Saturday, July 21, 2007

@ 12:17 PM எழுதியவர்: வரவனையான்


பதிவர் லக்கி தொடர்ந்து தனிமடலில் கேட்டுக்கொண்டிருப்பதால் கேத்தரீன் கவிதைகள் இங்கு பிரசுரிக்க படுகிறது. கேத்தரீன் கவிதைகள் டவுசரை கிழிப்பதில்லை தாவூ தீர்ப்பதில்லை என்று லக்கி வழங்கிய சான்றிதழால் எமக்கும் மகிழ்ச்சியே.




மிருகம் ஒன்று என்
மீது புணர்ந்தெழுந்து சென்றதை
சொற்களால் புனைந்து நிமிர்ந்த வேளை
நிழலாட்டம் கடந்து நீ
வந்து நின்றாய்; என் செய்வது
சமயங்களில் கவிதைகளும்
பலித்துவிடுகிறது
கனவினைப்போல்...

- கேத்தரீன் பழநியம்மாள்












எங்கோ பார்வை செலுத்தி
சிந்தையாய் இருப்பவன் போல் நடித்து
ஒவ்வோரு குலுங்கலிலும் ஒரங்குலம்
நகர்ந்து காத்திருந்து ஒரு திருப்பதில்
என் மார்பில் இடிக்க முனையும் இந்த பையனுக்கு
தெரியாது இது
"எத்துனையோ பேர் தொட்ட முலையென்று "

- கேத்தரீன் பழநியம்மாள்

( "இடை நில்லா பேருந்து" தொகுப்பிலிருந்து)

6 மறுமொழிகள்:

  1. தோழியின் கவிதைகள் ஒவ்வொன்றும் குருதித்துளியில் தெரிக்கும் வியர்வையைப் போன்றிருக்கிறது.

    நன்றி வரவனை.

    பிகு: என்னுடைய மேட்டரைத் தோழியின் காதில்(மட்டும்) போட்டீரா?

  1. கேத்ரீன் பழனியம்மாள் ஆர்.சி கிறிஸ்டினா, சி.எஸ்.அய்யா, அல்லேலுயாவா? தகவல் ப்ளீஸ்

  1. யாராக இருந்தால் ஒப்புக்கொள்வீர்கள் ?






    :))))))))))))))))))))))

  1. அல்லே...லுயாவா இருந்தா? (ஒண்ணுமில்லை பொண்ணு பார்த்திக்கிட்டிருக்கேன், இந்த மாதிரி கவிதை எழுதமாதிரி விளிம்புநிலைப் பொண்ணா இருந்தா தமிழ்நாட்டு முன்னேற்றத்திற்காகப் பல கவிதைகளை எழுதலாம் அல்லவா?0

  1. மிதக்கும்வெளி ஐயா, ஒரு பொண்ணோட வாழ்க்கைல வீணா விளையாடாதீங்க.. அந்தப் பாவம் உங்களுக்கு வேணாம்.. விட்ருங்க..

  1. 10:40 AM  
    Anonymous said...

    first one, porul pothintha ontu
    nantaga