Monday, January 14, 2008

@ 6:25 PM எழுதியவர்: வரவனையான்



வர்றீகளா மாடு பிடிக்க போலாமா .... தடையை மீறி ? :)






உலகத்தமிழரை ஓரணியில் இணைக்கின்ற வலிமை தமிழ் மொழிக்கு அடுத்த படியாய் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு உண்டு.பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்றினைப்போல் இது தமிழரின் மே தினம் ஆகும். ஒரளவுக்கு நல்ல மழை பெய்துள்ளது. இதன் மகிழ்ச்சி இந்த பொங்கல் விழாவில் தமிழக்த்தில் தெரியும். கலைஞரின் தை 1 இனி தமிழ்ப்புத்தாண்டு என்கிற அறிவிப்பு சர்க்கரை பொங்கலாய் இனிக்கிறது. சமாதான உடன்படிக்கையை கிழித்து குண்டி தொடைத்து கிழே போட்டிருக்கும் சிறீலங்காவை "காந்திதேசம்" இன்னும் சும்மானாச்சிக்கு கூட கண்டிக்காத வேளையில் "பிரபாகரன் எங்கள் வழிகாட்டி" எனும் பாடல் தென்கிழக்கே கேட்கதுவங்கிருக்கிறது. ஓயாத அலைகள் 3 போது யாழ்ப்பாணம் பிடிபடப்போகும் வேளையில் கொச்சிலிருந்து தன் போர்கப்பல்களை கன்யாகுமரி அருகே கொண்டு சென்று பயிற்சி என்கிற போர்வையில் "அழுத்தம்" கொடுத்த இந்திய ராஜ தந்திரங்கள் வரும் காலத்தில் இருக்காது என்று நம்புவோமாக .

இந்த பொங்கலில் இருந்து பஞ்சாயத்து போர்டு லெவல் பிரச்சினைகளுக்கூட புரட்சிப்புயல் தலைமை ஏற்று "களம்" காண மாட்டார் என்றும் நம்புவோமாக.






அது என்ன எழவோ தெரியலை இந்திய "உச்சா"நீதிமன்றங்கள் கொஞ்சகாலமா தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் கசப்பு உணர்வுகளை தன் தீர்ப்புகளின் மூலம் ஊட்டிக்கொண்டிருக்கு. இது எதுல போயி முடியுதோ தெரியலை. தமிழ்ப்பண்பாட்டு விதயமான ஏறுதழுவலில்( ஜல்லிக்கட்டு) கைவச்சுருக்கு இப்போ புதுசா. இல்லாத ராமன் கட்டியதா சொல்லுற பாலத்தை மக்களின் உணர்வுகள் என்கிற காரணம் சொல்லி நிறுத்தி வச்ச மன்றம் இதை எந்த கோணத்துல முடிவெடுத்துச்சோ தெரியலை.இப்ப்தைக்கு ம்ம்ம்ம் கொட்டிட்டு அடுத்த வேளையை பார்க்கலாம்.

பல்வேறு விடியல்களையும் புதிய வாழ்வையும் இந்த தை அளிக்கும் என்கிற நம்பிக்கையுடன் பாவேந்தரின் கவிதை ஒன்றின் துவக்க வரிகளான " பொங்கல் அமிழ்துதான்; பொய்யில்லை" என்று சொல்லி தமிழினத்துக்கும் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் வாழ்த்துகளை
சொல்லிக்கொள்கிறேன்.




4 மறுமொழிகள்:

  1. செந்தில்! என்ன மீன் குழம்பு, பொங்கல்னு ஒரே சூடான பதிவுகளா இருக்கு.

    புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

  1. புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்!

  1. 7:55 PM  
    Anonymous said...

    வாழ்த்துக்கள் நண்பரே :-)

  1. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்!