Monday, September 03, 2007

@ 12:23 PM Labels: எழுதியவர்: வரவனையான்


ஹிஹிஹி......

அந்த மெயிலை பார்த்தவுடன் இப்படித்தான் சிரிப்பு வந்துச்சு. ஒரு படத்தில செந்தில் சொல்லுவாறு "அண்ணே எனக்கு வெக்க வெக்கமா வருதுண்ணேனு, அதுக்கு கவுண்டமணி "டே நீ வெட்கப்படுறத பாக்க எனக்கு வெக்கமா இருக்கு"ன்னு. அது மாதிரி இருந்துச்சு அந்த மெயிலு ரூம் போட்டு சிரிச்சா ரூம் பத்தாது அதனால பெரிய மண்டபம் ஒன்னு வாடகைக்கு புடிச்சித்தான் சிரிக்கனும். பின்ன என்னாங்க நான் போடுற மொக்கைக்கும் முரண்டு பிடிச்சுகிட்டு அலையறதுக்கும் காரசாரமா சண்டை போடுறதுக்கும் என்னைய ஒரு கடைசி பெஞ்சு மாணவனாதான் பாப்பாங்கன்னு ( "பார்ப்பார்கள்" வேறைய நினைச்சுகாதிங்க ) நெனச்சுகிட்டு இருந்தா இப்ப இப்படி ஒரு மெயிலு எனக்கு. மனசுகுள்ள சாலமன் பாப்பையா அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை "வெளங்குமாய்யா"ன்னு ஒரு கேலிச்சிரிப்புடன் கேக்குற மாதிரியே இருக்கு. ம்ம் என்ன கந்திரகோளம் ஆகப்போகுதோ தெரியல. உங்க தலையெழுத்து என் தலையெழுத்து எல்லாம் இப்படி இருக்குறப்ப என்னாங்க செய்யமுடியும். இந்த வாரம் நான் நட்சத்திரமாம் அதுக்கு எனக்கு வாய்ப்பளித்து வந்த மெயில்தான் அது. கேட்டவுடன் " என்ன கொடும சரவணன்"ன்னு சொல்ல தோணுதா அதேதான் எனக்கு தோணுச்சு. சரி என்ன பண்ணுறது. அதுல இந்த வாரம் ஆசிரியர் வாராமாம். "கிழிஞ்சது லம்பாடி லுங்கி" ( லம்பாடிகள் என்போர் ஜிப்சிகள், அவர்களின் உடை பல்வேறு ஒட்டுத்துணிகாளால் தைக்கப்பட்டிருக்கும் ) . வாத்தியானுங்கன்னா எனக்கு ஜென்ம பகை, எதோ கூட சேர்ந்து நம்ம ரேஞ்சுக்கு யங்கா இருக்காருன்னுதான் தருமியை கூட ஏத்துகிறேன். எல்லாம் சரி போன வாரமும் அதற்கு முந்தின வாரமும் நட்சத்திரங்களின் பதிவுகள் மிகத்தரமாய் இருந்தது அதற்கிடாய் எழுத முடியுமா என்று தெரியவில்லை கொஞ்சம் நேரம் பின் தங்கி வந்ததால் பழைய கும்மி பதிவு என் முதல் பதிவாய் வந்துவிட்டது. அது சுடுகாடு என்கிற தலைப்பில் , நான் என்னாங்க பண்ணட்டும். அதுவா நடக்குது . போனா வாரம் உண்மையில் போலிதான் நட்சத்திரம் போலி என்கிற பெயரை தலைப்பில் வைத்தாலே அது அதிகம் பார்வையிட்ட பதிவுகளில் இடம்பெற்ற நிகழ்வுகள் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. வெயிலான் என்கிற தரம் வாய்ந்த பதிவருக்கு பின் இந்த வாரம் நான்.

எனக்கு பிடித்தது நகைச்சுவை மட்டுமே , காரணம் முன்னும் இப்பவும் போதுமான சோதனைகளை பார்த்துவிட்டதால். சிரிப்பு ஒன்றுதான் மருந்து இடுக்கண் வருங்கால் மட்டுமல்ல இடுக்கண்ணை கண்டால் கூட சிரிக்கவேண்டும் . சரி ஒரு வாரம் என் பதிவுகளை படிப்பீர்கள் என்று நம்புகிறேன். வாங்க கும்மலாம்
44 மறுமொழிகள்:

 1. 12:51 PM  
  Anonymous said...

  எச்சுஸ் மீ மே ஐ கம் இன் சேட்

 1. /// வெயிலான் என்கிற தரம் வாய்ந்த பதிவருக்கு பின் இந்த வாரம் நான் ///

  வேணாம்! அழு....து....ருவேன்.

 1. வாழ்த்துகள் வரவனையான்.

  கலக்குங்க:)))))

 1. //

  வெயிலான் said...
  /// வெயிலான் என்கிற தரம் வாய்ந்த பதிவருக்கு பின் இந்த வாரம் நான் ///

  வேணாம்! அழு....து....ருவேன். //  சமயங்களில் உண்மை அழவைக்கும் :P

 1. //சாலமன் பாப்பையா அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை "வெளங்குமாய்யா"ன்னு ஒரு கேலிச்சிரிப்புடன் கேக்குற மாதிரியே இருக்கு. //

  செந்தில் நெசமாவே ரூம் போட்டு சிரிக்கனும் போல இருக்கு.

  :)

 1. 1:20 PM  
  நோண்டாத மாமா said...

  "போலின்னு சொல்லாதீர் மூர்த்தி என்று சொல்லுங்கள் "


  ஒரு விளம்பரத்தில் வருமெ
  வெல்வெட் ஷாம்பு என்று கேட்டு வாங்குங்கள்

 1. // "போலின்னு சொல்லாதீர் மூர்த்தி என்று சொல்லுங்கள் "


  ஒரு விளம்பரத்தில் வருமெ
  வெல்வெட் ஷாம்பு என்று கேட்டு வாங்குங்கள் //  கிளம்பிட்டானுங்கய்யா கிளம்பிட்டானுங்க.......

 1. என்ன கொடும சரவணன்...

  Welcome and best wishes for thamizmanam star of the week

 1. //எனக்கு பிடித்தது நகைச்சுவை மட்டுமே //

  உங்ககிட்ட எனக்குப் பிடிச்சதும் அதுதான். அதைத்தான் இங்க சொன்னென்.

 1. //வாத்தியானுங்கன்னா எனக்கு ஜென்மப் பகை//

  அடேய் குருத்துரோகி; பாதகா
  நரகத்திற்குப் போவாய்!

 1. //
  siva gnanamji(#18100882083107547329) said...
  //வாத்தியானுங்கன்னா எனக்கு ஜென்மப் பகை//

  அடேய் குருத்துரோகி; பாதகா
  நரகத்திற்குப் போவாய்! //  ஜாதகத்துல கூட எனக்கு சுக்கிரன் தான் பிடிக்கும்னா பாத்துகுங்களே

 1. ஒன் கொஷ்டின்,

  அப்ப நான் தான் போலி'னு சொல்லறிங்களா....

  ஒரிஜினல் வெயிலான்
  போன வார நட்சத்திரம்

 1. //வெயிலான் said...
  ஒன் கொஷ்டின்,

  அப்ப நான் தான் போலி'னு சொல்லறிங்களா....

  ஒரிஜினல் வெயிலான்
  போன வார நட்சத்திரம் //


  இதுக்கு பேருதான் சொந்த செலவுல சூனியம்* வச்சுகிறதுன்னு சொல்லுவாங்க. மொத பதிவு சூடான இடுகையில வரணும்ன்னு ஒரு வெளம்பர உத்திதான்.


  * சொ செ சூ காப்பி ரைட் என்கிட்டதான் இருக்கு :)))))))))

 1. வாழ்த்துக்கள்.

 1. 2:35 PM  
  வெயிலான் said...

  "போன வாரம் போலி இந்த வாரம் நான்"

  போனா வாரம் உண்மையில் போலிதான் நட்சத்திரம்.

  வெயிலான் என்கிற தரம் வாய்ந்த பதிவருக்கு பின் இந்த வாரம் நான்.

  எதொ உள் குத்து இருக்க மாதிரி தெரியுது....

  வெயிலான்

 1. BEST WISHES VARAVANAI :)

 1. //வெயிலான் On 2:35 PM Wrote
  "போன வாரம் போலி இந்த வாரம் நான்"

  போனா வாரம் உண்மையில் போலிதான் நட்சத்திரம்.

  வெயிலான் என்கிற தரம் வாய்ந்த பதிவருக்கு பின் இந்த வாரம் நான்.

  எதொ உள் குத்து இருக்க மாதிரி தெரியுது....

  வெயிலான் //
  அண்ணே உங்க மேல சத்தியமா உள்குத்துலாம் இல்லிங்க...

  நீங்களா ஏன் சாமி நடுசாமத்துல சுடுகாட்டுக்கு போறேன்னு சொல்லுறீங்க. வேணூம்னா தலைப்பை மாத்தவா

 1. நட்சத்திரமான நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்...:) போட்டோ....நல்ல போட்டோவாக போடுங்கள்..இது சரியில்லை.

 1. 5:50 PM  
  வயிரெரிஞ்சவன் said...

  நீயெல்லாம் நட்சத்திரமா?
  தமிழ்மணம் நல்லா மணக்கும்...
  இன்னும் ஊரில் இருக்கும் எல்லா ரேஸ்கல்களையும் நட்சத்திரமா போடுங்க நாடு உருப்பட்டுடும்.

  சரி சரி...வந்ததுக்கு நானும் வாழ்த்திட்டு போறேன்.

 1. 5:54 PM  
  குயிலான் said...

  அய்யா சரக்கு பறிமாறரவங்களே...
  இன்னிக்கு எனக்கு குயிலு இல்ல...கொஞ்சம் சரக்கு வாங்கி அனுப்பறீங்களா?

 1. 5:55 PM  
  சந்தோசப்பட்டவன் said...

  உங்களுடைய வயது 45 தானே?

 1. 5:57 PM  
  Anonymous said...

  நீ அசத்து மச்சி

 1. //ஜாதகத்துல கூட எனக்கு சுக்கிரன் தான் பிடிக்கும்னா பாத்துகுங்களே//

  ஏப்பா திராவிட குஞ்சு,
  பெரிய பருப்பாட்டம் திராவிட பாசறைல வளந்தவன்னு டயலாக் உட்டுட்டு இப்புடி மல்ட்டிப்புள் பல்டி அடிக்கறீங்களே?

  இன்னொரு அல்லக்கை குஞ்சு

 1. சாரி பாஸ்,
  போன பின்னூட்டத்தை அனானிமஸா ரிலீஸ் பண்ண இயலுமா?

 1. 6:03 PM  
  ரவுல் காஸ்ரோ said...

  தோழர் எர்ணெஸ்டோ எப்போது வருவார் என்று அண்ணன் ஃபிடல் கேட்டு வரச்சொன்னார்.

 1. 6:05 PM  
  ஜூஸஸ் said...

  வருத்தப்பட்டு பின்னூட்டம் போடுபவர்களே...என்னிடத்தில் வாருங்கள் உங்களை ஒரே வாரத்தில் நட்சத்திரமாக்குகிறேன்

 1. 6:07 PM  
  Anonymous said...

  சந்தோசப்பட்டவன் On 5:55 PM Wrote

  சந்தோசப்பட்டவன் or சந்தேகப்பட்டவன்?

 1. 6:13 PM  
  சந்தேகத்துல சந்தோசப்பட்டவன் said...

  // Anonymous said...

  சந்தோசப்பட்டவன் On 5:55 PM Wrote

  சந்தோசப்பட்டவன் or சந்தேகப்பட்டவன்? //

  சந்தேகத்துல ஒரு சந்தோசம் தான்

 1. 6:14 PM  
  ஓசில காஜி கெடச்சவன் said...

  இன்னாப்பா நா மட்டும் ஒத்தையா காஜி ஆடிக்கினு இருக்கேன்? வேற யாருமே இல்லையா?

 1. சட்டைக்கலரும், கண்ணாடியும், ஸ்டைலும் தெலுங்குப்பட கீரோவை ஞாபகப்படுத்துகின்றன.

 1. நடசத்திரப் பதிவாளர், நகைச்சுவையாகவும் கலக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

 1. 6:30 PM  
  Anonymous said...

  //தம்பி On 6:22 PM Wrote

  சட்டைக்கலரும், கண்ணாடியும், ஸ்டைலும் தெலுங்குப்பட கீரோவை ஞாபகப்படுத்துகின்றன.//

  நல்லா யோசிச்சு சொல்லுங்க...கன்னட சூப்பர் ஸ்டாரு சிவராஜ்குமார் மாதிரியில்ல இருக்காரு

 1. //தம்பி On 6:22 PM Wrote

  சட்டைக்கலரும், கண்ணாடியும், ஸ்டைலும் தெலுங்குப்பட கீரோவை ஞாபகப்படுத்துகின்றன.//

  நல்லா யோசிச்சு சொல்லுங்க...கன்னட சூப்பர் ஸ்டாரு சிவராஜ்குமார் மாதிரியில்ல இருக்காரு //  மக்கா பீதிய கெளப்புங்க ரைட்டு ! இப்படி பேதிய கெளப்புனா என்ன அர்த்தம்

 1. 6:37 PM  
  Anonymous said...

  //எல்லாம் சரி போன வாரமும் அதற்கு முந்தின வாரமும் நட்சத்திரங்களின் பதிவுகள் மிகத்தரமாய் இருந்தது //

  எலேய் ஒன்னோட நெஞ்சுல கைய வெச்சி சொல்லு...நீ நெசமாலும் அந்த இடுகையெல்லாத்தியும் படிச்சியா?

 1. வாழ்த்துக்கள் வரவனை!!!

 1. வணக்கம்னே!
  வாழ்த்துகள்!
  வெறும் வாழ்த்துகள் மட்டும் சொல்லிட முடியுமா? உங்களுக்கு வேலையும் இருக்குது..
  நட்சத்திர வாரத்தை முடிங்க சொல்றேன்...
  சூடான இடுகையில எல்லாம் வர வேண்டாம்னே நீங்கதானே நட்சத்திரம்.. எப்பவும் தமிழ்மனத்தில தெரிவீங்க!

  என்னா விளம்பரம்!

 1. நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

 1. வாழ்த்துக்கள் வரவனையான்..

  முக்காவாசி பதிவுகள பின்னூட்டங்கள ரசிக்கிறதுக்காகவே படிப்பேன்னு உண்மைய சொன்னா, அடிக்க வராதீங்க :) ச்சும்மா..

 1. எங்கய்யா புச்சு பதிவுகள்?

  நகைச்சுவையா போட்டு தாக்குவீங்கன்னு பாத்தா, ஒண்ணும் வரலியே ? :)

  எழுதுங்க எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க.

 1. 5:36 PM  
  ரவுல் காஸ்ரோ said...

  தோழர் எர்ணெஸ்டோ இன்றாவது வருவாரா என்று அண்ணன் ஃபிடல் கேஸ்றோ கேட்டு வரச் சொன்னார்...

  மேலும் இப்பதிவு 40ஐ தாண்டாமல் இருப்பதும் அண்ணனுக்கு பிடிக்கவில்லை.

  அதான் 40வது பின்னூட்டம்

 1. 5:53 PM  
  போலி பொட்"டீ"கடை said...

  இந்த முன்றலில் விடலாமா?
  அதான் 41...

 1. நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே..

 1. வாழ்த்துகள் செந்தில் செல்வன்.

  //மனசுகுள்ள சாலமன் பாப்பையா அரைமணி நேரத்துக்கு ஒரு தடவை "வெளங்குமாய்யா"ன்னு ஒரு கேலிச்சிரிப்புடன் கேக்குற மாதிரியே இருக்கு. //

  இதனைப் படிக்கும் போது அருமையாக சிரித்தேன். :-)

  //சிரிப்பு ஒன்றுதான் மருந்து இடுக்கண் வருங்கால் மட்டுமல்ல இடுக்கண்ணை கண்டால் கூட சிரிக்கவேண்டும் . //

  இப்ப என்ன சொல்ல வர்றீங்க? உங்க நட்சத்திர வார இடுகைகளைக் கண்டு சிரிக்கணும்ன்னா சொல்றீங்க? :-)))

 1. செந்தில்.
  ரொம்ப தாமதமா சொல்றதுக்கு மன்னிக்கணும். எங்அக் இருந்தாலும் நல்லா இருங்கடே!!

  சாத்தான்குளத்தான்