Tuesday, February 05, 2008

@ 2:06 PM எழுதியவர்: வரவனையான்
தெருவுல வண்டியிலையோ இல்லை நடந்தோ போகும் போது எதிரே யாராவது ஒரு பொண்ணு லைட்டா நம்மள பார்த்து புன்னகை பூத்துட்டு போனா கூட நம்மள பாத்து எவடா சிரிக்கப்போறான்னு திகிலாகி டக்குன்னு குனிஞ்சு பேண்ட் ஜிப் போட்டுருக்கன இல்லை மறந்து தொலைச்சு அத பாத்துதான் சிரிச்சுட்டு போனாளோன்னு சந்தேகப்பட்டு பாக்குற ஆளு . அந்தளவுக்கு நம்ம பர்சனாலிட்டி மேல அபார நம்பிக்கை. இதுல எந்த லட்சனத்துல லவ் பண்ணுறது . அதுனாலதான் இந்த வருசமும் ஒரு ஒப்பாரி பதிவ போட்டு "காதலர் தினத்தை" கடந்திடலாம்ன்னு முடிவு பண்ணியாச்சு.

ஒரு ஃபுல் ஓல்டு மங் ( கோல்ட் ரிசர்வ் - புதுச வந்திருக்கு சாப்பிட்டு பாருங்க மக்கா பட்டைய கெளப்புது முக்கியமா "காண்டு கஜேந்திரன்" வகையறா...) எடுத்து ரூம் போட்டு மப்பேத்தி யோசிச்சதுல காதல் அழக பாத்து வாரதில்ல ( நானெல்லாம் எடுத்தவுடனே இந்த முடிவுக்குத்தானே வரமுடியும் :P ) மனச பாத்துதான் வருதுன்னு முடிவுக்கு வந்தாச்சு. அது சரி மனச எப்படி காட்டுறது. இப்ப பெரிய தொயரம் புடிச்ச பிரச்சினையே அதானே.

ஷேர் ஆட்டோவுல ( பங்கு தானி - தமிழ் சரிதானே ) இடிச்சுகிட்டு உக்காந்து வர வாய்ப்பிருந்தும் கண்ணியமாய் இல்லை இல்லை அதி கண்ணியமாய் அதன் கடுமையான குலுக்கலிலும் திடீரென்று போடும் யூ டர்ன்'களிலும் சிலையாய் அமர்ந்து, சீலையோ இல்லை சுடிதார் ஷாலோ மேலே பட்டால்கூட பயிர்ப்பு காட்டி இறங்கி நடந்துபோகும் போது எப்படியும் பேசிடலாம்ன்னு நினைச்சு வந்தா அதுக்கு முன்ன நாம இறங்குற நிறுத்தம் வந்து "மனச" காட்ட முடியாம பண்ணிடும்.

இப்படி போயிட்டு இருக்குற வாழ்க்கையில கொஞ்சமாவது நிம்மதி தருவது சக பொலம்பல் நண்பர்கள்தாம். குறிப்பாய் சொல்லனும்னா சுகுணா திவாகர், பொட்டீக்கடை சத்யா, ஆழியூரான் இப்படி. பாலா மாம்ஸையெல்லாம் கணக்குலையே வச்சுக்க முடியாது அய்யப்பனுக்கு கல்யாணம் நடந்த அவருக்கும் நடக்கும். இப்ப என்னாச்சுன்ன இந்த வருசம் கூட "கம்பேனி ஒப்பாரி" வைக்க ஒரே ஒருத்தந்தான் இருக்கான்.

சுகுணா ஒரு பெரிய புரட்சிக்கான வேலைத்திட்டம் போல தன்னோட கல்யாணத்தை நெனச்சுகிட்டு படாத பாடுபட்டு ஒரு வழியாய் செட்டில் ஆகப்போறான். ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு பிரபல பதிவரோட கல்யாண பார்டிக்கு போயிட்டு ஃபுல் டைட்டில் தொலைபேசிட்டிருந்த போது கேட்டான் "அப்புறம்டா உனக்கு எப்போ " இந்த பக்கம் ஒரு பெரிய மௌனம். சாரி நண்பா என்றபடி போனை வைத்துவிட்டான் . "எவளாவது காதலிச்சு தொலைங்களடி" என்று அவன் எழுதிய கவிதை இனி எனக்கான ஒன்றாய் ஆகிவிட்டது.

ஒரு படத்துல சகமாணவன் தூக்கு மாட்ட முனைந்து கொண்டிருக்கும்போது கர்ம சிரத்தையாக கஞ்சாவை சிகரட்டில் ஸ்ஃடப் பண்ணிட்டு இருப்பாரே ரகுவரன். அது மாதிரி பொட்டீக்கடை சத்யா. பய புள்ள எல்லாத்துகும் ஆஃப் சொல்லுறதே வேலை. ஒரு தடவை ராத்திரி ரெண்டுமணிக்கு போனில் பேசிட்டு 4 மணிக்கு கட் பண்ணிட்டு தூங்க போயிட்டான். அதுக்கு பிறகு நான் போயி ஒரு ஆஃப் எம்.சி எழுத்த பிறகுதான் டென்சன் குறைஞ்சுச்சு அப்படி ஒரு ஜென்மம். அவனும் ஏதோ புதுசா ஒரு கிரஷ்ல இருக்கிறதா தெரியுது. கும்மி,மொக்கைலாம் இப்போ போடுறதுல்ல அவ்வளவு ஏன் ஆன்லைனே வாரதில்ல. "மனச எப்படி காட்டுறது"ன்னு எனக்கு சொல்லிகொடுத்தான்ன நல்லாருக்கும்.

மீதமாயிருக்கிற ஆழியூரானோ செலிபிரேசன் கட்டிங்க கல்ஃபுல உட்டுட்டு "எனக்கு என்னப்பா அவசரம் அடுத்த வருசம் பண்ணிக்கலாம்"ன்னு சொல்லுறான் ( அடப்பாவி என்னைய விட 4 மாசம் அதிகம்யா உனக்கு ) . அவன் காதலை சொல்லுறானா இல்லை கலியாணத்தை சொல்லுறானா விளங்கலை.

Armageddon படத்துல எல்லாத்தையும் பூமிக்கு உயிரோட அனுப்பிட்டு பூமியை நோக்கி வரும் விண்கல்லை தனியாளாய் போய் மோதி தானும் செத்துப்போக போவரில்ல புரூஸ் வில்லிஸ் அது மாதிரி மனநிலையில் "காதலர் தின"த்தை எதிர்கொள்ளும்

நொந்து போன வரவனையான்

காதலித்த,லிக்கும்,லிக்கப்போகும் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

19 மறுமொழிகள்:

 1. பின்னூட்டக்கயமை ஒப்பாரி

  :)

 1. ஏன் நாங்களுந்தான் இருக்கோமில்ல..

  கைல கிளாஸோட நின்னாத்தான் கண்ணு தெரியுமாக்கும்..?

 1. payapulla pavamaithaan irukkanya....

  i dont know love so, i cant speek about it.
  but one thing kaliyaanathaiyum kaathalaiyum aniyaayathukku thodarpupaduthi kaathalin punithaththai keduthudaathingkapa

  ( mannikavum thmizil ezutha mudiyalla)

 1. நமக்கு மட்டும் ஒன்னும் செட் ஆவமாட்டேங்குதே வரவனை? என்ன கொடுமை இது? :-(((((

 1. கவலைப்படாதே சகோதரா

 1. ஏதோ, சமையலறை பக்கம் ஒதுங்கிட்டீங்க.. (வேற ஏதோ கேள்வி பட்டோமே..)

  சமையல் சரியா வரலையின்னு..தான் ஒப்பார் போலிருக்குன்னு வந்துப் பார்த்தா...

  பய புள்ள...இதுக்கு எல்லாம்..ஒப்பாரியா..

  சரி, நானும் சிபாரிசு பண்ணுறேன்..

  காதலிச்சுத் தான் தொலையுங்களேண்டி...

 1. //

  TBCD said...
  ஏதோ, சமையலறை பக்கம் ஒதுங்கிட்டீங்க.. (வேற ஏதோ கேள்வி பட்டோமே..)
  //

  உள்ள இமுசைல இது வேறையா....

  இன்னாட ஆண்டு 3 ஆகிப்போச்சே இன்னும் இந்த பேச்சு வரலியேன்னு பார்த்தேன்.


  நீ வேற ஏம்பா வயித்தெரிச்சல கொட்டிகிட்டு.

 1. எல்லாரும் ஓடியாங்கோ. இன்னைக்கு கும்மியடிக்க நம்ப வரவனை மாட்டிக்கிட்டாரு!!!

 1. //

  லக்கிலுக் said...
  நமக்கு மட்டும் ஒன்னும் செட் ஆவமாட்டேங்குதே வரவனை? என்ன கொடுமை இது? :-(((((

  //

  அதானே !!! நமக்கு காண்டு கஜேந்திரன் கூட சரக்கடிக்கவும் அவருக்கு பலான படம் வாங்கிக்கொடுக்கவும் தானே நேரம் இருக்கு என்ன செய்யுறது :)))))))))))))

 1. 2:28 PM  
  Anonymous said...

  //நமக்கு காண்டு கஜேந்திரன் கூட சரக்கடிக்கவும் அவருக்கு பலான படம் வாங்கிக்கொடுக்கவும் தானே நேரம் இருக்கு என்ன செய்யுறது//

  இதென்ன கொடுமை செந்தில்? ராசி ஏழுமலை கூட கெழவனை சந்திச்சாராமே.

  படிக்காத மேதை

 1. நண்பா....இனிமேல் ஒருதேவதை பொறக்காவா போறாங்க?? எங்கயாவது இந்த பூவுலகில் உங்கள மாதிரி ஒரு ராஜ குமாரன எதிர்பார்த்து காத்திருப்பாங்க, so, no worries,ஒப்பாரிய ஓரம் கட்டிட்டு
  Feb 14 கொண்டாட தயாராகுங்கள் :)

 1. வரவனை இத சந்தோசமா சொல்லனுமய்யா. நாங்கள்ளாம் மாட்டிகிட்ட்டு சிங்கி அடிக்கறோம். நீங்கள்ளாம் மாட்டிக்க ட்ரை பண்றீங்களா?

  கல்யானம்ங்கறது பப்ளிக் டாய்லட் மாதிரியாமா. வெளிய இருக்கறவன் எப்படா உள்ளாற போலாம்ன்னு பாப்பான்.
  உள்ள இருப்பவன் எப்படா வெளில போவோம்ன்னு பாப்பானாம். எந்த புண்ணீயவானோ சொல்லி வெச்சிருக்கான்

  சந்தோஷமா இருந்துட்டுப் போங்கப்பா.

 1. //நொந்து போன வரவனையான்//

  டோண்ட் வொர்ரி, வி லவ்ஸ் யூ ;-)

 1. //மீதமாயிருக்கிற ஆழியூரானோ செலிபிரேசன் கட்டிங்க கல்ஃபுல உட்டுட்டு "எனக்கு என்னப்பா அவசரம் அடுத்த வருசம் பண்ணிக்கலாம்"ன்னு சொல்லுறான் ( அடப்பாவி என்னைய விட 4 மாசம் அதிகம்யா உனக்கு ) . அவன் காதலை சொல்லுறானா இல்லை கலியாணத்தை சொல்லுறானா விளங்கலை.//

  என்ன நடக்குது இங்கன..? ஏன்யா இப்படியெல்லாம் புரணி பேசுறிய..?

  அதுசரி.. நம்மளை மாதிரி வகை பொண்ணுங்கல்லயும் உண்டுதானே..? அதெல்லாம் இங்கன வந்து ரெண்டு, பின்னூட்டங்களைப் போட்டா என்ன..? அதுக்கு வெட்கமா இருந்தா தனிமடலாவது போடலாம்ல.. ஐயோ.. ஐயோ.. நம்ம எழுதறதோட நோக்கமே யாருக்கும் புரியலையே..:)

  அடுத்த வருசமாவது புலம்பல் பதிவு எழுத வேண்டிய கொடுமையிலேர்ந்து தப்பிக்கனும்னு அருள்மிகு டாஸ்மாக்காண்டவரை வேண்டிகிட்டு இன்னைக்கு ஒரு செலிபரேசனை அருந்தப்போறேன்.

 1. எங்களுக்கு வெளியூரில இருந்து ப்ளவர்ஸ் வந்ததுப்பா....நாங்களும் பதிலுக்கு அனுப்பிச்சிட்டோம்...96ல இருந்து இது வரிலும் தொடர்ந்து ஒரே ஆளுக்கு ப்ளவர்ஸ் அனுப்பிச்சது கிடையாது இருந்தாலும் ஒரே ஒரு தரம் ஒரு பிகர் மட்டும் அடுத்த வருசமும் அனுப்பிச்சா ஆனா நா வேற ஆளுக்கு அனுப்பிட்டேன்...

  அடுத்த வருசம் பாத்துக்கலாம்...

  நண்பா, ஒன்னு மட்டும் நாம எப்பவுமே மறக்கக் கூடாது. கலாமே கனவு காணுங்கள்ன்னு சொல்றத மறந்தாலும் நாம There is always next time ங்கறத மறக்கக்கூடாது.

 1. //லக்கிலுக் said...
  நமக்கு மட்டும் ஒன்னும் செட் ஆவமாட்டேங்குதே வரவனை? என்ன கொடுமை இது? :-(((((///

  என்ன கொடுமைப்பா இது நாலு புள்ள ஒரு பொண்டாட்டி ஒரு மிஸ்றெஸ் வெச்சி இருக்கவங்க கூட நமக்கு ஒன்னும் செட்டாவ மாட்டுதுன்னு ஒப்பாரி வெப்பாங்க போல...

  என்ன கொடும சார் இது...

  லுக்கார் மன்னிக்கவும் :):):)

 1. தவறு மேலே படத்திலேயே இருக்கு...கடலைப் பார்த்து உட்கார்ந்த...என்ன நீஞ்சியா வரப் போறாங்க? இந்தப் பக்கம் திரும்பி உட்காரும் :-)

  என்ன வருத்தம்னா, இப்படி பிளாக்குல மனச தொறந்து காட்டியத பாக்க இங்க யாரும் இருக்குற மாதிரி தெரியல :-(

 1. /அதுசரி.. நம்மளை மாதிரி வகை பொண்ணுங்கல்லயும் உண்டுதானே..? அதெல்லாம் இங்கன வந்து ரெண்டு, பின்னூட்டங்களைப் போட்டா என்ன..? அதுக்கு வெட்கமா இருந்தா தனிமடலாவது போடலாம்ல.. ஐயோ.. ஐயோ.. நம்ம எழுதறதோட நோக்கமே யாருக்கும் புரியலையே..:)/

  செந்திலோட பதிவ ஒரு புன்னகையோட படிச்சுகிட்டே வந்தவன் ஆழியூரான் பின்னூட்டம் படிச்சதும் குபீர்னு சிரிச்சுட்டேன் :-)))
  சங்கத்துக்காரங்க எல்லாருக்காகவும் டாஸ்மாக்காண்டவர் மாதிரி பெருந்தெய்வத்த அலுவலகத்துல வேண்ட முடியாததால ட்ராப்பிக்கானா ட்விஸ்டர்னு ஒரு சிறுதெய்வத்த வேண்டிக்கிறேன்!!!

 1. இந்த வருடமுமா?
  போய் வேலைய பாருங்கப்பு