Wednesday, August 01, 2007

@ 11:36 AM எழுதியவர்: வரவனையான்


அதே தி.நகர், அதே ஈகிள் பார், அதே மாம்ஸ் ( :( ) உடன் போய் சேர்ந்தபோது நேரம் ஆகச்சரியாய் 7 மணி 30 நிமிடம் ( அதான் கூடவே ஒன்னு இருக்குல்ல - இது மாம்ஸின் குரல் ) என்னாடா மாப்பிள்ளை கவிதை வாசிக்கனும்னு சொன்ன இங்க கூட்டிவந்திருக்கன்னு லைட்டா ஆரம்பிச்சாரு. "யோவ் மாம்ஸு , இப்பல்லாம் பார்ல கவிதை வாசிக்கிறதான் டிரண்ட் . நம்ம ரவியே சொல்லியிருக்காரு பாருங்க.பயப்படாம வாங்க மாம்ஸ் என்றபடி உள்ளே நுழைகிறோம்.

ஏற்கனவே உள்ளே புல் மப்பில் சுகுணா, பொட்டீ, ரவி, முத்து(தமிழினி) லக்கி கோஷ்டிகள் பெண்டை நிமிர்த்திகொண்டிருக்கிறார்கள் பார்மேனை.

பெண்களுக்கு மேற்சொன்ன ரவுசுபாண்டிகளீன் தொந்திரவு இல்லாமல் ஒரு கண்ணாடி அறை ஒதுக்கப்பட்டு உள்ளே ஹவுஸ் புல்லாகி இருந்தது. உள்ளே மதியும், பொன்ஸும் பாலா மாம்ஸு தலை சொறிஞ்சா கூட புல் டெசிபலில் சிரித்து அவருக்கு திகிலை கெளப்பிக்கொண்டிருந்தனர்.

தனித்தனியே மேசை போடப்பட்டிருக்கும் ஈகிள் பார் இப்போது ஒரு அரங்கம் போல் மாற்றப்பட்டிருகிறது. "மாம்ஸ் மேடைக்கு போகலாம் மொத கவுஜ படிச்சு நீங்கதான் துவங்கி வைக்கனும்" என்று நான் சொல்ல

"என்னாடா இப்படி சொல்லிட்ட நான் எழுதிக்கொண்டு வரலைடா, தீடீர்ன்னு கேட்ட அது என்னாட கந்த சஷ்டி கவசமாடா டக்க்குன்னு சொல்லுறதுக்குன்னு " சொல்ல நான் மனசுக்குள்ள "நீ கவுஜ சொல்லுறதுக்கு அதக்கூட சொல்லிறாலாம்"ன்னு சொல்லியபடி விதி அப்படின்னு மாம்ஸை மேடைக்கு ஏத்திவிட்டேன்.

மேலே ஏறியவுடன் ஒரு ஹஸ்கி வாய்சில் "டேய் மாப்ளே யார்டா இவிங்கெ மொத வரிசைல விஐபி சீட்டுல ஒக்காந்துருகிறது"ன்னாரு

வேற யாருமில்ல மாம்ஸு எல்லாம் பதிப்பகத்து காரங்க ஒங்க கவிதை நல்லாருந்துச்சுன்னா அவங்க பதிப்பகத்துல வெளீயிடுவாங்க, அதோ அவருதான் மேற்கு பதிப்பகம், இவரு வடக்கு , அதோ அவரு தெற்கு அதுக்கு பக்கத்துல தென் கிழக்கு , இவரு வடமேற்கு தென் மேற்கும் வடகிழக்கும் வந்துகிட்டு இருகாங்களாம் " ம்ம் சொல்ல மறந்துட்டேனே அவருதான் அண்டார்டிக்கா பதிப்பகம், பக்கத்துல ஒயிட் சட்டை ஆர்டிக்காம். உங்க கவிதைகளை தொகுப்பா போட எவனுக்கு கொடுத்து வச்சுருக்கோ .' என்று நான் சொல்லிமுடிக்க மாம்ஸ் முகத்தில் கலவர ரேகை.

" டேய் மாப்பு , அதெல்லாம் நல்ல எழுதுறவனுங்களுக்குடா, நம்ம கவிதைதான் நல்லாருக்காதே" என "ரெண்டு" பட வடிவேலு ரேஞ்சுக்கு இறங்கிட்டார்


"மாப்ள, ரெண்டு நாளா வவுத்துபோக்கு; நேத்து ஏய்ன் குடலை நானே கண்ணுல பார்த்தேன் அந்த அளவுக்கு புடுங்கிட்டு போகுது. ந்தா அப்படி போயிட்டு வந்திராவா" ந்னு கெஞ்சல் பார்வை பார்க்க பார்வையாளர் வரிசையில் இருந்து முதல் விசில் அடித்து பொட்டீ கலாய்க்க துவங்க அமைதியா தன் இருக்கையில் போய் அமர்ந்து எழுத துவங்கினார்.

2 நிமிடத்தில் எழுந்த்தவர் மைக் அருகே வந்து லேசாக செருமினார். அப்போது சுகுணா எழுந்து "தயவு செய்து இனிமேலாவது கவிதை எழுதுங்க' என்று சொல்ல பொட்டீ இடைமறித்து "யோவ் அது யாராவது கவுஜ சொன்னா கடைசியா நீ சொல்லுற டயலாக்குயா" இன்னும் அந்தாளு கொட்டாவி கூட விடல அதங்காட்டியுமா ? என்று ரென்சனாக

இதை கவனித்து "பஞ்சாயத்து பண்ண வேண்டிய பஞ்சாயத்துகள்" எங்கிற தலைப்பில் தன் லேப்டாப்பில் இருந்த பைலில் நோட் பண்ணிக்கொண்டார் முத்து(தமிழினி) அதற்கு ஒரு அட்மின் எண் கொடுத்தார் அது 403245 என்று இருந்தது.

அருகில் லக்கி வாயில் ஒரு நிப்பிள் பாக்கு போட்டு அமைதியின் திருவுருவாய் அமர்ந்திருக்கிறார், ஒரே ஒரு மாற்றம் டவுசர் இரும்பில் போட்டு இருக்கிறார். இனி எவன் கவுஜ சொல்லி கிழிக்கிறான்னு பார்ப்போம்னு முடிவுடன் வந்திருப்பார் போலும்.

மாம்ஸ் துவங்குகிறார் :

ஊரோரம் புளிய மரம்
உலுப்பிவிட்டா சல சலங்கும்

ஊரோரம் புளியமரம் (2)
ஊரோரம் புளியமரம் (2)

உலுப்பிவிட்டா சல சலங்கும்

( வாஹ், வாஹ், வாஹ் என்று சிலாகிக்கும் "ஆர்டிக் வெளீட்டகக்காரரை" வினோதமாய் பார்க்கிறார்கள் வலைப்பதிவர்கள் )

நான் பொறந்த மருதையில (2)
நாறப்பய நாட்டமைதான்

நான் பொறந்த மருதையில (3)
நான் பொறந்த மருதையில (3)

நாறப்பய நாட்டமைதான்

என்று படித்து விட்டு கூட்டத்தை நோக்கி ஒரு கலைபெருமிதம் , கவித்திமிர் பொங்க ஒரு பார்வை வீசுகிறார்.

பள்ளி மாணவர்கள் பேய்படம் பார்க்கும் காட்சிபோல் இருக்கிறது அரங்கு.

அமைதியாக இருந்த அரங்கில் மறுபடியும் வாஹ் வாஹ் என்று சிலாகிக்கும் சத்தம் வர "ஆர்டிக் பதிப்பகத்துகாரர் எழுந்து பாலா உங்கள் தொகுப்பை எனக்கே கொடுஙகள் "ஹாரி பாட்டரை விட அதிகம் விற்பனையாகும் என்று நம்புகிறேன் என்று சொல்ல பொட்டீயும் சுகுணா, ரவி மூவரும் "ஏண்டா அவரு பருத்திவீரன் பாட்ட வாசிச்சு காமிச்சா அது உனக்கு ஹாரிபாட்டர் சேல்சை மிஞ்சி விக்குமா? என்று பாய மூனு நாள் பட்டினிக்கு பிறகு பிரியானி கிடைத்தால் ஏற்படும் திருப்தியோடு உள்ளே எண்ற்றி கொடுக்கிறார் முத்து(தமிழினி) .


இவ்வளவு களோபரத்துகிடையேயும் ஒரு சத்தம் தொடர்ந்து கேட்டபடியே இருக்க யாரென்று பார்த்தால் லக்கி . தன் செருப்பை கழட்டி தானே அடித்துக்கொள்கிறார். " வேணாம் லக்கி, விடுங்க என்று தடுத்தாலும் கேட்கவில்லை. ஒரு வழியாய் நிறுத்திய பின் சொல்லிகிறார். இந்த கவுஜனுக்க இம்சை தாங்காமத்தான் இரும்புல டவுசரு போட்டு வந்தேன். இப்போ கவித பாடி அதை கிழிச்சுட்டாங்க. என்ற படி மாம்ஸை கொலைவெறியோடு பார்க்க

மாம்ஸிடம் இருந்து அபாய எச்சரிக்கை சவுண்டு

" மாப்ளே, சாமான் நிக்காலாவ்"


வூடு ஜூட்............


*************************************************************************************
7 மறுமொழிகள்:

லக்கிலுக் said...

பட்டையக் கெளப்புறீயே பரட்டை! :-)))))))))
2:55 PM
வரவனையான் said...

மாம்ஸு இன்னும் படிக்கவில்லை தகவல் கொடுங்கப்பா
4:02 PM
PRINCENRSAMA said...

நாங்க படிச்சிட்டோம்ல...உட்கார்ந்து படிச்சிட்டு தானா சிரிக்க முடியலைய்யா? சுத்தி என்னன்னு பாக்குறாய்ங்க! பிண்றீங்க போங்க!
4:23 PM
நாமக்கல் சிபி said...

இது உண்மையிலயே பா.க.ச வாரம் தான்!

கலக்குங்க மாமு!

ஆமா! என்னையெல்லாம் ஏன் கவியரங்கத்துக்குக் கூப்பிடலை!
6:25 PM
செந்தழல் ரவி said...

ச்ச்ச்ச்சும்ம்மா செம ஹாட்டு மச்சி !!!!!!!

பாலா பட்டறையில் பிஸியாக இருப்பதால் ஆட்டைக்கு வர லேட்டாகும் என்று தெரிகிறது...

நாங்களே பட்டயை கிளப்பலாம் என்றுள்ளோம்...!!!!
6:33 PM
தூயா [Thooya] said...

எப்போதும் தண்ணியா?
6:58 PM
நியாயஸ்தன்(908070605040302010) said...

இன்னிக்கு தமிழ்மணம் சொதப்பிடுச்சு!
எது காரணம்?
கவிஞ்சரின் கவிஜையா?
அல்லது
இந்தப் பதிவா?
அல்லது
இரண்டுமேதானா?
10:06 PM

8 மறுமொழிகள்:

 1. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

  அடங்கவே மாட்டியா நீயி?!

 1. இது ..!

  இது வரவனையான் பதிவு

 1. //நாங்க படிச்சிட்டோம்ல...உட்கார்ந்து படிச்சிட்டு தானா சிரிக்க முடியலைய்யா? சுத்தி என்னன்னு பாக்குறாய்ங்க! பிண்றீங்க போங்க!//

  ஆமப்பா, ஆபிஸ்ல படிச்சிட்டு சிரிச்சா எல்லா பயலுவலும் நம்மள ஒரு மாதிரி பாக்கறானுவ.

 1. what happened to our replies??

 1. dont publish...

  உங்க தமிழ் ஒன்னுமே புரியமாட்டுது

  thamilachi

 1. எல்லாரும் சிரிச்சாங்க நானும் சிரிச்சிட்டேன் அதுவும் பாலபாரதி கிர்ர்ர்ன்னு சொன்னாவே அதிருதில்லா..

  நெருப்பு நரியில் எழுதுதுரு அழகாகத் தெரிகிறது. இப்படியே இருக்கட்டும் நானும் பின்னூங்களை மட்டும் படித்து பின்னூட்டம் போடுகிறேன்

 1. test test test

 1. //தமிழச்சி said...

  dont publish...

  உங்க தமிழ் ஒன்னுமே புரியமாட்டுது

  thamilachi//

  இதை சத்யா பார்க்கலை போல! :P