எந்த வித தத்துவார்த்த பின்புலனும் இல்லை என்று சொல்கிறார், இலக்கிய உசாவலும் அவ்வளவு இல்லை என்றே மறுக்கிறார்' ரொம்ப நெருங்கிக்கேட்டால் புத்தகம் வாங்கி அனுப்பு நண்பா'என்று சொல்கிறார். பின் இரவுகளில் இடால்லோ கால்வினோவை வியந்ததோதுகிறார் . பின் எப்படித்தான் இத்துனை கிண்டல் வருகிறது என்று தெரியவில்லை. பொதுவாய் சொல்லப்பட்ட கருத்தை விடுத்து கருத்து சொல்பவனை எரிக்கும் நோக்கில் பார்வைகள் துளைக்க துவங்கியுள்ள இக்காலத்தில் பொட்"டீ"க்கடையின் சில உள்குத்து அல்லது நேர்குத்து உள்ள பதிவுகளை ரசித்தே ஆகவேண்டும். ஒரு முறை கிண்டலாய்க்கேட்டேன் "தோழர் பிறக்கும் போதே ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வோடவே பிறந்திங்களா"ன்னு. யோவ்வ் டென்சனாக்காதேனு சொல்லிட்டு போயிட்டாரு. அனீப் பிரச்சினையிலெழும் கோபமாகட்டும் பொருளாதார அகதிகள் குறித்த பதிவிலாகட்டும் சத்யாவின் கருத்தும் கோபமும் மக்களை நேசிக்கும் கலகக்காரனின் கோபமாய் வெளிப்படுகிறது. கொஞ்சம் வாசிப்பு உள்ள பதிவர்கள் கீழூள்ள பின்னூட்டதின் நக்கலை புரிந்துகொண்டு ஒரு சின்ன புன்னைகையோ அல்லது பெரும் வெடிச்சிரிப்போ சிரிக்கலாம். கில்லட்டின் , துப்பாக்கி, அழித்தொழிப்பு எல்லாம் சரிதான் , கலகக்காரனின் கிண்டல் அதை விட கொடூரமாக கேள்வித்தீ வளர்க்கும். அவன் ஓடிப்போவான் , ஒளிந்துகொள்வான் ஆனால் கேள்வி கேட்பான். அதற்கு விடை சொல்லமுடியாதவர்கள் கூற்றின்படி அது கொழுப்பில் மிதக்கும் மூளைதான்
Pot"tea" kadai said...
// ஆட்டோ ரெள காஸ்புலோ, சிலி said...
ஏழை பாழைகளான எங்கள் வாழ்வும் கனவும்
எரிநெரிப்பில் கருகிக் கொண்டிருந்தபோது
ஏ, சுகபோகிகளே, செளந்தர்ய உபாசகர்களே
நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" //
இப்படித்தான் ஹாய்னெக்கன் அருந்திக்கொண்டு பின்னூட்டம் மட்டுறுத்திக் கொண்டிருந்தோம்































