Wednesday, October 24, 2007

@ 4:43 PM எழுதியவர்: வரவனையான் 13 மறுமொழிகள்
தன் நாட்டின் அடிமை விலங்கொடிக்க தன்னையே விலையாய் வைத்து எதிரியின் இதயத்தில் புகுந்து புலிக்கொடி ஏற்றிய இந்த சகோதர்களின் நிர்வாணம், சுற்றி ஆடைகட்டி நிற்கும் மனிதர்களை விட அழகானது , உயர்வானது .

மணலாற்றில் 10 ஆண்டுகளூக்கு முன் போரில் இறந்து போன பெண் புலிகளின் உடலை நிர்வாணப்படுத்திய அதிகாரிக்கு புலிகள் எப்படி பதில் அளித்தார்கள் என்பதனை வரலாறு அறியும். உலகின் எல்லா ஏகாதிபத்தியதிடமும் ஆயுதமும் ராணுவ உபகரணமும் உதவியாய் பெற்றும் எல்லாம் இழந்து சர்வதேச சமூகத்திடம் இன்று உண்மையில் அம்மணமாய் நிற்பது சிங்கள பயங்கரவாத பாசிச அரசுதானே.

தமிழிழச்செம்மீன் தென் கிழக்கில் தெரிகிறது

Wednesday, October 10, 2007

@ 7:59 PM எழுதியவர்: வரவனையான் 51 மறுமொழிகள்


பேச ஏதுமற்றுப்போன
தருணத்தில்
சொற்கள் - நின்று விட்ட
மழையின் தூரல்களாய்
ஒன்றிரண்டாய்
முதிர்ந்து வெடித்த
சோளமாய்
அங்கும்மிங்கும்
விழுந்து கொண்டிருக்கின்றன
................
................
இப்போது உனக்கும் எனக்கும்
இரண்டு கண்கள்
( கொழுவி பற்றி ஏதும் இருக்கும் என ஓடி வந்த கொழுவியின் ரசிகைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் )

@ 2:25 PM எழுதியவர்: வரவனையான் 39 மறுமொழிகள்லக்கியைப்போல் ரவியைப்போல் சிறு வயதில் சித்திரக்கதைகள் படிக்கத்துவங்கி பின் 12 வயதில் முதன் முதலில் பாலகுமாரனின் "தண்ணிர் துறை" நாவல் படித்து அதன் பின் காதலுக்குரிய என் காமிக்ஸ் கதாநாயகர்களை மனவருத்தத்தோடு இழந்து அதற்கு முன் பாலகுமாரன் எழுதிய அத்தனையும் தேடித்தேடி படித்து என் மாமாவிடமும் அண்ணண்களிடமும் "இரும்புக்குதிரைகள் படிச்சாச்சா ' பலாமரம் படிச்சாச்சா" என்று கெத்து காட்டியபடி மெல்ல தி.ஜ'வையும் பாரதியையும் ஒரு கைபார்த்து பின் ஒரு சுற்று வந்து முடித்த இடம் பெரியாரிடம்.

இப்போது டோண்டு அவர்களின் பதிவில் மதன் சொல்லியதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கின்றார். சரி மதன் என்ன சொன்னார் என்று பார்த்ததில் அவர் தமிழர்களுக்கு வரலாறே இல்லை என்கிறார். சரிதான் என்று வைத்துக்கொள்வோம். அதன் எதிர்கேள்வியாக மதன் ஒரு பார்ப்பனர் என்பதால் மட்டுமே அவரையும் அவர் சொன்ன கருத்தையும் எதிர்ப்பதாக அடவு கட்டி ஆடியுள்ளார் டோண்டு மாமா .

உண்மைதான் எங்கள் வரலாறு என்பது "நீங்கள்" ( அ) அவாள்கள் கேட்கும் ஆதாரங்களோடு இல்லைதான். இருக்கும் ஆதாரங்களான கல்வெட்டுகளும் குழப்பமாகவும் அல்லது குழப்பப்பட்டும் எங்களுக்கு கிடைக்கிறது. அதுவும் அரசனின் வெற்றியையும் அவர் பெரிய மனசு பண்ணி வறுமையில் வாடும் பார்ப்புகளுக்கு உருவாக்கி குடுத்த சதுர்வேதி மங்கலங்கள் பற்றியும் அவவூர்களுக்கு உள்ள நிலபுலங்கள் பற்றி டீட்டெயிலான மெஸர்மன்ட்'வுடன் தான் இருக்கிறது. மக்களை பற்றியும் அவர்களின் வாழ்நிலை பற்றியும் இல்லை. ஒரு வகையில் மதன் கூறியது உண்மைதான்.

அதைத்தாண்டி பார்த்தால் தஞ்சை கல்வெட்டுகளில் ஆதித்த கரிகாலனை கொன்ற ரவிதாசன் என்கிற பார்ப்பானை பற்றியும் . அரசனின் மகனே என்றாலும் கொன்றது பார்ப்பான் என்பதால் மனு தர்ம படி அவனுக்கு தலையை மட்டும் சிரைத்து மங்கலமாக பல கிராமங்கள் கொடுக்கப்பட்டு அவர்கள் உறவினரோடு ஊரைவிட்டு ராஜமரியாதையோடு அனுப்பிவைத்த தகவல்கள் தான் இருக்கிறது.

" எண்ணிப்பாருங்கள் பிறந்த ஊரை விட்டு பெண்டு பிள்ளைகளோடு ஒரே இரவில் கிளம்பி போவதென்றால் எவ்வளவு கொடுமை, கல்வெட்டுகளை படிக்கும் போது கண்ணில் நீர் முட்டுகிறது, பிரம்மராயரும் இப்படித்தான் நின்றிருந்திருப்பார் " இப்படி எழுதி புலம்பித்தீர்கிறார் பாலகுமாரன் கூட.

எனக்கும் தான் கண்ணீர் வருது ஒரு அரசன் மகனை கொலையே செஞ்சுட்டு நீதிப்பரிபாலனைல ஒரே ஒரு எக்ஸம்சன் வச்சுகிட்டு ஒருத்தன் தப்பிக்கலாம்னா எவ்ளோ வசதி எண்ணிப்பாருங்கள்.

ஆகவே இருக்கிற கல்வெட்டுகளும் இது போன்று பார்ப்புகளின் டவுசரை எங்காவது அவிழ்த்து விடுவதால். தமிழர்களுக்கு வரலாறு இல்லை என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையை பார்ப்பதுதானே யோக்கியமான செயலாக இருக்கும்.

தமிழர்கள் கூட அறியமுடியாத களப்பிரர் வரலாறு கூட ஆரியர்களின் வேத நூற்களில் கண்டுபிடித்துள்ளனர் தமிழறிஞர்கள். என்ன நம்ம சொன்னால் நீங்க சொன்ன நம்பமுடியாதுன்னு அடம் பிடிப்பாங்க இல்லை வெள்ளைக்காரன் சொன்னதையெல்லாம் ஒப்புக்க முடியாதுன்னு அப்படி சொல்லுவாங்க. இடம் போனா வலம் வலம் போனா இடம்.

வரலாற்று ஆர்வமுள்ள நண்பர்கள் ஆய்வாளர்.குருவிக்கரம்பை வேலு அவர்களின் சிந்து வெளி குறித்த மூன்று நூற் திரட்டை வாங்கி படியுங்கள். தமிழரின் வரலாறை வேதங்களில் இருந்தே எடுத்துக்காட்டுகிறார். விலையும் குறைவுதான். விரைவில் முகவரி போடுகிறேன்

செந்தழலுக்கு//ஏட்டுச்சுரைக்காய் மதனுக்கு தமிழர் வரலாற்றை வரவணையானிடம் கேட்டு தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தல் செய்கிறேன்....அட்லீஸ்ட் தஞ்சாவூர் எங்கே இருக்கென்றாவது தெரிஞ்சுகொள்ளட்டடும் மதன்... //

நண்பா நான் உன் வயதினந்தான் "மதன் "ரேஞ்சுக்குலாம் உக்காந்து "ரோசிச்சு" பதில் எழுதவோ இல்லை வரலாறு எழுத சத்து பத்தாது.
//கல்வெட்டுகளை பார்த்து சரித்திரம் எழுத செந்தழல் ரவி மற்றும் வரவணையான் குழு ஒன்று போதாதா? அவர்களே சரித்திரம் எழுதி விடலாமே. அப்பாடா.//

டோண்டு மாமா, ஏன் இந்த கொல வெறி. எனக்கு குழு, கேங். அல்லக்கை, ரசிகர் மன்றம் போன்றவையெல்லாம் இல்லை. :))))))))))))))))
//தமிழ்தான் சமஸ்கிருதம் ம்ற்றும் எல்லா உலக மொழிகளுக்கும் மூலம், மற்றும் தமிழர்கள் கடலில் முழுகிப்போன லெமூரியாவில் வாழ்ந்தனர் என புருடா விட்ட தேவநேயனை தோள்மேல் தூக்கிவைத்து, ஸ்டாம்ப் வெளியிட்ட "பகுத்தறிவு" புலிகளிடம் , ஒரு வித சிந்தனைத் திரமையையோ, மன நேர்மையையோ எதிர்ப்பார்க்காதீர்கள்.//

தேவ நேயன் அய்யாவை பழித்த வாயில் "மனுதர்ம" படி ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும் என்பது என் அவா//ஆம். நீங்கள் சொல்லவில்லைதான். ஆனால் அவருக்கு வந்த திட்டுகளுக்கு மூல காரணமே அவர் பார்ப்பனர் என்பதால்தான். அதை விடுங்கள். நீங்களும் வரவனையானும் எழுதப் போகும் தமிழக சரித்திரத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//

ம்ம்ம் இப்படியே பேசி எழுத வச்சுடுவேள் போலிருக்கு . அதுவும் உண்மைதான் எமக்கான வரலாற்றை இனி நாங்கள் தான் எழுதிக்கொள்ளவேண்டும்


தலைப்புக்கு காரணம் : வரும் வழியில் குளத்தில் குளித்து வந்த குழந்தையை பார்த்து அதன் சகோதரனோ இல்லை பக்கத்து வீட்டு பிள்ளையோ கிண்டலடித்த வார்த்தை. அது மறுபடி மறுபடி நினைவுக்கு வந்ததால் .


சொல்லாமல் விட்ட செய்தி அந்த படத்திலுள்ள நபர்கள் விடுதலை அளிக்கப்பட்ட அமெரிக்க அடிமைகள். அவர்களுக்கும் வரலாறு இல்லை. இருந்த வரலாறும் திட்டமிட்டு அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் நிறம் சொல்லுகிறது அவர்களின் வரலாற்றை.