Tuesday, July 03, 2007

@ 1:33 PM எழுதியவர்: வரவனையான்
ஒரு கோடை மதியம். சுகுணா திவாகரின் அறையில் உணவு முடித்து அமர்ந்திருந்தோம். விஜய்'க்கு கதை வச்சிருக்கியாடா என்று நான் கேட்க மொதல்ல கஞ்சா கருப்புக்கு இருக்கா என்று அந்த தம்பியை சதாய்த்துக்கொண்டிருந்தார் கரண்.

சரி விஜய்க்கு ஒரு கதை இருக்கு சொல்லுறேன். ஒரு கிராமம்'ன்னு ( ஒன் லைன் ஸ்டோரின்னு ஒரு மணி நேரம் சொன்னான்) ஆரம்பிச்சான். கதை சொல்லி முடிச்சதும் சுகுணா புகையை சதுரமாக ( வளையம்லாம் ஓல்டு ஸ்டைல்) விட்ட படி இது ஒரு பிரஞ்ச் பட கதை போல இருக்கேன்னு கேட்க. அவன் திகைத்து "ஒ அப்படியா, சரி இன்டியனைஸ் பண்ணிடேன்னு வச்சுக்கோங்க'ன்னான். அவ்வளவு நேரம் அமைதியா கதை கேட்டுகிட்டு இருந்த நான் "அடப்பாவி இது ஏற்கனவெ தெலுங்குல இருந்து தமிழ்னைஸ் பண்ணி படம் ரீலிஸாகி பெட்டிக்குள்ள போயிருச்சுடா" படம் பேரு வின்னர். என்று சொல்லி சிரித்துக்கொண்டிருந்தோம்.

அந்த தம்பியின் பெயர் கௌதம் ( ராஜா முகமது) சென்னை திரைபடக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறார். தந்தை இவர் பிறந்த சில ஆண்டுகளில் தவறிவிட்டார். இவரையும் இவரின் தங்கையும் தாயார் சித்தாள் வேலை செய்து படிக்க வைத்தார். மேற்படிப்புக்கு சென்னை வந்த இந்த தம்பி பகுதி நேரம் உழைத்துக்கொண்டெ படித்துக்கொண்டிருக்கிறார் , அதில் வரும் வருமானம் அன்றாட செலவுக்கு பயன்படுத்திக்கொள்கிறார். இந்த ஆண்டு தன் கல்லூரிகட்டணத்தை செலுத்த இயலாத காரணத்தால் தன் படிப்பை நிறுத்துவதாக தெரிவித்தார் என்னிடமும் சுகுணா திவாகரிடமும்.

மனம் வருத்தபட்டது. நானோ இல்லை சுகுணாவோ முழுமையாக அவரின் கட்டணத்தை எற்றுக்கொள்ள இயலாத நிலையில் இருப்பதால் . உடன் நினைவுக்கு வந்தவர் செந்தழல் ரவி அவரை தொடர்பு கொண்டு கேட்டேன். ஒரு நொடி கூட யோசிக்கவில்லை "கட்டிவிட்டுறலாங்க கவலை படவேணாம்னு சொல்லுங்க " என்றார்.

ஆனால் ரவி அவர்களையும் முழுமையாக தொல்லை கொடுக்க மனம் வராததால் வாய்ப்புள்ள நண்பர்கள் உதவி செய்ய வேண்டுகிறோம்.


உதவி செய்ய இயன்றவர்கள் கீழ்க்கண்ட ஐசிஐசிஐ வங்கி எண்ணிற்க்கு உங்களால் இயன்ற தொகையை செலுத்த வேண்டுகிறோம்.

000101576090 : சென்னை கிளை Chennai - Cenotaph Road Branch


பெயர் : P.S.Premkumar

தேவைப்படும் தொகை 25,000 ரூபாய்கள்.

11 மறுமொழிகள்:

 1. இந்த முயற்சி வெற்றியடைந்து அவர் தொடர்ந்து கல்வி பயில வாழ்த்துகிறேன்..

 1. Senthil,
  Please provide me branch name of ICICI bank.

  Thanks
  Vijay

 1. 11:42 AM  
  Anonymous said...

  ///தொலைபேசியில் அழையுங்க என்னை...உங்களை பிடிக்க முடியவில்லை போனில்...//

  அன்புடன்
  ரவி

 1. செந்தில்,
  (balaji_ammu@yahoo.com) ஒரு மெயில் தட்டி விடுங்க ! (OR) ஒங்க மெயில் ID கொடுங்க.
  //
  Senthil,
  Please provide me branch name of ICICI bank.
  //
  REPEAT !

  எ.அ.பாலா

 1. எந்த கிளை என்று குறிப்பிட்டுவிட்டேன் நண்பர்களே. இதுவரை உதவிய உறவுகளுக்கு நன்றி.

 1. செந்தழலாருடன் உடனே தொடர்பு கொண்டு இயன்றதைச் செய்கிறேன்.

  தகவலுக்கு நன்றி, நண்பரே!

 1. எவ்வளவு தொகை கட்ட வேணும்னு சொல்லுங்க.சங்கம் சார்பாக உதவ முன் வந்துள்ளோம். என் email முகவரிக்கு விவரத்தை அனுப்பவும்
  ilamurugu at gmail dot com

  For சங்கம்
  இளா

 1. ::Dont Publish::
  இதுவரை எவ்வளவு பணம் வந்து இருக்குன்னு சொன்னீங்கன்னா மீதித்தொகையை நாங்க கட்டிட முயற்சி பண்றோம்

 1. 10:01 AM  
  Anonymous said...

  என்னை தொலைபேசியில் அழைக்கவும்....இதுவரை செலுத்திய பணம் வந்ததா என்ற்ம் தெரிவிக்கவும்...

  மேற்கொண்டு பணம் திரட்ட முயற்சியில் இருக்கிறேன்...

  செந்தழல்

  **** தனிமடல் ****

 1. இதுவரை ரூபாய் 5870 சேர்ந்திருக்கிறது. இன்னும் சில நண்பர்கள் உதவுதாக உறுதியளித்து உள்ளனர்.

 1. தொடர்ந்து உதவி வரும் நல் உள்ளங்களுக்கு நன்றி.