இப்போது பரிசல்,ராப்,குசும்பன்,வால் என்று ஏராள மொக்கையர்கள்...

    நீங்களும் அந்த ஜோதியில் ஐக்கியமாக அழைக்கிறேன்...

  1. ///ஜோதியிலே வந்து கலந்துக்குக்கங்க!!

    6:08 PM
    ///

    எதுக்கெடுத்தாலும் (pumkin hill)ஜோதி தானா ?

  1. லக்கிண்ணா, படத்தை பார்த்துமா வாங்கண்ணு சொல்றிங்க?? ;)

  1. வாங்க வரவணை

  1. ரொம்ப நாளா பபா உங்களப்பத்தி சொன்னாங்க. இப்பத்தான் வர்றீங்களா? வாங்க வாங்க. சரி இனிமேயாச்சும் மத்தவங்க சொல்லி தெரிஞ்சுக்கிறமாதிரி இல்லாம ஒழுங்கா நீங்களே எழுதுங்க. நீங்க எழுதலன்னாலும் உங்க பேர்ல பதிவு வந்துகிட்டே இருக்கும்.

  1. //நீங்க எழுதலன்னாலும் உங்க பேர்ல பதிவு வந்துகிட்டே இருக்கும்.//


    கிகிகிகிகிகி

  1. நல்லா இருங்கடே....

    உச்சா போறச்சே சொம்மா கிளிக்கினா
    புரோட்டா பிசையிற கையும் இரும்படிக்கற கையும் சொம்மா இருக்காதுங்கற கதையால்ல இருக்கு.

    வெளங்கிரும்...மானஸ்தன் நா ஒருத்தன் தானா இங்க...லக்கியும் பிட்டு ஓட்டினாப்புல இல்ல...மசியமாட்டோம்ல