Saturday, November 03, 2007

@ 3:31 PM எழுதியவர்: வரவனையான்
















02.11.2007


பெரியார் தி.க. சார்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரவணக்க நிகழ்வுகள்

சேலம் போஸ் மைதானம் அருகில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வும் அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளத்தை அழித்த சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்தும் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு வீரவணக்க நிகழ்வும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.




நிகழ்ச்சிக்கு பெரியார் திராவிடர் கழக நிர்வாகி டைகர் பாலன் தலைமை வகித்தார். ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மனித உரிமைக் கழகம், புதியன பண்பாட்டுக் கழகம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, தலித் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் பெரியார் தி.க.வின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் வெ. ஆறுச்சாமி, நிர்வாகிகள், தமிழின உணர்வாளர்கள் பலரும் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர். பிடிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் பெரியார் தி.க.வின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. ்.




விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வீரவணக்க நிகழ்வு
[சனிக்கிழமை, 03 நவம்பர் 2007, 10:47 AM ஈழம்] [புதினம் நிருபர்]
வீரகாவியமான பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழ்நாட்டின் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இன்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு இந்நிகழ்வு நடைபெற்றது.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் பிரம்மாண்ட திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. வீரவணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் பாவலர் அறிவுமதி, ஓவியர்கள் வீரசந்தானம், புகழேந்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் நிர்வாகி பாலு, தமிழ் முழக்கம் சாகுல் அமீது, பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பெருந்திரளான தமிழின உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.



நன்றி : சங்கதி & புதினம்

1 மறுமொழிகள்:

  1. 7:09 AM  
    Anonymous said...

    சென்னை வீரவணக்கக் கூட்டம் ஒலி வடிவம்
    http://thenseide.com/cgi-bin/TamilSelvan061107.asp