Thursday, September 06, 2007

@ 6:49 PM Labels: எழுதியவர்: வரவனையான்
ஏறத்தாழ 5 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் உணவுக்கும் மருந்துக்கும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். உலகில் இது வேறெந்த இனத்துக்கு இது நிகழ்ந்திருந்தாலும் இவ்வளவு அமைதியாய் இருந்திருப்பார்களா நம் இந்திய அரசும் பத்திரிக்கையாள பிரபுக்களும். காஷ்மீர் பண்டிதர்களுக்கு "சுதந்திர" காஷ்மீர் பகுதியில் அல்ல இந்திய காஷ்மீர் பகுதியில் ஒரு கீறல் விழுந்தால் கூட பிஜேபி துவங்கி பேராயக்கட்சிகாரர்கள், காம்ரேடுகள் வரை அனைவருக்கும் அண்ட சராசரமே "அதிருகிறது" . மணிரத்தினம் துவங்கி பாலசந்தர் வரை எல்லோருக்கும் அப்பிரச்சினையின் அடுத்த பக்கம் குறித்து எந்த கவலையுமின்றி படமெடுத்து தேசியக்கொடி எரிந்தால் தன்னை அதன் மேல் உருட்டி அனைத்து தேசியம் காக்க ஒரு திருநெல்வேலி சைவ பிள்ளை பாத்திரம் ஆயுத்தமாவே இருக்கிறது. அதுவே ஈழத்தமிழர் என்றால் ஒரு வித எள்ளல் உணர்வே அவர்களால் வயிறு வளர்க்கும் தமிழ் சினிமா ஆட்களுக்கு மிக முக்கியமாய் பார்ப்பனிய பின்புலம் உள்ள இயக்குனர்களுக்கு. தாய்வீடு படத்தில் வி.கே . ராமசாமியின் வேலையாளாய் வரும் ஒருவர் ஈழத்தமிழர். அவரை இவர் ஒரு காட்சியில் அடிப்பார், அப்போது அவர் 'கொலை, கொலை' என்று அலறுவார். அதற்கு வி.கே. ராமசாமி " இலங்கையாம் , தமிழனாம் கொலையாம் " ஆளைப்பாரு என்பார். படம் வந்த காலகட்டம் இனவெறியினால் காடையர் தமிழரை வேட்டையாடிக்கொண்டிருந்த வேளை அந்த நிலையில் கூட இப்படி குரூரமாக கிண்டலடித்துக்கொண்டிருந்தது தமிழ் சினிமாத்துறை. பின்னர் வந்த பாலசந்தரின் புன்னகைமன்னனில் சிங்கள பெண் கதாநாயகியாகவும் ஹுசனி ஈழத்தமிழராகவும் வில்லனாக சித்தரிக்க பட்டிருப்பார்( அவரின் பெயரிலும் ஒரு கொழுப்பு காட்டியிருப்பார் இயக்குநர் ; ஹுசைனியின் பெயர் - துரைச்சிங்கம் ) .பாலசந்தர், வசனத்தினாலும் சிறு அதிர்ச்சி ஏற்படுத்துதலினாலும் தான் இங்கு ஒரு இயக்குநராக அறியப்பட்டவர். ஆனால் இன்றைக்கு நிலை வேறு பந்து ஈழத்தவர் பக்கம் இருக்கிறது. இனி வரும் காலத்தில் எங்கள் பிரச்சினையை பேசாத , பேச மறுக்கின்ற படங்களை புறக்கணிக்க போகிறோம் என்று சொல்லத்தான் போகிறார்கள். அன்றைக்கு புதிய புரட்சி கர இயக்குநர் அவதாரம் எடுக்க போகிறவர்களையும் பார்க்கத்தான் போகிறோம்.
இப்போது பேச வந்த பிரச்சினை அதுவல்ல. புலிகளிடம் விமானபடை இருப்பது தெரிந்த பின் தமிழர்களை கொன்று குவிக்கும் அந்த நாட்டு அரசுக்கு நவீன ராடார் கருவிகளை வழங்கியது இந்திய பிராந்திய வல்லரசு. அவை கண்ணிலும் மண்ணைத்தூவி வெற்றிகரமாய் முன்று தாக்குதல்களை நடத்தி முடித்திருகிறார்கள் புலிகள். அதன் இன்னும் அதிகமான ராடார்களையும் ராணுவ உபகரணங்களையும் அலறி அடித்து வழங்குகிறது இந்தியா. ஒரு இனமக்களை அழிக்கும் ராணுவத்துக்கு தன் இறையான்மைக்கு அச்சுறுத்தல் என்கிற பெயரில் ஆயுதங்களையும் பயிற்சியையும் அள்ளி வழங்கும் இந்திய அரசே, எங்கள் உறவுகள் உணவின்றி , நோய்க்கு மருந்தின்றி தவிக்கிறார்கள்.உமக்கும் அவர்களுக்கும் சம்மந்தமில்லை எங்களுக்கும் அவர்களுக்கும் தன் தொப்புள்கொடி உறவு. எங்கள் மக்களிடம் நிவாரன பொருட்கள் பெற்றுதருகிறோம் அதையாவது செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் கொடுக்க விடு என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு கேட்டுக்கொண்டும் அனுமதி மறுக்க பட்டிருகிறது. ஒரு நாட்டுக்கு ராணுவ உதவி செய்கிறாய் நீ - எம்மக்களுக்கு எங்கள் சகோதரர்களுக்கு நாங்கள் கொடுப்பதை தடுப்பது ஏன் என்ற கேள்வியை முன்வைத்து தமிழக மக்களால் தங்கள் ஈழத்து உறவுகளுக்கு கொடுக்கப்பட்ட உதவி பொருட்களை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணம் புறப்படுகிறது அய்யா நெடுமாறன் தலைமையிலான அணி. மதுரையில் இந்த போராட்ட குழுவினருக்கு மருத்துவர் அய்யா.ராமதாசு வாழ்த்துரை வழுங்குகிறார். திருச்சியில் புரட்சிப்புயல். வைகோ வாழ்த்தி வழியனுப்புகிறார். பயண நாளுக்கு முன் தினம் ராமேஸ்வரத்தில் இந்திய தேசிய லீக் தலைவர் பசீர் அகமது அவர்களும் நாகப்பட்டினத்தில் தோழர்.தொல்.திருமாவளவனும் பயண நிறைவுரையாற்றி வழியனுப்புகிறார்கள். நம் சகோதர்களுக்கு உதவ மறுக்கும் இந்திய அரசைக்கண்டித்தும், உதவ நினைக்கும் நெஞ்சங்களை சட்டங்களும் எல்லைகளும் தடுக்கமுடியாது என உணர்த்தவும் வாருங்கள் தமிழர்களே நம் சகோதரர்களுக்கு உதவி பொருட்களுடன் யாழ் போவோம் !!!
தொடர்புடைய செய்திகள் : http://www.eelampage.com/?cn=33299

http://thenseide.com/cgi-bin/Details.asp?fileName=Sep1-07&newsCount=1

26 மறுமொழிகள்:

 1. நன்றி உங்கள் பதிவுக்கு

 1. 8:08 PM  
  Anonymous said...

  மனதைத் தொட்ட பதிவு. உங்கள் உணர்வுக்கும் ஆர்வத்திற்கும் நன்றி.
  வெகு விரைவில் ஈழம் அமைப்போம். உங்களையும் அழைப்போம்.

  ஒரு ஈழத் தமிழன்

 1. நெஞ்சம் தொட்ட பதிவு.

  இன்னும் வாய் திறவாமல் இருக்கிறாரே கலைஞர் இவ்விடயத்தில்.

  அன்புடன்
  அரவிந்தன்

 1. எமக்காக உங்களைப் போன்ற சிலர் இருக்கும் வரை எமக்கு இந்தியா தந்தை நாடுதான்.
  கலைஞர் கலைஞர் டீவி பிசியிலும் தமிழக அரசு திரைப்பட விழாவில் நடிகைகள் ஆடும் அழகை ரசிக்கவும் தயாராகுவதால் இதில் அக்கறை காட்டமாட்டார்.எமக்காக உங்களைப் போன்ற சிலர் இருக்கும் வரை எமக்கு இந்தியா தந்தை நாடுதான்.
  கலைஞர் கலைஞர் டீவி பிசியிலும் தமிழக அரசு திரைப்பட விழாவில் நடிகைகள் ஆடும் அழகை ரசிக்கவும் தயாராகுவதால் இதில் அக்கறை காட்டமாட்டார்.

 1. 11:15 PM  
  Anonymous said...

  Jaalraaa sathaam kathai kizikkuthu!

 1. கல்வி வள்ளல் பெருந்தலைவர் காமராசரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தவர் அய்யா நெடுமாறன்.காமராசருக்குப் பெட்டி தூக்கிய வெங்கட்ராமன் இந்திராகாந்தி உங்கட்கு ஸ்டீல் மந்திரி பதவி தருகிறேன் என்கிறார் காமராசரை விட்டு இந்திரா பக்கம் வந்து விடுங்கள் என்று சொன்னார்.இவர் கேட்க வில்லை.

  ஈழமக்களுக்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்.இந்திய அரசு பார்ப்பனப் பார்வையிலேயே தான் தமிழீழத்தைப்
  பார்க்கிறது.அடப் பாவிகளே இனப் படுகொலை செய்பவர்கட்குக் கூடப் போகிறீர்களே என்றால் நம்பிக்கைத்திலகம் மன்மோகன் எந்த உதவியும் சிங்களவ்ர்க்குச் செய்ய மாட்டோம் என்று சொல்வார்.ரா வில்,இந்திய நேவியில் உள்ளப் பார்ப்புகள் எல்லாவித உதவிகளும் செய்யும்.
  தமிழர்கள் அளித்த உணவையும் மருந்தையுங்கூடக் கொடுக்காமல் வீணாக்கும் இந்தியாவே,வெட்கமாக இல்லையா?
  கலைஞர் அவர்களே பொறுத்தது போதும் பொங்கியெழும்!

 1. சாட்டை அடி..நல்ல பதிவு...

  வழக்கம் போல கருனாநிதி கண்ணை மூடிக்கொள்வார் செயலலிதாவிற்கு பயந்து....மாறனுக்காக மத்திய அரசை மிரட்டியவர், மக்கள் பிரச்ச்னைக்காக ஒரு முறையேனும்..அவ்வாறு செய்வாரா..

  ராமதாஸ் ஆட்சியில் இருந்தால் ஈழத் தமிழர்களின் நிலை பற்றி பேசுவாரா என்பது சந்தேகமே..
  இருப்பினும் இப்போது கொடுக்கின்ற தார்மீக ஆதரவை, தமிழ நாட்டின் அனைத்து கட்சியினரும், வழங்கினால், மத்தியில் உட்கார்ந்து கொண்டு, கிளரி விடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்

 1. சாட்டை அடி..நல்ல பதிவு...

  வழக்கம் போல கருனாநிதி கண்ணை மூடிக்கொள்வார் செயலலிதாவிற்கு பயந்து....மாறனுக்காக மத்திய அரசை மிரட்டியவர், மக்கள் பிரச்ச்னைக்காக ஒரு முறையேனும்..அவ்வாறு செய்வாரா..

  ராமதாஸ் ஆட்சியில் இருந்தால் ஈழத் தமிழர்களின் நிலை பற்றி பேசுவாரா என்பது சந்தேகமே..
  இருப்பினும் இப்போது கொடுக்கின்ற தார்மீக ஆதரவை, தமிழ நாட்டின் அனைத்து கட்சியினரும், வழங்கினால், மத்தியில் உட்கார்ந்து கொண்டு, கிளரி விடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்

 1. அருமையான பதிவு.
  தொடர்க உங்கள் பணி!

 1. நல்ல பதிவு வரவனை.

  ஈழத்தமிழருக்காக உருகுவது போல வேடம் தரிக்கும் பார்ப்பன சிந்தனையாளர்கள் இங்கே பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக பதிலிடாமல் கலைஞரை குறை சொல்லும் நோக்கத்திற்காக ஈழத்தமிழருக்கு பொய்க்கண்ணீர் சிந்துவதை காண முடிகிறது.

  தலைவரும் இவர்கள் கூப்பாடும் போட்டும் அளவுக்கு தான் நடந்துகொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 1. 1:01 PM  
  Mahendran said...

  விபீஷணன் கலைஞரா செய்வாரென்று எதிர்பார்க்கிறீர்கள்?

 1. 1:18 PM  
  Mahendran said...

  சோற்றிலடித்த பிண்டங்கள் போல் பார்ப்பனனுக்கும் பார்ப்பன அடிவருடிக்கும் பல்லக்கு தூக்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை.எதுக்கு இவனுங்களுக்கு நக்கிப்பிழைக்கிற பிழைப்பு...தூ....எம்.கே.நாராயணனை விலக்க சொல்கிற ஆண்மை இருக்கா இவனுக்கு?தயவு செஞ்சி இன்னொரு வாட்டி இவன் செய்வானா? அப்பிடின்னுல்லாம் யாரும் கேட்காதீங்க.எத்தனை வாட்டி செருப்ப கவ்வக்குடுத்து அடிச்சாலும் திருந்தாத ஜென்மம்.இன்னும் வாய தொறக்கலைன்னா சந்தோசப்படுங்க.தொறந்தா நாறத்தான்ப்பா செய்யும்.அய்யா அவர்களின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

 1. சிங்களப்பேரினவா(த)த்து அரசின் கொட்டையை நசுக்கி எம்மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை பகிர்ந்து கொள்ள முயலும் தமிழின உணர்வாளர்களின் உரிமையை தடுத்துக் கொண்டிருக்கும் இந்தியப் பாஸிச அரசினையும், எதுவுமே தெரியாதவண்ணம் தேவைப்பட்டப் பதவியைக் கேட்டுவாங்கும் திராவிடக்கிழவன் கருனாநிதிக்கும் எமது கண்டனங்கள்.

  உணர்வாளர்களின் முயற்சி வெற்றீயடைய வாழ்த்துக்கள்.

 1. 5:10 PM  
  Anonymous said...

  இந்த மகிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு வர அனுமதித்து/வழிவகுத்தது யார்???

 1. வரவனையான், நல்ல பதிவு.. பதிவுக்கு நன்றி.

 1. 6:53 PM  
  Anonymous said...

  As a Sri lannkan born tamil, Thanks for the understanding of situation and post.
  Sabes

 1. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் தோழர்..

 1. //இந்த மகிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு வர அனுமதித்து/வழிவகுத்தது யார்??? //


  அனானி ( நிச்சயமாக நீங்கள் ஒரு பார்ப்பணாகத்தான் இருப்பீர்கள்)
  ரணிலுக்கு தமிழர்கள் ஓட்டுபோடாவிட்டதால்தான் மகிந்த ஜனாதிபதியாக ஆனார் என நினைக்கவேண்டும் ரணிஉலுக்கு தமிழர்கள் ஓட்டுப்போட்டாலும் சிங்கள இனவாதிகள் மகிந்தவை எப்படியும் ஜெயிக்க வைத்திருப்பார்கள். தமிழர்கள் ஓட்டுப்போடவில்லை என்ற பின்னர் தான் பல சிங்களவர்கள் ரணிலுக்கு ஓட்டுப்போட்டவர்கள். இல்லையென்றால் இவர்கள் அனைவரும் மகிந்தவுக்கே ஓட்டுப்போட்டிருப்பார்கள். இலங்கை அரசியல் தெரியாவிட்டால் பொத்திக்கொண்டுபோம். அல்லது துணிவு இருந்தால் உன் பெயரில் வாருங்கள்

 1. 10:57 PM  
  Anonymous said...

  kalaingar pongi ezhumbonum'na Trisha'vum Priyamani'yum veenum...

 1. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே.

 1. //இந்த மகிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு வர அனுமதித்து/வழிவகுத்தது யார்??//

  பெரும்பான்மைச் சிங்கள மக்கள் . தனியே சிங்கள மக்கள் மட்டுமே வாக்களித்த தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்கள் மகிந்தவிற்கு வாய்ப்பளித்து அவரை வரச் செய்ததன் ஊடாக சிங்கள மக்களின் நிலை தெளிவாகி விட்டது தானே ?

  ஒருவேளை தமிழர்கள் வாக்களித்து ரணில் வந்திருந்தாலும்

  ரணிலை வரச்செய்தது யார் என நீங்கள் கேட்பதற்குரிய வாய்ப்புக்களைத்தான் வரலாறு இதுவரை வழங்கி வந்துள்ளது.

 1. நன்றி நண்பரே நெஞ்சை தொடும் பதிவு உங்களின் பதிவுகளை வாசித்திருகின்றேன் ஈழத்தமிழருக்கே இல்லாத உணர்சி உங்களிடம் தெரிகின்றது உங்களின் உணர்வுகளை கண்டு மெய்சிலிர்கின்றேன்

 1. //இந்த மகிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு வர அனுமதித்து/வழிவகுத்தது யார்???//  இந்த இணைப்பில் மதிப்புக்குரிய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஏன் ரணிலை தமிழர்கள் நிராகரித்தனர் என்பதை தெளிவாக விளக்கி இருகின்றார்
  http://video.google.com/videoplay?docid=6911007866738886883

 1. உங்கள் உணர்வை மதிக்கிறேன்.அந்த மக்களுக்கு 'யார் குத்தினாலும் அரிசியே' வேண்டும்.

 1. //பாலசந்தரின் புன்னகைமன்னனில் சிங்கள பெண் கதாநாயகியாகவும் ஹுசனி ஈழத்தமிழராகவும் வில்லனாக சித்தரிக்க பட்டிருப்பார்( அவரின் பெயரிலும் ஒரு கொழுப்பு காட்டியிருப்பார் இயக்குநர் ; ஹுசைனியின் பெயர் - துரைச்சிங்கம் ) .பாலசந்தர், வசனத்தினாலும் சிறு அதிர்ச்சி ஏற்படுத்துதலினாலும் தான் இங்கு ஒரு இயக்குநராக அறியப்பட்டவர். //


  வரவனையான்...

  பாலசந்தர் இந்த காட்சியில் முத்திரை பதித்தவர்... தமிழனின் நன்னெறி ஒழுக்கத்தை தூக்கி பிடித்தவர். எப்படி என்று தெரியுமா...

  நீங்கள் மேலே சொன்ன காட்சியில் ஒரு பெரியவர் வருவார். அவர் ஹூசைனியை பார்த்து

  "களிரோடு சண்டையிடு, கட்எறும்பை விட்டு விடு" என்று கதைப்பார். இந்த ஒற்றை வரியில் தமிழனின் வீரத்தையும் நன்னடத்தையும் உயரப்பிடித்தவர் இயக்குனர் பாலசந்தர்.


  "களிரோடு சண்டையிடு, கட்றும்பை விட்டு விடு" இவ்வசனம் ஒரு நேர்மறை பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று சொல்லுங்கள் பார்போம்?

 1. இந்த யாழ்பாணம் போகலாம் சிங்கப்பூர் போகலாம் போன்ற பச்சப்பு வார்த்தைகளை நம்பும் ஆட்களுக்கு என் மனமார்ந்த வருந்தங்கள்
  இதை போல நானும் ரொம்ப சுலபமாக அண்டார்டிகா போகலாம் உகாண்டா போகலாம் என்று எழுதலாம்

  முதலில் இதை போல எழுதுபவர் இதை போல சென்ஸிடிவ் விழயங்களில் செய்து காட்ட வேண்டும்
  சும்மா ஒத்தைக்கு வரியா என்ற போக்கில் விளம்பரத்துகாக எழுதுவது சரியாக படவில்லை

  நான் மட்டும் இல்லை இந்த திரியில் யாழ்பாணத்தை பற்றி எழுதும் யாரும் தற்போது அங்கு வசிக்கவில்லை
  தவறு புலிகள் மேலும் இலங்கை அரசிடமும் இருக்கிறது

  உடனே புலிகள் சார்பான இணையத்தில் இருந்து நீ சாப்டாயா அவர்கள் சாப்பிடவில்லை என்ற செய்திகளை இணைக்க வேண்டாம்

  http://www.tamilnadutalk.com/portal/index.php?s=6234aa83667fe2642d663560bccdbac2&showtopic=8680