Tuesday, April 01, 2008

@ 6:56 PM எழுதியவர்: வரவனையான்

இவனை எங்கையாவது எழுதும்போது சொல்லனும்யான்னு நினைச்சுகிட்டு இருக்கிறவன் தான் இந்த பதிவின் நாயகன் ஜே ஜே. முதலில் பெயர் விளக்கம் ஜே என்றால் ஜொள்ளு பெயர் ஜெயக்குமார் என்பதால் ஜொள்ளு ஜெயக்குமார்.

பயபுள்ள வண்டியில வரும்போது எதவது போஸ்ட்மரத்துல பழைய சீலை துணி சிக்கிருந்தா கூட நின்னு பார்த்துட்டு வருவான் அவ்வளவு ஜொள்ளு. இவன் பைக் ஓட்டி நாம பின்னால உட்காந்து போன முன்னாடி எதாவது ஒரு பொம்பளை போனாப்போதும் அப்படியே 180 டிகிரி கோணத்துல தலை திருப்பி அது "அட்டு" பிகராய் இருந்தால் கூட "கடவாப்பல்லு உள்நாக்குலாம்" தெரியிற அளவுக்கு ஈஈன்னு ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு வருவான் . எனக்கு எப்படா இவன் இறக்கிவிடுவான்னு இருக்கும் .

சைட் அடிக்கலாம் அது அந்த பொண்ணுக்கு மட்டும் தெரியனும் என்கிற அளவுக்கு குறைந்தபட்ச ஜனநாயக விதிமுறைப்படி சைட் அடிப்பவன் நான். இவனோ பஸ்ஸடான்டுல ஒரு பொண்னை பார்த்தா கொஞ்ச நேரத்துல மொத்த பஸ் ஸ்டாண்டே அந்த பொண்ணை வேடிக்கை பர்க்கிற மாதிரி பார்ப்பான். நானும் சொல்லி சொல்லி ஒஞ்சு போயிட்டேன்.


எப்ப பாத்தாலும் "அதே" நெனப்புல இருக்கிறவன என்னாதான் செய்யுறது. ஒரு நா இப்படித்தான் எதோ குத்துப்பாட்டு தொலைக்காட்சியில ஓடிட்டு இருந்துச்சு , இவன் ஆரம்பிச்சுட்டான் "டேய் அந்த புளூ டவுசர் போட்டு ஆடுதுல அந்த புள்ள செம பிகர்ல"ன்னு டேய் எனக்கு முன்னாடி ஆடுறவ மூஞ்சியே தெரியலை இதுல மூணாவது வரிசையில எங்கடா பாக்குறது"ன்னு சொல்லி சேனல ஸ்கிப் பண்ணி இவன் இமுசையில இருந்து தப்பிக்கலாம்னு பார்த்தா அடுத்த சேனல்ல என்னையே மெய் யுணர்த்தும் "கத்தாழ கண்ணால குத்தாதே" ஓடீட்டு இருக்கு. ஒரு நிமிசம்தான் ஆச்சு அந்த கிரீன் சாரி தாண்டா அன்னைக்கு நான் சொன்னவ" . டென்சனாகி முடியல முடியல என்று அலறி இவனுக்கு ( முன்னாடியே பிளான் பண்ணியபடி ) ஒரு நம்பர் கொடுத்தேன். இதுதாண்டா அவ நம்பர் பேசி கரைக்ட் பண்ணிக்கோனு. அது அந்த ஜுனியர் ஆர்டிஸ்ட் நம்பர் என்றதும் செம குஜாலாகி வாங்கி போனான்.

நாலு நாள் கழிச்சு சோகமாய் வந்து டீ குடிச்சுகிட்டு இருந்தவனிடம் கேட்டேன் "என்னாடா" மடிச்சிட்டியான்னு.

டீ கிளாச தூக்கி போட்டு துரத்த ஆரம்பிச்சுட்டான் . நான் எஸ்கேப்பு.

விஷயம் ஒன்னுமில்லை. நான் கொடுத்த நம்பர் ஒரு ஆர்டிஸ்ட் நம்பர்தான் ஆனா அது நாடக நடிகை. தலைவன் ரொம்ப ப்ரொபொசனலா ஆரம்பிச்சு இருக்கான் தான் கொடைக்கானலில் ரிசார்ட் வச்சு இருப்பதாகவும் போர்டு கார் இருப்பதாகவும் ( உண்மையில் மாருதி எஸ்டீமுகும் போர்டுக்கும் அவனுக்கு வித்தியாசம் தெரியாது) பேச்சை துவங்கி ஒரு மாதிரி ஸ்மூத்தாக போய்க்கொண்டிருந்த வேளையில் கேட்டிருக்கிறான் " கொடைகானல் டேட்ஸ் கொடுத்திங்கன்னா சொல்லிருங்க என்கிட்ட ஒரு வார்த்தை"யின்னு அதுக்கு அந்த பெண் "இல்லிங்க அங்கல்லாம் குளிரும் , அதும் போக அவ்வளவு தூரத்தில இருந்து யாரும் புக் பண்ன மாட்டாங்கன்னு" . சரின்னு சொல்லி போனை வைத்து மறுநாள்
பழையபடி ஜொள்ளியபடி போன் போட்டுருக்கான். அலோ"ன்னு தூக்க கலக்கத்துல ஒரு குரல். "தேனு ( தேன்மொழியை செல்லமாய் கூப்பிடுறானாம்) நான் தான் ஜெயா பேசுறேன். நான் வேணும்னா கிளம்பி வரவா"ன்னு கேட்க எதிர்முனையில இருந்து " அட இப்ப வேணாங்க நைட் எல்லாம் கண்ணு முழிச்சு காத்தவராயன் நாடகம் நடிச்சுட்டு வந்தது டய்ர்டா இருக்கு" அதுவுமில்லாம நாளைக்கு என் பேத்திக்கு காது குத்து, ஒரு ரெண்டு நா சென்டு வாங்க"ன்னு சொல்ல இந்த பக்கம் பார்ட்டி மயங்கி பொத்துன்னு விழுந்துருக்கான்.


இது இன்னோரு சம்பவம். ஒரு முறை எங்கோ ஒரு விடுதியில் நண்பனுடன் தங்க சென்றுள்ளான். போன இடத்தில் இவனுக்கு முன்பாக ஒரு ஜோடி அறையை பதிவு செய்துகொண்டு இருந்துள்ளனர். நம்மாளு ஒரு மாதிரி வழிஞ்சு அந்த ஜோடியா வந்திருந்த ஆன்டியை கரைக்ட் பண்ணிட்டான். அவர்கள் லிப்டில் ஏறும் போதும் இவர்களும் ஏறி இருக்கிறார்கள் இருவருக்கும் எதிர் எதிர் அறை. தன்னோடு வந்த (கணவன் ? ) ஆண் அறைக்குள் நுழைந்த வேளையில் அந்த ஆண்டி இவனை பார்த்து "வெயிட் பண்ணு தூங்க வச்சிட்டு வந்திடுறேன்னு" சைன்னை(Sign) போட்டு போயிருக்கு. இவன் தன்னோடு வந்த நண்பனுக்கு சொந்த செலவில் சரக்குலாம் வாங்கி கொடுத்து தூங்க வச்சு. வெளியே வந்து காரிடாரில் செல்போனில் யாருக்கோ மொக்கை போட்டபடி "ஆண்டி"க்காக காத்திருந்திருக்கிறான். அந்தா இந்தா என்று இரவு 12ஐ தாண்டிவிட்டது. காலெல்லாம் வலியெடுக்க ஓய்வாய் அங்கிருந்த ஷோபாவில் உக்காந்தவன் அப்படியே தூக்கிவிட்டான். இப்போ தான் நடந்தது "ஆண்டி - கிளைமாக்ஸ்". தன் அறையிலிருந்து பூனை போல் வந்த ஆண்டி அவன் அறைக்கு திறந்திருந்த கதவின் வழியாய் உள்ளே போய்விட்டார். விளக்கு போடப்படவில்லை. சரக்கு அடித்து ஆப் - கண்டிஷனில் படுத்திருந்த ஜே.ஜேயின் நண்பனுக்கு அடித்தது யோகம். காலையில் கொட்டாவி விட்டபடி அறைக்கு வந்தவன் மெத்தையில் கிடந்த மல்லிகை பூக்களை பார்த்து பக்கத்துல ஒரு ரூம் போட்டு அழுதுருக்கான்.


- வேற மேட்டரும் இருக்கு அப்புறம் சொல்லுறேன்
பதிவர் எழுத்தாளர் செல்லமுத்து குப்புசாமியுடன் வரவனையான்

14 மறுமொழிகள்:

 1. கயமை பின்னூட்டமில்லாத பதிவெல்லாம் ஒரு பதிவா ?

 1. 4:06 PM  
  Anonymous said...

  super adutha poliyar ready...

  romba nandri

 1. :)))))

 1. எனக்கு நேர்ந்த அனுபவங்களை கூட மற்ற நண்பர்களுக்கு நேர்ந்தது போல பதிவெழுதும் வியாதி எனக்குண்டு. உங்களுக்குமா? :-)

 1. :))

  kalakkunga

 1. 4:24 PM  
  Anonymous said...

  போட்டோவில் இருக்கும் இன்னொருத்தர்தான் ஜே ஜே வா?

 1. 4:33 PM  
  Anonymous said...

  http://kuttapusky.blogspot.com/2008/04/blog-post.html

 1. 4:34 PM  
  Anonymous said...

  கதை அருமை...
  ஜே ஜே சில குறிப்புகள் என்பதற்கு பதிலாக, வேற எதுனா வெச்சிருந்தா சும்மா கில்மாவா இருந்திருக்கும்.

 1. 4:36 PM  
  Anonymous said...

  இங்க கும்பி அலவ்டா?

 1. 4:39 PM  
  poli groups said...

  //வேற மேட்டரும் இருக்கு அப்புறம் சொல்லுறேன்//

  அப்போ எங்க பாசறைல சேந்துடுங்கோ.

 1. 4:43 PM  
  நைற் ஈகிற் said...

  செந்தில்: யோவ் எப்பையா கும்மி அல்லொவ்ட் இல்லைனு சொல்லிருக்கோம்


  சத்தியா: அட கொம்மென்ட் கனக்குக்கு சொன்னேன்

 1. 4:47 PM  
  Anonymous said...

  கதைய கேக்கற்ச்சே சொந்த அனுபவம் மாதிரியில்லோ இருக்கு?

  ஆண்ட்டீ ஓகே...பாட்டிய கூட விடலியாடா பயபுள்ளைங்களா?

 1. எதிரிக்குக் கூட இப்படி ஒரு சோதனை வரக்கூடாது .

 1. கருத்துகளுக்கு நன்றி சொல்லி இன்றைய "கயமை"யாற்றிவிட்டேன்.

  அனைவருக்கும் நன்றி