Wednesday, November 26, 2008

@ 12:38 PM எழுதியவர்: வரவனையான் 7 மறுமொழிகள்நாளொரு போராட்டம் பொழுதொரு ஆர்ப்பாட்டம் மணிக்கொரு போர்ப்பாட்டு என

தாய்த்தமிழகம் துடித்து நிற்கிறது. உண்ணாவிரதம் நடைபெறாத ஊரில்லை கண்டன

பேரணிகள் காணாத சாலைகளில்லை என்றே இருக்கிறது தமிழ்நாடு. ஊடக வேசிகள் தன்

சரசரக்கும் சேலைகளிட்டு செய்திகளை மறைத்தாலும் தமிழுணர்வு மங்காத தமிழர்கள்

வீதிகளில் இறங்கி தங்கள் உணர்வுகளை பதிவு செய்தே வருகின்றனர்.

பெருநகரம் துவங்கி

மாநகரம்,நகரம்,பேரூராட்சிகள்,ஊராட்சிகள்,கிராமங்கள் என பட்டி தொட்டி எங்கு ஒலிக்கிறது

ஈழத்தமிழனுக்கு ஆதரவான தாய் தமிழினத்தின் குரல். இது இதுவரை இல்லாத அளவு, இது

வரை காணாத அளவு கரை தாண்ட போகும் வெள்ளத்திற்கு இணையாய் பொங்கி

பிரவாகமெடுத்து ஓடுகிறது. "எமக்காகவும் பேசுங்களேன் " என்று தாய்மண்ணிடம் கேட்ட

ஈழத்துகுரலுக்கு உமக்காக பேசாமல் எமக்கிந்த மொழி எதற்கு என புறப்பட்டிருக்கின்றனர்

தமிழ்மக்கள்.

பழத்தட்டு வியாபாரிகள் சங்கமானாலும் சரி கிராம கோயில் பூசாரிகள்

சங்கமாயினும் சரி அதன் உறுப்பினர்கள் அதன் தலைமைகளை " நாம் எப்போது போராட

போகிறோம், இப்போது போராடாமல் பின் எப்போது போராட போகிறோம் என பிடறியை

உலுப்பி தொப்புள் கொடி உறவுகளின் துயரினை போக்க தங்களால் இயன்றளவு பணியாற்றி

கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு நீட்சியாக தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் நடை

பெற்ற ஈழத்தமிழருகான நிவாரண நிதிக்கு ஆதரவு திரட்டிட தமிழகமெங்கும் பிரச்சார பயணம்

மேற்கொண்டிருக்கும் தோழர்கள் மருத்துவர்.எழிலன் தலைமையில் திண்டுக்கல் வந்திருந்தனர்.

புயல் கோடியக்கரை அருகே கரையைக்கடப்பதால் கடும் காற்றும் பெருஞ்சாரலும் நகரினை

மையமிட்டிருந்தாலும் அந்த நிலையிலும் மக்கள் பிரச்சார பயணத்தினருக்கு ஆதரவு தரும்

வகையில் கூடி நின்று அவர்களின் ஊரையை செவிமடுத்தனர்.வாகனங்களில் சிங்கள இனவெறி ராணுவத்தினரின் கொடுஞ்செயலால் பலியான தமிழ்மக்களின்

புகைப்படும் ஒட்டபட்டிருந்தை பார்த்த இரு மூதாட்டிகள் "து*****க்குடிக்கி" என்று துவங்கிய

தூசன அர்ச்சனைகளை சிங்களவன் கேட்டிருந்தால் தூக்கு மாட்டி செத்திருப்பான்.


video
video
video
video

Monday, November 10, 2008

@ 6:50 PM எழுதியவர்: வரவனையான் 5 மறுமொழிகள்

From திண்டுக்கல்


திண்டுக்கல் ஈழத்தமிழர் துயர்துடைப்பு குழுவின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர் ஆதரவு அமைதிப்பேரணி மக்களின் பேராதரவோடு நடைபெற்றது. திண்டுக்கல் குமரன் பூங்காவில் துவங்கி தந்தை பெரியார் சிலை அருகே நிறைவுறும் என அறிவிக்கபட்டிருந்த பேரணி காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் கணக்கிட்டு இருந்த எண்ணிக்கையினை விட பலமடங்கி உயர்ந்து பெரும் பேரணியாய் நகர மக்களிடையே இன்றைய ஈழ மக்களின் துயரை கொண்டு செல்லும்விதமாய் தனது நோக்கத்தில் வெற்றியடைந்தது. எந்த ஒரு அரசியற்கட்சியினையும் அழைக்காமல் தமிழ் உணர்வாளர்கள் யாராகிலும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கபட்டிருந்தது, இந்நிலையில் ஆசிரியர்கள் மானவிகள் கிருத்துவ கன்னிமார்கள் என பல தரப்பினரும் தன்னார்வத்தோடு கலந்து கொண்டு தொப்புள்கொடி உறவுகளின் விழிநீர் துடைக்க தாய் தமிழகத்தின் கைகள் நீளாது என்ன செய்யும் என பதிவு செய்தனர். சற்றேறக்குறைய 8 கிலோ மீற்றர் தொலைவு நிகழ்ந்த பேரணியில் ஒழுங்கு குலையாது தாய்மார்கள் நடந்து வந்தனர். 300 நபர்களின் எண்ணிக்கையை எதிர்பார்த்தாகவும் ஆனால் தமிழுணர்வோடு 1000 பேர் கலந்துகொண்டனர் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் துரை.சம்பத் தெரிவித்தார்.


video
video

Sunday, November 09, 2008

@ 4:34 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்

Thursday, October 30, 2008

@ 3:51 PM Labels: எழுதியவர்: வரவனையான் 1 மறுமொழிகள்

புலிகளின் வானூர்தி தாக்குதலுக்கு இலக்கான அனல் மின் உற்பத்தி நிலையத்தை சீரமைக்க 6 மாதம் தேவை: சிறிலங்கா அமைச்சர்
[வியாழக்கிழமை, 30 ஒக்ரோபர் 2008, 02:09 மு.ப ஈழம்] [க.நித்தியா]
சிறிலங்காவின் களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய வானூர்தி தாக்குதலில் ஏற்பட்டிருக்கும் சேதங்களை சீரமைக்க ஆறு மாத காலம் வரை செல்லும் என்று சிறிலங்கா அரச தரப்பு தெரிவித்திருப்பதுடன் இந்த வானூர்தி தாக்குதலானது படையினரின் வானூர்தி எதிர்ப்பு பொறிமுறையின் எல்லைக்கு அப்பாற்பட்டது எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.http://puthinam.com/full.php?2e3YOA4cb33e6Df04dctVo0da0eA4AU24d4yIm4300a6oMV1de23D1eW2cc4OcY4be

Wednesday, October 29, 2008

@ 1:00 PM எழுதியவர்: வரவனையான் 7 மறுமொழிகள்

A few days ago the media mentioned that the Tiger runaway was destroyed by the SLAF....

Posted By: LoveNlight


ஆமா சொன்னாங்க ! அதுக்கு இப்ப என்ன நண்பா

The readers should note one thing, if the LTTE wish to kill civilans in Colombo or other places in the south, they could easly bomb these places using their aircrafts. However they have been only targetting military and economic installations unlike the

Posted By: The Analyst


தெரியுதுல்ல தெரியுதுல்ல ! முதல்ல மகிந்தவிற்கு இந்த விஷயத்த மெயில் அனுப்புங்க பாஸு

We should build a big catapalt like the ancient Greeks did. Two trees and some "ottapalu" will do this at minimal cost. Using that we should be able to shoot these light aircraft causing havoc and damning our reputation.

Posted By: Maduraகிழிஞ்சது போ !! உலகத்தில இருக்கிற வல்லரசு பாதி பேரு இன்னும் ஜட்டிய மட்டும்தான் கழட்டி கொடுக்கல அவ்வளவு உதவி செஞ்சும் "அண்ணன்" கேப்புல கெட வெட்டிடுறாரு இதுல இந்த ஐடியா வேறையா ?Do you beleive this is LTTE ? How do they come with all these high secirty measures taken by government ? My guess is as good as yours !

Posted By: Senaka W


நடக்க மாட்டாதவன் சித்தப்பன் விட்டுல பொண்ணு கட்டின கதையா... இப்படி ஏதாவது சொல்லித்தான் மனச தேத்திக்கனும். விடுங்க பாஸு அடுத்த தடவை கண்டிப்பா வீழ்த்திடுவோம்ன்னு உதய நாணயக்காரா சூடா அறிக்கை விடுவாறு கொஞ்ச நேரத்துல


Why cannot the AF Planes attack n destroy those small tine planes, where Our Air force has sofisticated planes. it's a shame on the security forces.

Posted By: Lalin Mendis


உங்கள் கருத்துக்களில் உடன்படுகிறேன் நண்பரே ! :P

Ask Help from india

Posted By: Vasahan


இவன பாருய்யா ! ஏற்கனவே வாங்கின ராடாருக்கே "பெப்பரப்பே" காட்டுறாங்க இதில இன்னுமா.

முடியல :))))))))))))
Million of Rupees allocated and getting high tech devices daily into the arm force. Yet they still can’t shoot the intruder to the capital. What is the guarantee for us to not to believe that the paradise island will be invaded by a bunch of hooligans who can operate a flying devices in the future????

Posted By: Kaleel Cader


பிரசண்ட்டுல அடிக்கிற ரீவிட்டுக்கே என்ன பண்ணுறதுன்னு தெரியலையாம்... இவரு பியூச்சர் பத்தி "கவலை" தெரிவிக்கிறாரு


I wonder where Army Chief Fonseka is hiding? I remember very clearly as he said in Rupa Channel that another air attack over Colombo by the LTTE is just a dream. Sophisticated Anti Aircraft Guns and Radars from India will do a better job. He lost the ball again... I have very strong doubts of him and & Bros.
Posted By: Niel Z Fonzo


இப்ப தெரியுதா அதெல்லாம் "ச்சும்மா லுலுல்லான்னு"WHY CAN'T THEY SHOOT IT DOWN? ISN'T THIS IS A DISGRACE? THEY HIT THE CAPITAL AND GETAWAY FREELY EVERYTIME.COME ON GUYS...........LOOKS LIKE WE GET CARRIED AWAY BY ALL THE FALSE PROPAGANDA ABOUT THE WAR.

Posted By: RANTON RATNAWEERA


இதைத்தான் நண்பரே ! அவர்கள் வேறு மொழியில் சொல்லுகிறார்கள், போர் குறித்து சிங்கள மக்களை அரசு ஏமாற்றி வருகிறது என்று


WHERE IS THE PRESIDENT,PRIME MINISTER,DEFENCE SECRETARY AND ARMY COMMANDER?.THEY ALL SAID,TIGERS ARE ALLMOST DEAD AND KILLINOCHCHI WILL FALL TO GOVERNMENT HANDS WITHIN ONE OR TWO DAYS TIME.THEY SAID THESE LIES NEARLY ONE MONTH AGO.WHY TELLING THIS KIND OF LIES SO OPENLY?.

Posted By: SAM PERERA


உங்களக்கு மேட்டரே தெரியாதா ! அலரி மாளிகையில் பங்கர் வெட்டி கன காலம் ஆகிப்போட்டது. எல்லாம் அங்கதான் இருக்கினம்


The govt spent millions of OUR money on jet aircraft to combat LTTE air attacks, but they still come, bomb and go freely. How can this happen???

Posted By: robincruz


நல்லா கேக்குறய்ங்கய்யா டீட்டையிலு ! இது தெரிஞ்சாத்தான் "லைற்" ஆஃப் பண்ணீட்டு ஆப்பு வாங்கிறதுக்கு ஒரு வழி பார்க்கலாமே

I believe government forces already destroyed their runway, now how come they have took off the aircraft without runway.

Posted By: MLI. Ahmeth
இப்படித்தான் வந்து குண்டு போட்டாங்களோ !


மனசு பாரமா இருந்தா ஆன்லைனில் நான் அடியில் காணும் தளத்திற்கு போய் கொஞ்சம் படித்தேன் என்றால் அப்படியே அள்ளிக்கொண்டு வரும் சிரிப்பில் லேசாகிடும் மனசு. வாசகர் கருத்துகளை கண்டிப்பாய் முயற்சி செய்து பார்க்கவும் :P
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=30535

Tuesday, October 21, 2008

@ 1:32 PM எழுதியவர்: வரவனையான் 8 மறுமொழிகள்


அது ஒரு பொதுவுடமை கட்சியின் மாவட்ட அலுவலகம், உள்ளே நுழைந்தவுடன் பெரிதாய் லெனின் மக்களுடன் உரையாற்றும் ஓவியம், இடது பக்கம் ஸ்டாலின் சிரிப்புடன்.

வாடா ! நேத்திகே வாரேன்னு சொன்ன என்றபடி "போண்டா" கணேசன் அழைத்து போய் நாற்காலியில் இருக்க சொல்லிவிட்டு கொஞ்சம் பொறு நகர் மாநாடு நடந்துட்டு இருக்கு ஒரு 10 நிமிசத்துல முடிஞ்சுடும்ன்னு சொன்னான்.

"நகர் மாநாடு" முடிஞ்சு 7 பேர் வெளியே வந்தனர். "தோழர், அவங்க உங்களுக்கு வேண்டியவங்க தனியா "பார்த்துட்டாங்கன்னு" முதல்லே சொல்லிருக்கலாம்ல" என்றபடி கெழட்டு காம்ரேட்டுகள் கலைந்து போக போண்டா அழைத்தான்.

நகர பொறுப்பில் உள்ளவரையும் , எங்கள் தொகுதி ச.ம.உ'வையும் சந்திக்க போயிருந்தேன். குறும்பட இயக்குநரும் வலைப்பதிவருமாகிய சோமிதரனின் "எரியும் நினைவுகள்" படத்தை ஒரு ஒருங்கமைந்த திரையிடலுக்கு எற்பாடு செய்திட இந்த சந்திப்பு.

வாங்க, நல்லாருக்கிங்களா, தோழர் இவரை தெரியுதா இறந்து போனாருல்ல மாவட்ட துணைசெயலாளர் அவரு பையன் என்றபடி என்னை ச.ம.உ'வுக்கு அறிமுகம் செய்து வைச்சார்.

ஆமா தோழர், நீங்க அந்த பெரியார் தி.க சம்பத்து கூடத்தானே சுத்துவிங்க

ஆமாங்க சம்பத்தண்ணன் தாமரைக்கண்ணன் மட்டுமில்லைங்க எல்லாரோடையும்தாங்க சுத்துவேய்ன்.

தோழர், இவரு எதோ சி.டி கொடுத்திருக்காராம் மா.மு.ச.மு சார்பில அதை திரையிடனுமாம்' என்று ச.ம.உ'விடம் சொல்லிவிட்டு


எது பத்தின படங்க இது ! என்றார்

யாழ் நூலக எரிப்பு சமந்தமா வெளி வந்திருக்கிற ஒரே ஆவன படம்ங்க இது - நான்

ஓ, ஏங்க தோழரு இந்த பிரச்சினை எப்பங்க முடியும், தெனம் செத்துகிட்டுதாங்க இருக்காங்க அந்தூருல. ஒரு முடிவே கெடையாதா என்றவரை ச.ம.உ இடைமறித்து


ஜெவிபி'ன்னு நம்மள மாதிரி ஒரு அமைப்பு அங்க இருக்குல்ல தோழர், அவங்க எம்.பி ஒருத்தரை கூட நம்ம தோழர். இந்து ராம் கூட ஒரு கூட்டத்தில பார்த்திருக்கேன். விடுதலைப்புலிகள் பாசிஸ அடிப்படையில செயல் படுறாங்கன்னுதான் நினைக்கிறேன், இல்லைங்களா ? என்றார் என்னைய பார்த்து

ம்ம்ம் அதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லைங்க இது பக்கசார்பில்லாம எடுக்கப்பட்ட படம், கண் எதிரிலையே ஒரு வரலாறு அழிக்கப்பட்டதுக்கு சாட்சிங்க - இது நான்

என்னங்க அஜித் படம் மாதிரி சொல்லிட்டுருக்கிங்க - தேவையற்ற "சோக்கடித்தார்" தோழர்

இல்லைங்களா பின்னே, 90,000 புத்தகங்கள் எரிக்கபட்டுருக்குங்க 15000 பாதுகாக்கபடவேண்டிய ஓலைச்சுவடிகள் எரிக்கப்பட்டுருக்குங்க அது பற்றிய ஆவணம் தாங்க இந்த குறும்படம்.

நீங்க "இஸ்கரா" படிக்கிறதில்லையா தோழர், அதுல எல்லாமே வந்துருமே. வெனிசூலாவிலா சாவேஸ் குசு போட்டாக்கூட "இஸ்கரா"ல டர்ர்ர்ர்ர்ர்ருன்னு கிழியும் தெரியுமா ? ஆமா தோழர் இந்த லைப்பெரிரி எரிச்சது எப்போ ? நான் ரெகுலரா படிச்சுட்டுதான் வாரேன் தோழர் இந்த சிலோன் மேட்டரு எல்லாம் என் கண்ணுல படலையே.... சரி கொடுத்திட்டு போங்க படத்த பாத்துட்டு சொல்லியணுப்புறோம்.

சரிங்க நா வரேன், அப்புறம் தோழர் ஒரு விஷயம். புலிகள் பாசிஸ்ட்டுகள்ன்னு சொல்லுற அளவுக்கு அரசியல் தெரியுறதுக்கு வாழ்த்துக்கள். இந்த யாழ் நூலகத்த எரிச்சு 25 வருசமாச்சு மொதல்ல அதை தெரிஞ்சுக்குங்க.
**********************************************************************************


உங்களை மாதிரி ஆளுங்க இருக்கிறவரைக்கும்

மசுர கூட புடுங்க முடியாது

Thursday, October 09, 2008

@ 7:56 PM எழுதியவர்: வரவனையான் 8 மறுமொழிகள்


ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம் - " புரட்சித்தலைவி "சமூக நீதிகாத்த வீராங்கனை" இதயதெய்வம் ஜெ.ஜெயலலிதா


இலங்கை தமிழர் விவகாரத்தில் கருணாநிதியின் கேள்வி-பதில் விளக்கமும், செயல்பாடும் வேடிக்கையாக உள்ளன.

தன்னுடைய மைனாரிட்டி அரசின் செயல்படாத தன்மையையும், கடமை தவறிய முறைகளையும், குறைகளையும் யாராவது சுட்டிக்காட்டினால், அதற்காக மற்றவர்கள் மீது சேற்றை அள்ளி வீசி பிரச்சினையில் இருந்து நழுவி தப்பித்துக்கொள்ளும் தந்திரத்தில் இறங்கிவிடுகிறார் கருணாநிதி.

இலங்கை கடற்படையினால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்; உள்நாட்டு சண்டை என்ற பெயரில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கருணாநிதி சிறிதும் அக்கறையின்றி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினேன். தனது குடும்பத்தாருக்கும், தனது கட்சி விசுவாசிகளுக்கும் செல்வம் கொழிக்கும் பதவிகளைப் பெற, மத்திய அரசில் தனக்கு இருக்கும் செல்வாக்கை தயக்கமின்றி பயன்படுத்துகிறார்; இந்திய அரசை மிரட்டுகிறார். ஆனால், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில், சென்னையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை வெளியிடுவதோடு
நின்றுவிடுகிறார் என்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

என்னுடைய அறிக்கையினால், எனது குற்றச்சாட்டினால், "தமிழினத் தலைவர்" என்று தனக்குத் தானே வழங்கிக் கொண்ட பட்டத்திற்கு ஆபத்து ஏற்படுவதைக் கண்டு நிலைமையை சமாளிக்க, கருணாநிதி என் மீது குற்றம் சுமத்துகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நான் நிலையில்லாமலும், மனம் போனபடியும் பேசுவதாகப் பழி சுமத்துகிறார்.

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாடும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடும் எல்லோருக்கும் நன்கு தெரிந்ததே.

1. இலங்கையின் மற்ற குடிமக்களைப் போல தமிழர்களும் சம உரிமையுள்ள குடிமக்கள். அவர்கள் யாருக்கும் இரண்டாந்தரமானவர்கள் அல்ல.

2. சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும், கல்வியில், வேலை வாய்ப்பில் சமத்துவம் பெறவும், இலங்கைத் தமிழர்கள் நடத்தும் நெடிய போராட்டத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

3. சுய நிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் தார்மீக போராட்டத்தை நாங்கள் முழுமையாக அங்கீகரிக்கிறோம்.

4. இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, தமிழர்கள் தங்களுக்கென சுயாட்சி உரிமையுள்ள தமிழ்த் தாயகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் வேட்கையை நாங்கள் புரிந்து, ஏற்றுக் கொள்கிறோம்.

பகை மூண்டு, திசை மாறிப்போன ஆயுதப் போராட்டத்தினால், பல்லாயிரம் தமிழர்கள் அத்தகைய பகையில் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டு வேதனைப்படுகிறோம். அதற்குக் காரணமான ஆயுதப் போராட்டத்தை எதிர்க்கிறோம். அத்தகைய சகோதரப் பகையினால் மூண்ட ஆயுதப் போரின் விளைவாக, இந்தியத் திருநாட்டின் முன்னாள் பிரதமர் படுகொலை
செய்யப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். ஏற்க மறுக்கிறோம். எதிர்க்கிறோம். தமிழர் விடுதலைக்காகப் போராடிய எண்ணற்ற தலைவர்கள் இலங்கை மண்ணிலேயே கொன்று குவிக்கப்பட்டதை, பல தமிழ்த் தலைவர்கள் வெடிகுண்டு வீசி பொசுக்கப்பட்டதை ஏற்க மறுக்கிறோம். எதிர்க்கிறோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இரு வேறு பக்கங்கள் உள்ளன என்பதை தெளிவுற உணர வேண்டும். சுயநிர்ணய உரிமைக்கென்ற தமிழர்களின் போராட்டம் என்பது ஒருபுறம்; ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது என்பது மறுபுறம். முதலாவதை ஆதரிக்கிறோம். இரண்டாவதை கடுமையாக எதிர்க்கிறோம். தமிழர்களின் சுய உரிமைப் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவு, ஒத்துழைப்பு, நல்லெண்ணம் என்றைக்கும் மாறாதது. பயங்கரவாதச் செயல்களை, ஆயுத மோதல்களை, அதிலும் அத்தகைய மோதல்களால் இந்தியதியாவின் சட்டம் ஒழுங்கும், பொது ஒழுங்கும், அமைதியும், இறையாண்மையும் சீர்குலைவதை ஒருநாளும் ஏற்க முடியாது. தமிழ் பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம். அதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.

தனது சுயநல நோக்கத்திற்காக ஒன்றோடு ஒன்றை குழப்பி, எங்கள் நிலைப்பாட்டைக் கொச்சைப்படுத்த தனக்கே உரித்தான பாணியில் கருணாநிதி முயல்கிறார்.

மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கை, இலங்கைத் தமிழர்கள் நலன் காக்க கருணாநிதி பயன்படுத்த வேண்டும்; பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபருடன் பேசி, தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்த இந்தியாவின் கவலையைத் தெரிவித்து, அதனை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்று கருணாநிதி பிரதமரை கேட்டுக் கொள்ள வேண்டும் என்று தான் நான் கேட்டேன்.

நான் இப்படி வலியுறுத்திக் கூறியதால், "பிரதமருக்கு எல்லோரும் தந்தி அனுப்புங்கள்" என்று ஒரு அதிமேதாவித்தனமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் கருணாநிதி. இந்த அறிவிப்பு மக்களிடம் எடுபடவில்லை, அவ்வாறு செய்ய மக்கள் தயாராக இல்லை என்பது தெரிந்ததும், மத்திய கூட்டணி அரசை விட்டே வெளியேறுவோம், அதைப் பற்றியும் யோசிப்போம் என்று பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார்.

டி.ஆர். பாலுவுக்கு கப்பல் போக்குவரத்துத் துறையை தரவில்லை என்பதால், 2004 ஆம் ஆண்டு மே மாதம் டில்லிக்கே சென்று, ஏழு திமுக அமைச்சர்களையும் பதவி ஏற்க வேண்டாம் என்று உத்தரவிட்டவர் தான் கருணாநிதி.

தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் திரு. கே. சந்திரசேகர் ராவ், தனக்கு ஒதுக்கப்பட்ட கப்பல் போக்குவரத்துத் துறையை விட்டுக்கொடுக்க முன்வந்து, அன்றைக்கு டி.ஆர். பாலுவுக்கு அந்தத்துறை ஒதுக்கப்பட்டதால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காப்பாற்றப்பட்டது. இல்லையேல் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய அரசு சில நாட்களுக்குள்ளாகவே கவிழ்ந்திருக்கும். தனது சுயநலம் என்றால், கருணாநிதி எதுவரை செல்வார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ஆனால், தமிழர்களின் நலன் என்று சொன்னால், கருணாநிதி பொதுக்கூட்ட மேடைகளில் முழங்குவார். எல்லோரையும் தந்தி கொடுக்கச் சொல்வார். தமிழ் மக்கள் நலனில் அவருக்கு உள்ள அக்கறை இவ்வளவு தான்!

தற்போது இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தின் காரணமாக, ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் இடம்பெயர்ந்து, வசிக்க இடமில்லாமல், அவர்களுடைய சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உண்ண உணவு, தங்க இருப்பிடம், மருந்து ஆகியவை இல்லாமல் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை இராணுவத்தின் உக்கிரத் தாக்குதலுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். பல மாதங்களாக இந்த நிலைமை தான் இலங்கையில் நிலவுகிறது.

தந்திகள் அனுப்புவதனாலோ, அல்லது இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் கீழ்நிலை அலுவலரை அழைத்து கண்டனம் தெரிவிப்பதனாலோ, பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை. மத்தியிலும், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு, வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை தமிழர்கள் குறித்து எள்ளளவாவது கவலை இருக்க வேண்டாமா?

உணவு, உடை, இருப்பிடம், மருத்துவப் பொருட்கள் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை திரட்டித் தர மத்திய அரசு முன்வர வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி என்ற முறையிலும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி - புதினம்

@ 10:36 AM எழுதியவர்: வரவனையான் 22 மறுமொழிகள்

குயிலியை மறக்க முடியுமா ! தமிழ் குலம் உள்ளவரையில் அவர்களின் தியாகமும் வீரமும் எந்நாளும் போற்றுதலுக்குரியதல்லவா. இன்றைக்கு 228 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளையரின் அடிமைத்தளையறுக்க வாள் பிடித்து களம் கண்ட வேலு நாச்சியாரின் மெய்காவலராய் இருந்தவர்தாம் குயிலி.

" பகையே எம்மை மண்ணில் புதைத்தாய் எம் மண்ணை எங்கே புதைப்பாய்"
என்கிற உணர்ச்சி வரிகளை காசி ஆனந்தனை பாட செய்த செம்மணி படுகொலைகளை புரிந்து கணக்கில்லா தமிழர்களை உயிருடன் புதைத்து எக்காள சிரிப்புடன் வலம் வந்து கொண்டிருந்த இன எதிரியை "கடவுள் மறந்தாலும் , கரும்புலிகள் மறப்பதில்லை" என்கிற வரிகளை உண்மையாக்கி களம்காணும் புலிப்போத்துகளின் ஆதித்தாயல்லவா குயிலி.

8 ஆண்டுகள் மறைவு வாழ்க்கைக்கு பின் தொடர்ந்த தாக்குதல்களில் வெள்ளையரை விரட்டி தாய்நிலத்தை மீட்டு வெற்றி வாகை சூடிவரும் வேளையில் இன்னும் சிவகங்கையை மட்டுமே மீட்க படவேண்டியிருந்தது. மீட்டால் மீண்டும் நாடு சமைத்துவிடலாம். சிவகங்கைக்கோட்டையோ காவல் பலமிகுந்தது. கோட்டைக்குள் யாருக்கும் அனுமதியில்லை மரபுவழி போருக்கும் வாய்ப்பில்லை. வேலுநாச்சியாரிடம் போதிய ஆட்களில்லை. ஒரு கெரில்லா வகை தாக்குதல் மட்டுமே சாத்தியம். அதே வேளை கோட்டையையும் கைப்பற்றியாக வேண்டும்.

அப்போது ஒரு செய்தி வருகிறது கோட்டைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி அம்மனை விஜயதசமி அன்று தரிசிக்க பெண்களை மட்டும் அனுமதிக்க வெள்ளையர் முடிவு செய்துள்ளதாக. வேலு நாச்சியார் இறுதி தாக்குதலுக்கு ஆயுத்தமாகிவிட்டார். அவர்களுக்கு ஒரே பிரச்சினை கோட்டை மேலிருக்கும் துப்பாக்கி காவலர்களும் அவர்களுக்கு கரிமருந்தும் தோட்டாவும் வழங்கும் ஆயுத தளவாட அறையுமே. ஆனால் இதை விட்டால் வேறுவாய்ப்பில்லை என்பதே தளபதிகளாய் இருந்த மருது சகோதரர்களின் கருத்து. விஜயதசமி காலை எளிமையான தோற்றத்தில் வேலுநாச்சியாரும் அவரை பின்பற்றி குயிலியும் சிறு பெண்கள் படையுடன் உள்ளே நுழைந்து கோவிலருகே சென்று அம்மனை வணங்கியவாறே முதல் தாக்குதலை தொடுத்தனர். கடும் சண்டை துவங்கியது. களமாடிய அரசி குயிலியை தேடுகிறார். காணவில்லை சற்று நேரத்தில் மருது சகோதரர்களின் படை உதவிக்கு உள்ளே நுழையுமுன் கோட்டை சுவற்றிலொரு பெண் சீலையெல்லாம் நெய்யினை ஊற்றிக்கொண்டு ஆயுத கிடங்கினில் குதித்தாள். வெடித்து சிதறியது கிடங்கு. வெள்ளையர் ஓட வென்றது தமிழ்ப்படை.

தமிழ்க்குலத்தின் முதல் தற்கொடைதாரிதான் வீரமறத்தி குயிலி. அவரின் நினைவுநாள் இன்று.


*************************************************************************************

அலறி அடித்துக்கொண்டு ஓடுகிறான் சோ. ஊடகமெல்லாம் பி.ஜெ.பி கூட்டணி குறித்து பேச போனார் என்றே செய்தியடிக்கிறது. ஆனால் உண்மையில் இல்லாத குடுமியை ஆட்டிக்கொண்டு அது ஓடியது ஜெயலலிதாவின் அன்மைய அறிக்கையை கண்டுதான். ஜெயலலிதா ஒரு கடும்போக்காளர், அவரின் பலநடவடிக்கைகள் எனக்கு ஏற்பில்லாதவைதாம் இருப்பினும் அவர் ஏதேனும் ஒரு முடிவெடுத்தால் திடமாய் இருப்பார் என்று உலகறியும் அது சரியானாலும் தவறானாலும். ஈழப்பிரச்சினையில் ஜெயலலிதா அம்மையாரின் அன்மைய அறிக்கை தமிழ்மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவரின் மனமாற்றம் ஈழப்பிரச்சினைக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் நன்மையே.

இந்திய பார்ப்பனிய அதிகார வர்க்கதின் நைந்து போன குரலான சோ அலறியடித்து ஒடுகிறான். முதலில் சொல்லிப்"பார்ப்பான்" பிறகு மிரட்டிப்பார்ப்பான், நாமும் பார்ப்போம் சோவின் மிரட்டலா அல்லது ஜெவின் பிரபல "அசட்டு துணிச்சலா" என்று.

Wednesday, October 01, 2008

@ 8:49 PM எழுதியவர்: வரவனையான் 3 மறுமொழிகள்

Tuesday, September 30, 2008

@ 8:43 PM எழுதியவர்: வரவனையான் 16 மறுமொழிகள்


எங்கயிருந்துதான் இப்படி யோசனைலாம் வருதோ தெரியலை... உண்மையாவே ஒக்காந்து யோசிப்பாங்களோ. மேட்டர் ஒன்னுமில்லை. நம்ம "இம்சை மந்திரி 13ம் பவர்கேசி" ( சோர்ஸ் : லூசுப்பையன், ஆ வி ) புண்ணியத்துல 90 களீன் துவக்ககால யாழ்ப்பாணம் மாதிரி ஒட்டுமொத்த தமிழ்நாடும் மாறிகிட்டு வருது. இதுல ஆட்டைய போடுறவனுங்களோ செம குஜாலா பப்பரப்பான்னு ஜன்னல திறந்து போட்டு வீராச்சாமிய திட்டிகிட்டே படுத்துருக்கிறவன் வீடா பார்த்து குச்சி வழியா ஹேங்கர்ல தொங்குற சட்டையில ஐம்பதுகாசுகூட மிச்சம் வைக்காம லவட்டிருறானுங்க. எனக்கு தெரிஞ்ச ஒருத்தன் வீட்டு ஜன்னல் வழியா குச்சி விட்டு காசு எடுக்க பாத்துருக்கானுங்க சட்டை பையில இருந்ததோ 40 ரூவா, ஆனாலும் இவன் கவலையா இருந்தான் ஏண்டான்னு கேட்டா திருடவிட்ட குச்சி முனையில தார் தடவியிருந்துருக்கானுங்க. வோன் ஹுசைன் சேர்ட் 2300 ரூவாயாம் கே..கொள்ளேன்னு அழுவ நம்மாளு.

இது பத்தாதுன்னு இன்னோன்னு பண்ணிருக்கானுங்க பாருங்க அது இத விட கொடுமை . அறிவிக்கபட்ட மின்வெட்டு நடமுறைக்கு வந்த நாலாம் நாளூ காலையில 6 - 9 சாயங்காலம் 6 - 7 ராத்திரி 11 - 12ன்னு கரைக்ட்டா கட் பண்ணிட்டு இருந்தாய்ங்களா. லகுடபாண்டிக ஐடியா போட்டு ஒரு 400 மீட்டருக்கு வயர வெட்டிட்டு போயிட்டானுங்க இன்னைக்கு அதோட சந்தை மதிப்பு3 1/2 லட்சமாம். தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேசனுக்கு வேற வேலையா போயிருந்தப்போ ஜட்டியோட ஒக்கார வச்சு வெளுத்துகிட்டு இருந்தாய்ங்க கம்பிய அறுத்தவனையும் வாங்கின கடைக்காரனையும் அப்போ கிடைச்ச ஸ்கூப் இது. "ஐடியா மணி"ங்களை ரொம்ப அடிக்காதிங்கன்னு கேட்டுகிட்டேன்.

Sunday, September 21, 2008

@ 4:20 PM எழுதியவர்: வரவனையான் 13 மறுமொழிகள்


குட்டியினை கவ்வி செல்லும்
பூனையாய் இருளினை எடுத்து
வந்தது ஒற்றை நிலா
தூரில் கிடக்கும் ஒயினை
பனிக்கட்டிகளால் மேலெழுப்பி
பௌதீக விளையாட்டின் தீவிரத்தில்
அதே காகம்...
சீறாத சர்ப்பம் ஒன்று
முட்டைகள் விழுங்கி தனதிற்கு
அடை வெப்பம் பகிரும் கணத்தில்
உன் வெம்மையான கரங்களில்
மற்றொரு கோப்பையை நிறைத்தாய்
மதுவினை ஒத்த உன் குருதியால்

Thursday, September 11, 2008

@ 7:44 PM எழுதியவர்: வரவனையான் 6 மறுமொழிகள்

வெக்கம் மானம் சூடு சொரனை இதுல்லாம் இருக்குன்னு சொல்லிட்டு திரியறவன் செய்யிற வேலையா இது நீங்களே சொல்லுங்க மக்கா...

Injured Indians still in hospital

இத போயி நாம கேட்டாக்க அண்டைநாடு பிராந்திய நலன் காக்கும் ராஜ தந்திரநடவடிக்கை அது இது சல்ஜாப்பு சொல்லுவாங்க.ஏற்கனவே ஒரு தடவ டவுசர கழட்டி அனுப்புனாங்கங்கிற ஒரு காரணத்த வச்சுகிட்டு சும்மா அவங்கள போயி நோண்டிகிட்டு இருந்தா இப்படித்தான் பொடனியோட ஒன்னு போட்டு அனுப்புவாங்க.

நம்ம இந்திய அதிகாரிகள் போயி ஈழத்துல அல்லக்கை வேலை பாக்கிறதைதான் சொல்லுறேன் மக்கா. தெரியாமத்தான் கேக்கிறேன் அவங்க தனிநாடு வாங்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை. எதுக்கு "பேஸ்மட்டம் (பசெமென்ட்) வீக்"க்குன்னு வடிவேலு ஆட்டிகாட்டுறது மாதிரி ஊரு பூராம் ஆட்டிகாட்டுறீங்க.உடனே அவர்கள் வாங்கினால் தமிழ்நாட்டு தமிழர்களும் கேட்பார்கள் அப்படின்னு ரூம் போட்டு சிரிக்கிற மாதிரி ஒரு பதிலு வேற சொல்லுவிங்க. அப்போ பங்களாதேஷ்'ன்னு ஒரு நாட்ட தனியா வாங்கி கொடுத்த பிறகு இத்தனை வருஷமா இந்தியாவின் வங்காள மக்கள் தனிநாடு கேட்கலையே, இத என்னான்னு சொல்லுறது. சரி "இந்த பிராந்திய வல்லரசு"ன்னு சொந்த செலவுல நாமளே பிடப்பு கொடுத்தாலும் தலைக்கு மேல செவப்புகொடி (நேபாளத்தில்) ஏறினப்போ சும்மாத்தானே பாஸு இருந்திங்க. உள்ளார பூந்து மன்னராட்சியை காப்பாத்தி கொடுத்திங்களா. செஞ்சுருந்திங்கன்னா கேவலமாயிருக்கும் ஏன்னா அங்க மக்களும் போராளிகளின் பக்கத்தில்தான் இருந்தாங்க இப்போ ஈழத்தில இருக்கிறத போல.


இப்படி ஒரு அருமையான வலிமையான ராணுவ ரீதியான பதிலை குள்ள நரி அரசியல் நடவடிக்கை மேற்கொள்ளும் வல்லாதிக்க நாடுகளுக்கு எந்த விடுதலை அமைப்பும் வழங்கியிருக்காது.

"வவுனியா படைத்தளத்தில் இந்திய அதிகாரிகள் பணியாற்றியதனை ஒப்புக்கொண்டது இந்திய தூதரகம்"


மயில்சாமி ஒரு படத்தில் பெல்ட்டுக்கு பதிலா தேங்காநார் கயிறு கட்டிருப்பாரு கூட இருக்குற நண்பர்கள் அதை பப்ளிக்குல அவுத்து விட்டுருவாங்க கூட இருக்குற நண்பர்கள். அவரும் பஸ் ஸாண்டுல "பெப்பரப்பே"ன்னு காட்டிக்கிடு நிப்பாரு அது மாதிரித்தான் நீங்க இப்போ நிக்கிறீங்க இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களே.

ஒரு நாட்டுல வாழுறது அந்தநாட்டு மக்களுக்கு பெருமையா இருக்கனும், குறைந்த பட்சம் மக்களையும் அவர்களின் இன மொழி அடையாளங்களையும் உணர்வுகளையும் மதிக்கிற வகையில இருக்கனும். அப்படி இல்லாம போச்சுன்னா ஏன்டா இங்க பொறந்து தொலைச்சோம்ன்னு தலையில அடிச்சுகிட்டுத்தான் வாழுவாய்ங்க( இப்போ நான் அடிச்சுகிற மாதிரி ) அப்படி அடிச்சுக்கிறது நாட்டுக்கு நல்லதில்லை.ஒரு சூட் ரூம் போட்டு 4 புல் வாங்கி வச்சு யோசிங்க மக்கா.....

Tuesday, September 09, 2008

@ 4:52 PM எழுதியவர்: வரவனையான் 9 மறுமொழிகள்

உண்மையாவே நல்லாத்தான்யா இருக்குது இந்த நோன் ப்ளோக்கிங். பொட்டீக்கடைதான் மொதல்ல சொன்னான், நிம்மதியா இருக்கு நண்பா'ன்னு. சரி நாமலும் கொஞ்ச நாளைக்கு ஏறக்கட்டுவோம்ன்னு ஒரு மையமிழந்த மனநிலையில முடிவு எடுத்து தூயாக்கு கூட சொல்லாம ஜூட் விட்டாச்சு. விட்டுட்டு பாத்தா ஜெமோங்கிறாங்க ரெமோங்கிறாங்க, சாரு வேற ரெகுலர ப்ளோக் படிக்கிறாருன்னு அவருக்கு கடிதமெழுதி கலாய்க்கிறாய்ங்க, கொஞ்கம் டர்ராத்தான் இருந்துச்சு.


நோ கமண்ட்ஸ்....

லக்கியும் அதிஷாவும்

இதுல இந்த பக்கம் தெனமும் "அன்பா" போனில மரியாதையா மறுபடி ப்ளோக் எழுதப்போறியா இல்லையான்னு தூயா வேண்டுகோள் வைத்துக்கொண்டிருக்க, அலுவலத்திலிருந்து தினமும் " நீயே ப்ளோக் பக்கம் போறதில்லைங்கிறது ரொம்ப பெருமையா இருக்குடான்னு" கண்ணுல வர தண்ணிய தொடச்சுகிட்டு பிறேம் என்னை ஒரு தியாகி ரேஞ்சுக்கு பேச. நான் "ஏய்" பட வடிவேலு மாதிரி "எந்த பஸ்லையும் அண்ணே கம்பியை பிடிச்சதேயில்லைனு" நான் ப்ளோக்கின்னா ( நான் ப்ளோக்கின் பண்ணமாட்டேன்னு அர்த்தம்ன்னு ஒலக சீன் போட்டுகிட்டு இருந்த வேளையில செந்தழல்ட்ட இருந்து போன் மறுபடி எழுதப்போறிங்க போல வாழ்த்துக்கள்ன்னு, எவவேய்ன் சொன்னான்னு கேட்டபோதுதான் தெரிஞ்சது நான் மறுபடியும் எழுத வந்துட்டேனாம்

நீதி : என்னாதான் உயிர்த்தோழியா இருந்தாலும் பாஸ்வேர்டு கொடுக்ககூடாது இல்லைன்ன அவங்க சொல்லுறத கேட்டுக்கனும் என்னைய மாதிரி ஜபுரு காட்டினா இப்படித்தான் செந்தழல் போன் பண்ணி எனக்கு நான் மறுபடி வந்தது தெரிஞ்ச கதை ஆகிப்போயிடும்


யாரோ குசும்பு பிடிச்ச ப்ளோக்கர் "வெல்கம் பேக்"ன்னு இந்த படத்த மெயில்ல அனுப்பிருக்காங்க


Monday, April 14, 2008

@ 5:51 PM எழுதியவர்: வரவனையான் 5 மறுமொழிகள்அனிச்சையாய் உன் சட்டையொன்று
காற்றில் ஆடி என் இருப்பினை
உணர்த்திய பொழுதில்
நெடுங்காடு கடந்து கொண்டிருந்தேன்
மிருகம் இருந்த தடயங்களற்ற
ஒற்றையடி முடிந்த இடத்தில்
குழந்தை போல் குறுகி
ஆடையின்றி நீ உறக்கம் கலைத்தாய்

Friday, April 11, 2008

@ 6:36 PM எழுதியவர்: வரவனையான் 6 மறுமொழிகள்

//

பாலா:
1. அசுரன்,பனியன் தியாகு,ஜமாலன்,ஸ்டாலின்,ஸ்பார்டகஸ்,வலையுலக ஓ என் ஜி சி பெரியார் அய்யா,கொளத்தூர் மணி,தமிழ் குரல், போன்ற ம.க.இ.க/பெ தி க பொலிட் பீரோ ஆசாமிகள் வசதியாக வாழ்ந்து கொண்டே நக்சல் தீவிரவாதிகளாக இருப்பதற்கு காரணம்:
அ) சந்தா வசூல் செய்து ஓசியில் சிலி பீஃப்,விஸ்கி,கோல்ட் ஃப்ளேக் அடிக்கும் வாய்ப்பு இருப்பதாலா? அல்லது ஆ)நக்சல் தீவிரவாதத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவார்கள் வாழ்விழந்தும்,வன்முறையிலும் துடிதுடித்து மாளும் காட்சியைப் பார்த்து ரசிக்கலாம் என்ற குரூர எண்ணத்தாலா? விளக்கமா பதில் சொல்லுங்கய்யா.

பதில்: நீங்கள் சொல்பவர்கள் எல்லோருமே தாங்கள் கூறுவதை அப்படியே நம்பிவிடுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. தானும் கஷ்டப்பட்டு மற்றவரையும் கஷ்டப்படுத்த வேண்டுமென ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது. மேலும் ஒரு தேவையில்லாத குற்ற உணர்ச்சியும் இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் அம்மாதிரி பேசும் பலர் மென்பொருள் நிபுணர்களாக இருந்து நன்கு சம்பாதிக்கின்றனர். தேவையற்ற குற்ற உணர்ச்சி. //
இது மாதிரி அனாமத்துகளை கேள்வி கேக்க வச்சு நாங்களும் டவுசர அவுக்க முடியாதா என்னா ?தோழர்களை எவனோ ஒரு பொறம்போக்கின் பெயரில் வந்திருக்கும் கேள்வி வாயிலாய் அவமரியாதை செய்திருக்கும் டோண்டு அவர்களை மிக வன்மையாய் கண்டிக்கிறேன்

Tuesday, April 01, 2008

@ 6:56 PM எழுதியவர்: வரவனையான் 14 மறுமொழிகள்

இவனை எங்கையாவது எழுதும்போது சொல்லனும்யான்னு நினைச்சுகிட்டு இருக்கிறவன் தான் இந்த பதிவின் நாயகன் ஜே ஜே. முதலில் பெயர் விளக்கம் ஜே என்றால் ஜொள்ளு பெயர் ஜெயக்குமார் என்பதால் ஜொள்ளு ஜெயக்குமார்.

பயபுள்ள வண்டியில வரும்போது எதவது போஸ்ட்மரத்துல பழைய சீலை துணி சிக்கிருந்தா கூட நின்னு பார்த்துட்டு வருவான் அவ்வளவு ஜொள்ளு. இவன் பைக் ஓட்டி நாம பின்னால உட்காந்து போன முன்னாடி எதாவது ஒரு பொம்பளை போனாப்போதும் அப்படியே 180 டிகிரி கோணத்துல தலை திருப்பி அது "அட்டு" பிகராய் இருந்தால் கூட "கடவாப்பல்லு உள்நாக்குலாம்" தெரியிற அளவுக்கு ஈஈன்னு ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு வருவான் . எனக்கு எப்படா இவன் இறக்கிவிடுவான்னு இருக்கும் .

சைட் அடிக்கலாம் அது அந்த பொண்ணுக்கு மட்டும் தெரியனும் என்கிற அளவுக்கு குறைந்தபட்ச ஜனநாயக விதிமுறைப்படி சைட் அடிப்பவன் நான். இவனோ பஸ்ஸடான்டுல ஒரு பொண்னை பார்த்தா கொஞ்ச நேரத்துல மொத்த பஸ் ஸ்டாண்டே அந்த பொண்ணை வேடிக்கை பர்க்கிற மாதிரி பார்ப்பான். நானும் சொல்லி சொல்லி ஒஞ்சு போயிட்டேன்.


எப்ப பாத்தாலும் "அதே" நெனப்புல இருக்கிறவன என்னாதான் செய்யுறது. ஒரு நா இப்படித்தான் எதோ குத்துப்பாட்டு தொலைக்காட்சியில ஓடிட்டு இருந்துச்சு , இவன் ஆரம்பிச்சுட்டான் "டேய் அந்த புளூ டவுசர் போட்டு ஆடுதுல அந்த புள்ள செம பிகர்ல"ன்னு டேய் எனக்கு முன்னாடி ஆடுறவ மூஞ்சியே தெரியலை இதுல மூணாவது வரிசையில எங்கடா பாக்குறது"ன்னு சொல்லி சேனல ஸ்கிப் பண்ணி இவன் இமுசையில இருந்து தப்பிக்கலாம்னு பார்த்தா அடுத்த சேனல்ல என்னையே மெய் யுணர்த்தும் "கத்தாழ கண்ணால குத்தாதே" ஓடீட்டு இருக்கு. ஒரு நிமிசம்தான் ஆச்சு அந்த கிரீன் சாரி தாண்டா அன்னைக்கு நான் சொன்னவ" . டென்சனாகி முடியல முடியல என்று அலறி இவனுக்கு ( முன்னாடியே பிளான் பண்ணியபடி ) ஒரு நம்பர் கொடுத்தேன். இதுதாண்டா அவ நம்பர் பேசி கரைக்ட் பண்ணிக்கோனு. அது அந்த ஜுனியர் ஆர்டிஸ்ட் நம்பர் என்றதும் செம குஜாலாகி வாங்கி போனான்.

நாலு நாள் கழிச்சு சோகமாய் வந்து டீ குடிச்சுகிட்டு இருந்தவனிடம் கேட்டேன் "என்னாடா" மடிச்சிட்டியான்னு.

டீ கிளாச தூக்கி போட்டு துரத்த ஆரம்பிச்சுட்டான் . நான் எஸ்கேப்பு.

விஷயம் ஒன்னுமில்லை. நான் கொடுத்த நம்பர் ஒரு ஆர்டிஸ்ட் நம்பர்தான் ஆனா அது நாடக நடிகை. தலைவன் ரொம்ப ப்ரொபொசனலா ஆரம்பிச்சு இருக்கான் தான் கொடைக்கானலில் ரிசார்ட் வச்சு இருப்பதாகவும் போர்டு கார் இருப்பதாகவும் ( உண்மையில் மாருதி எஸ்டீமுகும் போர்டுக்கும் அவனுக்கு வித்தியாசம் தெரியாது) பேச்சை துவங்கி ஒரு மாதிரி ஸ்மூத்தாக போய்க்கொண்டிருந்த வேளையில் கேட்டிருக்கிறான் " கொடைகானல் டேட்ஸ் கொடுத்திங்கன்னா சொல்லிருங்க என்கிட்ட ஒரு வார்த்தை"யின்னு அதுக்கு அந்த பெண் "இல்லிங்க அங்கல்லாம் குளிரும் , அதும் போக அவ்வளவு தூரத்தில இருந்து யாரும் புக் பண்ன மாட்டாங்கன்னு" . சரின்னு சொல்லி போனை வைத்து மறுநாள்
பழையபடி ஜொள்ளியபடி போன் போட்டுருக்கான். அலோ"ன்னு தூக்க கலக்கத்துல ஒரு குரல். "தேனு ( தேன்மொழியை செல்லமாய் கூப்பிடுறானாம்) நான் தான் ஜெயா பேசுறேன். நான் வேணும்னா கிளம்பி வரவா"ன்னு கேட்க எதிர்முனையில இருந்து " அட இப்ப வேணாங்க நைட் எல்லாம் கண்ணு முழிச்சு காத்தவராயன் நாடகம் நடிச்சுட்டு வந்தது டய்ர்டா இருக்கு" அதுவுமில்லாம நாளைக்கு என் பேத்திக்கு காது குத்து, ஒரு ரெண்டு நா சென்டு வாங்க"ன்னு சொல்ல இந்த பக்கம் பார்ட்டி மயங்கி பொத்துன்னு விழுந்துருக்கான்.


இது இன்னோரு சம்பவம். ஒரு முறை எங்கோ ஒரு விடுதியில் நண்பனுடன் தங்க சென்றுள்ளான். போன இடத்தில் இவனுக்கு முன்பாக ஒரு ஜோடி அறையை பதிவு செய்துகொண்டு இருந்துள்ளனர். நம்மாளு ஒரு மாதிரி வழிஞ்சு அந்த ஜோடியா வந்திருந்த ஆன்டியை கரைக்ட் பண்ணிட்டான். அவர்கள் லிப்டில் ஏறும் போதும் இவர்களும் ஏறி இருக்கிறார்கள் இருவருக்கும் எதிர் எதிர் அறை. தன்னோடு வந்த (கணவன் ? ) ஆண் அறைக்குள் நுழைந்த வேளையில் அந்த ஆண்டி இவனை பார்த்து "வெயிட் பண்ணு தூங்க வச்சிட்டு வந்திடுறேன்னு" சைன்னை(Sign) போட்டு போயிருக்கு. இவன் தன்னோடு வந்த நண்பனுக்கு சொந்த செலவில் சரக்குலாம் வாங்கி கொடுத்து தூங்க வச்சு. வெளியே வந்து காரிடாரில் செல்போனில் யாருக்கோ மொக்கை போட்டபடி "ஆண்டி"க்காக காத்திருந்திருக்கிறான். அந்தா இந்தா என்று இரவு 12ஐ தாண்டிவிட்டது. காலெல்லாம் வலியெடுக்க ஓய்வாய் அங்கிருந்த ஷோபாவில் உக்காந்தவன் அப்படியே தூக்கிவிட்டான். இப்போ தான் நடந்தது "ஆண்டி - கிளைமாக்ஸ்". தன் அறையிலிருந்து பூனை போல் வந்த ஆண்டி அவன் அறைக்கு திறந்திருந்த கதவின் வழியாய் உள்ளே போய்விட்டார். விளக்கு போடப்படவில்லை. சரக்கு அடித்து ஆப் - கண்டிஷனில் படுத்திருந்த ஜே.ஜேயின் நண்பனுக்கு அடித்தது யோகம். காலையில் கொட்டாவி விட்டபடி அறைக்கு வந்தவன் மெத்தையில் கிடந்த மல்லிகை பூக்களை பார்த்து பக்கத்துல ஒரு ரூம் போட்டு அழுதுருக்கான்.


- வேற மேட்டரும் இருக்கு அப்புறம் சொல்லுறேன்
பதிவர் எழுத்தாளர் செல்லமுத்து குப்புசாமியுடன் வரவனையான்

Sunday, March 30, 2008

@ 12:27 PM எழுதியவர்: வரவனையான் 8 மறுமொழிகள்
விலகுதல் விலத்தல்
இரண்டும் வன்மம்
விலகுதல் உட்புகுந்தாடும் வலி
விலத்தலோ அதனின் உச்சம்
"உன்னை விட்டு விலகி போகிறேன்"
என்ற நொடி ஒரு கவிதைக்கானது

இரண்டுமறியா பாலகனாய்
ஒரு நாய்க்குட்டியின் துள்ளலோடு
உன் கெண்டை கால் கவ்வியபடி
நான்....

Thursday, February 28, 2008

@ 3:03 PM எழுதியவர்: வரவனையான் 49 மறுமொழிகள்

எழுத ஒன்னுமில்லை எல்லாமே படம்தான். படத்துக்கு கீழே குறிப்புகளும் உண்டு. கும்மி பதிவு இது ஆகவே கும்மலாம்

இந்த படத்துக்கு முன்னாடி (பின்னாடிதான் தெரியாதே :P ) பெரிய கூத்து நடத்தினார் பாலா மாம்ஸ். சென்னை செனடாப் ரோடிலிருக்கும் "காஃபி டே" போனோம். ஒரு "பொட்டீக்கடை" காஃபி டே'க்கு போகுதே அடடே ஆச்சரியக்குறி என்றபடி கலாய்த்துக்கொண்டு போனால் பின்னால் வந்து கொண்டிருந்த பாலா மாம்ஸைக்கானோம். பாத்தா எதிரில இருந்த நாயர் டீக்கடைக்கு போயிட்டாரு. டோவ் மாம்ஸு இங்க வாரும்யான்னு கூப்பிட்டதுக்கு சொன்னாரே ஒரு பதிலு " மாப்ளா நான் இன்னும் குளிக்கலை" நீங்க சாப்பிட்டு வாங்க'ன்னு. பொட்டீக்கடை டென்சனாகி யோவ் வாய்ய சரக்கடிக்க போகலாம் இந்தாளு இப்படி தாலியறுக்கிறாருன்னு ஒரே ரகளை. ஒரு வழியாய் இதுவும் அது போல டீகடைத்தான் என்று மாம்ஸுக்கு புரியவைத்து உள்ளார அழைத்து போனோம்.

இதுவுமது


இதுவுமதுபுதுச்சேரி வலைப்பதிவர் சந்திப்புக்கு முதல் நாள் மாலை பாண்டிச்சேரி கடற்கரையில் தோழர்.பொட்டீக்கடை சத்தியா ( ஒன்னுமில்லை பையன் ரெண்டு பீர்தான் உட்டிருக்கான்)

என்ன கொடுமை சார் !

ஒரு குறி சொல்லும் கிழவி சத்தியாவை மடக்கி " தம்பீ மொகத்த பாத்தா வெளீநாட்டுக்கு போற யோகம் வந்திட்ட போல இருக்கு'ன்னு சொல்ல சரியா அப்போ பார்த்து என் மொபைலில் குற்றால குறவஞ்சி பாடல் "மகாநதி"ஷோபனா குரலில் ஒலித்து ஒரு அழைப்பு வர அந்த பக்கம் போயி பேசி விட்டு வந்து பார்த்தால் அதற்குள் அந்த கிழவி குறி சொல்லி முடித்து காசு கேட்டுக்கொண்டிருந்தது. பொட்டீ ரொம்ப பெருமையா ஒரு டாலர் காசை எடுத்து நீட்ட அது "தம்பீ கொடுத்தா பத்து ரூவாயா கொடு இதெல்லாம் வேணாம்னு சொல்ல பொட்டீ டாலரின் அருமை பெருமை மற்றும் சிறுமைகளை அக்கிழவிக்கு விளக்கிக்கொண்டிருந்த வேளையில் நான் "லா கபே"க்குள் ஓடி தஞ்சம் புகுந்தேன்.

அடுத்து நம்ம மேட்டருக்கு போனோம். "தே புஸ்ஸி " ( நல்ல பேரு வச்சுருக்கானுங்கய்யா பாருக்கு) பாருக்கு போயி தாக சாந்தி செய்ய திட்டம். வாசலில் நின்று போர்டை காட்டி "யாரோடதாம்" என்று நான் கேட்க பொட்டீக்கு புரியவில்லை. உள்ள போயி 3 லார்ஜ் போட்ட பின்னாடிதான் சிரிச்சான்.


நான் நல்ல பிள்ளையாட்டம் ஒரு இம்பீரியல் புளு லார்ஜ் அன் இம்மீடியட் ரீபிட் என்று ஆர்டர் சொல்ல சர்வர் ரெண்டாகவே எடுத்து வந்து கொடுத்துவிட்டு இந்த ஃபோட்டோவையும் எடுத்தார்.


தோழர். பொட்டீக்கடை எனக்கு பரிசாக ஒரு புத்தகம் கொடுத்தான். டெரித்தாவின் " தி பாலிடிக்ஸ் ஆஃப் பிரண்ட்ஷிப்". கையிலில் வைத்த படி 10வது லார்ஜில் எடுத்தது இந்த போட்டோ.அதுக்கு பின்னாடி இன்னும் முணு லார்ஜ் அடிச்சு ச்சும்மா கிச்சுனு நட்டுகிச்சு உச்சிமுடி. அப்போ பார்த்து 8வது பீரிலிருந்த பொட்டீ எடுத்த போட்டோ இது.

நோ கமெண்ட்ஸ்

Saturday, February 23, 2008

@ 9:48 PM எழுதியவர்: வரவனையான் 6 மறுமொழிகள்

கொழும்பில் ஃபுரூப் திருத்தபட்டு இந்தியாவில் வாந்தி மன்னிக்க அச்சடிக்கப்பட்ட தினமலங்களின் நாத்தம் நாள்தோறும் புழுத்து தமிழ்நாட்டு வீதியெங்கும் வீசுகிற பொழுதில் புரளிகளை உண்மையாய் உச்சுக்கொட்டி "விச்சு" மாமாக்கள் பக்கம் பக்கமாய் ஆய்ந்தறிந்த கழுதைவிட்டைகதைகளை படித்து புளித்த காதுகளுக்கு கேட்க ஒரு பாடல்.
( புலியெதிர்ப்பு "ஜனநாயக"கும்மி அனுமதிக்கப் படமாட்டாது . பாசிசமென சொன்னாலும் ஓக்கே :P )

Tuesday, February 05, 2008

@ 2:06 PM எழுதியவர்: வரவனையான் 19 மறுமொழிகள்
தெருவுல வண்டியிலையோ இல்லை நடந்தோ போகும் போது எதிரே யாராவது ஒரு பொண்ணு லைட்டா நம்மள பார்த்து புன்னகை பூத்துட்டு போனா கூட நம்மள பாத்து எவடா சிரிக்கப்போறான்னு திகிலாகி டக்குன்னு குனிஞ்சு பேண்ட் ஜிப் போட்டுருக்கன இல்லை மறந்து தொலைச்சு அத பாத்துதான் சிரிச்சுட்டு போனாளோன்னு சந்தேகப்பட்டு பாக்குற ஆளு . அந்தளவுக்கு நம்ம பர்சனாலிட்டி மேல அபார நம்பிக்கை. இதுல எந்த லட்சனத்துல லவ் பண்ணுறது . அதுனாலதான் இந்த வருசமும் ஒரு ஒப்பாரி பதிவ போட்டு "காதலர் தினத்தை" கடந்திடலாம்ன்னு முடிவு பண்ணியாச்சு.

ஒரு ஃபுல் ஓல்டு மங் ( கோல்ட் ரிசர்வ் - புதுச வந்திருக்கு சாப்பிட்டு பாருங்க மக்கா பட்டைய கெளப்புது முக்கியமா "காண்டு கஜேந்திரன்" வகையறா...) எடுத்து ரூம் போட்டு மப்பேத்தி யோசிச்சதுல காதல் அழக பாத்து வாரதில்ல ( நானெல்லாம் எடுத்தவுடனே இந்த முடிவுக்குத்தானே வரமுடியும் :P ) மனச பாத்துதான் வருதுன்னு முடிவுக்கு வந்தாச்சு. அது சரி மனச எப்படி காட்டுறது. இப்ப பெரிய தொயரம் புடிச்ச பிரச்சினையே அதானே.

ஷேர் ஆட்டோவுல ( பங்கு தானி - தமிழ் சரிதானே ) இடிச்சுகிட்டு உக்காந்து வர வாய்ப்பிருந்தும் கண்ணியமாய் இல்லை இல்லை அதி கண்ணியமாய் அதன் கடுமையான குலுக்கலிலும் திடீரென்று போடும் யூ டர்ன்'களிலும் சிலையாய் அமர்ந்து, சீலையோ இல்லை சுடிதார் ஷாலோ மேலே பட்டால்கூட பயிர்ப்பு காட்டி இறங்கி நடந்துபோகும் போது எப்படியும் பேசிடலாம்ன்னு நினைச்சு வந்தா அதுக்கு முன்ன நாம இறங்குற நிறுத்தம் வந்து "மனச" காட்ட முடியாம பண்ணிடும்.

இப்படி போயிட்டு இருக்குற வாழ்க்கையில கொஞ்சமாவது நிம்மதி தருவது சக பொலம்பல் நண்பர்கள்தாம். குறிப்பாய் சொல்லனும்னா சுகுணா திவாகர், பொட்டீக்கடை சத்யா, ஆழியூரான் இப்படி. பாலா மாம்ஸையெல்லாம் கணக்குலையே வச்சுக்க முடியாது அய்யப்பனுக்கு கல்யாணம் நடந்த அவருக்கும் நடக்கும். இப்ப என்னாச்சுன்ன இந்த வருசம் கூட "கம்பேனி ஒப்பாரி" வைக்க ஒரே ஒருத்தந்தான் இருக்கான்.

சுகுணா ஒரு பெரிய புரட்சிக்கான வேலைத்திட்டம் போல தன்னோட கல்யாணத்தை நெனச்சுகிட்டு படாத பாடுபட்டு ஒரு வழியாய் செட்டில் ஆகப்போறான். ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு பிரபல பதிவரோட கல்யாண பார்டிக்கு போயிட்டு ஃபுல் டைட்டில் தொலைபேசிட்டிருந்த போது கேட்டான் "அப்புறம்டா உனக்கு எப்போ " இந்த பக்கம் ஒரு பெரிய மௌனம். சாரி நண்பா என்றபடி போனை வைத்துவிட்டான் . "எவளாவது காதலிச்சு தொலைங்களடி" என்று அவன் எழுதிய கவிதை இனி எனக்கான ஒன்றாய் ஆகிவிட்டது.

ஒரு படத்துல சகமாணவன் தூக்கு மாட்ட முனைந்து கொண்டிருக்கும்போது கர்ம சிரத்தையாக கஞ்சாவை சிகரட்டில் ஸ்ஃடப் பண்ணிட்டு இருப்பாரே ரகுவரன். அது மாதிரி பொட்டீக்கடை சத்யா. பய புள்ள எல்லாத்துகும் ஆஃப் சொல்லுறதே வேலை. ஒரு தடவை ராத்திரி ரெண்டுமணிக்கு போனில் பேசிட்டு 4 மணிக்கு கட் பண்ணிட்டு தூங்க போயிட்டான். அதுக்கு பிறகு நான் போயி ஒரு ஆஃப் எம்.சி எழுத்த பிறகுதான் டென்சன் குறைஞ்சுச்சு அப்படி ஒரு ஜென்மம். அவனும் ஏதோ புதுசா ஒரு கிரஷ்ல இருக்கிறதா தெரியுது. கும்மி,மொக்கைலாம் இப்போ போடுறதுல்ல அவ்வளவு ஏன் ஆன்லைனே வாரதில்ல. "மனச எப்படி காட்டுறது"ன்னு எனக்கு சொல்லிகொடுத்தான்ன நல்லாருக்கும்.

மீதமாயிருக்கிற ஆழியூரானோ செலிபிரேசன் கட்டிங்க கல்ஃபுல உட்டுட்டு "எனக்கு என்னப்பா அவசரம் அடுத்த வருசம் பண்ணிக்கலாம்"ன்னு சொல்லுறான் ( அடப்பாவி என்னைய விட 4 மாசம் அதிகம்யா உனக்கு ) . அவன் காதலை சொல்லுறானா இல்லை கலியாணத்தை சொல்லுறானா விளங்கலை.

Armageddon படத்துல எல்லாத்தையும் பூமிக்கு உயிரோட அனுப்பிட்டு பூமியை நோக்கி வரும் விண்கல்லை தனியாளாய் போய் மோதி தானும் செத்துப்போக போவரில்ல புரூஸ் வில்லிஸ் அது மாதிரி மனநிலையில் "காதலர் தின"த்தை எதிர்கொள்ளும்

நொந்து போன வரவனையான்

காதலித்த,லிக்கும்,லிக்கப்போகும் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

Friday, February 01, 2008

@ 7:11 PM எழுதியவர்: வரவனையான் 10 மறுமொழிகள்

இந்திய தலைநகரில் இம்மாதம் 6 திகதி இந்திய வல்லாதிக்க அரசின் இலங்கைக்கான ஆயுத உதவிகளை உடனே நிறுத்தவும் தமிழ் மக்களை கொன்று குவித்து வரும் சிறீலங்கா அரசினை தடுக்கவும் வலியுறுத்தி பெரியார் திராவிடகழகம் சார்பில் நாடாளுமன்றம் நோக்கிய பேரணி நடை பெற உள்ளது தோழர்களின் போராட்டத்திற்கு என் முழுமையான ஆதரவையும் வாழ்த்துக்களையு தெரிவித்து கொள்கிறேன்.

Monday, January 28, 2008

@ 4:17 PM எழுதியவர்: வரவனையான் 19 மறுமொழிகள்

எனக்கு ஒன்னும் இதுக்கு முன்ன இந்த அனுபவம் இல்லைனாலும், கூட வந்த ஆளு கரை கண்டிருப்பாரு போல. யோவ் வேணாம்யா யாருக்காவது தெரிஞ்சா கேவலம்ன்னு சொன்னாலும் கேக்கிற மாதிரி இல்லை. உள்ள போனதும் குப்புன்னு வேர்க்குது. யோவ் வேர்க்குதுயா போலாம்ன்னு சொன்னா விடமாட்டேங்கிறாரு. "அதுக்குதான்யா வந்திருக்குறதே அதுங்காட்டியும் போலாம்ன்னு சொன்ன எப்படி"ன்னு எகிறுறாரு.

கைலி கட்டி ஒரு சின்னப்பையன் வந்தான் " எத்தனை வேணும்" எதோ அதட்டலா கேட்டான். நம்மாளு அவன் காதுல மட்டும் விழுற மாதிரி எதோ சொன்னாரு. அத கேட்டு அவன் "அதுலாம் பழசா போயிடுச்சு, புதுசா ரெண்டு வந்திருக்கு சும்மா கிண்ணுனு இருக்கும், ஒரு தடவை மட்டும் பாருங்க அப்புறம் விடமாட்டிங்க"னு சொல்லி உள்ள போயிட்டான்.

நான் "யோவ் இதுலாம் ரொம்ப நாளாவதுயா அதும் போக எனக்கும் தொட்டவுடன ...... போதும் நிறுத்து "தலைப்புக்கே பதிவு சூடான இடுகைல வரும் இதுல ஸ்டார்லாம் போட்டு எழுத தேவையில்லை"ன்னு சொல்லிட்டு, இதுக்கு அந்த தம்பிட்டயே வைத்தியம் இருக்குன்னு சொல்லி சிரிச்சான். அது எப்படின்னு நான் முழிச்ச போது உள்ள வந்தான் அந்த சின்னதம்பி ( பெயர்தாங்க ) . அவன் கிட்ட நம்மாளு போயி பழையபடி காதுகிட்ட கிசுகிசுன்னு எதோ சொன்னாரு, இதெல்லாம்மா சொல்லுவாங்க, எனக்கு கடுப்பாகிருச்சு. யோவ் வேணாம்யா இத போயி அவன் கிட்ட ஏன்யா சொல்லுறன்னு கேட்டேன் அதுக்கு அவரு" நாம போனதுக்கப்புறம் பாவம் அவந்தானே எல்லாத்தையும் கிளீன் பண்ணனும்" அதுனாலதான் சொல்லி ஐடியா கேட்டேன்ன்னு சொல்லுறாரு.

அவன் என்னமோ விஞ்ஞானி மாதிரி தாவாங்கொட்டையில கைவச்சு யோசிச்சு நம்மாளு காதுல எதோ சொல்லிட்டு " போயி எடுத்தாரேன்னு " என் காதுல படுற போல சொல்லிட்டு போக நான் ஆவல் தாங்காம என்னானு கேடதுக்கு நம்மாளு சொல்லுறாரு "இல்லப்பா முனையில எண்ணையை நல்லா தடவுனா அது மாதிரிலாம் ஆகாதாம் அதான் எடுத்தார போயிருக்கான்னு சொன்னாரு.

" டேய் என்ன இப்ப மஸாஜா பண்ணப்போறிங்க அஔஇலு பவுடர்லாம் போட்டுன்னு கேட்க அந்த பையன் கடமையே கன்ணாக கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம டக்குன்னு திறந்து முனையில எண்ணையை தடவி கபகபன்னு ஊத்தினாரு என்ன ஆச்சரியம் ஒரு சிங்கிள் டிராப் நுரை கூட வரலை . சபாஷ் தம்பி கலக்கிட்டியேன்னு பார் டெண்டர் சின்னத்தம்பிக்கு கைகொடுத்துட்டு ஆளுக்கொரு பீர் மக் கை கையிலெடுத்தோம்

குறிப்பு: பீர் பாட்டிலின் வாய் பகுதியில் ஆட்காட்டி அல்லது ஸௌகரிய பட்ட விரலில் நன்னா எண்ணை எடுத்து தடவிட்டு அதுக்கு பின்ன பீரை மொட்டை மாடியிலர்ந்து ஊத்தினாக்கூட நுரை வாராது ஓய். குடிக்கலாம்ன்னு நினைச்சு மூடி திறக்கும் போது புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு பொங்கி வழியுமே பீர் அதுக்கு பேர்தானே Premature Ejaculation எங்க ஊரு பக்கம் அப்படித்தான் சொல்லுவோம். நீங்க வேற நினைச்சா அதுக்கு நான் பொறுப்பல்ல

"Premature Ejaculation in Beer "

தலைப்பு இப்படி இருந்திருக்கனும் ஹிஹி கண்டுக்காதிங்க

மற்றபடி நான் இவ்விடயத்தில் தோழர் தமிழச்சியின் தீவிர ஆதரவாளன். "யோனி" "அல்குல்" என்று இலக்கிய அல்லது புனைவின் போர்வையில் எதை வேண்டுமானாலும் வார்த்தையாடிவிட்டு அதையே வழக்கு ரீதியாய் சொல்லும் அல்லது எழுதுபவரை கண்ண்டிப்பது ஒன்றும் யோக்கியமான செயல் அல்ல. அதுக்கு தையிரியமா " போடா .....டைன்னு கூட திட்டிட்டு போயிறலாம்" வலையுலக போலிஸாக இலக்கிய குண்டர்களாக வேலை பார்ப்பவர்களை. குறிப்பாய் எந்த நண்பர்களையும் குறிப்பிடவில்லை மேலுள்ள பத்தியில்.


சூடான இடுகையில் வரவைப்பது எனப்து எப்படி என்று இரண்டு திராவிட ராஸ்கல்களும் ஒரு டெரித்தாவின் ரசிகர் மன்ற போட்டிக்குழுவின் செயலாளரும் தி.நகர் நடேசன் பூங்காவில் சந்தித்து பேசிய ரகசியா ச்சே ரகசிய சந்திப்பு படங்களூம் உண்டு


Photobucket

Photobucketஅதென்னப்பா போட்டோ எடுக்கும்போது மட்டும் டம்ளரையும் சரக்கையும் மறச்சுகிட்டிங்க ரெண்டு பேரும்.Photobucket என்ன கொடுமை சார் !!!

Tuesday, January 15, 2008

@ 8:31 PM எழுதியவர்: வரவனையான் 8 மறுமொழிகள்


மருதைக்கு டான்சு பாக்க போன
பாப்புபுள்ளை ஆட்டகாரியை கூட்டியாந்து
ஒம்போது புள்ளை பெத்துட்டு ந்தா... அங்கன நிக்கிறாரு

டான்சுகாரிக்கு பொறந்த புள்ளையில ஒன்னு
மந்திரியாச்சு.பொண்டாட்டிக்கு பொறந்த
மவேன் கணக்கு வேளைக்கு போயி சிட்டா அடங்கல்
தூக்கிட்டு திரியிறான்

இவ என்னைக்கு கெழடு தட்டுவாளோன்னு ஊருல
உள்ள குடியான பொம்பளைக கரிச்சு கொட்டுற
சுறும்பாயி வெட்டி வெட்டி கொடம் தூக்கி தண்ணிக்கு போறா
"எக்கோய் அடுத்த வாளி நான் இறைக்கிறேன் நம்ம எல்லாம் சீலைக்காரி
கும்புடுறுவுக தானே"ன்னு சொன்னவள தோளுல தாவாங்கொட்டயால இடிச்சி
பேசாம போறா பாக்கியத்தம்மா

பனமரத்துல பாதியாய் நிக்கிறாரு பாருங்க
உய்யகோண்டாத்தேவரு ... பச்ச புள்ளையாட்டம். தண்ணி
சீட்டு பொம்பளை வெத்தலை பொடின்னு எந்த கழுதையும் கெடையாது
என்னா தெனம் வண்டிகட்டி மணப்பாறை போயி சீட்டு மட்டும் ஆடுவாரு அம்பூட்டுதான்

"என்னாடா இது ஒவ்வொரு மொடக்குலையும் ஒரு வண்டு வருது"
சாணார்தோப்பில் பழநிச்சாமியிடம் சலிச்சுகிறாரு வேலுச்சாமி
"சும்மா குடிங்க தொரை என்னமோ விட்டைமீனாமே அது இதுதான்" மீச
பொசுங்கினா பொசுங்குதுன்னு பீடியை ஒட்ட இழுக்குறாரு பழநிச்சாமி

வேட்டி கிழிய குசுவ போட்டுபுட்டு " ஒரு தாயம்"னு சாவடில
உருட்டுறாரு ரெங்கசாமி ரெட்டியாரு. மயிலம்பட்டி
பங்காளி கோமணம் பெருசு வீட்டுல காயிற ஊரரிஞ்ச
ரகசியத்த அந்தாளூ செவுட்டுகாதுல யாரு சொல்லுறது

Monday, January 14, 2008

@ 6:25 PM எழுதியவர்: வரவனையான் 4 மறுமொழிகள்வர்றீகளா மாடு பிடிக்க போலாமா .... தடையை மீறி ? :)


உலகத்தமிழரை ஓரணியில் இணைக்கின்ற வலிமை தமிழ் மொழிக்கு அடுத்த படியாய் தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு உண்டு.பேராசிரியர் சிவத்தம்பியின் கூற்றினைப்போல் இது தமிழரின் மே தினம் ஆகும். ஒரளவுக்கு நல்ல மழை பெய்துள்ளது. இதன் மகிழ்ச்சி இந்த பொங்கல் விழாவில் தமிழக்த்தில் தெரியும். கலைஞரின் தை 1 இனி தமிழ்ப்புத்தாண்டு என்கிற அறிவிப்பு சர்க்கரை பொங்கலாய் இனிக்கிறது. சமாதான உடன்படிக்கையை கிழித்து குண்டி தொடைத்து கிழே போட்டிருக்கும் சிறீலங்காவை "காந்திதேசம்" இன்னும் சும்மானாச்சிக்கு கூட கண்டிக்காத வேளையில் "பிரபாகரன் எங்கள் வழிகாட்டி" எனும் பாடல் தென்கிழக்கே கேட்கதுவங்கிருக்கிறது. ஓயாத அலைகள் 3 போது யாழ்ப்பாணம் பிடிபடப்போகும் வேளையில் கொச்சிலிருந்து தன் போர்கப்பல்களை கன்யாகுமரி அருகே கொண்டு சென்று பயிற்சி என்கிற போர்வையில் "அழுத்தம்" கொடுத்த இந்திய ராஜ தந்திரங்கள் வரும் காலத்தில் இருக்காது என்று நம்புவோமாக .

இந்த பொங்கலில் இருந்து பஞ்சாயத்து போர்டு லெவல் பிரச்சினைகளுக்கூட புரட்சிப்புயல் தலைமை ஏற்று "களம்" காண மாட்டார் என்றும் நம்புவோமாக.


அது என்ன எழவோ தெரியலை இந்திய "உச்சா"நீதிமன்றங்கள் கொஞ்சகாலமா தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் கசப்பு உணர்வுகளை தன் தீர்ப்புகளின் மூலம் ஊட்டிக்கொண்டிருக்கு. இது எதுல போயி முடியுதோ தெரியலை. தமிழ்ப்பண்பாட்டு விதயமான ஏறுதழுவலில்( ஜல்லிக்கட்டு) கைவச்சுருக்கு இப்போ புதுசா. இல்லாத ராமன் கட்டியதா சொல்லுற பாலத்தை மக்களின் உணர்வுகள் என்கிற காரணம் சொல்லி நிறுத்தி வச்ச மன்றம் இதை எந்த கோணத்துல முடிவெடுத்துச்சோ தெரியலை.இப்ப்தைக்கு ம்ம்ம்ம் கொட்டிட்டு அடுத்த வேளையை பார்க்கலாம்.

பல்வேறு விடியல்களையும் புதிய வாழ்வையும் இந்த தை அளிக்கும் என்கிற நம்பிக்கையுடன் பாவேந்தரின் கவிதை ஒன்றின் துவக்க வரிகளான " பொங்கல் அமிழ்துதான்; பொய்யில்லை" என்று சொல்லி தமிழினத்துக்கும் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் வாழ்த்துகளை
சொல்லிக்கொள்கிறேன்.
Tuesday, January 01, 2008

@ 2:27 PM எழுதியவர்: வரவனையான் 7 மறுமொழிகள்
ஃபுல் மப்பில் பிளாட்டாகி கிடக்கும் இந்த அக்காக்கும் சேர்த்து