Monday, September 03, 2007

@ 12:05 PM Labels: எழுதியவர்: வரவனையான்





பெயர் : வீட்டுல வச்சது "செந்தில்" நானே வச்சுகிட்டது வரவனையான் ( பெயர் காரணம் விரைவில் பதிவாய் )

பிறந்த ஊர் : திண்டுக்கல்

படிப்பு : வாழ்வு நெடுகிலும் அனுபவங்களாய் மற்றும் ஒரு இளங்கலை பட்டம்

தொழில் : இப்போதைக்கு சென்னையில் கடல் மற்றும் வான் வழி ஏற்றுமதிக்குதவும் போக்குவரத்திற்கான தனியார் நிறுவனத்தில் செயல்முறை அலுவல் மேலாண்மை ; மற்றபடி என் வலைப்பக்கத்தினூடாக என்னை அறிந்த நண்பர்கள் அதிர்ச்சியுறும் தொழில்கள் மேற்கொண்டிருக்கிறேன் கடந்த காலத்தில்.

முதலில் எழுதியது : ஒரு முறை அம்புலிமாமா புத்தகத்தில் ஈழவரலாற்றை தவறாகவும் ஈழத்தமிழர்களையும் புலிகளையும் விமர்சித்து தகவல் வெளியிட்டு இருந்ததை கண்டித்து, குழந்தைகள் புத்தகத்தில் இப்படி தவறாக அரசியல் ரீதியான பிரச்சினையை எழுதலாமா என கண்டித்து அந்நிர்வாகத்துக்கு அனுப்பிய 14 பக்க தொலைநகல் . அதன் பின் காவிரி பிரச்சினை குறித்து தினமணி ஏட்டில் வெளிவந்த என் கட்டுரை அவ்வளவே.

இணையத்தில் : யாழ்.கொம் கருத்துக்களமே என் இணைய தாய்வீடு. அங்கு எழுத பழகியவன்


புதிய நண்பர்களை பெறுவதிலும் நட்பில் நேர்மையாக இருப்பதிலும் பிடிக்கும் அரிதான விதயம் இதுதானே :P

அரசியல் : மக்களையும் என் மொழியையும் நேசிக்கும் ஒரு இடதுசாரி நான். பெரியாரிய சிந்தனைப்போக்கு உள்ளவன், திராவிடப்பாசறையை சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்பவன்.

45 மறுமொழிகள்:

 1. நட்சத்திர வாழ்த்துக்கள்!!

 1. 12:21 PM  
  Anonymous said...

  நட்சத்திர வாழ்த்துக்கள்....ஆனா திராவிட பாசறை, பதுங்கு குழின்னெல்லாம் சொல்லணுமா....
  :-)

 1. நட்சத்திர வாழ்த்துக்கள்

 1. நட்சத்திர வாழ்த்துக்கள் :)

 1. நட்சத்திர வாழ்த்துக்கள் :)

 1. நட்சத்திர வாழ்த்துக்கள்!

  என்ன தொழில் 'ரிப்பீட்' ஆன மாதிரி இருக்கு :)

 1. வாழ்த்துக்கள்.

 1. // வெயிலான்
  நட்சத்திர வாழ்த்துக்கள்!

  என்ன தொழில் 'ரிப்பீட்' ஆன மாதிரி இருக்கு :) //

  ம்ம் சேம் பிளட்

  :)))))))))))

  தொழிலை தமிழ்படுத்தியதற்க்கு மிக்க நன்றி வெயிலான்

 1. நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்! சிறப்பான படைப்புகளை தர வாழ்த்துக்கள்!

 1. நம்ம "செட்"டுலே நீங்க ஒருத்தராவது நட்சத்திரம் ஆனீங்களே? :-)))

  வாழ்த்துக்கள்!!!

 1. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

  இடதுசாரி திராவிட பாசறை... அசத்துங்கள்... அணானிமஸ் மற்றம் சாதிய பதுங்குகுழியைவிட இது மேல்தான்.

 1. நட்சத்திர வாழ்த்துக்கள்!

  LOGISTICS- இதை தமிழ்ப்படுத்துங்க சாமி!

 1. //லக்கிலுக் said...
  நம்ம "செட்"டுலே நீங்க ஒருத்தராவது நட்சத்திரம் ஆனீங்களே? :-)))

  வாழ்த்துக்கள்!!! //



  திராவிட ராஸ்கல்களுக்கு கிடைத்த வாய்ப்பை செம்மையாக பயன்படுத்துவோம் உடன்பிறப்பே

 1. // siva gnanamji(#18100882083107547329) said...
  நட்சத்திர வாழ்த்துக்கள்!

  LOGISTICS- இதை தமிழ்ப்படுத்துங்க சாமி //




  LOGISTICS : அனைத்துவகை சரக்குப்போக்குவரத்து

 1. நட்சத்திர வழ்த்துக்கள்

  /செயல்முறை அலுவல் மேலாண்மை/

  இன்னாங்க இப்படின்னா?

 1. // அய்யனார் said...

  /செயல்முறை அலுவல் மேலாண்மை/

  இன்னாங்க இப்படின்னா?



  operation management

 1. 2:04 PM  
  Anonymous said...

  நட்சத்திர வாழ்த்துக்கள்!!!

  gulf-tamilan

 1. வாழ்த்துக்கள் தல!

 1. என்ன தல! நம்ம தொழிலை இப்புடி போட்டு கலாக்கிறாங்ங.

  /// வரவனையான் (பெயர் காரணம் விரைவில் பதிவாய்)///
  அப்ப kuttapusky ன்னா என்னன்னு ஒரு பதிவா?

 1. //வெயிலான் said...
  என்ன தல! நம்ம தொழிலை இப்புடி போட்டு கலாக்கிறாங்ங.//

  நானும் ஒரு தமிழ்க்கிறுக்கன்னு மக்களுக்கு தெரியலை தல




  /// வரவனையான் (பெயர் காரணம் விரைவில் பதிவாய்)///
  அப்ப kuttapusky ன்னா என்னன்னு ஒரு பதிவா//



  ஹிஹி குட்டபுஸ்கி சின்ன வயசில வச்ச பட்டபெயரு, அப்பா மரணிக்கும் வரை நான் இல்லாத பொழுதுகளில் என்னை அப்படித்தான் விளித்துக்கொண்டிருந்தார்.

 1. அய்யா...வரவனை அய்யா நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்...

  பயபுள்ளைங்க இனி ஒருவாரத்துக்கு கும்மியோ கும்மின்னு அடிச்சிட்டு சாவப்போரானுங்க...

  //லக்கிலுக் சைட்...

  நம்ம "செட்"டுலே நீங்க ஒருத்தராவது நட்சத்திரம் ஆனீங்களே? :-)))

  வாழ்த்துக்கள்!!! //

  லக்கி அய்யா...உங்க செட் எது அய்யா? சேவிங்க் செட்டா? :))))))))))

  //வரவனையான் சைட்...

  // சிவ க்னனம்ஜி(#18100882083107547329) சைட்...
  நட்சத்திர வாழ்த்துக்கள்!

  logistics- இதை தமிழ்ப்படுத்துங்க சாமி //




  Logistics : அனைத்துவகை சரக்குப்போக்குவரத்து //

  வெளங்கிரும்...
  நா ஒரு காலத்துல இடுப்ப சுத்தி குவாட்டர் ஓல்ட் மான்க், காஸ்க், மானிட்டர்னு பல வகையான சரக்க வித்துட்டு இருந்தேன் அப்போ அது பேரும் லாஜிஸ்டிக்ஸ் தானா வரவனை அய்யா?

  -தமிழ் அறியாத புள்ள

 1. //வரவனையான் ( பெயர் காரணம் விரைவில் பதிவாய் )//

  எனக்குத்தெரியுமே! :-)

  வரவனையானுக்கு வாழ்த்துக்கள்
  -சித்தூர்க்காரன்.

 1. அட பதிவே இன்னும் படிக்கலை...கமென்டு படிச்சே ஒரு பின்னூட்டம் பதிவ படிச்சிட்டு இன்னொன்னு போடறேன்...

 1. 2:17 PM  
  Anonymous said...

  //மக்களையும் என் மொழியையும் நேசிக்கும் ஒரு இடதுசாரி நான். பெரியாரிய சிந்தனைப்போக்கு உள்ளவன், திராவிடப்பாசறையை சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்பவன்.//

  oru izhavum puriyalai

 1. வாழ்த்துக்கள் வரவனையான்!

 1. இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

  வெற்றியடையட்டும்.

 1. 2:40 PM  
  Anonymous said...

  first of all vaazhthukal

  //மக்களையும் என் மொழியையும் நேசிக்கும் ஒரு இடதுசாரி நான். பெரியாரிய சிந்தனைப்போக்கு உள்ளவன், திராவிடப்பாசறையை சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்பவன்.//

  oru izhavum puriyalai

  purinthu vittathinal thaan

 1. நட்சத்திர வாழ்த்துக்கள் ''தோழரே''.

  ஜிடாக் கில் வருவதே இல்லையே இப்போது? ஏன் :-))

 1. // முத்துகுமரன் said...
  நட்சத்திர வாழ்த்துக்கள் ''தோழரே''.

  ஜிடாக் கில் வருவதே இல்லையே இப்போது? ஏன் :-)) //





  வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழர்.



  மிக மும்முரமாக கடலை சாகுபடி செய்து கொண்டிருப்பதால் உங்களையும் இன்னும் சில மிக முக்கிய தோழர்களையும் பிளாக் செய்து இருக்கிறேன் :P :)))))))))))))



  விரைவில் விடுதலையாவீர்கள் :)))))))))))))))

 1. //லக்கிலுக் said...

  நம்ம "செட்"டுலே நீங்க ஒருத்தராவது நட்சத்திரம் ஆனீங்களே? :-)))

  வாழ்த்துக்கள்!!! //

  லக்கிண்ணா சொன்னதையே நானும் நினைத்தேன் :)

 1. //மிக மும்முரமாக கடலை சாகுபடி செய்து கொண்டிருப்பதால் உங்களையும் இன்னும் சில மிக முக்கிய தோழர்களையும் பிளாக் செய்து இருக்கிறேன் :P :)))))))))))))//

  அதுதானா காரனம்!!

  கடலை கருகிடாமா விவசாயம் பாருங்க தோழரே.

 1. வாழ்த்துக்கள் வரவணையான்.
  1800-ம் JW-மா இந்த வாரத்த கொண்டாடுங்க.

 1. வாழ்த்துக்கள் வரவணையான்.
  1800-ம் JW-மா இந்த வாரத்த கொண்டாடுங்க.

 1. //வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழர்.



  மிக மும்முரமாக கடலை சாகுபடி செய்து கொண்டிருப்பதால் உங்களையும் இன்னும் சில மிக முக்கிய தோழர்களையும் பிளாக் செய்து இருக்கிறேன் :P :)))))))))))))



  விரைவில் விடுதலையாவீர்கள் :)))))))))))))))//

  yov nekkalaa...

  ennamo jattiyoda cellula okkaaththi vechirukka maari illa sollareenga...

  :)))))))))))

 1. வாழ்த்துக்கள் நிறைய எதிர்பார்க்கிறேன்

 1. உடன்பிறப்பே!

  வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் என்று தளபதியின் பத்தாண்டுக்கு முந்தைய காஸ்ட்யூமில் உங்களை காண சிலிர்க்கிறது உடன்பிறப்பே!!!

 1. // முரளி கண்ணன் said...
  வாழ்த்துக்கள் நிறைய எதிர்பார்க்கிறேன் //


  "காதல்" படத்தில் வாய்ப்புக்கேட்டு வரும் ஆட்களிடம் "உன்கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன்னு சொல்லுவார்ல ஒரு உதவி இயக்குநர் அது மாதிரி இருக்கு தலைவா

 1. வாழ்த்துக்கள் வரவணை...

 1. நட்சத்திர வார வாழ்த்துக்கள் வரவனையான்.

 1. வாழ்த்துக்கள் :) :)

  அன்புடன்
  வினையூக்கி
  www.vinaiooki.com

 1. நட்சத்திர வாழ்த்துக்கள், நங்களும் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்:-)

 1. வாழ்த்துக்கள் வரவனை.. இப்பத் தான் நேரம் கிடைச்சது எட்டிப் பார்க்க :(

 1. வாழ்த்துக்கள் செந்தில்! தாமரைக்கண்ணன்
  பெரியார் திராவிடர் கழகம்

 1. நட்சத்திர வாழ்த்துக்கள்!! கலக்குங்க

 1. 7:54 AM  
  VIJI said...

  செந்தில்,
  நட்சத்திர வாழ்த்துக்கள். பதிவுகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
  விஜி