Thursday, September 27, 2007

@ 1:09 PM எழுதியவர்: வரவனையான் 48 மறுமொழிகள்
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எப்போதும் எலும்பிற்குள் காய்ச்சல் தரும் மனிதன் இவன். "மக்களை" நேசிக்கும் வெகு சில தலைவர்களில் ஒருவன்.இவரின் இருபது ஆண்டுக்கும் முந்திய பேட்டி இது. இதில் கடைசிக்கேள்விக்கு இவரது விடை தனி மனித சாகசவாதியாக தான் பார்க்கபட்டதை மறுக்கும் நேர்மையை வெளிக்கொணருகிறது.தோழர் விரைவில் மக்கள் பணியாற்ற வருவார் என்று செய்திகள் சொல்லுகின்றன. மீண்டு(ம்) வரும் தோழருக்கு செவ்வணக்கம்

புரட்சி வெல்லட்டும் !
Tuesday, September 25, 2007

@ 2:39 PM எழுதியவர்: வரவனையான் 12 மறுமொழிகள்

ஏண்டா எங்களை கெட்டவனா ஆக்குறீங்க.....


இப்படித்தான் கேட்க தோன்றுகிறது, நாங்கதான் 5 ஆயிரம் ஆண்டு கோபத்தை எப்போ காட்டுறதுன்னு காத்துகிட்டு இருக்கோமே. கேப்பு கெடச்சா கெடா வெட்டலாம்ன்னுதானே அலையுறோம். ராமர் பப்புலாம் இங்க வேகாது அம்பிகளா. இது வேற மண்ணு.


சரி அவனுங்கதான் வாயா கொடுத்து சூத்த புண்ணாக்கிக்கிட்டானுங்க சரி ; இடையில நம்ம சோ கால்டு "கைபுள்ள" வைகோ டக்குன்னு மத்திய விசாரனைக்குழு அதிகாரி தோரனையில போய் பா.ச.க அலுவலகத்தை பார்வையிடுற மாதிரி ஸீன் போடுறாரு. அவனுங்க கூட சேர்ந்த குத்தத்துக்கு தான் 19 மாசம் உள்ளாற போட்டானுங்களே நயினா மறுபடியும் ஜெயில் கஞ்சி குடிக்க ஆசை வந்துருச்சா :P

காளிமுத்து ஒரு தடவை கட்சியவிட்டு ஓடி போன போது கலைஞர் கே கொல்லேன்னு பொலம்பி ஒரு அறிக்கை விட்டாரு. அன்னிக்கு சாயங்காலம் பொதுக்கூட்டம் நடந்துச்சு. கலைஞருக்கு முன்னாடி அப்படியே உட்டிங்க பாருங்க ஒரு டயலாக்கு " ஒரு வீபிடணன் போனாலென்ன ஒராயிரம் இந்திரஜித்துகள் உங்களுக்கு பின்னால் இருக்கிறோம்னு" கேட்டுகிட்ட இருந்த எனக்குல்லாம் அப்படியே நட்டுகிச்சு. அட "கூறு கெட்ட கோவாலு" ( நன்றி: கரூர் மாவட்ட திமுக) வீபிடண வேலைன்ன என்னா தெரியுமா . இப்போ நீ பார்க்கிறியே அதுதான்.

சரி அதெல்லாம் இருக்கட்டும். தோழர்கள் எல்லாம் வெயில் நேரத்துல சில்லுன்னு ஒரு பீர் அடிச்ச திருப்தியோடு இந்த வீடியோவை பாருங்கள்

Wednesday, September 19, 2007

@ 6:16 PM எழுதியவர்: வரவனையான் 0 மறுமொழிகள்

செப் 12 அன்றைய காலை தமிழ்நாட்டின் நாளிதழ்களில் முதல் பக்கத்தில் வந்திருந்த செய்தி "தாய்லாந்தில் கே.பி (எ) குமரன் பத்பநாபன் என்கிற புலிகளின் முதன்மை தலைவர் கைது ! " என்றும் தினமலர் போன்ற குண்டி துடைக்க பயன்படுத்த வேண்டிய பத்திரிக்கைகளில் ராஜிவ் கொலைச்சதிகாரன் என்று அவன் இவன் என்றெல்லாம் ஏக வசனம் வேறு ( காஞ்சி தாதா சங்கரனை மரியாதை மயிராக இன்னும் எழுதி வருகிறது இந்த அந்துமணி கும்பல் என்பது வேறுவிடயம்) கடைசி பக்கம் இன்னோரு செய்தி கவனத்தை ஈர்க்கிறது அது "புலிகளின் முன்று கப்பல்கள் தாக்கியழிப்பு " என்றும் இனி புலிகளிடம் கடற்படை பலம் முன்றில் ஒரு பங்காய் குறைக்கப்பட்டது என்கிற இலங்கை அரசின் எழவுசொல்லி அறிக்கையை மேற்கோள்காட்டியும் தினகரன் தினமலம் போன்ற நாளேடுகள் செய்தி வெளியிட்டிருந்தன. . சரி செய்தி வந்தது அதன் பின் தாய்லாந்து அரசு நாங்கள் அம்மணமாய் கூட தூக்கி காட்டுகிறோம் , வந்து சோதனை செய்து கொள்ளுங்கள் அப்படி ஒரு ஆளே இங்கு இல்லை என்று மறுத்தெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நாம் பார்க்கவேண்டியது செய்தி வந்த காரணத்தையும் அந்த திகதியின் முக்கியத்துவத்தையும் தான். அதையும் தாண்டி பிரணாபின் அவசர பயணமும் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. கே.பி இப்போது சீனில் இல்லை அமைப்பிலும் இயங்கவில்லை என்றே தெரிகிறது இருந்தும் இப்படி ஒரு செய்தி. ”பிரபாகரனுக்கு தெரியாததில்லை அவர் பார்த்துக்கொள்வார்.”


னான் முன்பே ஒரு மொக்கை பதிவினூடே குறிப்பிட்டு இருந்தேன், தமிழ் தினசரிகளில் இயல்பாய் செய்தி வரும் போது " தர்மத்துபட்டியில் கனவன் கொலை ! கள்ளகாதலுடன் ம்னைவி கைது ! " என்றோ அல்லது சுரக்காய்பட்டியில் தோட்டத்து கிணற்று மோட்டாரை திருடிய இருவர் கைது ! " என்றுதான் செய்தி வரும் அது ஒரு மலையாளியாக இருந்தாலும் கன்னடராக இருந்தாலும் , தமிழ் நாட்டுகாரராய் இருந்தலும் சரி. ஆனால் 87க்கு பின் ( எம்ஜிஆரின் மறைவுக்கு பின் என்றே வைத்துக்கொள்ளலாம்) பென்சில் திருடி மாட்டினால் கூட ஒரு வேளை அவர் ஈழ அகதியாய் இருந்தால் கொட்டை எழுத்தில் இலங்கை அகதி கைது என்று செய்தி வரும்.

ஆமா அகதினா அப்படித்தான் போடுவாங்கன்னு சொல்லலாம், ஆனா அதுகுள் இருக்கும் அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். இந்திராவின் மறைவுக்கு பின் மத்தியா ஆதிக்க மையங்களுக்கு தலைவலி இருந்தவை வடகிழக்கும் காஷ்மிரும் மட்டுமல்ல தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த ஈழ ஆதரவும்தான்.

@ 6:16 PM எழுதியவர்: வரவனையான் 26 மறுமொழிகள்செப் 12 அன்றைய காலை தமிழ்நாட்டின் நாளிதழ்களில் முதல் பக்கத்தில் வந்திருந்த செய்தி "தாய்லாந்தில் கே.பி (எ) குமரன் பத்பநாபன் என்கிற புலிகளின் முதன்மை தலைவர் கைது ! " என்றும் தினமலர் போன்ற குண்டி துடைக்க பயன்படுத்த வேண்டிய பத்திரிக்கைகளில் ராஜிவ் கொலைச்சதிகாரன் என்று அவன் இவன் என்றெல்லாம் ஏக வசனம் வேறு ( காஞ்சி தாதா சங்கரனை மரியாதை மயிராக இன்னும் எழுதி வருகிறது இந்த அந்துமணி கும்பல் என்பது வேறுவிடயம்) கடைசி பக்கம் இன்னோரு செய்தி கவனத்தை ஈர்க்கிறது அது "புலிகளின் முன்று கப்பல்கள் தாக்கியழிப்பு " என்றும் இனி புலிகளிடம் கடற்படை பலம் முன்றில் ஒரு பங்காய் குறைக்கப்பட்டது என்கிற இலங்கை அரசின் எழவுசொல்லி அறிக்கையை மேற்கோள்காட்டியும் தினகரன் தினமலம் போன்ற நாளேடுகள் செய்தி வெளியிட்டிருந்தன. . சரி செய்தி வந்தது அதன் பின் தாய்லாந்து அரசு நாங்கள் அம்மணமாய் கூட தூக்கி காட்டுகிறோம் , வந்து சோதனை செய்து கொள்ளுங்கள் அப்படி ஒரு ஆளே இங்கு இல்லை என்று மறுத்தெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நாம் பார்க்கவேண்டியது செய்தி வந்த காரணத்தையும் அந்த திகதியின் முக்கியத்துவத்தையும் தான்.


நான் முன்பே ஒரு மொக்கை பதிவினூடே குறிப்பிட்டு இருந்தேன், தமிழ் தினசரிகளில் இயல்பாய் செய்தி வரும் போது " தர்மத்துபட்டியில் கனவன் கொலை ! கள்ளகாதலுடன் ம்னைவி கைது ! " என்றோ அல்லது சுரக்காய்பட்டியில் தோட்டத்து கிணற்று மோட்டாரை திருடிய இருவர் கைது ! " என்றுதான் செய்தி வரும் அது ஒரு மலையாளியாக இருந்தாலும் கன்னடராக இருந்தாலும் , தமிழ் நாட்டுகாரராய் இருந்தலும் சரி. ஆனால் 87க்கு பின் ( எம்ஜிஆரின் மறைவுக்கு பின் என்றே வைத்துக்கொள்ளலாம்) பென்சில் திருடி மாட்டினால் கூட ஒரு வேளை அவர் ஈழ அகதியாய் இருந்தால் கொட்டை எழுத்தில் இலங்கை அகதி கைது என்று செய்தி வரும்.

ஆமா அகதினா அப்படித்தான் போடுவாங்கன்னு சொல்லலாம், ஆனா அதுகுள் இருக்கும் அரசியலை புரிந்துகொள்ள வேண்டும். இந்திராவின் மறைவுக்கு பின் மத்திய ஆதிக்க மையங்களுக்கு தலைவலியாக இருந்தவை வடகிழக்கும் காஷ்மிரும் மட்டுமல்ல தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த ஈழ ஆதரவும்தான்.

தமிழ் நாட்டு மக்களும் நாளை தனி நாடு கேட்டால் ( அப்படி ஒரு நாளும் நடக்கும் என்று கிஞ்சித்தும் நம்பிக்கையில்லை ) இந்தியா என்கிற கூட்டமைப்பின் தலையில் இடிவிழும் என்று மத்திய ஆளும் வர்க்கங்கள் கணக்கு போட்டதின் விளைவே நிகழ்ந்த நிகழ்கின்ற நிகழப்போகின்ற அனைத்தும்.

சரி அந்த திகதியில் அப்படி ஒரு செய்தி வந்ததின் பின்னனி "யா ரா " இருக்கும் என்று சொல்லத்தேவையில்லை , காரணம் அன்று நெடுமாறன் தலைமையிலான தமிழிழ விடுதலை ஆதராவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் உணவின்றி தவிக்கும் யாழ் மக்களுக்கு உதவி பொருட்களை கொண்டு செல்ல மறுக்கும் மத்திய அரசினை கண்டித்தும் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசினை கண்டித்தும் படகுகளில் யாழ்ப்பாணம் செல்லும் போராட்டம் நடந்தது.

தமிழீழ விடுதலைக்கு இந்தியாவிலிருந்து குறிப்பாய் தமிழகத்திலிருந்து எவ்வித ஆதரவு குரலும் எழக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் அரசு நிறுவனங்கள் இந்த போராட்டத்தின் வாயிலாக அம்மகளின் துயரும் ஈழப்போராட்டத்தின் தேவையும் தமிழக மக்களிடம் கவனம் பெறும் என்பதால் "ஆளே இல்லாத கடைல யாருக்குடா டீ ஆத்துற'ன்னு" விவேக் கேட்டது போல் நடக்காத கைதை நடந்ததாக காட்டி தமிழிழ உணர்வாளர்களை திகைக்க செய்யும் ஒரு அபத்த முயற்சியே அது .


அது போல இவர்களுக்கு மிகவும் தொல்லைகொடுப்பது பிரபாகரனின் மௌனமே. சமாதானக்கால துவக்கத்திலிருந்தே புலிகள் மீண்டும் போருக்கு போவார்கள் என நினைத்து அவர்களின் பொறுமை சோதிக்கும் ஆகக்கூடிய வழிகளையும் இந்நிறுவனங்கள் கையாண்டு தோல்வியையே கண்டன. பொதுவாக தமிழிழ தேசியத்தலைவரின் மௌனம் என்பது இதுவரை சிறிலங்கா அரசுக்கும் ராணுவ ரீதியாக பெரும் பின்னடைவையே கொடுத்து வந்தது வரலாறு. குறிப்பாய் ஓயாத அலைகளுக்கு முன்பு அவரிடம் காணப்பட்ட பெரும் மௌனம் மிகப்பெரிய ஆழிப்பேரலையை கொணர்ந்து சிங்கள ராணுவத்துக்கு வரலாறு காணாத இழப்பினையும் ஒரு போராளி குழு என்று அழைக்கப்படும் அமைப்புக்கு மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்தது. அதே 90 களின் பிந்தைய காலகட்டத்தில் புலிகள் பலமிழந்து விட்டனர் என்றும் , அமைப்புக்குள் பெரும் சண்டை என்று அளந்து விட்ட கதைகள் நாம் பார்த்ததுதான் என்றாலும். புலித்தலைவரின் மௌனத்தை கண்ட அச்சம் தொடைநடுங்க செய்வதால் புது புது கைது நாடகங்களையும் , கோசிப்புகளை கோமாளிகளை விட்டு புழக்கத்தில் விடும் வேலையும் துவங்கியுருக்கிறது.இதையும் அப்போ நம்புனிங்களா மாலன் சேர் !
:P
பத்திரிக்கையில போட்டானுங்களாம் இவரு நம்புறாராம்


* பதிவின் தலைப்பு கவிஞர் அறிவுமதியின் தலைப்பு

Tuesday, September 18, 2007

@ 5:38 PM எழுதியவர்: வரவனையான் 43 மறுமொழிகள்

இதை இங்கு பதிவு செய்தே ஆகவேண்டும் என்கிற காரணத்தினால்தான் ஒளிபரப்பு செய்துள்ளேன். பாவம் தமிழக குடிகாரர்கள் ! ஒரு புல் அடித்தாலும் ஏற மாட்டேங்குதே என்று புலம்பும் மக்களை அன்றாடம் பார்க்கிறோம். அதிலும் கன்னிவாடி குடிகாரர்கள் சங்கம் தனது கடும் கண்டணங்களை வேறு அரசுக்கு இரண்டு தினம் முன்பு தெரிவித்து இருக்கிறது. இப்படி கழட்டி அதில் பாதி சரக்கை எடுத்துவிட்டு அதில் தண்ணி கலந்து குடி மக்களுக்கு கொடுத்தால் எங்கிட்டு இருந்து மப்பு ஏறும்.
Monday, September 17, 2007

@ 4:34 PM எழுதியவர்: வரவனையான் 7 மறுமொழிகள்
மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை
- காசி ஆனந்தன்


மண் மீது அறிவுக்கு முடி சூட்டினான்
மானமும் அறிவும் பெற உணர்வூட்டினான்
கண் மூடிக் கொள்கைக்குக் கனல் மூட்டினான்
கண் மூடும் வரை இங்கே கடனாற்றினான்

- பாவலர் பல்லவன்

Saturday, September 15, 2007

@ 1:05 PM எழுதியவர்: வரவனையான் 42 மறுமொழிகள்

குறையாத ஆரியக்கொழுப்போடு பார்ப்பனிய திமிரோடு இரண்டு பிறவிகள் இணையத்தில் திரிந்துகொண்டிருகின்றன . அவைகள் எதோ வாக்கெடுப்பு நடத்துதாம். நாங்களும் எங்களுக்கு தெரிஞ்ச அறிவோட வாக்கெடுப்பு நடத்துறோம் வாங்கோ ஓய் ! வந்து ஒட்டு போடுங்க.

Wednesday, September 12, 2007

@ 4:12 PM எழுதியவர்: வரவனையான் 42 மறுமொழிகள்

வாசிங்க ! வாசிங்க ... முறையா வாசிச்சுட்டு அப்புறம் வாங்க. இப்படித்தான்யா மிரட்டுறாங்க வலையுலகத்துல.

எனக்கு தெரிஞ்சு தாஸ் கேப்பிட்டல தமிழ்நாட்டுல வாசிச்சது ஜமதக்கினி, சோதிப்பிரகாசம், தியாகு அப்புறம் அவங்களுக்கு ஃபுரூப் ரீடர் வேலை பார்த்த முணு பேரு . அம்பூட்டுத்தான்யா தமிழ்நாட்டுல மூலதனத்தை படிச்சவுங்க. ஆனா பாருங்க எவ்வளுவு மார்க்சீய தோழர்கள் இருக்காங்க. அவங்க எல்லாம் வாசிச்சிட்டா மக்களுக்கு போராட வந்திருக்காங்க. ஸோ என்ன சொல்ல வரேன்னா வாசிச்சாதான் பேசனும்னு சொல்லுறதுல எனக்கு உடன்பாடு இல்ல. இதுக்கு மேல இத பத்தி பேசுனா வளர்மதி இது பத்தி பதிவு போட்டுருவார்னு பயமா இருக்கு.


பொட்டீக்கடை சத்யாவின் பிளாக்கர் ஐடி வேலை செய்யவில்லை என்பதால் அவர் எங்கோ இட வேண்டிய பின்னூட்டம் இங்கு வந்துவிட்டது அதையும் " வாசிங்க "
//
ஸ்ஸப்ப்ப்பா...

கண்ணை கட்டுதே.

இன்னா மாமு...உனுக்கு இன்னா தான் ப்ர்ச்னை...இப்பிடி சுகுணா மாமோட டவுசரை கய்ட்டறியே?

மின்னாடியே சொல்ட்ட...நீ சொன்னத எதுவும் அந்த சோமாறி கேக்கலன்னு...அப்புறம் இன்னாத்துக்கு அவன பத்தியே எழுதிக்கினு இருக்க. நல்ல வேள சுகுணாவும் எதுவும் பதில் சொல்லல. அவன் சொல்ல மாட்டான்ன்னு நெனைக்கிறேன். அப்புடி சொல்லிட்டான்னா நா இப்ப உனுக்கு எழுதிகினு இருக்கனே அது அட்டர் வேஸ்ட்டு.

வந்தமா...நாலு பேருக்கு புடிச்ச மாதிரி எழுதினோமா...அப்பிடி இல்லனா நமக்கு புடிச்ச மாதிரியாவது எழுதினோமான்னு இல்லாம...போயும் ..போயும் ஒரு பச்ச புள்ள மேல் போட்டு அடி அடின்னு அடிச்சினுக்கிறீயே?

அல்லாஞ்சரி வெறும் குத்தத்தோட வுட்டியான்னு பாக்க சொல்லோ, மவனே ஒங்கூட்டுக்கத் எங்கூட்டுக்கதன்னு ஒரே பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலான்ற கதயா நீங்கள் கேட்டவைன்னு சோக கீதம் பாடினுக்கீற...இதையே பாயிண்டா வெச்சி அவனவன் அவனோட சோகக் கதீய கிறுக்கினான்னு வெச்சிக்கோ ஒக்காமக்கா...தமிழ்வெலப்பதுவே ங்கொய்யாலன்னு உப்பு தண்ணீல கெலங்கீடும் மாமு...சரி அத்த வுடு...இப்போ உனுக்கு இன்னா ப்ரச்ன...சுகுணாவ போட்டு தாக்கறா மாதிரி உன்னிய எவனும் டவுசர அவுக்க மாட்றான்றதா இல்ல வேற இன்னா தான்...

இந்த போலி செய்ரது போளி செய்ரது எல்லாம் எல்லா ஊர்லியும் இருக்குது தான் நைனா...அதுக்கென்னாங்கற இப்போ...

அத்த வுடு...நீ இன்னா சொல்ற வாசிக்கறவந்தான் அறிவுசீவி மத்தவன்லாம் பென்சில் சீவிங்கறியா? இப்புடி சொல்றதுனால நீ சொல்றது எல்லாத்தியும் எல்லாரும் நம்பிடுவாங்கன்னு நெனப்பா? சத்தியமா சொல்றேன்...நா கூட உன்னிய பெரிய அறிவுசீவியா தான் நா நெனச்சிகினு இருந்தேன் நீ செல்லாவுக்கு பின்னூட்டம் போட சொல்லோ வரிலும்...அப்புறம்தான் தெரிஞ்சிது நீ ஒரு காலிப்பெருங்காயடப்பான்னு...ஒருத்தன் டவுசர கழட்டரதுக்காகவே எவனுக்கும் அவ்வளவா பின்னூட்டம் கூட போடாத நீயி செல்லாவோட முதுக லைட்டா சொறிஞ்சிட்டு லேனரோட பேட்டி அருமைன்னு சும்மானாச்சிக்கும் ஒப்புக்கு சப்பானி கணக்கா ஒரு டயலாக்கு. நீ மெய்யாலுமே அத சொல்றதுக்கு மட்டுமே போயிர்ந்தனா அத செல்லாவோட அது சம்மந்தப்பட்ட பதிவிலேயே சொல்லியிருக்கலாம் ஆனா உனுக்கு சுகுணாதான் குறி அதான் ஒரு பித்தனவுட கேவலமா ஒரு பின்னூட்டம் அத விட கேவலமா ஒரு பதிவு அதுல அதவிட கேவலமா ஒன்னோட பதிலு...
//

Sunday, September 09, 2007

@ 4:57 PM எழுதியவர்: வரவனையான் 13 மறுமொழிகள்லாரன்ஸ் பிரிட் பாசிச பண்புகள் குறித்து ஆய்வு செய்து ( ஜேர்மனி துவங்கி முசோலினியின் இத்தாலி இந்தோனேசியாவின் சுகர்தோ மற்றும் தென்னமெரிக்க நாடுகள் ஆகியவற்றில்) 14 வகையாய் பிரித்திருக்கிறார். அவற்றை ஆங்கிலத்திலேயே தருகிறேன். மொழிபெயர்க்க சோம்பேறித்தனம்தான் . பெரிய ஆச்சரியம் பெரும்பாலானவை தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் நிறை பொருந்தி வருகிறது

1. Powerful and Continuing Nationalism
Fascist regimes tend to make constant use of patriotic mottos, slogans, symbols, songs, and other paraphernalia. Flags are seen everywhere, as are flag symbols on clothing and in public displays.

இபோது எங்க பகுதியில் இப்படித்தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆளும்கட்சியின் செயற்கை நாறிழை விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள். என்ன கடந்த ஆட்சியில் வேறு அமைச்சர் வேறு நிறம் வேறொன்றும் மாற்றமில்லை. ஆனால் மாவட்ட மந்திரியின் படங்கள் தெருவெங்கும் காணும் போது எதோ ராணுவ ஆட்சி நடக்கும் பகுதிக்குள் இருப்பதை போல வரும் உணர்வை தவிர்க்க இயலவில்லை

2.Disdain for the Recognition of Human Rights
Because of fear of enemies and the need for security, the people in fascist regimes are persuaded that human rights can be ignored in certain cases because of "need." The people tend to look the other way or even approve of torture, summary executions, assassinations, long incarcerations of prisoners, etc.
பொடா எனும் அடக்குமுறை சட்டத்தில் பதினான்கு வயது சிறுவனை கைது செய்வது. மனித உரிமை என்கிற ஒன்று இருப்பதை அறியாத என்கௌன்டர்கள். மனிதனின் வாயில் சாதியின் பெயரால் மலத்தை திணிப்பவன் எந்த பிரச்சினையும் இன்றி திரிவது என சொல்லிக்கொண்டே போகலாம்


3.Identification of Enemies/Scapegoats as a Unifying Cause The people are rallied into a unifying patriotic frenzy over the need to eliminate a perceived common threat or foe: racial , ethnic or religious minorities; liberals; communists; socialists, terrorists, etc.

சுதந்திர தினம் வந்தாலும் சரி டிசம்பர் 6 வந்தாலும் சரி தேவையின்றி அதீத பாதுகாப்பு கெடுபிகள் செய்து மக்களை இஸ்ளாம் குறித்தோ இல்லை தீவிரவாதிகள் பற்றியும் அச்சமூட்டும் நிகழ்வுகளையும் நாம் இங்கு காணலாம். ( அதற்காக ஹைதிராபாத் குண்டுவெடிப்பை நியாயப்படுத்திகிறேன் என்றேல்லாம் நினைத்துக்கொள்ளதீர்கள். மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் எந்த வகை தாக்குதலும் எமக்கு ஏற்பில்லை )


4.Supremacy of the Military
Even when there are widespread domestic problems, the military is given a disproportionate amount of government funding, and the domestic agenda is neglected. Soldiers and military service are glamorized.
இது பற்றி இப்போதைக்கு சொல்லுவதில்லை :P

5.Rampant Sexism
The governments of fascist nations tend to be almost exclusively male-dominated. Under fascist regimes, traditional gender roles are made more rigid. Opposition to abortion is high, as is homophobia and anti-gay legislation and national policy.


கலாச்சார காவலர்கள் துவங்கி அனைத்து மத, இன காவல் நிலையங்களும் செய்து வருவது இவையைத்தானே

6.Controlled Mass Media
Sometimes to media is directly controlled by the government, but in other cases, the media is indirectly controlled by government regulation, or sympathetic media spokespeople and executives. Censorship, especially in war time, is very common.

இது பற்றி ஒரு தனிப்பதிவே போடலாம். சாதாரணமாய் சைக்கிள் திருடி யாரவது மாட்டிக்கொண்டால் செய்திதாளில் வராது அதுவே ஒரு இலங்கை அகதியாக இருந்தால் " சைக்கிள் திருடிய இலங்கை அகதி கைது " என்று கொட்டை எழுத்தில் வரும். நேரந்திர மோடி ஸ்டார் நீயூசை கலவரத்தின் போது கைப்பற்றியது இங்கு பொருத்திப்பார்க்கலாம்.

7.Obsession with National Security
Fear is used as a motivational tool by the government over the masses.

செப் 11 க்கு பிறகு உலகெங்கும் தேசிய விடுதலைகிளர்ச்சிகள் கூட "பயங்கரவாதமாக" சுட்டிக்காட்டப்பட்டு தேசிய பாதுகாப்பு என காரணம் சொல்லி ஆள் தூக்கி சட்டங்கள் இயற்றப்படும் இன்றைய நிலையை பொருத்தி பார்க்கலாம்.

8.Religion and Government are Intertwined
Governments in fascist nations tend to use the most common religion in the nation as a tool to manipulate public opinion. Religious rhetoric and terminology is common from government leaders, even when the major tenets of the religion are diametrically opposed to the government's policies or actions.

பிஜேபியின் ஆட்சிக்காலத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து முயற்சி செய்ததும். ஜெ ஜோசியர்களின் பேச்சைக்கேட்டு ஆட்சி நடத்திய கடந்த கால ஆட்சியையும் பொருத்திப்பார்க்கலம்

9.Corporate Power is Protected
The industrial and business aristocracy of a fascist nation often are the ones who put the government leaders into power, creating a mutually beneficial business/government relationship and power elite.

இது பத்தி என்னாங்க சொல்லுறது. சிரிப்புதான் வருது. ஜோசியம் பாக்க போனா புட்டு புட்டு வைக்கிறாய்ன்யா அந்த சோசியக்காரன்னு சொல்லுவாய்ங்கள்ள அது மாதிரி இருக்கு இது.

10.Labor Power is Suppressed
Because the organizing power of labor is the only real threat to a fascist government, labor unions are either eliminated entirely, or are severely suppressed .

நம்ம நாட்டு தொழிலாளர் சங்கத்தையும் அது ஜெயலலிதா மதிரி தலைவர்களிட்ட படும் பாட்டைதான்யா மனசில வச்சு சொல்லியிருக்காரு.

11.Disdain for Intellectuals and the Arts
Fascist nations tend to promote and tolerate open hostility to higher education, and academia. It is not uncommon for professors and other academics to be censored or even arrested. Free expression in the arts is openly attacked, and governments often refuse to fund the arts.

இதுவும் நாமா பார்த்ததுதான்யா ( ஏன் நானே கூட சமீபத்துல ;) ஆன அது பிரண்ட்லி ஃபையர் :( )

12.Obsession with Crime and Punishment
Under fascist regimes, the police are given almost limitless power to enforce laws. The people are often willing to overlook police abuses and even forego civil liberties in the name of patriotism. There is often a national police force with virtually unlimited power in fascist nations.
தெலுங்கு சினிமா போலிஸ் மாதிரித்தான் எல்லா ஊரு போலிசும் இருக்குது. இந்த பாயின்டும் ஒகே. நாம் பார்த்தது அனுபவித்ததுதான்


13.Rampant Cronyism and Corruption
Fascist regimes almost always are governed by groups of friends and associates who appoint each other to government positions and use governmental power and authority to protect their friends from accountability. It is not uncommon in fascist regimes for national resources and even treasures to be appropriated or even outright stolen by government leaders.
ஹிஹிஹி நான் ஒன்னும் இதுக்கு சொல்ல முடியாதுங்க. ஆனா உங்களுக்கே புரியும்.14.Fraudulent Elections
Sometimes elections in fascist nations are a complete sham. Other times elections are manipulated by smear campaigns against or even assassination of opposition candidates, use of legislation to control voting numbers or political district boundaries, and manipulation of the media. Fascist nations also typically use their judiciaries to manipulate or control elections.

என்னாடா இது வம்பா போச்சு நான் என்னமோ இந்தியா என்கிற ஜனநாயக நாட்டில இருக்கிறேன்னு நினைச்சுகிட்டு இருக்கேன். பத்துப்பொருத்தமும் பொருந்தி வர மாதிரி 14 பாயின்ட்டும் பொருந்தி வருதே இனிமே தோழர் ரயாகரன் பாசிச இந்தியர்கள்ன்னா அழைக்கபோறாரு
:P

Friday, September 07, 2007

@ 8:21 PM எழுதியவர்: வரவனையான் 118 மறுமொழிகள்

வாரமெல்லாம் பன்னாட்டு நிறுவன நாதாறிகளூக்கு உழைத்து உழைத்து ஓடாய்த்தேய்ந்து போன நம் வலைப்பதிவு தோழர்களூக்கு வாரயிறுதிக்கொண்டாட்டங்களுக்கான வாழ்த்துக்கள். இந்த நட்சத்திர வாரத்தில் என்னோடு கொண்டாடலாம் வாருங்கள் நீங்கள், நான், மற்றும் " நம்ம " ஒல்டு மங்


கூடுவோம் தோழர்களே ( சியர்சின் தமிழாக்கமாம் )


@ 1:55 PM எழுதியவர்: வரவனையான் 15 மறுமொழிகள்

எல்லாப்பக்க புரிதலினைவிட ஒரு படம் சொல்லு சேதி விநாடியில் புரிய வைக்கும். தன் இனத்துக்கு எதிராய் தன் ஆதிக்க பலத்தினால் தம் உற்றாரையும் உறவினையும் இழந்த வெறுப்பின் வெளீப்பாடு எப்படி வெளீப்படுகிறது பாருங்கள் இச்சிறுவனினின் செயலில். இனரீதியாய் மத ரீதியாய் தன் வல்லாதிக்க வெறியால் மக்களை கொன்று குவிக்கும் எந்த அரசுக்கும் இப்படம் ஒரு எச்சரிக்கை மணி.


Thursday, September 06, 2007

@ 6:49 PM Labels: எழுதியவர்: வரவனையான் 26 மறுமொழிகள்
ஏறத்தாழ 5 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் உணவுக்கும் மருந்துக்கும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். உலகில் இது வேறெந்த இனத்துக்கு இது நிகழ்ந்திருந்தாலும் இவ்வளவு அமைதியாய் இருந்திருப்பார்களா நம் இந்திய அரசும் பத்திரிக்கையாள பிரபுக்களும். காஷ்மீர் பண்டிதர்களுக்கு "சுதந்திர" காஷ்மீர் பகுதியில் அல்ல இந்திய காஷ்மீர் பகுதியில் ஒரு கீறல் விழுந்தால் கூட பிஜேபி துவங்கி பேராயக்கட்சிகாரர்கள், காம்ரேடுகள் வரை அனைவருக்கும் அண்ட சராசரமே "அதிருகிறது" . மணிரத்தினம் துவங்கி பாலசந்தர் வரை எல்லோருக்கும் அப்பிரச்சினையின் அடுத்த பக்கம் குறித்து எந்த கவலையுமின்றி படமெடுத்து தேசியக்கொடி எரிந்தால் தன்னை அதன் மேல் உருட்டி அனைத்து தேசியம் காக்க ஒரு திருநெல்வேலி சைவ பிள்ளை பாத்திரம் ஆயுத்தமாவே இருக்கிறது. அதுவே ஈழத்தமிழர் என்றால் ஒரு வித எள்ளல் உணர்வே அவர்களால் வயிறு வளர்க்கும் தமிழ் சினிமா ஆட்களுக்கு மிக முக்கியமாய் பார்ப்பனிய பின்புலம் உள்ள இயக்குனர்களுக்கு. தாய்வீடு படத்தில் வி.கே . ராமசாமியின் வேலையாளாய் வரும் ஒருவர் ஈழத்தமிழர். அவரை இவர் ஒரு காட்சியில் அடிப்பார், அப்போது அவர் 'கொலை, கொலை' என்று அலறுவார். அதற்கு வி.கே. ராமசாமி " இலங்கையாம் , தமிழனாம் கொலையாம் " ஆளைப்பாரு என்பார். படம் வந்த காலகட்டம் இனவெறியினால் காடையர் தமிழரை வேட்டையாடிக்கொண்டிருந்த வேளை அந்த நிலையில் கூட இப்படி குரூரமாக கிண்டலடித்துக்கொண்டிருந்தது தமிழ் சினிமாத்துறை. பின்னர் வந்த பாலசந்தரின் புன்னகைமன்னனில் சிங்கள பெண் கதாநாயகியாகவும் ஹுசனி ஈழத்தமிழராகவும் வில்லனாக சித்தரிக்க பட்டிருப்பார்( அவரின் பெயரிலும் ஒரு கொழுப்பு காட்டியிருப்பார் இயக்குநர் ; ஹுசைனியின் பெயர் - துரைச்சிங்கம் ) .பாலசந்தர், வசனத்தினாலும் சிறு அதிர்ச்சி ஏற்படுத்துதலினாலும் தான் இங்கு ஒரு இயக்குநராக அறியப்பட்டவர். ஆனால் இன்றைக்கு நிலை வேறு பந்து ஈழத்தவர் பக்கம் இருக்கிறது. இனி வரும் காலத்தில் எங்கள் பிரச்சினையை பேசாத , பேச மறுக்கின்ற படங்களை புறக்கணிக்க போகிறோம் என்று சொல்லத்தான் போகிறார்கள். அன்றைக்கு புதிய புரட்சி கர இயக்குநர் அவதாரம் எடுக்க போகிறவர்களையும் பார்க்கத்தான் போகிறோம்.
இப்போது பேச வந்த பிரச்சினை அதுவல்ல. புலிகளிடம் விமானபடை இருப்பது தெரிந்த பின் தமிழர்களை கொன்று குவிக்கும் அந்த நாட்டு அரசுக்கு நவீன ராடார் கருவிகளை வழங்கியது இந்திய பிராந்திய வல்லரசு. அவை கண்ணிலும் மண்ணைத்தூவி வெற்றிகரமாய் முன்று தாக்குதல்களை நடத்தி முடித்திருகிறார்கள் புலிகள். அதன் இன்னும் அதிகமான ராடார்களையும் ராணுவ உபகரணங்களையும் அலறி அடித்து வழங்குகிறது இந்தியா. ஒரு இனமக்களை அழிக்கும் ராணுவத்துக்கு தன் இறையான்மைக்கு அச்சுறுத்தல் என்கிற பெயரில் ஆயுதங்களையும் பயிற்சியையும் அள்ளி வழங்கும் இந்திய அரசே, எங்கள் உறவுகள் உணவின்றி , நோய்க்கு மருந்தின்றி தவிக்கிறார்கள்.உமக்கும் அவர்களுக்கும் சம்மந்தமில்லை எங்களுக்கும் அவர்களுக்கும் தன் தொப்புள்கொடி உறவு. எங்கள் மக்களிடம் நிவாரன பொருட்கள் பெற்றுதருகிறோம் அதையாவது செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் கொடுக்க விடு என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கொண்டும் அனுமதி மறுக்க பட்டிருகிறது. ஒரு நாட்டுக்கு ராணுவ உதவி செய்கிறாய் நீ - எம்மக்களுக்கு எங்கள் சகோதரர்களுக்கு நாங்கள் கொடுப்பதை தடுப்பது ஏன் என்ற கேள்வியை முன்வைத்து தமிழக மக்களால் தங்கள் ஈழத்து உறவுகளுக்கு கொடுக்கப்பட்ட உதவி பொருட்களை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் புறப்படுகிறது அய்யா நெடுமாறன் தலைமையிலான அணி. மதுரையில் இந்த போராட்ட குழுவினருக்கு மருத்துவர் அய்யா.ராமதாசு வாழ்த்துரை வழுங்குகிறார். திருச்சியில் புரட்சிப்புயல். வைகோ வாழ்த்தி வழியனுப்புகிறார். பயண நாளுக்கு முன் தினம் ராமேஸ்வரத்தில் இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது அவர்களும் நாகப்பட்டினத்தில் தோழர்.தொல்.திருமாவளவனும் பயண நிறைவுரையாற்றி வழியனுப்புகிறார்கள். நம் சகோதர்களுக்கு உதவ மறுக்கும் இந்திய அரசைக்கண்டித்தும், உதவ நினைக்கும் நெஞ்சங்களை சட்டங்களும் எல்லைகளும் தடுக்கமுடியாது என உணர்த்தவும் வாருங்கள் தமிழர்களே நம் சகோதரர்களுக்கு உதவி பொருட்களுடன் யாழ் போவோம் !!!
தொடர்புடைய செய்திகள் : http://www.eelampage.com/?cn=33299

http://thenseide.com/cgi-bin/Details.asp?fileName=Sep1-07&newsCount=1

@ 2:53 PM எழுதியவர்: வரவனையான் 2 மறுமொழிகள்

சுபவீ-யின் பைசா பெறாத தன்மானமும் -

நாற்பதுகோடிகள் மீட்டெடுத்த சுயமரியாதையும்.
(18/04/06 அன்று எழுதிய பதிவு பீட்டா குழப்பத்தால் இப்போது காணாமல் போய் விட்டது. ஒரு வழியாய் கீற்று இணையத்திலிருந்து எடுத்தேன். மீள்பதிவாக இங்கு இடுகிறேன்.)
இந்த லீவு மயிரொன்னு விட்டுரக்கூடாதுய்யா, வீட்டு வீட்டுக்கு புள்ளைங்க தொந்தரவு தாங்க முடியல. ஸ்கூலு இருக்கன்னைக்கு கேளு எட்டு மணிவரைக்கும் பல்ல பொளந்துகிட்டுத்தூங்வாய்ங்க இப்ப என்னாடான 6 மணிக்கே எந்திருச்சு வெளாட போறேங்கறாய்ங்க.செரி வேற எங்கிட்டாவது போயி வெளாடுறாய்ங்களா அதுவும் கெடையாது.பூரா நம்ம வீட்ட சுத்திதான்.இவய்ங்க பத்தாதுன்னு பக்கத்து தெருவிலே இருந்து ஒரு நாளு பக்கிகள சேத்துகிட்டு மடார் மடாருனு கிரிகெட்டு மட்டைய வச்சு வாசக்கால ஒரு வழி பன்னிக்கிட்டு இருக்குறாய்ங்க. இன்னைக்கு காலைல இப்படித்தான் 'வெளியே ' போலாம்னு போயி உக்காந்தேன் . பின்னாடி சரசரன்னு சத்தம் கேட்டுச்சு பாம்பு கீம்பு அலையுதா அப்படின்னு திரும்பிப்பாத்தா ஒரு பையென் என்னமோ தேடிக்கிருக்கான். அடச்சை இவிங்க இம்சை இங்கையுமாடான்னு " டோய் என்னாடா தேட்ற"

கேட்டா பந்து விழுந்துருச்சு , நீங்க வந்த வேலைய பாருங்கன்னு சொல்லிட்டு என்னைய சுத்தியே தேடாரான்யா பந்தை. வாழ்க்கைல நிம்மதியா இருக்கற எடமே அதுதான் அங்கையும் பாருங்கையா தொயரத்த. போறப்ப "பந்து உங்க மகன் அடிச்சதுதான்னு ஹின்ட்" வேற குடுத்துட்டு போறாய்ங்க.வீட்டுக்கு போயி என்னாடி புள்ள பெத்துவச்சுயிருக்கே வெரட்டி வந்து இசுமைய கொடுக்குறாய்ங்க ,ஊருக்கு கீருக்கு அனுப்பி தொலையேன்னு ஒரு கடிகடிச்சு விட்டேன். அதிசயமா எதித்து பேசாம வேலைய பாத்துகிருந்தா. நமக்கும் அவகிட்ட திட்டு வாங்கி நாலஞ்சு நாளாச்சா வாயி சும்மான்னு இருக்காதுல்ல , "எங்க ஒரு மகாராணிய பெத்து உட்டுருக்கைல அவுக எங்க"ன்னே. ம்ம்... பக்கத்து வீட்டுக்கு டீவீ பாக்க போயிருக்கான்னா. அடுத்த வீட்டுக்கெல்லாம் ஏன்டி அனுப்புர அங்க போயும் ஒசில டீவீ பாத்து ஏய்ன் மானத்த வாங்குறதுக்கா , உங்கொப்பேன் வீட்டுக்கு அனுப்பிவைடி போயி இருந்துட்டு தின்னுட்டு வரட்டும் தாத்தேன் காச 'ன்னு சொல்லி முடிச்சதுதாய்யா தாமசோம். "நீ ஒழுங்கா சம்பாருச்சா நா ஏய்ன்யா புள்ளைங்களா அடுத்த வீட்டுக்கு அனுப்பபோறேன்" அப்படி இப்படி நம்ம fஇனன்cஇஅல் cஒன்டிடிஒன்

பத்தி நாலு வீட்டுக்கு கேக்குற மாதிரி சவுண்ட கொடுக்க ஆரம்பிச்சிட்டா. அவுளுக்கு எப்படி புரிய வைக்கிறது என் shareலாம் ரொம்போ டவுன்ல போய்க்கிருக்கிரத. மொளகா வெதைக்கனும்னு கமிசங்கடைக்காரன்ட வாங்குன காசயெல்லாம் "மிலிட்டிரி" சரக்கு வாங்கியே அடிச்சு காலி பன்ன கதை தெரிஞ்சா இப்பவே தாலியக்கழட்டி(பத்து பவுனு போட்டு வந்தா ஏய்ன் புன்னியத்துல இப்போ வெறும் மஞ்ச கயிருதான்) கைல கொடுத்து வீட்ட விட்டு வெரட்டி விட்டுருவா. சரி சரி தீவாளியப்போ டீவீ வாங்கிறலாம்ன்னே. "போயி வாயைக்கழுவு இதே பொய்யத்தான் முனுவருசமா சொல்லிகிட்டு இருக்கே" அடுத்த மாசம் நானே கலர்டீவீ வாங்க போரேன்னா. 'அப்பாடா உங்கப்பேன் அந்த டீவீய தரேன்னுட்டானா,' உந்தம்பீ பாரின்ல இருந்து புதுசு அனுப்பரேன்னு லெட்ட்ரு போட்டுருப்பான். இனிமே இத யாரு வாங்க போறான்னு உங்கிட்ட கொடுக்கரேன்னு சொல்லிருப்பாரு. ' அதுலேயே குறியா இரு, நாஞ்சொன்னது கவுருமன்டு டீவீய 'ன்னா. அடிப்பாவி கலைஞருதான் ஜெயிக்கபோறாருன்னு முடிவே பன்னிட்டேயா.( நேத்துதான் "நாலாவது அணி" ஒன்னுகிட்ட அவங்களுக்கு வேல பாக்குறேன்னு 'அவன்ய்ங்க தலைவர் மேல சத்தியம் ' பண்ணி பூத்துகாசு வாங்குனது நாபகத்துக்கு வருது) , ஏண்டி நான் "அந்த" கச்சிகாரனுக்கு வேல பாக்கபோறேன்னு சொல்லி வாக்கு கொடுத்திருக்கேன் நீ எம்பொண்டாட்டி நீயே கலைஞரு ஜெயிப்பாருன்னு சொல்ற , விட்ட பிரச்சாரமே பன்னுவ போலன்னு அதிச்சியா பாத்துக்கிருந்தேன்." இந்தா இங்க பாரு அவேய்ன்ங்க கூட ஊரு சுத்து புள்ளையாரு ஊருவலம்போனாய்ங்கன்ன கூட உண்டியல தூக்கிகிட்டு அல , அத விட்டுபுட்டு எவனாவது குங்குமத்த நட்டமா வைச்சுகிட்டு "வரவனையான் ஜீ " இருக்காரா நம்ம தலைவரு " முனியாண்டிஜீ" வரச்சொன்னாருன்னு கேட்டுகிட்டு வந்தான், வந்தவன உட்ட்ருவேன் உனக்கு படையலுதான்" என்று அன்பாக மறுமொழியுரைத்தாள் . இருந்தாலும் இந்த கலைஞரு சும்மாருக்க மாட்டாமே சொல்லிபுட்டாரு , வீட்டுக்கொரு ஆம்பளை வேனும்கிற கணக்குலயாவது நம்மள மதிச்சாளுக, இப்ப என்னடான்ன தொடர்ந்து நாலு மேட்ச்சுல டக் 'ல அவுட்டான கைய்ப் மாதிரி நம்மள நடத்துறாளுக. இப்படிதான் முந்தநாளு கம்மகஞ்சி, நேத்தும் கம்மஞ்கஞ்சி, வந்துச்சு கோவொம். சட்டிய விட்டேருஞ்சேன் , கேட்டா இன்னும் ஒரு மாசம் பொரு அரிசிக்கஞ்சியா பொங்கிப்போடுறேங்கிறா, அதுல எகனோமிக்கல் ஸ்டாட்டடிக்ஸ் வெளக்கம் வேற. அசால்டா சொல்றா 'நான் ஒரு நா காட்டுக்கு வேலைக்கு போனா 80 ரூவா சம்பாதிப்பேன், மாசம் பூரா அரிசிக்கு 40 ரூவா தான் போதாதா? அதும் போக ஸ்கூல்லையும் சத்துணவு போட்டுரூவாய்ன்ங்க . இப்படிதான்யா ஒரு வாரமா எதக்கேட்டாலும் "மே எட்டு , அது வரை கையக்கட்டு"ன்னு பஞ்ச் டயலாக்கு அடிக்கிறாளுக. வீட்லதான் இந்த இம்சைன்னு டீக்கட பக்கம் போயி உக்காந்தா ரெண்டு பேரு "நீ ஆம்பிள்ளையா" "நீ மீச வச்ச ஆண்மகனா"ன்னு லேட்டஸ்ட் டிரண்ட்ல சண்டை போட்டுகிட்டு இருக்காய்ங்க. சந்தேயில செருப்பக்கொண்டு எறிஞ்சா அது சனியென் புடிச்சவேன் தலையில போய்தான் விழுமாம் , அது மாதிரி நம்ம இருக்கர இடத்துலே எவனாவது ஏல்ரைய இழுத்த மனியமாதான்யா இருக்காய்ங்க , செரி எதுக்கு வம்பூன்ட்டு கொஞ்சொம் தள்ளிப்போயி உக்காந்தேன்.பக்கத்துல சாயங்கால பேப்பரு கெடந்துச்சு . இன்னைக்கு எந்த சினிமாக்காரேன் எந்த கச்சில போய் சேந்தானு பாக்கலாம்னு பேப்பர எடுத்தா ஒருத்தரு கச்சிய விட்டு வெலகியிருக்காரு ஒருத்தரு வெலகி சேந்திருக்காரு , வெலகி சேந்தவர உடுங்க, வெலகுனவுரு யாருன்னு பாத்தா நம்ம சுபவீ. மணிமணியா பேசுவாய்ன்யா மனுசேன் இன்னைக்கு பூரா உக்காந்து கேக்கனும் போல இருக்கும் பேசுனா. அவுரு அய்யா நெடுமாறேன் கச்சில தலைவரா இருந்தார். ஜெயலலிதா ' புண்ணியத்துல' ஜெயிலையும் பாத்துட்டு வந்தாரு ,எதுக்குடா வெலகுனாருன்னு பாத்தா கருணாநிதிய ஜெயலலிதா பரம்பரை எதிரின்னு சொல்லிட்டாரு இத நான் சும்மா விடப்போவதில்லைன்னு இவரும் போருக்கு கிளம்பிருக்காரு , அவுரு கூட்டாளிக செல பேரு ஊகும் நாங்க வரலப்பா, நாங்க உள்ளுர்த்தமிழனுக்கு பாதிப்பு வந்தாலாம் ஒன்னும் செய்ய மாட்டோம், குறைஞ்சபட்சம் பக்கத்துமாநிலத்துலயாவது இருக்கனும் நெ அரெ ஒன்ல்ய் எxடெர்னல் அffஐர்ச் Dஎபர்ட்மென்ட் இன் Tஅமில் நடிஒனலிச்ம் "ன்னு சொல்லிருக்காங்க போல ஏற்கனவே எண்னை தடவாத முறுக்கு மீசை வேறையா ! இவருக்கு கோவொம் பொத்துகிட்டு வந்துருச்சு , திராவிடத்துக்கும் ஆரியத்திற்குமான இறுதிப்போரில் தமிழனான நான் பங்கேற்கா விட்டால் நம் இனத்துக்கு தலைகுனிவு என்று முழங்கி களம் புகுந்துட்டாரு.சரின்னு அடுத்த பக்கத்த பொரட்டுன நெடுமாறேன் அய்யா அறிக்கை வெளியாகிருந்துச்சு , அவுரு என்னத்த சொல்லுறாருன்னு பாத்தா , அறிக்கை "புகழ்" சரத்துகுமாருக்கு அண்ணே மாதிரி விட்ருக்கருய்யா ஒரு அறிக்கைய , பொடா இன்னும் வாபஸ் வாங்கலையாம் - சரி , பொடாவுக்கு பொரவு வந்துருக்குற சட்டமும் பொடா மாதிரியே இருக்காம் - சரி , போன தடவ பிரச்சாரம் பன்னுனதுக்கு யாரு நன்றி சொல்லலையாம்- சரி, யாரு வந்தா தமிழ்நாட்டுக்கு நல்லதோ அவ்ங்களுக்கு ஆங்காங்கே உள்ள தமிழுணர்வாளர்கள் ஓட்டு போடனுமாம். ஐயா ! எப்பயிருந்து இப்படி , இதுக்கு பேசாம நீங்க நீதிமன்றத்துல அனுமதி வாங்காம இருந்துருக்கலாமே ! நேரஞ்செரியில்லைன்னா கவுறு கூட பாம்பா மாறும்பாய்ன்ங்க , அந்த கத இப்ப தமிழ்நாட்டுக்குதாய்ய செரியா இருக்கு. திருச்சில "ஒரு ஃபங்ஷனுக்கு டேட்ஸ் குடுத்துட்டு" திடீருன்னு போயஸ்ல போயி போஸ் குடுக்குறாங்க , தலையனங்காலத்து செருவென்ற நெடுஞ்செழியன் வழி வந்த தமிழ்க்குலக்கொடி "சிம்ரன்" அண்ணா நாமம் வாழ்கன்னு அதிமுக -ல்ல சேந்து "அம்மாச்சி" வந்தா நல்லாருக்கும்ன்னு சொல்லுது , எங்க அம்மாச்சி செத்து போயி 20 வருமாகுது, இப்ப வந்து அந்த புள்ள "அம்மாச்சிதான் வர்னும் நல்து"ன்னு சொல்து(சீ, சொல்லுது), நாங்க எங்க அம்மாச்சிய எங்கிட்டு போயி தேட.இப்ப பத்தா கொரைக்கு நீங்க வேற , வக்கில புடுச்சு , மனுவப்போட்டு, கோர்ட்டுக்கு போயி ஒருவழியா பிரச்சாரம் பண்னலாம்னு நீங்க அனுமதி வாங்குனத பேப்பருல, பாத்தோனே பரவாயில்லடா இந்த நல்ல மனுசன அந்தம்மா புடிச்சி கடலூர்ல ஜெயில்ல , போட்டதையும், ஊரூரா வண்டில வச்சு இதயநோயாளின்னு பாக்காம சுத்துனதையும் எங்க மாதுரி மக்களுட்ட வந்து சொல்லி ஜனநாயகபூர்வமான வகையில எதிர்ப்புணர்வை காட்டுவீங்கண்னு பாத்தா " கலைஞரோட ஈழப்பிரச்சினை நிலைப்பாடு 'ல்லாம் பிச்ச வாங்குற மாதிரி ஒரு அறிக்கைய விட்டுருக்கீங்க.அய்யா காமராஜர் காலத்துல இருந்து பொது வாழ்க்கைல இருக்குறவரு நீங்க , தமிழ்நாட்டுல விரல் விட்டு எண்ணக்கூடிய நேர்மையான அரசியல் வாதிகள்ல நீங்களும் ஒருத்தரு , முந்தீ உங்க கூட்டம் போட்டு நிதிவசூலிக்க போனா எவனோன்னு நெனச்சு வாசலோட அனுப்புற பெரிய மனுசய்ங்க துண்டறிக்கைல உங்க பேர பாத்துட்டு காச எடுத்துகிட்டு பின்னாடி ஓடி வந்து கொடுப்பாய்ங்கய்யா , நீங்க அம்பூட்டு நல்லவரு அதுல மாத்து கருத்து இல்ல ; நான் சின்னப்பயதான் ஆன ஒன்னு சொல்லுறேன் கோச்சுகாதீங்க, ஒரு தப்ப செய்யுறது எப்படியோ , அது மாதிரித்தான் நல்லது செய்ய வாய்ப்பிருந்தும் செய்யாம இருக்குறதும். இத்தனக்கேள்வி கேட்டு இருகீங்களே நான் ஒன்னு கேக்கறேன் ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்னால இந்த கேள்வியப்பூராம் நம்ம 'இருபத்துநாலாம் புலிக்கேசிட்ட'( 23 க்கு ஷங்கர் பேடண்ட் வாங்கிட்டாராம்) கேட்டுருந்திங்கனா அவுரு டெல்லிபோயி உக்காந்து காரியத்த முடிச்சுருப்பாரே.அப்கோர்ஸ் உங்க மாதிரி அந்த ஆக்ட்ல அவரும் ஒரு அக்கூயுஸ்ட் தானே(சை, சன் டீவீ பாத்து பாத்து தமிங்கலம்தான்யா வாயில வருது) அதையும் விடுங்க கடேசியா சொல்லிருக்கீங்கலே நல்லவுங்க யாருன்னு பாத்து ஓட்டு போடுங்கன்னு, அந்த நல்லவுங்க யாருன்னு ரொம்போ நல்லவுரு நீங்களே சொல்லிட்டா நல்லாருக்கும்.செரி கருணாநிதி வேண்டாம், அந்தம்மாவ கையக்காமிச்சா நம்ம "நாற்பது" மாதிரி ஆகிப்போகும், அப்புறம் அந்தம்மாவால நீங்க சந்திச்ச தடா , பொடால்லாம் அர்த்தமில்லாம போயிடும். அதுக்காக நம்ம விஜயகாந்த கூடவா உங்களுக்கு கண்ணு தெரியல அவரு வேற அப்பப்ப "தமிள் என் மூச்சு, ஆங்கிலம் என் அபானவாயு"ன்னு சிங்கிள் டேக்குல டயலாக்க ஒகே பன்னிகிட்டு அலையறாரு, அவர நீங்க கணக்குல கூட எடுக்கலையே,இப்படியில்லாம் ஒரு கடுதாசிய உங்களுக்கு போட்டுரூராலம்னு நெனச்சுகிட்டுயிருந்தா , டீக்கடைகார பையேன் வந்து பேப்பர குடுனே மிச்சரு மடிக்கனும்னு வாங்கிகிட்டு போய்ட்டான் . செரி கழுத பொழுது போகலன்னு காலைல்ல பேப்பர பாத்தா நம்ம" நாப்பது" மேட்டரு , நேத்தும் எதோ ஊருல நாப்பதுன்னு சவுண்ட கொடுத்துருக்காய்ங்க.எங்குரூ "மதிமுக கோவிந்தேன்" அனாசின்னு வெளம்பர போஸ்டர பாத்தாக்கூட திமுக - வின் திட்டமிட்ட சதின்னு பொலம்பீட்டு திரியுரானாம்.ஆனா அவுரு என்னைய அங்க கேவலப்படுத்தினாய்ங்க , என் சுயமரியாத அதுக்கு எடந்தரலேன்னு அதுனாலதான்னு இன்னமும் பேசுராரு. 25 கொடுத்திருந்தா இன்னேரம் அவுரு பேச்சே வேற.இது எப்படி யிருக்குதுன்னா எங்குரூல திருவெளாவிக்கு நாடகம் பேச போவோம் , அவ்ய்ங்க அரிச்சந்திரா, ன்னா 5 ஆயிரம், வள்ளிதிருமணம்ன்னா 8 ஆயிரம்பாய்ங்க, ஏண்டான்னு கேட்டா அது சீனு அதிகம்பாய்ங்க. அந்த கதயாய்வுல இருக்கு 25ன்னா நெகிழ்வான தன்மானம் , அதுக்கு கொராஞ்சா டபுள் கஞ்சி போட்ட தன்மானம் போல. அனா இந்த புரட்சித்தலைவியும் பல விசயங்கள்ள "புரட்சி" யப்பண்ணுதுயா ,சாதருன மனித உணர்வுகளுக்குகூட வெலய நிர்னயம் பன்னி அதுலயும் புரட்சியா. சுயமருவாத வெல இன்னைக்கி மார்க்கட் ரேட்டு 40 கோடி, ஏன் சுபவீ நீங்களும் இன்னும் ஏன் தமிழனாதான் இருப்பேன் அடம் புடிக்கிறிங்க, பேசாம அன்புச்சகோதரனா மாறினா இப்போதக்கு பைசாக்கு பெறாத உங்க தன்மானத்துக்கும் ஒரு வெலைய நிர்னயிப்பாங்கள்ல , தன்மானத்த வித்துபுட்டு எப்படிடா தமிழ்நாட்டு ஜனங்க முஞ்சில முழிக்கிறதுன்னு யோசிக்கிறீங்களா ? அவய்ங்க கெடக்காய்ங்க கிருக்குபயலுக , என்னா இந்த கிறுக்குபயலுக யாராவ்து கூட்டத்துல இருந்துகிட்டு "நாப்பது என்னாச்சுன்னு" நாகரீகமே இல்லாம கேப்பாய்ன்ங்க ,நீங்களும் ஒடெனே பேச்ச முடிச்சுகிட்டு பக்கத்தூரூக்கு போகவேண்டியதுதான். நாப்பது பெருசா தன்மானம் பெருசா ஓசிச்சு ஒரு முடுவுக்கு வாங்க.

இதல்லாம் விட அன்னைக்கு ராத்திரி வீட்டுக்கு போறேன் , வீடு பூட்டிருக்கு சரின்னு ஒரு பீடிய பத்தவச்சுகிட்டு உக்காந்திருந்தேன், ஆடி அசைஞ்சு வாராயா 9 மணிக்கு, எனக்குன்னா கோவம்ன கோவம் அப்படி ஒரு கோவம். செரி சோத்த போடுரீன்னு சொன்ன," அவ அத விட்டுபுட்டு பக்கத்து வீட்டுக்காரிகிட்ட போயி குசுகுசுன்னு பேசிக்கிருந்தா என்னாடின்னு கேட்டேனா அவ சொல்றா " இவரும் சொல்ட்டாருய்ய அடுத்த மாசம் கண்டிப்பா டீவீன்னு"னா யார்டி சொன்னதுன்னேன், நம்ம தயாநிதி மாறென் இப்பத்தான்யா நம்மூரு வழியா பேசிட்டு போறாரு அப்படின்னு அவுரு என்னமோ இவ அத்த மகேன் பாதிரி சொல்றா. அதுவாது பராவாயில்ல சோத்த போட்டுகிட்டே சொன்னா "எம்பூட்டு செவப்ப இருக்காரு எம்ஜியாரு கணக்கா "ன்னா . தமிழ்நாடு வெளங்கும்னு நெனைக்கிறிங்க.ம்கூம்வரவனையான் - 18/04/06*திரு. தயாநிதி மாறன் மற்றும் சன்டீவி குறித்த மதிப்பீடுகள் மாறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Wednesday, September 05, 2007

@ 5:31 PM Labels: எழுதியவர்: வரவனையான் 37 மறுமொழிகள்

சமீபத்தில் ஒரு 35 ஆண்டுகளுக்கு முன் சின்னாளபட்டியில் பொதுக்கூட்டம் முடித்து தோழர் ஒருவர் வீட்டில் இரவுணவுக்கு செல்கிறார் பெரியார். இயக்கத்தோழர் குடும்பத்துடன் உணவுக்கு பின் பேசிக்கொண்டிருக்கையில் அந்த இளம் குடும்பத்தலைவர் தனக்கு அப்போது பிறந்திருந்த பெண் குழந்தைக்கு பேர் வைக்க சொல்லிக்கேட்டார். அந்த குடும்பம் தெலுங்கை தாய் மொழியாய் கொண்ட குடும்பம். பேசும் போது இதைக்கேட்டறிந்த பெரியார் அக்குழந்தைக்கு "செந்தமிழ்ச்செல்வி" என்று பெயரிட்டார். பெரியாரின் நடைமுறைச்செயல்களில் கூட ஒரு கலக செயற்பாட்டினை காணலாம். கூட்ட மேடைகளில் பெயர் வைக்கச்சொல்லி கேட்டால் "மாஸ்கோ" "ருசியா" லண்டன் என்றெல்லாம் பெயரிட்டுள்ளார் கேட்டால் "திருப்பதி,காசி, பழநி, சிதம்பரம்னு நீ மட்டும் ஊருகளோட பெயரை வச்சுகிட்டு திரியலையா என்ன நான் வெளீநாட்டு ஊரு நாடு பெயர்களை வைக்கிறேன்'ன்னு விளக்கம் சொல்லியுள்ளார்.சமயங்களில் இன்னும் ஒரு படி மேலே போய் பெண்களுக்கு ஆண்களின் பெயரையும் சூட்டி பாலின பேதத்தையும் ஒரு கை பார்த்துள்ளார் எடுத்துகாட்டாக திமுக மகளிரணியின் முதன்மை தலைவர்களில் ஒருவரான காரல் மார்க்ஸ் . இவருக்கு மார்க்ஸின் பெயரினையிட்டுள்ளார் பெரியார். பெரியார் எந்த ஒரு விதயத்திலும் ஆதிக்கத்துடன் செயல்பட்டது கிடையாது அதே வேளை ஆதிக்கத்துக்கு எதிராக இயங்கும் நிலையில் பிறமொழி கலக்காமல் வடமொழியினை துறந்து தம்பெயரை தமிழ்ப்படுத்திக்கொண்ட இயக்கதினைரை விமர்சிக்காமல் ஆதரித்துள்ளார். ராமைய்யா என்கிற பெயரை அன்பழகன் என்று பேராசிரியர் மாற்றியது இயக்கத்தினுள் பெயர் மாற்றம் குறித்த ஒரு சிந்தனை அலையயை ஏற்படுத்தியது. ஒரு முறை கலைஞர் தனது தெக்ஷ்ணாமூர்த்தி என்கிற பெயரை கருணாநிதியென்று தான் மாற்றியது குறித்து பெரியாரியடம் சொல்லிக்கொண்டிருந்தபோது பெரியார் குறுக்கிட்டு இப்போ வச்சுருகிற பெயரும் வடமொழிதான் ஆனா அதுக்காக ரொம்ப மெனகெட்டு மாத்த தேவையில்லைன்னு சொல்லியிருக்கிறார் சிரித்துக்கொண்டே.

ஒரு மனிதனின் பெயர் என்பது அரசியற் செய்தி ஒன்றை கொண்டிருக்கவேண்டும் என்கிற முறை திராவிட இயக்கத்தினாரால் முழுவீச்சுடன் கொண்டு செல்லபட்டது. அண்ணா கலைஞர் போன்றவர்களிடம் இருந்த மென்மையான தமிழ்த்தேசிய போக்கினால் பெயர் மாற்றமும் தமிழ்ப்படுத்தலும் ஆதிக்கம் செழித்துக்கொண்டிருந்த வடமொழிக்கெதிராய் இயங்கவைத்தது.

செல்லன் - செல்லச்சாமி
வெள்ளையன் - வெள்ளைச்சாமி
கருப்பன் - கருப்பசாமி
குப்பன் - குப்புசாமி

மேற்கண்டவற்றில் இலகுவாய் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் பெயரையும் ஆதிக்க இடைச்சாதியினரின் பெயரையும் அடையாளம் கண்டுகொள்ளலாம். தமிழ்பெயர்களான இவற்றிள்ள நுண்ணரசியலை களைந்து வந்ததுதான் திராவிட இயக்கத்தின் தமிழ்பெயர் மாற்றும் எதிர்கலாச்சார போக்கு. அதில் தெரியும் தொன்மையைப்போற்றிய நீட்சேயிசத்துக்கிடான விதயங்களையும் நாம் மறுப்பதற்கில்லை .

பெரும் புத்தக பொதியுடனே எப்போதும் காட்சியளிக்கும் பாவலேறு அய்யா. பெருஞ்சித்திரனாரை ஒரு முறை கூட்டமொன்றில் சந்தித்த போது உடன் இருந்த பெரியார் திராவிட கழக மாவட்டச்செயலாளர் துரை.சம்பத் என்னை அறிமுகம் செய்து வைத்தார். பாவலேறு முழுக்க முழுக்க பிறமொழி கலக்காமலேதன் பேசுவார். தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் நண்பர்களின் பெயரையும் கலப்பற்ற தமிழிலேயேதான் விளிப்பார். தோழர் . சம்பத்தை " உட்காருங்க செல்வம் என்றார். என்னை செந்தில் தம்பீ உட்காருங்க என்று அவர் சொல்லிய போதுதான் என் பெயர் முழுக்க தமிழ் என்கிற விதயம் தெரிந்தது. ஆனாலும் அவர் கிளம்பும் முன் சொன்னது இனி செந்தில்குமார் என்று போடாதீர்கள் செந்தில் செல்வன் என்றே உங்கள் பெயரை சொல்லுங்க என்றார்.

என்னிடம் அன்பர்களும் நண்பர்களும் குழந்தைகளுக்கு பெயர் ஒன்றினைக்கேட்கும் பொழுதெல்லாம் முழுமையான தமிழ் பெயர்கள் அல்லது அரசியற்பெயர்களைத்தான் பரிந்துரைப்பது வழக்கம். இப்போது எங்கள் வீடுகளிலும் நண்பர்களின் வீடுகளிலும் பிரபாகரன்களும், தீலிபன்களும் பேரறிவாளன்களும் , விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆதிக்கத்துகுள்ளான ஒரு இனம் தன் இனமீட்புக்கான ஒரு விதயமாகவும் அரசியற் செய்தியைக்கொண்டும் இருக்கும் பெயர்களை தமது பிள்ளைகளுக்கு இடுவதே சரியான விதயமாக இருக்க வேண்டும்.

குறைந்தது அப்பிள்ளைகளுக்கு பெயரிடும் அதிகாரம் அவர்களின் 15 வயது வரைதான் நமக்கும் இருக்கிறது. அதன் பின் தேவையும் அவர்களின் விருப்பமுமேதான் முதன்மையானது.

நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்கு சூட்டுங்கள் !
நான் ஒரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள் !

Tuesday, September 04, 2007

@ 5:16 PM எழுதியவர்: வரவனையான் 90 மறுமொழிகள்
அவங்க சொல்லும் போது உண்மையா அது ஆச்சரியத்த வரவழைச்சது. பொதுவா நாங்கள்ளாம் லீவு போட்டு சரக்கடிப்போம் இவங்க என்னாடான்னா லீவு போட்டு டைப் ("றைப்" சரிதானே தோழர் ) அடிச்சிருக்காங்க. அதும் அய்யாவோட பெரும்பான்மையான எழுத்துகளையும் பேச்சுகளையும் ஒருகுறி எழுத்தில் ஒற்றையாளாய் தரவேற்றி இருக்காங்க. இப்போதே ஆயிரத்தை தாண்டுகிறது அவரின் தொகுப்புகள். உழைப்பால் தரவேற்றபட்ட பதிவுகள். அவரின் புதிய அமைப்பான பெரியார் விழிப்புணர்வு இயக்கம் அய்ரோப்பாவில் இயங்கத்துவங்கியுள்ள செய்தியும் மனதுக்கு உவகை தருகிறது. பெரியாரின் நெடிய வாழ்வு சொல்லி செல்லும் செய்தி ஒன்றுதான் அது மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அம்பலபடுத்துவதற்கு ஒரே வழி அதை பற்றிய பரப்புரைதான் என்பதே அது. பெரியாரிய விழிப்புணர்வின் இயக்கத்தின் முதல் கட்ட கலகமும் அதன் படி துவங்கியிருப்பது இன்னும் சிறப்பான செய்தி . மனித உரிமையின் தாயாகமான பாரீசில், மனிதம் சிறக்க வந்த தத்துவங்களின் தோற்ற பூமியியான பிரான்சில் துவங்கப்பட்டுள்ள இந்த , கடல் கடந்து மொழிகடந்து போனாலும் சனதானத்தை எதிர்க்க பெரியாரியத்தை கையில் எடுத்திருக்கும் தோழர்.தமிழச்சியின் புதிய அமைப்பிற்கும் தொடரப்போகும் கலகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

@ 11:21 AM எழுதியவர்: வரவனையான் 14 மறுமொழிகள்அப்பல்லாம் காலையில வெள்ளனவே எந்திரிச்சுருவேய்ன், எந்திரிச்சவுடனே நேரா வீட்டுக்கு வெளியே செந்திலு வீட்டுக்கு எதிரில இருக்குற நம்பிக்கை டீச்சர் காம்பவுன்ட் கிட்ட நான் போக சரிய வெளிய வருவான் ராஜ்குமாரு. ரெண்டு பேருக்கும் அந்த செவுத்துல யாரு உசரமா உச்சா போறதுன்னு போட்டி நடக்கும் தெனமும் . உண்ணி உண்ணி அடிச்சதுல ஒரு தடவை காம்பவுண்டு தாண்டி உள்ள அடிச்சு ஜஸ்டின்'னோட பாட்டி மேல பட்டு எங்கள வெளக்கமாத்த எடுத்து தொரத்துனது தனி கதை.

எங்க காம்பவுண்டுக்கு எதுத்தாப்புல இருந்து இடதுபக்கமாய் அண்டிராயர் மாமா விட்டுக்கு அடுத்து இருந்துச்சு என் முதல் நண்பன் செந்தில் வீடு. கொழும்பு நகைக்கடை செட்டிமாரு அவுங்க. என்னை விட ஒரு வகுப்பு மூத்து அவன். என்ன பெரிய மூத்து நான் கிண்டர் கார்டன் அவன் லோயர் கின்டர் கார்டன் அம்பூட்டுதான். நானும் செந்திலும் அவ்ளோ அந்நியோனியமா இருப்பம். அவன் ஒரு கோயிலு செங்கல வச்சு கட்டி முருகன் படம் வச்சான், அதுக்கு முன்னாடி ஒரு குழிய தோண்டி அதுக்கு மேல பழைய புத்தக அட்டைய வச்சு அது நடுவுல பிளேடு வச்சு கீரி உண்டியலா மாத்தினான்.

"செட்டிப்பய கூட சேர்ந்தா உண்டியல வைக்கதான் கத்துக்கொடுப்பான்" ராஜ்குமாரு அம்மாச்சி கிண்டலடிக்கும்.

இத கேட்டுட்டு

" அவ கெடக்க ஏழுருகாரி "ன்னு செந்திலு ஆச்சி கைய நெடிக்கும். ( ராமநாதபுரம் கிருத்துவ வேளாளர்களை மதுரை பக்கம் இப்படி அழைப்பார்கள், 7 கிராமத்து வேளாளர்கள் மட்டும் முன்பு கிருத்துவத்துக்கு மாறியதால் இப்பெயர் )

இப்படி போயிகிட்டிருந்த போதுதான் ஒருனாக்காலையில உச்சா அடிக்கிற போட்டிக்கு மூத்திரத்த அடக்கிகிட்டு வெளிய ஓடினா அன்டிராயர் மாமா வீட்டுக்கு வலப்புறம் இருந்த "யார்" வீட்டு முன்னாடி ஒரு லாலி ச்சா லாரி நின்னுச்சு. ( அது யார் வீடு என்று தெரியாதாலும், அப்போ யார் என்கிற பேப்படம் "பயங்கரமாய்" ஓடியதாலும் என் மூத்த தலைமுறையான அண்ணனின் நண்பர்கள் வைத்த பெயர் ) அந்த வீட்டின் அருகில் கூட போக மாட்டோம். அதன் தோற்றம் அப்படி. ஆண்டுகணக்காய் வாராப்படாத காய்ந்த இலைகளும் குப்பையுமாய் இருக்கும். அந்த சின்ன தெருவுக்கு சம்மந்தமில்லாத மிகப்பெரிய வெராந்தை கொண்ட முகப்பும் அதன் வாசலில் இருக்கும் சாத்தானை கொல்லும் பெரிய சைஸ் படம் என்று அது குறித்து அளக்கபட்ட கதையை உண்மையாக்குவது போன்றே இருக்கும் அதன் தோற்றம். கிரிக்கெட் ஆடும் போது கூட "யார்" வீட்டுக்குள்ள அடிச்ச அவுட்ன்னு ரூள்ஸ் வச்சுருந்தோம்.

லாரியில இருந்து வீட்டு சாமான் இறங்கிட்டு இருந்துச்சு, அது வரை நான் பார்க்காத பொருளா இருந்துச்சு. மதுரை டவுண்ஹால் ரோட்டில பார்த்திருந்த டிவீ ஒன்னு இறக்குனாங்க. அது கடையில பார்த்ததை விட முணு மடங்கு பெருசா இருந்துச்சு. இத பாத்த ஆச்சரியத்துல உச்சா போட்டிய மறந்துட்டேன். அடக்கி அடக்கி பாத்த ராஜ்குமாரு அடக்க முடியாம டவுசரோட அடிச்சு அவங்க அப்பாட்ட குண்டி குண்டியா முருங்கை குச்சில அடிவாங்குனது அடுத்த நா காலையிலதான் தெரிஞ்சுச்சு.

அதுக்கடுத்த ஆச்சரியம் ஒண்ணு நடந்துச்சு, அந்த "யார்" வீட்டுல இருந்து ஏய்ன் வயசு பசங்க ரெண்டு பேரு வெளிய வந்தாங்க. ஒரு கைல டீ கப் வச்சுகிட்டு வாசலில இருந்த திண்ணையில உக்காந்தவங்க ஒரு மடக்கு டீயை குடிக்க இன்னோரு கைய்யில எதையோ வச்சுகிட்டு ஒரு நக்கு நக்கவுமா இருந்தாங்க. எனக்கு ஒரு சிறுவனுக்குரிய ஆச்சரியம் கிளர்ந்தெழ அருகே போய் பாக்க ஆசை அதே நேரத்துல பயமும் இருந்துச்சு. காரணம் அவங்க அம்மா ஒரு கவுனு போட்டுகிட்டு நின்னுகிட்டு இருந்தாங்க. அது ஒரு ஆச்சரியம் இப்படி தெரிந்தே ஆகவேண்டிய புதிர்களுடன் நின்னுகிட்டு இருந்தவனை கைப்பட்டைய புடிச்சு பரபரன்னு இழுத்து குளிக்க கொண்டுபோக பள்ளி நினைவுகள் அழுகை கொண்டு வர எல்லாம் மறந்து போனேன்.

மைக்கானாளு காலையில ஒன்னுக்கடிக்க ஓடினா செந்திலு வீட்டுல ஒரே சத்தம். ராஜ்குமாருகிட்ட கேட்டேன்.அவனும் தெரியலைன்னு சொல்ல செந்திலு வீட்டுக்குள்ள ஓடினேன் செந்திலும் அவன் சித்தி மக உமாவும் ஒரே அழுகையும் கையுமா உக்காந்து இருந்தாங்க. சாயுங்காலம் ஒளிஞ்சு புடிச்சு வெளையாட போறப்பத்தான் செந்திலு சொன்னான் எங்கப்பா கடைய எரிச்சுப்புட்டாங்க அப்பாவையும் கொன்னூட்டாங்கன்னு. எனக்கு அப்ப பாத்த எதோ படத்துல ஒருத்தன் அப்பாவை கொல்லுற சீனுதான் நாபகத்துக்கு வந்துச்சு. அடுத்த நா காலையில ஏரோபிளைனில அவங்கப்பவ கொண்டுவந்தாங்க. பொணத்த வாசலிலிலையே வச்சாங்க உள்ளாற கொண்டு போகல. என் நெனவு தெரிஞ்சு மொத மொற ஒரு பொணத்த அப்பத்தான் பாக்குறேன்.

எங்க அப்பாவும் தோமாஸ் வாத்தியாரும் போயி மாலை போட்டாங்க. அப்ப அவங்களுக்கு பின்னாடியே "யார்" வீட்டுக்கு குடி வந்திருக்கிற அந்த பசங்களோட அப்பாவும் அந்த பசங்களும் வந்து மாலை போட்டாங்க. குளிப்பாட்ட தூக்கிட்டு போனவுடன் எங்கப்பாட்ட பேசிகிட்டு இருந்தாரு அப்போதான் அவனுங்ககிட்ட பேசினேன். ஒருத்தன் பேரு சரவணன் இன்னோருத்தன் பேரு ருத்திரன். எங்கட அப்பா டொக்டர், கெனடாவுல இருந்து வந்திருக்காரு எங்கட வூரு ஸீறீலங்கன்ன்னு சொன்னானுக.

அதுக்குபிறகு ஒரு நா செந்திலு அண்ணன் சேகர் ஜெயவர்த்தனா படத்தை எங்க மேலப்போன்னகரம் 7 வது தெருவுல வரைஞ்சு செருப்பால அடிச்சிகிட்டே கோசம் போட சொல்லி கொடுத்தாரு.

" அஞ்சு பைசா முறுக்கு ஜெயவர்த்தனாவை நொறுக்கு"ன்னு


சொல்லிகிட்டே இருக்கனும் அவரு ஓரமா நின்னுகிட்டு பாப்பாரு. கொஞ்ச நேரம் கழிச்சு சிலோன் தேங்காய் மிட்டாயி கொடுப்பாரு. இது கேள்விபட்டு 8வது தெருல இருந்து பசங்க வந்து அவனுங்களும் கோசம் போட்டு செந்திலு அண்ணன்கிட்ட இருந்த தேங்காய்மிட்டாயிலாம் காலி பண்ணிட்டாங்க.


அடுத்தநாளு தமுக்கம் மைதானம் கூட்டிட்டு போனாங்க அங்க எதோ மாநாடாம். நான் பொருட்காட்சிக்கு மட்டும் ஒரு தடவ போயிருக்கேன். அப்ப ஒரு ஸ்டாலுக்குள்ள படமா வச்சுருந்தாங்க அதுல ஒரு படத்துல ஒருத்தரு டயர கட்டி எரிச்சுகிட்டு இருந்ததை படம் புடிச்சு போட்டிருந்தாங்க. எனக்கு அழுகையா வந்துச்சு, செந்திலு அப்பா இப்படித்தான் செத்திருப்பாருன்னு நெனச்சதாலா. நெறையா பொஸ்தகம் காலண்டரு வாங்கினாங்க அப்பாவும் சித்தப்பாவும். ஒருத்தரு படம் போட்ட சின்ன புத்தகம் வாங்கின போது காசு என்கிட்ட கொடுத்து குரூஸ் வாத்தியாரு மாதிரி பெல்ஸ் போட்டு குட்டைய இருந்த ஒருத்தருட்ட கொடுக்க சொன்னாங்க. அவரும் வாங்கிட்டு என் கன்னத்தை கிள்ளிட்டு "நன்றி தம்பி"ன்னு சொன்னாரு. வீட்டுக்கு வந்து பாத்தா அவரு படம்தான் இந்த புத்தகதுல போட்டு இருந்துச்சு ஆனா இதில கோடுகோடா சட்டை போட்டு கையில தூப்பாக்கி வச்சுருந்தாரு.சவணனும் ருத்திரனும் பிரண்டாகிட்டானுங்க இப்போ, அவங்க வீட்டுக்கிட்ட போனா சாயாங்காலத்துல "தேத்தண்ணி குடிங்கோ"ன்னு கேப்பாங்க சீனி போட்டு கொடுத்தா குடிப்பேன்னு சொல்லிட்டேன்.

அவனுங்க செய்யுறதுல்லாம் ஒவ்வோன்னும் ஆச்சரியமா இருக்கும்.

"அம்மா, தம்பியை பாருங்க குழப்படி செய்யுறார்"ன்னு சரவணன் சொல்ல

அவங்கம்மா வந்து " ருத்திரன் ஏன் இப்படி செய்றீங்கள், அண்ணனிட்ட மன்னிப்பு கேளுங்க"ன்னு சொல்ல எனக்கு பெரிய ஆச்சரியமா இருக்கும்.என் அண்ணனோ என்னைய பாத்தாலே பொடனில லொட்டு ஒரு அடி போட்டுட்டுதான் அடுத்த வேலை பார்ப்பான். நான் அவனும் அவன் பிரண்ட்ஸும் குண்டுவெளையாடுற குழில ஆள் இல்லாதப்போ ஒண்ணுக்குகடிச்சு வச்சுட்டு அடுத்தநாள் அவனுங்க வெளைட்யாடும் போது ஹிஹின்னு சிரிப்பேன். அவணுங்களுக்கு புரிஞ்சுடும் வெரட்டி வந்து புடிச்சு அவன் மட்டுமில்லாம அவன் கூட்டாளுகளும் சேர்ந்து மண்டையில் ஆக்கர் பார் விளையாண்டு போவானுக.

வெளாட்டு சாமானும் பூர புதுசா இருக்கும் சரவணன் கிட்டையும் ருத்திரன் கிட்டையும். மெஷின் கன் அப்படியே உண்மையா இருகிற போலவே இருக்கும். என் கிட்ட ஈகிள் கொல்ட் தூப்பாக்கி இருந்துச்சி பாக்க நெசமான தூப்பாக்கி போலவே இருக்கும். அதுல கழுகு எம்பளம் இருப்பத பாத்து சரவணன் தன்னோட புது மெஷின் கன்'ன்னை எனக்கு கொடுத்துட்டு அந்த தூப்பாக்கியை கேட்டான் நான் ஆசையா வீட்டுக்கு கொண்டு வந்தா எங்கம்மா முதுகுல ரெண்டு அடி கொடுத்து மரியாதையா திரும்ப வாங்கியாடான்னு வெரட்டி விட்டுச்சு. இத கொடுக்க போனபோதுதான் மொததடவ அவங்க வீட்டுக்கு போனேன். உள்ளார எல்லா ரூமிலையும் கழுகு படமா இருந்துச்சு. சரவணனுக்கு கோவம் தூப்பாக்கியை திரும்ப கேட்டதுல. எங்களுக்கு கழுகுதான் புடிக்கும் உங்களுக்கு எது புடிக்கும்ன்னு கேட்டான்; எங்களுக்கு புலின்னு சொன்னேன், அவங்கம்மாக்கு ஒரே சிரிப்பு.

எங்கண்ணன் என்.சி.சி பரே ஒன்னு பழசு கிடந்துச்சு வீட்டுல அத எடுத்து போட்டுகிட்டு ஒரு நா காலையில " நாந்தான் புலி, நான் சுடுவேன் எங்க ஓடு"ன்னு ராஜ்குமாரை வெளையாட கூப்பிட்டேன். அவனுக்கு கண்ணுல தண்ணிகட்டிருச்சு டேய் நானும்தாண்டா புலி சொல்லி அழுகுறமாதிரி ஆகிட்டான். சரி வாடா வெளையாட போகலாம்ன்னு "யார்" வீட்டுக்கு கூப்பிட்டு போனேன். அவனுங்க ரெண்டு பேரும் கழுகுன்னு சொல்லிகிட்டானுக்க. வெளையாண்டிகிட்டு இருக்கப்பவே அவங்க அம்மா வர அது வரை "கழுகாய்" இருந்து சுட்டுகிட்டு இருந்த ருத்திரன் உடனே நான் இப்போ புலின்னு சொல்லி எங்க பக்கம் சேர்ந்துகிட்டான். சரவணனுக்கு அழுகை வந்து ஓடிப்போக வெளையாட்டு முடிஞ்சுபோச்சு. நான் மாடில இருந்து நாலு நாலு படியாதாண்டி இறங்க கீழ விழுந்து நெத்தில ஒரு வெட்டு விழுந்து ரத்தம் கொட்டு கொட்டுன்னு கொட்ட வேலை விட்டு வந்துகிட்டு இருந்த ராஜ்குமாரு அப்பா தூக்கிகிட்டு சரவணன் வீட்டுகுள்ள ஓடினாரு.

அவங்கப்பா எனக்கு நெத்தில நாலு தையல் போட்டு ரெண்டு நாளைக்கு ஸ்கூலுக்கு அனுப்ப வேணாம்னு சொல்லிவிட்டாரு. தினமும் வந்து ஊசி போட்டுக்க சொல்லியிருந்தார். மறு நாளு காலையில வரமாட்டேன்னு அடம் புடிச்சவன் கைய தர தரன்னு இழுத்துட்டு முன்னாடி வீட்டு நாயக்கரு அம்மாச்சி கூட்டிட்டு போச்சு. ஊசி போட்டுகிட்டு வெளியே வரும்போதுதான் பாத்தேன் சரவணனும் ருத்திரனும் ஸ்கூலுக்கு போகாம இருந்தானுக. கேட்டாக்க அவங்க மாமா ஊரில இருந்து வாராருன்னு சொன்னானுங்க. நான் அங்கனயே வெளையாடிட்டு இருந்தேன். காரில வந்தாரு அவங்க மாமா கூடவே செவப்பா அவங்க மாமியும் வந்தாங்க. மொத நாளே எல்லாருகிட்டையும் பிரண்டாகிட்டாரு அவங்க மாமா. பேரு கேட்டேன் டைகர் மாமான்னு கூப்பிட சொன்னாங்க சரவணன் அம்மா. அவ்ளோ கதை சொல்லுவாரு அந்த மாமா. அவர சுத்தி ஒரே பசங்க கூட்டம்தான். உமர் முக்தர் படத்தை கதை மாதிரி அவரு சொன்னா ராஜ்குமாரு செந்திலு எல்லாம் வாய்க்குள்ள வண்டு போனாகூட தெரியாத அளவுக்கு பொழந்துகிட்டு கதை கேப்பானுங்க.

தையல் பிரிக்கும் போது டைகர்மாமா எங்கன்னு கேட்டேன் சரவணன்கிட்ட, அவங்க அப்ப எதுக்கு தம்பி கேக்குறீங்கன்னு கேட்டாரு. "இல்லை இன்னைக்கு ஒரு சண்டை கதை சொல்லுறேன்னு சொன்னாரு" அதுக்குதான்ன்னு சொன்னேன். இவரு அவங்க அம்மா பக்கம் திரும்பி "ஜாப்னாகாரங்க மாதிரி கதை அளக்கமுடியாதுல"ன்னு சொல்லி சிரிச்சாரு.

அதுக்கு பிறகு அவங்க மாமி மட்டும்தான் அங்க இருந்தாங்க. மாமா அடிக்கடி எங்கையோ போயிருவாரு அப்புறம் ஒரு மாசம் கழிச்சுதான் வருவாரு. எங்களுக்கு முழுப்பரீட்சை லீவுவிட்டுருச்சு. ஒரு நா மதியம் தெருவுல கிரிக்கெட் ஆடிகிட்டு இருந்தோம். அப்போ ஆட்டோவில வந்து இறங்கின சரவணன் மாமா "யார்"வீட்டு வாசலில நின்னு கத்தினாரு "டே சுப்பிரமணின்னு, உன்னைய குத்தாம விடமாட்டேன்டான்னு ஒரு கத்திய எடுத்து காட்டினாரு. பட்டன் கத்தியாம் அது அவரு போன பிறகு தாமஸ் அண்ணே சொல்லுச்சு.

மே மாசம் வந்துச்சுன்னா அன்டிராயர் மாமா வீட்ட ஒட்டி இருக்கிற மாமரத்துல காய் கொத்து கொத்துதா காய்க்கும் . ஒரு தடவ மாங்காய் பறிச்ச கம்மாய்கரைகாரணுங்களை வெரட்டி ஓடும் போது கைலி அவுந்துதது தெரியாம அண்டிராயரோட ஓடினாதால அவருக்கு "அண்டிராயரு மாமா"ன்னு பேரு வந்துச்சாம். நானும் அண்ணனும் நம்பிக்கை டீச்சர் நாலு மாங்காய் கேட்டாங்கன்னு சொல்லி தொரட்டி வாங்கிட்டு ஒரு டஜன் மாங்காயை உலுப்பிவிட்டுருவோம் அது "யார்"வீட்டு மேலேதான் விழுகும். அப்பறம் போய் எடுத்துகுவோம். ஒரு நா அண்டிராயரு மாமா காம்பவுண்டு சொவத்துல ஏறி தொரட்டியை தூக்கமுடியாம தூக்கிட்டு இருக்கும் போதுதான் ஜன்னல் வழியாய்பாத்தேன் சரவணன் அப்பா அவங்க மாமி மேல டிரஸ் இல்லாம படுத்து இருந்ததை, நான் அதை பாத்துகிட்டு இருந்த நேரத்துலதான் சரவணன் அம்மாவும் அந்த ரூமுக்குள்ள வந்தாங்க . அதுக்கு பிறகு ஒரே சத்தமாதான் கேட்டுச்சு. நா பாக்கிற முன்னே கக்கூஸு கழுவ வந்த வள்ளியம்மா பாத்துதான் சரவணன் அம்மாட்ட சொன்னாங்களாம்.

அவுங்க மாமா அடுத்த நாள் வந்தாரு. இப்போ குடிக்கல அமைதியா வந்துட்டு, அவங்க மாமியை வெளியே கூட்டிட்டு போனாரு, வாசலில வந்து திரும்பி பார்த்து "னல்லவேளை இவளை லண்டன் எடுக்க நாய் மாதிரி அலைஞ்சும் வேலை நடக்காதது நல்லதாப்போச்சு'ன்னு சொல்லி டாக்டரு அங்கிளை பாத்து த்தூன்னு ஒரு துப்புதுப்பிட்டு போயிட்டாரு. அதுக்கு பொறகு சரவணன் அம்மா வெளியேவே வந்து நான் பாக்கல்ல .நானும் இப்பல்லாம் "யார்"வீட்டுக்கு வெளையாட போறதில்ல. நாயக்கரு அம்மாச்சி அங்க முனி நடமாட்டம் இருக்குன்னு ஒரு நா சொன்னதில இருந்து.

கால் பரீட்ச்சை முடிஞ்சு 10 நாளு லீவுன்னு வாத்தியாரு சொல்லிவிட்ட சந்தோசத்துல வீட்டுக்கு மதியம் ஓடி வரும்போதுதான் பாத்தேன் "யார்" வீட்டு முன்னே ஒரு ஆம்புலன்ஸும் போலிஸு ஜீப்பும் நின்னுகிட்டுருந்ததை. அம்மாட்ட கேட்டேன் ஒன்னும் சொல்லலை, இனி அங்க போகதேன்னு சொன்னாங்க. மறுபடி அங்க போயி பாத்தேன் ரிக்ஷால வந்து சரவணனும் ருத்திரனும் இறங்கினாங்க, உள்ளே போயிட்ட் வெளியே ஓடி வந்து ஒரே அழுகை. அவங்க மாமா வந்துதான் அடிக்கிறாரு போலன்னு நானும் ஓடி பாத்தேன். அவங்க அம்மா கன்னங்கரேல்ன்னு கரிகட்டை மாதிரி தூக்கிட்டு போனாங்க ஆம்புலன்ஸுக்கு.தீ வச்சுகிட்டாங்களாம், ஆனா சுகுணா பின்னி ( சித்தி) மட்டும் சொல்லும் "அந்த நாதாறி தீ வச்சு விட்டுருப்பான். அவ எவ்வளவு நெஞ்சு ஊக்கமானவ தெரியுமான்னு" இத சொல்லுறப்ப நாயக்கரு அம்மாச்சி இருந்துச்சுன்னா சுகுணா பின்னி'யை " நோரு மூசுகுன்னி போ"ன்னு சத்தம் போடும்

அதுக்கு பொறகு எப்போ "யார்"வீட்ட கடந்தாலும் முருக முருகான்னு சொல்லிகிடேந்தான் ஓடுவேன். ஆனாலும் வாய்தான் முருகன்னு சொல்லுமே தவிர மனசுகுள்ள சரவணன் அப்பா அவங்க மாமி, அவங்க அம்மா மூணுபேரும் தான் தெரிவாங்க.

Monday, September 03, 2007

@ 12:23 PM Labels: எழுதியவர்: வரவனையான் 44 மறுமொழிகள்


ஹிஹிஹி......

அந்த மெயிலை பார்த்தவுடன் இப்படித்தான் சிரிப்பு வந்துச்சு. ஒரு படத்தில செந்தில் சொல்லுவாறு "அண்ணே எனக்கு வெக்க வெக்கமா வருதுண்ணேனு, அதுக்கு கவுண்டமணி "டே நீ வெட்கப்படுறத பாக்க எனக்கு வெக்கமா இருக்கு"ன்னு. அது மாதிரி இருந்துச்சு அந்த மெயிலு ரூம் போட்டு சிரிச்சா ரூம் பத்தாது அதனால பெரிய மண்டபம் ஒன்னு வாடகைக்கு புடிச்சித்தான் சிரிக்கனும். பின்ன என்னாங்க நான் போடுற மொக்கைக்கும் முரண்டு பிடிச்சுகிட்டு அலையறதுக்கும் காரசாரமா சண்டை போடுறதுக்கும் என்னைய ஒரு கடைசி பெஞ்சு மாணவனாதான் பாப்பாங்கன்னு ( "பார்ப்பார்கள்" வேறைய நினைச்சுகாதிங்க ) நெனச்சுகிட்டு இருந்தா இப்ப இப்படி ஒரு மெயிலு எனக்கு. மனசுகுள்ள சாலமன் பாப்பையா அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை "வெளங்குமாய்யா"ன்னு ஒரு கேலிச்சிரிப்புடன் கேக்குற மாதிரியே இருக்கு. ம்ம் என்ன கந்திரகோளம் ஆகப்போகுதோ தெரியல. உங்க தலையெழுத்து என் தலையெழுத்து எல்லாம் இப்படி இருக்குறப்ப என்னாங்க செய்யமுடியும். இந்த வாரம் நான் நட்சத்திரமாம் அதுக்கு எனக்கு வாய்ப்பளித்து வந்த மெயில்தான் அது. கேட்டவுடன் " என்ன கொடும சரவணன்"ன்னு சொல்ல தோணுதா அதேதான் எனக்கு தோணுச்சு. சரி என்ன பண்ணுறது. அதுல இந்த வாரம் ஆசிரியர் வாராமாம். "கிழிஞ்சது லம்பாடி லுங்கி" ( லம்பாடிகள் என்போர் ஜிப்சிகள், அவர்களின் உடை பல்வேறு ஒட்டுத்துணிகாளால் தைக்கப்பட்டிருக்கும் ) . வாத்தியானுங்கன்னா எனக்கு ஜென்ம பகை, எதோ கூட சேர்ந்து நம்ம ரேஞ்சுக்கு யங்கா இருக்காருன்னுதான் தருமியை கூட ஏத்துகிறேன். எல்லாம் சரி போன வாரமும் அதற்கு முந்தின வாரமும் நட்சத்திரங்களின் பதிவுகள் மிகத்தரமாய் இருந்தது அதற்கிடாய் எழுத முடியுமா என்று தெரியவில்லை கொஞ்சம் நேரம் பின் தங்கி வந்ததால் பழைய கும்மி பதிவு என் முதல் பதிவாய் வந்துவிட்டது. அது சுடுகாடு என்கிற தலைப்பில் , நான் என்னாங்க பண்ணட்டும். அதுவா நடக்குது . போனா வாரம் உண்மையில் போலிதான் நட்சத்திரம் போலி என்கிற பெயரை தலைப்பில் வைத்தாலே அது அதிகம் பார்வையிட்ட பதிவுகளில் இடம்பெற்ற நிகழ்வுகள் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. வெயிலான் என்கிற தரம் வாய்ந்த பதிவருக்கு பின் இந்த வாரம் நான்.

எனக்கு பிடித்தது நகைச்சுவை மட்டுமே , காரணம் முன்னும் இப்பவும் போதுமான சோதனைகளை பார்த்துவிட்டதால். சிரிப்பு ஒன்றுதான் மருந்து இடுக்கண் வருங்கால் மட்டுமல்ல இடுக்கண்ணை கண்டால் கூட சிரிக்கவேண்டும் . சரி ஒரு வாரம் என் பதிவுகளை படிப்பீர்கள் என்று நம்புகிறேன். வாங்க கும்மலாம்
@ 12:05 PM Labels: எழுதியவர்: வரவனையான் 45 மறுமொழிகள்

பெயர் : வீட்டுல வச்சது "செந்தில்" நானே வச்சுகிட்டது வரவனையான் ( பெயர் காரணம் விரைவில் பதிவாய் )

பிறந்த ஊர் : திண்டுக்கல்

படிப்பு : வாழ்வு நெடுகிலும் அனுபவங்களாய் மற்றும் ஒரு இளங்கலை பட்டம்

தொழில் : இப்போதைக்கு சென்னையில் கடல் மற்றும் வான் வழி ஏற்றுமதிக்குதவும் போக்குவரத்திற்கான தனியார் நிறுவனத்தில் செயல்முறை அலுவல் மேலாண்மை ; மற்றபடி என் வலைப்பக்கத்தினூடாக என்னை அறிந்த நண்பர்கள் அதிர்ச்சியுறும் தொழில்கள் மேற்கொண்டிருக்கிறேன் கடந்த காலத்தில்.

முதலில் எழுதியது : ஒரு முறை அம்புலிமாமா புத்தகத்தில் ஈழவரலாற்றை தவறாகவும் ஈழத்தமிழர்களையும் புலிகளையும் விமர்சித்து தகவல் வெளியிட்டு இருந்ததை கண்டித்து, குழந்தைகள் புத்தகத்தில் இப்படி தவறாக அரசியல் ரீதியான பிரச்சினையை எழுதலாமா என கண்டித்து அந்நிர்வாகத்துக்கு அனுப்பிய 14 பக்க தொலைநகல் . அதன் பின் காவிரி பிரச்சினை குறித்து தினமணி ஏட்டில் வெளிவந்த என் கட்டுரை அவ்வளவே.

இணையத்தில் : யாழ்.கொம் கருத்துக்களமே என் இணைய தாய்வீடு. அங்கு எழுத பழகியவன்


புதிய நண்பர்களை பெறுவதிலும் நட்பில் நேர்மையாக இருப்பதிலும் பிடிக்கும் அரிதான விதயம் இதுதானே :P

அரசியல் : மக்களையும் என் மொழியையும் நேசிக்கும் ஒரு இடதுசாரி நான். பெரியாரிய சிந்தனைப்போக்கு உள்ளவன், திராவிடப்பாசறையை சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்பவன்.

Saturday, September 01, 2007

@ 2:38 PM எழுதியவர்: வரவனையான் 14 மறுமொழிகள்

http://kuttapusky.blogspot.com/2007/08/blog-post_31.html