Wednesday, June 27, 2007

@ 3:59 PM எழுதியவர்: வரவனையான் 20 மறுமொழிகள்

டிரிங் டிரிங்...

வணக்கம் தோழர்..

..........

இல்லை தோழர்.

...........

அப்படியில்லை தோழர்

............

சரி தோழர்

..........

அது எப்படி தோழர்

..........

சரி தோழர்...

டக்.இப்படித்தான் நண்பர்களே நேற்று முழுவதும் செல்லில் பேசிக்கொண்டிருந்தேன்.

"தோழர்"

கிட்டதட்ட 10 ஆண்டுகளாய் வழக்கமாய் பயன்படுத்தும் சொல்தான் என்றாலும் நேற்று "அந்நியமாய்"பட்டது. சரி அது வேற மேட்டரு, லூசுல விடுங்க.

நேத்து சாயுங்காலம் இன்னோரு டிரிங் டிரிங்

வணக்கம் தோழர்..

டேய் நான் குமார் பேசுறேன்டா..

சொல்லுங்க தோழர்

தோழரா... டே பகல்லையே போட்டுட்டியா

இல்லை தோழர்

பரதேசி நாயே

சொல்லுங்க தோழர்

டேய் நான் உங்க அண்ணன் குமார் பேசுறேன்டா..

தெரியும் தோழர்.

நாசமா போக

டக் .
டேய் செந்திலு மணி 5.45 ஆகுது 7 மணிக்கு பிளைட்டு , எந்திரிடா போகலாம் ' .. நண்பன்

சரி தோழர்.... என்று நான் சொன்னதுக்கு பின் இது வரை அவன் என்னிடம் பேசவில்லை........

வேறென்னா எனக்கு பேசியே திகிலடிச்சது, அவருக்கு ஒரு வார்த்தை... ஒரே வார்த்தைல திகிலடிச்சு போச்சு


( இது கும்மி அல்லது மொக்கை என்கிற அட்டவணையின் கீழ் வரும் பதிவு. கக்கூஸ் போகும் போது பூணூலை எடுத்து காதில் மாட்டிக்கொள்வது போல் இதற்கும் அதற்கும் சம்மந்தம் இடாமல் பார்ப்புகள் அமைதிகாத்து ஒத்துழைக்கும் படி கேட்கப்படுகிறது. குறிப்பு : குடுமியுடன் வந்தால் அனுமதிக்கலாம் என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது )சிந்தித்து சிரிக்க


Tuesday, June 26, 2007

@ 12:40 PM எழுதியவர்: வரவனையான் 14 மறுமொழிகள்

தோழர்களே, இன்று காலை சரியாய் 11.45க்கு ஒரு பொதுத்தொலைபேசியில் இருந்து அழைப்பு. பேசத்துவங்கியவுடன் தாறுமாறான மொழியில் "எங்கடா இருக்க, மருதையன பத்தி பேசுற அளவிற்கு நீ பெரிய இவனா என்று ஏக வசனம். எங்கட இருக்க இடத்த சொல்லுடா வர்ரோம். த்தா கோடம்பாக்கம் பவர்ஹவுஸுக்கு வாடா, இல்லைன்ன தி.நகர் நடேசன் (முதலியார்ன்னு சொல்லலை :)) ) பார்க்குக்கு வாடா. இப்படி அந்த தோழரே ( ! ) பல்வேறு இடங்களை முடிவு செய்து வந்து அடிவாங்கி செல்லும்படி அழைத்தார். அடிப்பதும் அடிவாங்வதும் நமக்கு பழகிய ஒன்று என்றாகிலும் யாரிடம் அடிவாங்குகிறோம் என்று தெரியாமல் அடிவாங்குவதில் சுவாரசியமில்லை என்பதாலும் தன்னை இன்னாரென்று பேசிய நண்பராலும் வெளிபடுத்திக்கொள்ள இயலாமல் போனது வருத்தமே.

என்னை போனில் அழைத்து வசை மாறி பொழிந்த அந்த அநாமதேய நண்பருக்கு, ம.க.இ.க குறித்து போதிய அறிமுகங்களும் இன்னபிறவும் எமக்கு உண்டு. ஒருவேளை என்னை திட்டுவதாயின் கூட நேரில் வந்துதான் திட்டுவார்கள். அடிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை (அப்படியாயினும் எமக்கு மகிழ்வே) . நீங்கள் ஒரு வேளை "அரசுப்பணியில்" இருப்பவராய் இருக்கலாம் இல்லை மாற்று மார்க்சிய இயக்கத்தோழராய் இருக்கலாம் என்னை மிரட்ட பயன்படுத்திய அந்த முன்று ரூபாயில் ஒரு டீ யாவது குடித்திருக்கலாமே நண்பரே

Monday, June 25, 2007

@ 11:25 AM எழுதியவர்: வரவனையான் 44 மறுமொழிகள்

இருக்கும் மார்க்சியர்களில் கொஞ்சம் தீவிரமாக உண்மையான மக்கள் பணியில் இருப்பவர்கள் ம.க.இ.க தோழர்கள் என்பதில் நமக்கு மாற்று கருத்துகிடையாது. அதே வேளை உலகத்தில் யாரையுமே ஒப்புக்கொள்ளமாட்டோம் ,நாங்கதான் பெரிய புடுங்கி என்றும் பிற இயக்கத்தலைவர்களையும்,இயக்கங்களையும் வாய்க்கு வந்தபடி ஏசுவதுதான் புதிய ஜனநாயகபூர்வமான (அ )!!! புரட்சிகர வழிமுறை என்று கொண்டிருப்பது இலேசான புன்னகையைமட்டுமே வரவழைக்கிறது. இத்தனையாண்டுகாலத்தில் 2000க்கு பிறகே பார்ப்பனியம் என்கிற பதத்தை பிரயோகிக்க துவங்கியதும் கட்சியின் தலைமைப்பொறுப்பில் பார்ப்பனர் இருப்பதும் ஊரரியாத ரகசியங்களா என்ன?

இருந்தும் தோழர்களே, உங்களின் பன்னாட்டு நிறுவன எதிர்ப்பிலும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் "சந்தேகம்" கொள்ளாத தோழர்கள் பெரியாரிய இயக்கங்களிலும் உண்டு. "மாமா" ஆசிரியர் வீரமணியா இல்லை தோழர். மருதையனா என்பது தேவையில்லாத விவாதம்.

Wednesday, June 20, 2007

@ 11:35 AM Labels: எழுதியவர்: வரவனையான் 14 மறுமொழிகள்


இந்தியாவின் உளவுத்துறைகள் தாந்தோன்றித்தனமாக எப்படி ஈழப்பிரச்சினையில் செயல்படுகிறது என்பதையும் ஒரு ஜனநாயக பூர்வமான நாடு என்று அழைத்துக்கொள்ளும் இந்தியாவின் உளவுத்துறைகள் அன்டை நாட்டு விடுதலைப்போராட்டத்தில் தேவையற்ற தலையீடு செய்வதையும் ஆதாரங்களுடன் அம்பலபடுத்துகிறது தோழர்.விடுதலை ராஜேந்திரனின் புதிய நூலான "ஈழபிரச்சினையில் இந்திய உளவுத்துறையின் சதி "

நூல் கிடைக்கும் இடம் : புரட்சி பெரியார் முழக்கம்
29, பத்திரிக்கையாளர் குடியிருப்பு
திருவான்மியூர்
சென்னை


இனி நூலில் இருந்து சில பகுதிகள்
தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ள சில முக்கிய தலைவர்கள் விடுதலைபுலிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதே தேச விரோதமாக - நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக உளவுத் துறை மூலம் அறிக்கை தயாரித்தவர் எம்.கே. நாராயணன். உளவுத் துறையின் தலைவர் என்ற முறையில், அன்றைய பிரதமர் வி.பி. சிங் பார்வைக்கு இதைக் கொண்டு போயிருக்க வேண்டிய கடமை எம்.கே. நாராயணனுக்கு உண்டு. ஆனால், அதிகார மட்டத்தில் கமுக்கமாக வைக்கப்பட்டது அந்த அறிக்கை. மண்டல் குழு பரிந்துரை, ஈழத் தமிழர் பிரச்சினைகளில் - பார்ப்பன அதிகார வர்க்கத்தின் உணர்வுகளுக்கு எதிராக உறுதியோடு நின்றார் வி.பி.சிங் என்பதால் அவரது ஆட்சியை பார்ப்பன சக்திகள் திட்டமிட்டு கவிழ்த்தன. சந்திரசேகர் தலைமையில் பொம்மை ஆட்சி ஒன்றை உருவாக்கியவுடன், உளவுத் துறை தயாரித்து வி.பி.சிங்கிடம் மறைக்கப்பட்ட அறிக்கையை வைத்து, அதையே காரணமாக்கி, அன்று தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அன்றைய காலகட்டத் தில், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ராஜீவ் கொலைச் சம்பவம் நடந்தது, அதற்குப் பிறகுதான். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்படாத காலத்திலேயே - அந்த இயக்கத்தினரோடு பேசுவதே ‘தேச விரோதம்’ என்ற கருத்தை உருவாக்கி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்க்கும் அதிகாரம் கொண்டவைகளாக உளவு நிறுவனங்கள் செயல்பட்டன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.

இந்திராவின் மரணத்தைத் தொடர்ந்து, அரசியலின் ஆழம் புரியாத - ராஜீவ் காந்தி பிரதமராக வந்தார். பார்ப்பன அதிகார வட்டம் மகிழ்ச்சிக் கடலில் குதித்தது. ஆசியாவின் வலிமை மிக்க தலைவராக உயரவேண்டும் என்ற துடிப்பில் இருந்த ராஜீவுக்கு அதிகார வர்க்கம் தூபம் போட்டது. கடந்த காலத்தில் இந்திராவின் ஆட்சி யில் பின்பற்றப்பட்டு வந்த வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கினால்தான் உடனடியான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று ராஜீவ் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டன. அதற்கு ராஜீவ் காந்தியும் பச்சைக்கொடி காட்டினார். அதன் காரணமாக இலங்கைப் பிரச்சினையில் இந்திராவின் ஆலோசகர்களாக இருந்த அதிகாரிகள் ஓரம் கட்டப்பட்டனர். ஈழத் தமிழர் பிரச்னையில் ஓரளவு தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பார்த்தசாரதியிடமிருந்து அந்தப் பொறுப்புகளைப் பறித்து ரமேஷ் பண்டாரி என்ற மற்றொரு பார்ப்பன அதிகாரியிடம் ராஜீவ் ஒப்படைத்தார்.

இந்தியாவின் உளவு நிறுவனங்களும், வெளியுறவுத் துறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற, நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளை வழி நடத்தி வருகின்றன என்றே சொல்ல வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்தியாவை ஆட்சி செய்வது பார்ப்பனியம் தான். பார்ப்பனியத்தோடு கை கோர்த்து நின்றால் மட்டுமே, தங்களின் சுரண்டலை நடத்த முடியும் என்பதைப் புரிந்து கொண்ட - பனியாக்கள் பெரும் தொழில் நிறுவனங்கள் - பன்னாட்டு நிறுவனங்கள் - இதற்கு ஒத்திசைவாக தங்களது நடவடிக்கைகளை தகவமைத்துக் கொள்கின்றன. பெரும் தொழில் நிறுவனங்கள் உயர் பதவிகளில் பார்ப்பனர்களையே நியமித்துக் கொள்வதும், இந்தக் கண்ணோட்டத்தில் தான்.
இத்தகைய அதிகார அமைப்பில் பிரதமர்களாக வருபவர்கள் - பார்ப்பன பனியா - பன்னாட்டு - ஆளும் வர்க்க நலனோடு இணைந்து நின்றால்தான், தங்களது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் பிரதமர்கள் பலரும் பார்ப்பனியம் சுட்டும் பாதையிலேயே நடைபோடுகிறார்கள். இதற்கு மாறாக செயல்பட முடிந்தால் வீழ்ச்சியைத்தான் சந்திக்க வேண்டும். அப்படி பார்ப்பனியத்துக்கு எதிர் திசையில் - சமூகநீதி பாதையில் நடைபோட முயன்று வீழ்த்தப்பட்ட வெகு அபூர்வமான பிரதமர் வி.பி.சிங்! காவிரிப் பிரச் சினைக்கு நடுவர் மன்றம் அமைந்ததிலிருந்து, மண்டல் அமுலாக்கம் வரை அவர் பார்ப்பனிய கட்டமைப்புக்கு வெளியிலிருந்து, இயங்கிய பிரதமராகவே இருந்தார்.

இத்தகைய வி.பி.சிங்கை வீழ்த்தும் பார்ப்பனிய அணியில் தன்னையும் இணைத்துக் கொண்டவர்களில் ஒருவராகவே எம்.கே.நாராயணனும் இருந்திருக்கிறார் என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.

ராஜீவ் மரணம் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயின் ஆணையத்தின் பரிந்துரையில் இதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. இவற்றை ஆராய்வதற்கு முன் ஈழத் தமிழர் பிரச்சினையில் உளவு நிறுவனங்களின் பார்வை அன்று முதல், இன்று வரை எப்படி இருக்கின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும். இலங்கைப் பிரச்சினையில் - இந்தியாவின் தலையீட்டுக்கு அடிப்படையான உள் நோக்கம் உண்டு. தெற்கு ஆசியாவில் தன்னை வலிமையான சக்தியாக நிலை நிறுத்திக் கொள்வதே இந்தியாவின் அடிப்படை நோக்கம். மாலத் தீவு, நேபாளம், பூட்டான் போன்ற இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளின் வெளியுறவு ராணுவ ரீதியான கொள்கைகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த இந்தியா, இந்தப் பட்டியலில் இடம் பெறாத, இலங்கையையும், அதில் இணைத்துக் கொள்ள விரும்பியது. அதுதான், இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டுக்கான அடிப்படை நோக்கமாக இருந்தது.

அமெரிக்காவின் ‘டைம்’ பத்திரிகை (ஆசியா பதிப்பு 3.4.89) இது பற்றி விரிவாக வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், இவ்வாறு குறிப்பிட்டது:

“இலங்கையில் மைனாரிட்டி மக்களான தமிழர்களுக்கு இந்தியா ராணுவப் பயிற்சி அளித்து, ஆயுதங்களை வழங்கி, இலங்கைக்கு அனுப்பி, ஜெயவர்த்தனாவுக்கு எதிராக கொரில்லா யுத்தத்தை நடத்துமாறு பணித்தது. இதுநாள் வரை, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று இந்தியா மறுத்து வந்தாலும், இதில் பயிற்சி பெற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களும், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும், இலங்கை உளவு நிறுவனமும் இதை உறுதிபடுத்துகின்றன. இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு முதலும் முடிவுமான ஒரே காரணம் - இலங்கையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் என்று இந்திய அதிகார வட்டாரங்கள், உறுதியாகக் கூறின” என்று சுட்டிக்காட்டியது அந்த ஏடு!

மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் அதில் இடம் பெற்றிருந்தன. “1984-ல் இப்படிப் பயிற்சிப் பெற்ற ஈழப் போராளிகள் அமைப்புகள் இலங்கை ராணுவத்துக்கு எதிராக நடத்திய தாக்குதல்களில் தோல்வியே அடைந்தன. இதனால் சிங்களப் பொது மக்கள் மீது தாக்குதல்களைத் தொடருமாறு - ‘ரா’ உளவு நிறுவன அதிகாரிகள் வற்புறுத்தினர். ‘புளாட்’ என்ற அமைப்பின் தலைவர் உமா மகேசுவரன் கூறுகையில், “ஒரு ‘ரா’ அதிகாரி சிங்களர்களின் திரையரங்கு ஒன்றில், வெடிகுண்டு வீசுமாறும் அல்லது சிங்களர் கூடும் பேருந்து நிலையத்தில், வெடிகுண்டு வைக்குமாறும் எங்களிடம் கூறினார். நாங்கள் அதற்கு மறுத்து விட்டோம். சிங்கள பொது மக்களைக் கொன்றால், எங்களுக்கு ஏராளமாக பணம் தருவதாகவும் ‘ரா’ அதிகாரிகள் கூறினர்” என்று கூறினார்” - என்று எழுதியது, ‘டைம்’ ஏடு. இந்திய உளவு நிறுவனங்கள் - எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவை என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இதற்குப் பிறகு தான் அதுவரை ஆசியாவில் இந்தியாவுக்கு எதிர்ப்பான அரசியலை நடத்தி வந்த ஜெயவர்த்தனே, இந்தியாவிடம் இறங்கி வந்தார். (ஜெயவர்த்தனாவின் அரசியல் எதிரியும், அவருக்கு முன் அதிபராகவும் இருந்த திருமதி பண்டாரநாயகே. இந்தியாவின் பிரதமர் இந்திராவோடு நெருக்கமாக இருந்ததும், ஜெயவர்த்தனாவின் இந்திய எதிர்ப்புக்கு, முக்கிய காரணம்) ஜெயவர்த்தனாவைப் பணிய வைக்க - ஈழத்தில் போராளிகளுக்கு ராணுவப் பயிற்சியையும், ஆயுதங்களையும் தந்து அப்பாவி சிங்களர்களைக் கூட கொன்று குவிப்பதற்கு பச்சைக் கொடி காட்டிய உளவுத்துறை - அந்த முயற்சியில் வெற்றி பெற்ற பிறகு, தனது கவனத்தை போராளிகளைப் பணிய வைப்பதில் திருப்பியது.

Wednesday, June 13, 2007

@ 12:12 PM எழுதியவர்: வரவனையான் 6 மறுமொழிகள்
அதியுயர் பாதுகாப்பு வலயமான செந்தழல் ரவியின் ஆயா வீடு, கூகுள் ஆகியவற்றில் இதுகாரும் ஊடுருவி வந்த புலிகள் தற்போது கடைசியாக நம்பகமான இடத்திலிருந்து வந்த தகவல்களின் படி ஐநா மன்றத்திலும் ஊடுருவி விட்டதாக தெரிகிறது. அதுவும் 30 ஆண்டுகளாக திட்டமிட்டு ஊடுருவி உள்ளதாக தெரிவிக்கபடுகிறது . (இயக்கம் துவங்கியவுடன் மொத வேலையா "தம்பி" ஐநா சபைக்கு ஊடுருவல் அணியை அனுப்பிட்டார் போலக்கிடக்கு ) ஒரு சாதரண ஐ.நா மன்றத்தில் ஊடுருவவே 30 ஆண்டு காலம் எடுத்துக்கொள்ளும் புலிகள், செந்தழல் ரவியின் ஆயா வீட்டில் நண்டுகுழம்பு வேண்டி நுழைய எவ்வளவு ஆண்டுகள் எடுத்துக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. இது போல் இனி வரும் காலங்களில் எங்கிருந்தெல்லாம் இப்படியான புலம்பல்கள் வரும் என்று பார்த்தால் , பயம்ம்ம்ம்மாயிருக்கு நாளைக்கு ஒரு வேளை இப்படியும் சொல்லுவார்கள் ஐ நாவின் பாதிப்பிரதிநிதிகள் புலிகளே என்று.என்ன இருந்தாலும் கோத்தபாய'வை உப்படி அழ வைக்ககூடாது. ச்சா ரொம்ப மோசம் புலிகள்.அவரின் அதிகார பூர்வ செவ்வி :P
அதெல்லாம் இருக்கட்டும் இங்கு பாருங்க கொடுமைய, கொஞ்சமும் அச்சமின்றி வட சீன பனிபிரதேசத்தில் ஊடுருவிக்கொண்டிருக்கும் புலிகளை கூகுளின் செய்மதி (ஹிஹிஹி) படம் எடுத்துவிட்டது. ஆயா,கோத்தபாய, ஐநா என்றிருந்த புலிகள் சீனாவிற்குள்ளும் ஊடுருவியது இப்படத்தின் மூலம் தெளிவாகிறதல்லவா.

இதனிடையே புலிகளின் அடுத்த இலக்கு சந்திர மண்டலம் என்று ஒரு தகவல் உலவுகிறது. ம்ம்... என்ன நடக்கபோகுதோ
( ஸ்விஸ், நெதர்லாந்,பிரான்ஸிலிருந்து வரும் புலி எதிர்ப்பு கும்மிகள், "ஜனநாயகம் வேண்டுவோரின் " கேள்விகள் இங்கு அனுமதி இல்லை . றைப் செய்து ரைம் வேஸ்ட் செய்ய வேண்டாம் :P )

Monday, June 11, 2007

@ 9:06 PM எழுதியவர்: வரவனையான் 13 மறுமொழிகள்

கும்மி அடிக்க, கொண்டாட, எவனவது மாட்டினா ரெண்டு வெளுவெளுக்கன்னு இருந்துகிட்டு இருக்கிறதால் வலையில ஒரு புதிய வரவு வந்திருக்கிறது இப்போத்தான் தெரிய வருது.

நான் எழுத ஆசைப்பட்டதுக்கும் என்னாளும் எழுத முடியும் என்கிற நம்பிக்கையை அவரை அறியாமல் அவரின் எழுத்துகளினால் என்னுள் விதைத்த பாமரனை உள்ளம் பூரிக்க வரவேற்கிறேன்.என் எழுத்துகளில் ( ஏதோ எழுதறேன்னு வச்சுகோங்க) இரண்டு வித எழுத்து பாணியே கடை பிடிக்க முயல்வேன், முயல்கிறேன்.அது தோழர். இளவேனில் அவர்களின் வாத ரீதியான எழுத்து முறை இன்னொன்று மக்களின் நலனுக்கு எதிரான எதையும் தன் கிண்டல் மொழிச்சவுக்கால் விளாசி எடுக்கும் பாமரனின் பாணி.( விரைவில் கைக்கொள்ளும் என்று நம்புகிறேன்.)

என் ஆதர்ச கட்டுரையாளரும், தமிழர் நலனில் அக்கறையும் கொண்ட எழுத்தாளருமான பாமரனை வரவேற்கிறேன்.

@ 11:10 AM எழுதியவர்: வரவனையான் 20 மறுமொழிகள்

அடடட'ட மண்டை காயுதுதப்பான்னு ஒரு நாளைக்கு குறைந்தது நாலஞ்சு தடவை சொல்லவச்சுபுடுறாங்க நம்ம மக்கள் ! இப்படி சொல்லுற சந்தர்ப்பத்தை ஒரு 10 எண்ணிக்கையில அடக்கி பார்த்த போது வந்ததுதான் கீழே யுள்ள பத்து'ம். (அடைப்பு குறிக்குள் வருவது என் உள்மன கமெண்ட்கள்)

1 ) எப்பாவாச்சும் ஒரு கடிதமோ இல்ல வேற எதோ ஒரு அவசர நிமித்தமாக போனேடுத்து "நண்பா ! ...... அவங்க (பெண்கவிஞர்கள்) நம்பர் இருக்கா ? இல்ல மின்னஞ்சல் முகரி சொல்லுப்பான்னு" கேட்டா " ஏன் கரக்ட் பண்ணபோறிங்களா' அதுக்கு வயசு 30 க்கு மேல ஆச்சே, வேணாம் பாவம் விட்டுடுங்கங்ன்னு" சொல்லி நான் என்னமோ சிவப்பு ரோஜாக்கள் கமலஹாசன் மாதிரி பெண்கவிஞர்களை கரக்ட் பண்ணி கவிஞர் சினேகனை விட்டு ( பெண் கவிகளை அண்ணாசாலையில் வைத்து கொளுத்த வேண்டும் என பேசிய காந்தியவாதி)குத்த சொல்லி "குத்துங்க எசமான் குத்துங்க" டயலாக் பேசிகிட்டு இருக்கிற மாதிரி என்னையே ஃபீல் பண்ன வைக்கிற சுகுணா திவாகரால் மண்டை காயும்.


2) ரொம்ப சீரியசா "சண்டையெல்லாம்" மறந்து சமாதானக்கொடி பறக்கவிட்டு 20 நாளைக்கு பிறகு சுவாரஸ்யமா தோழிகிட்ட பேசிட்டு இருக்கும் போது , "அப்புறம் சாப்டாச்சா'ன்னு ( அடப்பாவி உன்கூடத்தான்யா 2 மணீ நேரமா மொக்கை போட்டேன் போன்ல) ஆன்லைனில் பொட்"டீ"கடை வந்து கேட்க, பின்னாடியே முத்து(தமிழினி) வந்து "பொறுமை பொறுமை, நாம எப்பவும் ரொம்ப பொறுமையா போகோனும்"ன்னு புத்திமதி சொல்ல ஆரம்பிக்க ( தலை, ஒரு ஹாய்தானே சொன்னேன் அதுக்கே அட்வைசா ) இடையில பெ.மகேந்திரன் வந்து "நண்பா, ஒரு பண்ணாடை திட்டி திட்டி கமென்ட் போட்டுட்டு இருக்கு. ஐபி இருக்கு அனுப்பவா, யாருன்னு பார்த்து சொல்லுங்கன்னு கேட்டு "ரென்சன்" பண்ணி( நண்பா, நாம அவங்களை திட்டி "பதிவே" போடும் போது அவனுங்க நம்மள திட்டி கமென்ட் தானே போடுறாங்க , கண்டுக்காதிங்க) அதற்கிடையில் பாலா மாம்ஸ் வந்து ஸ்டேடஸ் மெசேஜில் ஒரு மொக்கை கவிதையை போட்டு கலவரபடுத்த ( அந்த கவிதையை வச்சு பாகச வுக்குகாக தனிபதிவு ஒன்னு போடனும்) கௌரவ வேட நடிகர் மாதிரி அப்பப்ப ஆன்லைன்ல வந்து படிச்சா பல்லை கடிக்கிற அளவுக்கு கோவம் வர பதிவை எங்கிருந்தாவது தூக்கிட்டு வந்து "இதுக்கு பதில் சொல்லியே ஆகனும்ங்க'ன்னு சொல்லி சூளுரைத்து காணாம போய்டுவார் லக்கி . அது வரைக்கும் நல்ல பிள்ளையா அமைதியா இருக்குற முத்துகுமரன் இவங்க எல்லாத்தையும் சமாளிச்சு முடிச்ச கணத்தில் "வணக்கம் தோழர்"ன்னு உள்ள வருவாரு இதுகிடையில் ஒரு மணீ நேரத்துகு முன்னாடி "சாப்பிட்டியாடா லூசு"ன்னு கேட்ட தோழி பதில் வரலைன்னு கோவிச்சுகிட்டு போயிடுவா அப்புறம் மண்டை காயமா என்னாங்க பண்ணும்.

3) சார் ! பார் குளோசிங் டைம் ஏதும் வேணும்னா இப்பவே சொல்லிடுங்கன்னு "பார் டெண்டர்" ( நிஜ டெண்டர்) கேட்க " கடைசியா எனக்கு ஒரு மக் பியர் உங்களுக்கு பிறேம்.. அப்படின்னு கேட்க எனக்கு ஒரு ஸ்மால் விஎஸொபி போதும்னு" சொல்லிட்டு பில் செட்டில் பண்ணிய பிறகு எனக்கு வாங்கிய மக் பியரையும் கடைலாம் அடைச்ச பிறகு எடுத்து குடிச்சிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி போலாமான்னு என் நண்பன் கேட்கும் போது "கிர்ர்ர்"ன்னு மண்டைகாயும்.

4) வாயிருக்க மாட்டாமே ஏதாவது ஒரு கமிட்மென்ட் கொடுத்துட்டு அத நிறைவேற்றவும் முடியாம, போனெடுத்து ஸாரி சொல்லவும் வெக்கபட்டுகிட்டு இருக்கும் போது தேடி பிடிச்சு கோபமா பேசுகிறேன் பேர்வழின்னு நினைச்சுகிட்டு போடுவாரு பாருங்க சோமி ஒரு மொக்கை "மண்டையே இல்லாதவனுக்கு கூட காய்ஞ்சிடும். ( சயந்தா, நீ தப்பிச்சுகிட்டப்பா. கொடுத்துவச்ச ஆளு )


5) சுகுணா திவாகரின் பள்ளித்தோழன் "பாலா" எனக்கும் நண்பந்தான். ஆபிசில் கொடுத்த ஓசி போனில் ராத்திரி 2 மணிக்கு போன் செய்து " அப்புறம் தூங்கிட்டிங்களா'ன்னு( இல்லடா தூக்கு போட்டு செத்து போயிட்டேன்) துவங்கி போடுவான் பாருங்க மொக்கை எல்லாம் போட்டு முடிச்சு சரி சரி மணீ 3.30 ஆகுது காலைல நான் வேலைக்கு போகனும் தூங்கறேன்னு சொல்லும் போது ஸ்னோபிளேக்ஸ் விழுந்துகிட்டு இருந்தாலும் மண்டை காய்ஞ்சு புகை வரும்.

ஒரு முறை போன் பண்ணி எங்க இருக்கிங்கன்னு கேட்க நானும் சுகுணாவும் மதுரையில இருந்தோம் அப்போ. சுகுணா பதிலுக்கு மதுரையிலடான்னு சொல்ல மதுரையில எங்கன்னு அவன் கேட்க . சரி பக்கத்துல எங்கையோதான் இருக்கான்னு நெனைச்சிகிட்டு அமெரிக்கன் காலேஜ் வாசல்ல நிறிகிறோம் ட நீ இங்க வந்துடுறியான்னு சொல்ல அதுகு அவன் "நான் இப்போ திருச்சில இருக்கேன்' சும்மா கேட்டேன் மதுரைல எங்க இருக்கிங்கன்னு'சொல்ல தம்மடிச்சா வரும்ல புகை அது மாதிரி ரெண்டு பேருக்கும் மண்டை காய்ஞ்சு வந்துச்சு. ( பாலாங்கிற பேருக்கும் எங்களுக்கும் "ரொம்ப " நெருக்கம் ஹிஹிஹி )

6) ஒரு காதல் கூட வாய்க்காத என்கிட்ட மொத லார்ஜ் உள்ளே போனவுடன் " 10த் படிக்கும் போது சித்ரான்னு ஒரு பொண்ண லவ் பண்ணினேன், மதியம் சாப்பிட போன போது கீரின் டாப்ஸ் வித் லாங் ரீங்கிள் ஸ்கர்ட் போட்டு போச்சுல்ல (ஆமா, தீ பிகர்ல அது) அது மாதிரிதான் இருப்பா. ப்ப்ச்சு பட் அது ஃகாப் லவ்'ன்னு பிறேம் சொல்லும் போது எனக்கு மண்டை காயுற சூட்ல அப்பளமே பொறிக்கலாம்.

7) சென்னை வந்து 2 மாசம் தங்கிருந்த மாடி ரூமின் காலியாக கிடந்த பக்கத்து அறைக்கு நாங்கள் காலி பண்ண இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் கேரள தேசம்தன்னிலிருந்து "டொக்டருக்கு" படிக்க ரெண்டு வல்லிய பெண்குட்டிகள் வந்து குடியேறினா மண்டை தந்துரி அடுப்பு மாதிரி காயாம என்ன செய்யும் மக்கா...

8) எம்.சி பிராண்டி ஒரு புல்லு குடுப்பா...

நாலு குவாட்டரா வாங்கிக்கோங்க ( நாலு குவாட்டர வாங்கி கயித்த கட்டியா கொண்டு போவேன்)

சரி வேற என்னாருக்கு..

பிளாக் ( உவ்வே )

நெப்போலியன் ( முணு நாளைக்கு தலை வலிக்கிறதுக்கா)

ஆபிஸர்ஸ் சாய்ஸ் ( ஹூ சேய்ஸ், இட்ஸ் சக்கர்ஸ் சாய்ஸ் )

எது வேணும்

இல்ல எனக்கு ஓல்டு காஸ்க் கொடுப்பா..

இல்லை..

செலிபிரேசன்.....

இல்லை..

சரி விஸ்கி என்னாயிருக்கு

சிவாஸ் மட்டும்தான் இருக்கு விஸ்கில ( டேய் அதுக்கு அரை லிட்டர் பெட்ரோல் வாங்கி ஸிப் பண்ணி மப் ஏத்திகிலாம்டா)

வோட்கா வேணுமா ( ஏன் எனக்கு பைல்ஸ் வர வைக்கனும்ன்னு உனக்கு வேண்டுதலா )

சரி உடு, பீர் கொடுப்பா

ம்ம் இருக்கு ஆனா கூலிங் இல்லை பரவாயில்லையா

பிரண்ட்ஸ் படத்தில அழுக்குத்தண்ணிய மேல ஊத்தினவுடன் ராதாரவி காட்டுவாரு பாருங்க ஒரு எக்ஸ்ப்ரசன் அது மாதுரி காட்டி வெளியே வந்தேன் ஒரு டாஸ்மாக்கிலிருந்து , மண்டை காய்ஞ்சதுன்னு தனி வேற சொல்லனுமா என்னா


பத்துப்பாட்டுக்கு திட்டம் போட்டேன் அது இப்போ எட்டுத்தொகையா வந்து நிற்குது.

வாங்க கும்மலாம்

Saturday, June 09, 2007

@ 8:48 PM எழுதியவர்: வரவனையான் 18 மறுமொழிகள்


தந்தை பெரியார் "மொடெர்ன் ரேசனலிஸ்ட்" என்கிற ஆங்கில பத்திரிக்கை துவங்கியகாலம் அதற்கென தனித்த ஆசிரியர் நியமிக்காத காரணத்தால் குடியரசு ஏட்டின் துணை ஆசிரியர் ஒருவர் அடுத்த நாளுக்கான தலையங்கம் உள்ளிட்ட விடயங்களுக்காக அய்யாவிடம் சென்று "அய்யா நாளைக்கு எதைப்பற்றி தலையங்கம் எழுதுவது" என்று வினவ. கூட்டத்திற்கு அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்த பெரியார் "இன்றைய இந்து பத்திரிக்கையை எடுத்துக்கோ அவன் எழுதுன தலையங்கத்தை தப்புன்னு எழுது, எதெல்லாம் சரின்னு எழுதிருக்கானோ அதையெல்லாம் தப்புன்னு எழுது " என்றபடி கிளம்பிப்போனார். வெளிப்பார்வைக்கு ஒரு நிகிலிசவாதியின் போக்கினை போல் இது தென்பட்டாலும் இது எவ்வளவு உண்மை என்று காலம் உணர்த்தியபடியே வந்துள்ளது.

அகிலமே யாழ் இடப்பெயர்வு குறித்து கவலையும் வேதனையும் தெரிவித்துக்கொண்டிருந்த வேளையில் சிங்களப்பாட்டாளிகளும் தமிழ்ப்பாட்டாளிவர்க்கமும் இணைந்து ஈழத்தில் பாட்டாளிவர்க்க புரட்சி கொண்டுவரவேண்டும் என கோழி இறகில் காது குடைந்து கொண்டே "ரோசனை" தெரிவித்துக்கொண்டிருந்தார்கள் தோழர்கள் . அதே "மார்க்சிய தோழர்கள்" வீறு கொண்டெழுந்த ஓயாத அலைகளின் போது இந்திய ராணுவம் உடனே அனுப்பபடவேண்டுமென அறிக்கை புயல்களை அள்ளிவிட்டவண்ணம் இருந்தனர். அவர்களில் மிக முக்கியமாய் புலிகளின் வெற்றியை சகிக்காமல் "ஒப்பாரியே" வைத்த பெருமை தோழர் உமாநாத்துக்கே சேரும். மார்க்சியவாதிகளை என்னாதான் அவர்களின் பெயர்களுக்கு பின் இன்னும் சாதி பட்டங்களை விட முடியாமல் சுமந்து திரிந்தாலும் எந்த ஒரு திராவிட இயக் கத்தானும் சாதி ரீதியாய் கருத்து சொல்பவர்கள் என்று கருதுபவதில்லை . அதை பொய்யாக்கி காட்டியவர் தோழர் உமாநாத். அப்போது இதே கருத்து சொன்னவர்கள் மேலும் இருவர் ஒருவர் சனாதான நெறி வளர்க்கும் வெறிகொண்டு திரியும் "சோ"(ம்பேறி ) இன்னோருவர் சந்திரிகாவின் "செல்லம்" "இந்து" ராம்.


தமிழர் தேசம் இதழில் தோழர் தியாகு உமாநாத்க்கு வரலாற்று சிறப்புமிகு பதிலளித்து ஒரு தமிழனின் கடமையை நிறைவேற்றினார்.

இந்து'வின் கொழுப்பு இன்று நேற்று உருவான கொழுப்பல்ல அது ஆயிரமாயிரம் காலமாய் உழைக்காமல் "பருப்பும் நெய்யும்" தின்று வந்த கொழுப்பு. அந்த இந்துவின் ஆசிரியர் ராம். மன்னிக்கவும் இப்படி அறிமுகப்படுத்தினால் உங்களுக்கு தெரியாமல் போகலாம். சந்திரிக்காவின் "அன்பிற்கும்" சிறிலங்காவின் நம்பிக்கைக்கு உரிய, இந்தியாவில் பிறந்தாலும் தன்னை கடவுள் படைத்தது சிறிலங்காவிற்கு ஸேவை செய்யவே என்று நம்பிக்கொண்டிருக்கும் மனிதர் "லங்காரத்னா" எனும் சிறிலங்க தேசிய அரசின் மிக உயர்ந்த விருது பெற்ற "இந்து" ராம். ( மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எச்.எப்.ஐ'யின் பயிற்சியாளர் மற்றும் கட்சியின் உறுப்பினர் )

சரி கழுதை கிடக்கட்டும், என்ன செய்தி என்றால் அது எழுதுகிறது கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியது காவல்துறைத்தலைவர் விக்டர் பெரேரோவின் தன்னிச்சையான நடவடிக்கை என்று . அப்படியே செஞ்சோலை உள்ளிட்ட எல்லாக்கொடுரங்களுக்கும் காரணம் ராணுவம்தானே அன்றி "சமத்து" பிள்ளை மகிந்த அல்ல என்று சொன்னாலும் சொல்லும். ஒரு குறிப்பிட்ட இனத்தவரை இனம் கண்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செயலை நாட்டின் காவல்துறை அதிபரின் தன்னிச்சையான செயலாக "இந்துவின்" வாதத்தின் படி ஏற்றுக்கொண்டாலும், இனவெறி ஒரு நாட்டின் காவல்துறை அதிபருக்கே இந்தளவு இருக்குமானால் காடையர்களின் செயல்களை குற்றம் சொல்லி என்ன பயன்.

கவிஞர். பொதியவெற்பன் கவிதை வரி ஒன்று நினைவுக்கு வருகிறது.

"தமிழா கைகலக்க வேண்டியவனிடம்
கைகுலுக்கிக்கொண்டிருக்கிறாயே"


அங்காளி பங்காளி சண்டைகெல்லாம் அடுத்தவனை கொளுத்தும் தமிழா ! கொளூத்த வேண்டிய இடமே வேறு அல்லவா !

@ 3:19 PM எழுதியவர்: வரவனையான் 8 மறுமொழிகள்
கொழும்பிலிருந்து தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியதின் மூலம் தமிழீழ தேசியத்தை சிங்கள அரசு அங்கீகரித்துவிட்டதாக உணர்வதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார் தேமுதிக ( கட்சிப்பெயரை மட்டும்தான் சகிக்க முடியலை :P ) தலைவர் விஜயகாந்த். தானாட விட்டாலும் தன் தசை ஆடும் என்பதை விஜயகாந்தின் இந்த அறிக்கை உணர்த்துகிறது. அதே வேளை ஈழப்பிரச்சினையில் எம்ஜிஆருடன் இனைந்து தீவிரமாக ஆதரித்து இயங்கிய பண்ருட்டியார் அந்த இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பைதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழக மக்களின் மனதில் நீறு பூத்த நெருப்பாய் கிடக்கும் இவ்விடயத்தில் அதிமுக, காங்கிரசு தவிர்த்த பிற கட்சிகள் நிலைப்பாட்டின் அடிப்படையில் ஒருங்கிணைவது மிக அவசியமான ஒன்றாகும். எவ்வளவோ மனமாச்சர்யங்கள் இருப்பினும் "கேப்டன்" அவர்களே கீப் இட் அப் என்றே சொல்ல தோன்றுகிறது.

அவரின் அறிக்கை

Friday, June 08, 2007

@ 11:50 AM எழுதியவர்: வரவனையான் 65 மறுமொழிகள்

தங்களின் செயல்களின் மூலம் தாங்கள் ஒரு இன ஒடுக்குமுறை அரசு என்று சிறீலங்கா உணர்த்துகிறது, வழக்கம் போல் எம்.கே நாராயனன்களும் துக்ளக்களும் "இந்து" ராம்களும் தங்கள் தமிழ்விரோத ஊளையை இட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழர்களை கொழும்புவைவிட்டு பலவந்தமாக வெளியேற்றியுள்ளது ரஜபக்ஸே தலைமையிலான இனவெறி அரசு செஞ்சோலை வங்காலை என்று அதன் கொலைகரங்கள் நீண்டு தமிழரின் வாழ்வை பறிக்கும் வேலையில் ஒரு பக்கம் ஈடுபட்டுக்கொண்டு மறுபக்கம் இது போன்ற ஒடுக்குமுறை நடவடிக்கையிலும் ஈடுபடுவது சர்வதேச சமூகத்தின் கண்களுக்கு தெரிகிறதா இல்லை சர்வதேச சமூகம் என்று ஒன்று உள்ளதா என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.

விரைவில் இன்னபிற சிங்கள பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் பலவந்தமாய் வெளியேற்றப்படும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது. இதனிடையே சிங்கள அமைச்சர்கள் சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அலுவலகம் வந்து கலந்துரையாடி சென்றுள்ளனர். பிரச்சினையின் போக்கையும் தமிழக தமிழர்களின் கவனத்தை வேறு திசையில் திருப்புவதற்கான முயற்சியாகவே இச்சந்திப்பை காணவேண்டியுள்ளது. தமுமுக திமுக அரசை ஆதரித்துக்கொண்டிருக்கும் கட்சி. பாகிஸ்தான் கொழும்பில் கால் வைத்துள்ளது என்கிற செய்திகள் எழும்பிக்கொண்டிருக்கும் நிலையில், மாநில அரசுக்கு ஆதரவான ஒரு சிறுபான்மை அமைப்பை சந்தித்து அமைதி முயற்சி குறித்து பேசிச்சென்றார்கள் என்று வெளியான செய்தி ஒரு கேள்வியையும் எழுப்புகிறது. இது போல அமைதி முயற்சிக்கு இங்கிருக்கும் எந்த ஒரு தமிழ் அமைப்பையும் சந்திக்க இது வரை முயலவில்லையே சிறீலங்காவை சேர்ந்த எந்த ஒரு அமைச்சரோ இல்லை பாராளுமன்ற உறுப்பினரோ.

கிடக்கிறது கிடக்க கிழவியை தூக்கி மனையில வை என்கிற கதையாய் இன்னமும் மீனவர்களை கொன்றது புலிகள்தான் என்றும் அவர்கள் விமானபடை வைத்திருப்பதை இந்தியா விரும்பவில்லை என்றும் பேட்டிகொடுத்துகொண்டு அலைகிறார்கள் அதிகாரிகள். தன் சொந்த சுய விருப்புவெறுப்புகளுக்காக ஒரு நாட்டின் கருத்தாய் தன் கருத்தை பேசி வருபவர்கள் நாட்டுக்கு பிடித்த புற்றுநோயே ஆகும். இந்தியா விரும்பவில்லை என்றால் தமிழ்நாட்டிலிருந்து மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினரை கலந்து எடுக்கபட்ட முடிவா அது. 30 வருடமாய் துருப்பிடித்து போன வெளியுறவுகொள்கையை வைத்துக்கொண்டு இந்த "கிராஸ் பெல்ட்" அதிகாரிகள் "இந்தியாவின் கருத்து" என்று இந்தியர்களுக்கே புதிதான செய்திகளை இந்தியர்கள் மீது கருத்து வாந்தி எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.


ஒடுக்குமுறையை கையாண்டு பலவந்தமாய் கொழும்புவிலிருந்து வெளியேற்றபட்ட தமிழர்களுக்கு ஆதரவாய் என் எதிர்ப்பை இப்பதிவின் வாயிலாய் பதிவு செய்து தேனிசை செல்லப்பா பாடிய பாடலின் வரிகள் கொண்டு முடிக்கிறேன்

" நாங்க வேற நாடையா ' நீங்க வேற நாடு"
நிறைய வேறுபாடையா' நிறைய வேறுபாடு"

"சிங்கக்கொடி உங்களுக்கு" "புலிக்கொடி எங்களுக்கு"
"நாங்க வேற நாடையா நீங்க வேற நாடு"