Tuesday, January 15, 2008

@ 8:31 PM எழுதியவர்: வரவனையான்


மருதைக்கு டான்சு பாக்க போன
பாப்புபுள்ளை ஆட்டகாரியை கூட்டியாந்து
ஒம்போது புள்ளை பெத்துட்டு ந்தா... அங்கன நிக்கிறாரு

டான்சுகாரிக்கு பொறந்த புள்ளையில ஒன்னு
மந்திரியாச்சு.பொண்டாட்டிக்கு பொறந்த
மவேன் கணக்கு வேளைக்கு போயி சிட்டா அடங்கல்
தூக்கிட்டு திரியிறான்

இவ என்னைக்கு கெழடு தட்டுவாளோன்னு ஊருல
உள்ள குடியான பொம்பளைக கரிச்சு கொட்டுற
சுறும்பாயி வெட்டி வெட்டி கொடம் தூக்கி தண்ணிக்கு போறா
"எக்கோய் அடுத்த வாளி நான் இறைக்கிறேன் நம்ம எல்லாம் சீலைக்காரி
கும்புடுறுவுக தானே"ன்னு சொன்னவள தோளுல தாவாங்கொட்டயால இடிச்சி
பேசாம போறா பாக்கியத்தம்மா

பனமரத்துல பாதியாய் நிக்கிறாரு பாருங்க
உய்யகோண்டாத்தேவரு ... பச்ச புள்ளையாட்டம். தண்ணி
சீட்டு பொம்பளை வெத்தலை பொடின்னு எந்த கழுதையும் கெடையாது
என்னா தெனம் வண்டிகட்டி மணப்பாறை போயி சீட்டு மட்டும் ஆடுவாரு அம்பூட்டுதான்

"என்னாடா இது ஒவ்வொரு மொடக்குலையும் ஒரு வண்டு வருது"
சாணார்தோப்பில் பழநிச்சாமியிடம் சலிச்சுகிறாரு வேலுச்சாமி
"சும்மா குடிங்க தொரை என்னமோ விட்டைமீனாமே அது இதுதான்" மீச
பொசுங்கினா பொசுங்குதுன்னு பீடியை ஒட்ட இழுக்குறாரு பழநிச்சாமி

வேட்டி கிழிய குசுவ போட்டுபுட்டு " ஒரு தாயம்"னு சாவடில
உருட்டுறாரு ரெங்கசாமி ரெட்டியாரு. மயிலம்பட்டி
பங்காளி கோமணம் பெருசு வீட்டுல காயிற ஊரரிஞ்ச
ரகசியத்த அந்தாளூ செவுட்டுகாதுல யாரு சொல்லுறது

8 மறுமொழிகள்:

 1. நமது பழக்கங்களும் , குணங்களும் வளர்ப்பின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது என்று தான் இது நாள் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். (20/01/2008)ம் தேதி ஜீ.வி படித்தபின்பு தான் தெரிந்தது, நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது எதையோ தேடித்தான் போகும்னு. (பிராமணர்களுடன் நாயை ஒப்பிட்டதிற்க்கு , அவைகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்).


  ராமநாதபுரம் மாவட்ட திருவாடானை ,அருகில் உள்ளது பண்ணவயல் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் - காளிமுத்து தம்பதியர் , இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையை தத்து எடுத்துவளர்த்தார்கள். அந்த குழந்தை பிராமணப் பெண்ணுக்கு தவறான வழியில் பிறந்ததால் , அவள் அக்குழந்தையை தெருவில் எறிந்துவிட்டாள். அந்த குழந்தையை எடுத்து , பெற்ற பிள்ளைகளை விட பாசமாக வளர்த்தார்கள் சுப்பிரமணியனும் காளிமுத்துவும்.


  வளர்ந்து பெரியவனானதும் , தன் பிறப்பை பற்றி தெரிந்த கணேசன் , ( தத்தெடுக்கப்பட்ட குழந்தை) தன் தாய் பிராமண சமூகத்தை சேர்ந்தவள் என்று தெரிந்தவுடன் , வெள்ளை வேட்டி கட்டுவதும் , நெத்தி நெறைய விபூதியை பூசுறதுமா மாறினான். அதுமட்டுமில்லாமல் அசைவம் சாப்பிடுவதையும் நிறுத்திவிட்டான். (ஒதுங்குவது , ஒதுக்கிவைப்பதும் அவாள் குணம்னு தெரியாதா என்ன?)..தன்னை பிராமணன் என்று காட்ட பல வழிகளிலும் முயற்சி செய்தான்.


  பிராமணான தன்னை , இதுநாள் வரை சேரியில் வாழவைத்ததிற்க்காக தன்னை வளர்த்த தாய் தந்தையை அடிக்கவும் ஆரம்பித்தான்.( பிராமணன்னு ஆனதுக்கு அப்புறம் தாழ்த்த்ப்பட்ட மக்களை அடிக்காட்டா எப்படி ).

  தலித்துக்களின் வேர்வையும் , இரத்தத்தையும் குடித்தே பழக்கப்பட்ட இனம், தன்னை வளர்த்த பெற்றோர்களையும் கொல்லவும் தயங்கவில்லை. வளர்த்த பாவத்துக்கு அப்பனை கொன்னுட்டு , பாலூட்டுன பாவத்துக்கு தாயை விதவையாக்கிட்டு, இன்று அந்த மிருகம் தன்னை ” பிராமணன் ” என்று தலைநிமிர்ந்து சொல்கிறது.

 1. வணக்கம் சாப்ளின் சரவணன். உங்களின் முதல் பின்னூட்டம் என்பதால் முந்தைய பின்னூட்டத்தை அனுமதித்தேன். இணக்கமான கருத்துதான் என்றாலும் அதை பதிவாகவும் இட்டுவிட்டு இங்கு பதிந்தது சரியல்ல என்பதுஎன் கருத்து. உங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

 1. வரவனையான் அய்யா!

  இதுமாதிரி பின்நவீனத்துவ கவிதைகள் கூட எழுதுவீங்களா அய்யா? :-((((

 1. //லக்கிலுக் said...
  வரவனையான் அய்யா!

  இதுமாதிரி பின்நவீனத்துவ கவிதைகள் கூட எழுதுவீங்களா அய்யா? :-(((( //  அசடு அசடு ! நோக்கு என்னவே தெரியும் .

  நீயெல்லாம் எழத வந்து பிரானை வாங்குற. அட்லீஸ்ட் "ஹிண்டு" பேப்பர் மடிக்கவாது தெரியுமோ ஓய் நோக்கு. ; என்று நான் கேக்கலை "மர்மவீரன்" கேக்கிறார்.

 1. //நீயெல்லாம் எழத வந்து பிரானை வாங்குற. அட்லீஸ்ட் "ஹிண்டு" பேப்பர் மடிக்கவாது தெரியுமோ ஓய் நோக்கு. ; என்று நான் கேக்கலை "மர்மவீரன்" கேக்கிறார்.//

  “மர்மவீரன்” நேக்கும் அதே மாதிரி பின்னூட்டம் போட்டுட்டர்.

  தினமும் எங்கேயாவது போயி சொறிஞ்சிக்கலைன்னா மர்ம உறுப்புலே அவருக்கு கட்டி வந்துடுமோ என்னமோ தெரியலை. வயசான காலத்துலே கண்டதை படிச்சிட்டு கண்ட இடத்துலே, கண்ட பேருலே பின்னூட்டம் போடுறாரு.

 1. onnum puriyala :)

 1. 9:36 AM  
  Anonymous said...

  Booking Confirmation# 23614
  Movie Rambo 4 (A)
  Theater Bangalore - Screen 1
  Show Date/Time Tuesday, 29 January 09:45 pm
  Seat Number(s) F:1 F:2 (Class CL)
  Charges (INR) 320.00
  Other Charges (INR) 20.00
  Total Charges (INR) 340.00
  http://www.inoxmovies.com/eTicketing, Tuesday, 29 January 08:20 am (1978260)

 1. போன் அடிச்சேன்...பீப் பீப் பீப் னு சத்தம் வருது..>!!