Friday, November 02, 2007

@ 3:27 PM எழுதியவர்: வரவனையான்

தமிழீழ போராட்டத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒருவர் துரோகம் இழைத்து வெளியேறிய செய்தி படித்து கவலையாய் மூவேந்தர் புத்தக நிலையத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். "கவலைப்படாதடா, நான் இருக்கிறேன் அங்கு" என்று சொன்னார் ஒரு நண்பர். எப்போதும் என்னை கிண்டலடித்து வாங்கிகட்டிக்கொள்பவர். முறைத்து பார்த்தேன். "டேய் இல்லடா; என் பேரு என்னா"னு கேட்டார் ...ம்ம் தமிழு. என்றேன். அதான் அங்க தமிழ்செல்வன் இருக்காருல ஒரு பிரச்சினையும் வாராது கவலைபடாதேன்னு சொன்னார். இருவரும் புன்னகைத்து கொண்டோம்.

ஒடுக்கபட்ட சமூகத்தில் பிறந்து ஈழவிடுதலை போரில் தம்மை இணைத்து களமாடி விழுப்புண் பெற்று இன்று ஈழத்தமிழ் மக்களின் அரசியற்பிரதிநிதியாய் இருந்த தமிழ்ச்செல்வன் நம்மிடையே இல்லை. உலகத்தமிழர் இதயங்களில் தன் குழந்தை புன்னகையால் குடி கொண்டிருந்த அந்த மாவீரன் இல்லை.

மதிய உணவில் முதல் கைவைத்த போது சேதி கிடைத்து ஓடி வந்தேன். "தேசத்தின் குரல்" மறைவு வருத்தமளித்தாலும் அவரின் நோய் முற்றிய நிலை முன்பே தெரிந்திருந்ததால் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தவில்லை எனக்கு என்பதே உண்மை. ஆனால் இந்த சேதி மிகவும் கவலையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

" நின்ற இடம் நடுகல் ; யாழ் வீரருக்கு " என்பார் கவிஞர் சூரிய தீபன். தேசவிடுதலைக்கு களமிறங்க மரணம் ஒன்றே முன் நிபந்தனை என்பதை ஏற்று வந்தவர் என்றாலும் விடியலின் முகப்பில் நிற்கும் நேரத்தில் வெற்றியின் திட்டிவாசலில் ஈழப்போர் இருக்கும் நிலையில் அரசியற்துறை பொறுப்பாளரின் இழப்பு ஈழத்தமிழ் மக்களுக்கு பேரிழப்புதான்.

சிறீலங்க இனவெறி பயங்கரவாத அரசு இது போன்றதொரு நடவடிக்கையின் மூலமும் மாவீரன். புன்னகை அரசன். தமிழ்ச்செல்வன் தம் வீர மரணத்தின் மூலமும் சொல்லி சென்ற செய்தி சிங்கள காடையர்களிடம் இருந்து ராணுவரீதியான தீர்வில் மட்டுமே ஈழதேசத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதுதான்.

நான் மிகவும் மதிக்கும் பதிவர் நயனனின் கவிதை ஒன்று கண்ணீர் வரவைத்தது இங்கு பகிர்கிறேன்"அநுராதபுரத்து வெற்றிகளை
கண்ணிமைக்காது பார்த்தவர்களின்
கண்ணடி பட்டதாலா இவன் குண்டடி பட்டுப் போனான்?"
தேம்பித்தவிக்கும் உலக தமிழ்ச்சமூகத்துக்கும் என் தோழிக்கும் இதன் மூலம் நான் சொல்லவிரும்புவது "ஈழம் 'பிரபாகரனின் தேசம்' இதற்கெல்லாம் கலங்காது , முன்னை விட முனைப்பாய் தமிழ்ச்செல்வனின் புன்னகையை தங்கள் முகங்களில் சுமந்து களம் நிற்பர் புலிகள்; மீட்பர் தேசம் தனை "

9 மறுமொழிகள்:

 1. :(

 1. :-(

 1. 5:43 PM  
  Anonymous said...

  வருத்தமாவிருக்கிறது

  :-(

 1. தான் ஆடவிட்டாலும் தம் தசை ஆடும் என நிரூபித்த தொப்புள் கொடி உறவுகளுக்கு நன்றிகள்.

  //
  தேம்பித்தவிக்கும் உலக தமிழ்ச்சமூகத்துக்கும் என் தோழிக்கும் இதன் மூலம் நான் சொல்லவிரும்புவது "ஈழம் 'பிரபாகரனின் தேசம்' இதற்கெல்லாம் கலங்காது , முன்னை விட முனைப்பாய் தமிழ்ச்செல்வனின் புன்னகையை தங்கள் முகங்களில் சுமந்து களம் நிற்பர் புலிகள்; மீட்பர் தேசம் தனை "//

  தீர்க்கதரிசனமான வரிகள்.

 1. 'நின்ற இடம் நடுகல்"
  இது கண்ணீர் சொரியும் காலமல்ல கனலை ஏற்றும் காலம்.
  வரவனையான் உங்களின் வார்த்தைகள் எங்களுக்கு வலிமையாகிறது.

 1. It is shocking and sad :-(
  It is a great loss but I hope it is only temporary and there are others in line to lead the political/diplomatic front of the liberation movement.

 1. 1:20 AM  
  paris tamilan said...

  கண்ணீர் வணக்கங்கள்.

 1. உங்களின் ஆறுதல் மொழி ஒரளவு பாரத்தைக் குறைக்கின்றது

 1. கண்ணீர் அஞ்சலி.