Wednesday, November 28, 2007

@ 9:21 PM எழுதியவர்: வரவனையான்




கை நிறைய அள்ளி தின்ற
தினை தொன்டை அடைக்க
குடுவை கவிழ்த்து - கன்னம்
வடிய தேன் குடித்து
வள்ளி தேடி அலைகிறான்
காட்டில் வழி தவறிய முருகன்
மருத நிலத்து குருவிகளை
அவனாய் நினைத்து - கள்ளச்சிரிப்புடன்
ஆலேலோ சொல்லி விரட்டியடிக்கிறாள்
குறத்தி - இருவரும் கண்ணோடு கண் பார்க்கும்
பொழுதறிந்த காளி - பாலை
அதிர சிரிக்கிறாள்

2 மறுமொழிகள்:

  1. இதுக்குலாமா கயமைத்தனம் பண்ணனும் ! என்ன கொடுமை சரவணா !!!!

  1. பின்னூட்ட அல்லக்கைத்தனம்!!!