Tuesday, September 30, 2008

@ 8:43 PM எழுதியவர்: வரவனையான் 16 மறுமொழிகள்


எங்கயிருந்துதான் இப்படி யோசனைலாம் வருதோ தெரியலை... உண்மையாவே ஒக்காந்து யோசிப்பாங்களோ. மேட்டர் ஒன்னுமில்லை. நம்ம "இம்சை மந்திரி 13ம் பவர்கேசி" ( சோர்ஸ் : லூசுப்பையன், ஆ வி ) புண்ணியத்துல 90 களீன் துவக்ககால யாழ்ப்பாணம் மாதிரி ஒட்டுமொத்த தமிழ்நாடும் மாறிகிட்டு வருது. இதுல ஆட்டைய போடுறவனுங்களோ செம குஜாலா பப்பரப்பான்னு ஜன்னல திறந்து போட்டு வீராச்சாமிய திட்டிகிட்டே படுத்துருக்கிறவன் வீடா பார்த்து குச்சி வழியா ஹேங்கர்ல தொங்குற சட்டையில ஐம்பதுகாசுகூட மிச்சம் வைக்காம லவட்டிருறானுங்க. எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் வீட்டு ஜன்னல் வழியா குச்சி விட்டு காசு எடுக்க பாத்துருக்கானுங்க சட்டை பையில இருந்ததோ 40 ரூவா, ஆனாலும் இவன் கவலையா இருந்தான் ஏண்டான்னு கேட்டா திருடவிட்ட குச்சி முனையில தார் தடவியிருந்துருக்கானுங்க. வோன் ஹுசைன் சேர்ட் 2300 ரூவாயாம் கே..கொள்ளேன்னு அழுவ நம்மாளு.

இது பத்தாதுன்னு இன்னோன்னு பண்ணிருக்கானுங்க பாருங்க அது இத விட கொடுமை . அறிவிக்கபட்ட மின்வெட்டு நடமுறைக்கு வந்த நாலாம் நாளூ காலையில 6 - 9 சாயங்காலம் 6 - 7 ராத்திரி 11 - 12ன்னு கரைக்ட்டா கட் பண்ணிட்டு இருந்தாய்ங்களா. லகுடபாண்டிக ஐடியா போட்டு ஒரு 400 மீட்டருக்கு வயர வெட்டிட்டு போயிட்டானுங்க இன்னைக்கு அதோட சந்தை மதிப்பு3 1/2 லட்சமாம். தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேசனுக்கு வேற வேலையா போயிருந்தப்போ ஜட்டியோட ஒக்கார வச்சு வெளுத்துகிட்டு இருந்தாய்ங்க கம்பிய அறுத்தவனையும் வாங்கின கடைக்காரனையும் அப்போ கிடைச்ச ஸ்கூப் இது. "ஐடியா மணி"ங்களை ரொம்ப அடிக்காதிங்கன்னு கேட்டுகிட்டேன்.

Sunday, September 21, 2008

@ 4:20 PM எழுதியவர்: வரவனையான் 13 மறுமொழிகள்


குட்டியினை கவ்வி செல்லும்
பூனையாய் இருளினை எடுத்து
வந்தது ஒற்றை நிலா
தூரில் கிடக்கும் ஒயினை
பனிக்கட்டிகளால் மேலெழுப்பி
பௌதீக விளையாட்டின் தீவிரத்தில்
அதே காகம்...
சீறாத சர்ப்பம் ஒன்று
முட்டைகள் விழுங்கி தனதிற்கு
அடை வெப்பம் பகிரும் கணத்தில்
உன் வெம்மையான கரங்களில்
மற்றொரு கோப்பையை நிறைத்தாய்
மதுவினை ஒத்த உன் குருதியால்

Thursday, September 11, 2008

@ 7:44 PM எழுதியவர்: வரவனையான் 6 மறுமொழிகள்

வெக்கம் மானம் சூடு சொரனை இதுல்லாம் இருக்குன்னு சொல்லிட்டு திரியறவன் செய்யிற வேலையா இது நீங்களே சொல்லுங்க மக்கா...

Injured Indians still in hospital

இத போயி நாம கேட்டாக்க அண்டைநாடு பிராந்திய நலன் காக்கும் ராஜ தந்திரநடவடிக்கை அது இது சல்ஜாப்பு சொல்லுவாங்க.ஏற்கனவே ஒரு தடவ டவுசர கழட்டி அனுப்புனாங்கங்கிற ஒரு காரணத்த வச்சுகிட்டு சும்மா அவங்கள போயி நோண்டிகிட்டு இருந்தா இப்படித்தான் பொடனியோட ஒன்னு போட்டு அனுப்புவாங்க.

நம்ம இந்திய அதிகாரிகள் போயி ஈழத்துல அல்லக்கை வேலை பாக்கிறதைதான் சொல்லுறேன் மக்கா. தெரியாமத்தான் கேக்கிறேன் அவங்க தனிநாடு வாங்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை. எதுக்கு "பேஸ்மட்டம் (பசெமென்ட்) வீக்"க்குன்னு வடிவேலு ஆட்டிகாட்டுறது மாதிரி ஊரு பூராம் ஆட்டிகாட்டுறீங்க.உடனே அவர்கள் வாங்கினால் தமிழ்நாட்டு தமிழர்களும் கேட்பார்கள் அப்படின்னு ரூம் போட்டு சிரிக்கிற மாதிரி ஒரு பதிலு வேற சொல்லுவிங்க. அப்போ பங்களாதேஷ்'ன்னு ஒரு நாட்ட தனியா வாங்கி கொடுத்த பிறகு இத்தனை வருஷமா இந்தியாவின் வங்காள மக்கள் தனிநாடு கேட்கலையே, இத என்னான்னு சொல்லுறது. சரி "இந்த பிராந்திய வல்லரசு"ன்னு சொந்த செலவுல நாமளே பிடப்பு கொடுத்தாலும் தலைக்கு மேல செவப்புகொடி (நேபாளத்தில்) ஏறினப்போ சும்மாத்தானே பாஸு இருந்திங்க. உள்ளார பூந்து மன்னராட்சியை காப்பாத்தி கொடுத்திங்களா. செஞ்சுருந்திங்கன்னா கேவலமாயிருக்கும் ஏன்னா அங்க மக்களும் போராளிகளின் பக்கத்தில்தான் இருந்தாங்க இப்போ ஈழத்தில இருக்கிறத போல.


இப்படி ஒரு அருமையான வலிமையான ராணுவ ரீதியான பதிலை குள்ள நரி அரசியல் நடவடிக்கை மேற்கொள்ளும் வல்லாதிக்க நாடுகளுக்கு எந்த விடுதலை அமைப்பும் வழங்கியிருக்காது.

"வவுனியா படைத்தளத்தில் இந்திய அதிகாரிகள் பணியாற்றியதனை ஒப்புக்கொண்டது இந்திய தூதரகம்"


மயில்சாமி ஒரு படத்தில் பெல்ட்டுக்கு பதிலா தேங்காநார் கயிறு கட்டிருப்பாரு கூட இருக்குற நண்பர்கள் அதை பப்ளிக்குல அவுத்து விட்டுருவாங்க கூட இருக்குற நண்பர்கள். அவரும் பஸ் ஸாண்டுல "பெப்பரப்பே"ன்னு காட்டிக்கிடு நிப்பாரு அது மாதிரித்தான் நீங்க இப்போ நிக்கிறீங்க இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களே.

ஒரு நாட்டுல வாழுறது அந்தநாட்டு மக்களுக்கு பெருமையா இருக்கனும், குறைந்த பட்சம் மக்களையும் அவர்களின் இன மொழி அடையாளங்களையும் உணர்வுகளையும் மதிக்கிற வகையில இருக்கனும். அப்படி இல்லாம போச்சுன்னா ஏன்டா இங்க பொறந்து தொலைச்சோம்ன்னு தலையில அடிச்சுகிட்டுத்தான் வாழுவாய்ங்க( இப்போ நான் அடிச்சுகிற மாதிரி ) அப்படி அடிச்சுக்கிறது நாட்டுக்கு நல்லதில்லை.ஒரு சூட் ரூம் போட்டு 4 புல் வாங்கி வச்சு யோசிங்க மக்கா.....

Tuesday, September 09, 2008

@ 4:52 PM எழுதியவர்: வரவனையான் 9 மறுமொழிகள்

உண்மையாவே நல்லாத்தான்யா இருக்குது இந்த நோன் ப்ளோக்கிங். பொட்டீக்கடைதான் மொதல்ல சொன்னான், நிம்மதியா இருக்கு நண்பா'ன்னு. சரி நாமலும் கொஞ்ச நாளைக்கு ஏறக்கட்டுவோம்ன்னு ஒரு மையமிழந்த மனநிலையில முடிவு எடுத்து தூயாக்கு கூட சொல்லாம ஜூட் விட்டாச்சு. விட்டுட்டு பாத்தா ஜெமோங்கிறாங்க ரெமோங்கிறாங்க, சாரு வேற ரெகுலர ப்ளோக் படிக்கிறாருன்னு அவருக்கு கடிதமெழுதி கலாய்க்கிறாய்ங்க, கொஞ்கம் டர்ராத்தான் இருந்துச்சு.


நோ கமண்ட்ஸ்....

லக்கியும் அதிஷாவும்

இதுல இந்த பக்கம் தெனமும் "அன்பா" போனில மரியாதையா மறுபடி ப்ளோக் எழுதப்போறியா இல்லையான்னு தூயா வேண்டுகோள் வைத்துக்கொண்டிருக்க, அலுவலத்திலிருந்து தினமும் " நீயே ப்ளோக் பக்கம் போறதில்லைங்கிறது ரொம்ப பெருமையா இருக்குடான்னு" கண்ணுல வர தண்ணிய தொடச்சுகிட்டு பிறேம் என்னை ஒரு தியாகி ரேஞ்சுக்கு பேச. நான் "ஏய்" பட வடிவேலு மாதிரி "எந்த பஸ்லையும் அண்ணே கம்பியை பிடிச்சதேயில்லைனு" நான் ப்ளோக்கின்னா ( நான் ப்ளோக்கின் பண்ணமாட்டேன்னு அர்த்தம்ன்னு ஒலக சீன் போட்டுகிட்டு இருந்த வேளையில செந்தழல்ட்ட இருந்து போன் மறுபடி எழுதப்போறிங்க போல வாழ்த்துக்கள்ன்னு, எவவேய்ன் சொன்னான்னு கேட்டபோதுதான் தெரிஞ்சது நான் மறுபடியும் எழுத வந்துட்டேனாம்

நீதி : என்னாதான் உயிர்த்தோழியா இருந்தாலும் பாஸ்வேர்டு கொடுக்ககூடாது இல்லைன்ன அவங்க சொல்லுறத கேட்டுக்கனும் என்னைய மாதிரி ஜபுரு காட்டினா இப்படித்தான் செந்தழல் போன் பண்ணி எனக்கு நான் மறுபடி வந்தது தெரிஞ்ச கதை ஆகிப்போயிடும்


யாரோ குசும்பு பிடிச்ச ப்ளோக்கர் "வெல்கம் பேக்"ன்னு இந்த படத்த மெயில்ல அனுப்பிருக்காங்க