Sunday, July 01, 2007

@ 5:07 PM எழுதியவர்: வரவனையான்

நடந்து கொண்டிருக்கும் பல்வேறு சர்ச்சைகளுக்குடையே ஒரு அழைப்பொன்று கிடைக்க பெற்றேன். இரண்டு நாளைக்கு முன்பே அழைப்பு வந்த பொழுது கொஞம் ஆச்சரியமாய்தான் இருந்தது.சம்பரன்,வருனன்,அகி, என நீளும் அசுரகுல தலைவர்களில் இன்று ஆரியர்களின் கெட்டசொப்பனமாய் இருக்கும் அசுரன் அவர்களை சந்திப்பதற்கான அழைப்பு அது. சுவர்களில் வாட்களும் கத்திகளும் அரிவாள்களும் இரண்டு சம்மட்டிகளூம் நிறைந்திருந்த அறையில் சரியான நேரத்துகு போய் சந்தித்து என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்துவங்கினேன். பெரியார் புரா குறித்தும் இன்னும் ஏனைய புதினங்கள் குறித்தும் கருத்துகளையும் தனது நிலைப்பாட்டினையும்பல புதிய செய்திகளையும் சொன்னார். "திராவிட ராஸ்கல்கள் முன்னணி " என்கிற அமைப்பு முத்து(தமிழினி)யால் ஏற்படுத்தப்பட்ட புறக்காரணிகளை விளக்கினேன். பெயர் குறித்தும் அந்த பெயருள் அடங்கியிருக்கும் உட்பொருள் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார். வலைப்பூக்களை படிக்கும் முதன்மை நபர்களில் அவரும் ஒருவராய் இருப்பது ஆச்சரியம் அளித்தது. இணையம் குறித்தும் இங்கு செயல் படும் திராவிடச்சார்பான தோழர்கள் குறித்தும் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார். 1 மணி நேரம் கடந்து அசுரன் அவர்களிடம் விடைபெற்று வந்தேன். நிறைவான சந்திப்பாய் அது இருந்தது.

புகைப்படம் கீழேPhoto Sharing and Video Hosting at Photobucket

18 மறுமொழிகள்:

 1. வேறென்ன கயமைதான்


  :))))))))))))))))))))

 1. வரவ்ஸ்?

  ஆச்சரியமா இருக்கே!

  இவருதான் அந்த அசுரனா?

  ஐய்யோ! கண்ணைக் கட்டுதே!

 1. ஆசிரியர் வீரமணி தெரியுது..
  பக்கத்தில் நிற்பவர்தான் அசுரனா?
  அப்ப, நீங்க எங்கே?

 1. //ஆசிரியர் வீரமணி தெரியுது..
  பக்கத்தில் நிற்பவர்தான் அசுரனா?
  அப்ப, நீங்க எங்கே?
  //

  ஃபோட்டோ எடுத்தவர்தான் வரவ்ஸ் போல!

  அப்ப வரவணையான் ஃபோட்டோல இருக்க மாட்டாருல்ல!

 1. அசுரன் ஆசிரியர்கிட்ட பவ்யமா நிக்கிறாரு! உங்க கிட்ட மட்டும் சண்டை போடுறார்! என்ன கொடுமை வரவ்ஸ்!:-))

 1. இது என்ன உள்வெளி குத்தா??
  வீரமணியுடன் இருப்பது சாட்ச்சாத் ஸ்ரீஸ்ரீ வரவனையானய சுவாமிகளே

 1. செந்தில்

  ஆவலா வந்தேன்... ஏமாத்திட்டீங்களே...

 1. இப்ப எனக்கு குழம்புது. வரவனை நீங்க அசுரனா சொன்னது வீரமணி அய்யாவைத்தானே. அதாவது, அசுரன் என்ற குறிப்பால் அறியப்பட வேண்டியவராக? சொல்லப்போனால் உண்மையான அசுரனாக?

  Grrrrrr. குழப்பாதீங்கய்யா!

 1. அசுனையா? அசுரர்குலத் தலைவரையல்லவா சந்தித்திருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள் வரவ்ஸ்.

  ஒரு மணி நேர சந்திப்பினைப் பற்றி விரிவான பதிவை எதிர்பார்க்கிறேன்.

 1. 11:04 PM  
  Anonymous said...

  ennaya sibi, antha asuran intha asuran illa.... original asuran aasiriyar!

 1. பல்லேலக்கா...

  கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ஆஞ்சனேயருஅவுத்து போட்டு ஆடனாராம்...

  ஆனா இங்க அசுரர்கள் பவ்யமா இல்ல இருக்காய்ங்க

  ஆமா, ஏனிந்த கொலைவெறி????

 1. :-)))))))))))))

  மற்ற போட்டோக்கள் எங்கே? என் மெயில் ஐடிக்கு பார்வேர்டு செய்ய முடியுமா?

 1. 2:08 PM  
  Anonymous said...

  photo not visible

 1. 6:58 PM  
  நியாயஸ்தன் said...

  முத்துக்குமரன் சொன்னது: வீரமணியுடன் இருப்பது சாட்சாத் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வரவனையானாயன சுவாமிகளே

  படத்தில இருக்கிறவர் முகத்தைப் பார்த்தீகளா...என்ன தேஜஸ்! என்ன புத்திசாலித்தனம்! இவரப்போய் அவரு
  என்கிறீங்களே.....
  இருக்காது....நம்பமுடியவில்லை....

 1. பார்ப்பனருக்கான தலைமையும் தவறுதானே?

  தோழர் செந்தில் அவர்களுக்கு

  மானமிகுதோழர் வீரமணி அவர்களைச் சந்தித்தது அறிந்தோம். மகிழ்ச்சி. ‘மானமிகு தோழர்’ இது வீரமணி அவர்கள் அறிவித்த சொல்தான். இந்த அடைமொழியோடு அவரை அழைத்துப்பாருங்கள். அப்புறம் தெரியும் பார்ப்பனரல்லாத தலைமையின் அருமை. அவரை ‘மாமா’ என்றெல்லாம் விமர்சிப்பது தவறு. கண்டிக்கத்தக்கது. பெண்களைக் கூட்டிக்கொடுப்பவர்களைத்தான் அப்படிச் சொல்வார்கள். வேண்டுமென்றால் ‘அரசியல் மாமா’ என்றுகூடச் சொல்லிருக்கலாம். ஜெயலலிதாவுக்கும் கலைஞருக்கும் ஆட்சி மாறும் நேரமெல்லாம் அரசியல் தரகு வேலை பார்ப்பவரை அப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும். ‘மாமா’ என்றெல்லாம் மொட்டையாக விமர்சிப்பது தவறுதான்.

  கன்னட நடிகன் இராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது ஒரு பெரும் இனப்படுகொலையைத் தடுக்கும் நோக்கோடு வீரப்பனிடம் பேசச்சென்ற தோழர் கொளத்தூர் மணி அவர்களிடம், கருணாநிதி அரசைக் காப்பாற்ற நீங்கள் யார் ? ஜெயலலிதா கோபப்படுகிறார். நீங்கள் காட்டுக்குள் போகக்கூடாது. என மிரட்டினார் அசுரர் குலத்தலைவர். கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் பலரும் கேட்டுக்கொண்டதிற்கிணங்க அரசின் அனுமதிக்கடிதம், ஒப்பந்தம் எதுவும் பெறாமலேயே காட்டுக்குள் சென்றார் கொளத்தூர் மணி. இராஜ்குமார் விடுதலை ஆனார். அதற்காக கருணாநிதி கொளத்தூர் மணியைப் பாராட்டினார். அதைக் காரணம் காட்டி இயக்கத்திலிருந்து விரட்டப்பட்டார் கொளத்தூர் மணி. அ.தி.மு.க வின் பார்ப்பனத் தலைமைக்கு பயந்து, பார்ப்பன ஜெயலலிதாவின் கோபத்திற்கு இடப்பட்ட பலி தான் கொளத்தூர் மணி.

  பார்ப்பன ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திருத்தணியில் பெரியார் சிலை அரசு அதிகாரிகளால் அகற்றப்பட்டது. புதுக்கோட்டையிலும் அகற்றப்பட்டது. தி.க. தோழர்கள் சினந்தெழுந்தார்கள். அசுரகுலத்தலைவரோ ‘ இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டியது நம் பொறுப்பு எனவே தோழர்கள் எந்தப்பிரச்சனையும் செய்யவேண்டாம்’ என அறிக்கை வெளியிட்டார்.

  இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஒரே இரவில் பதவிநீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பினார் பார்ப்பன ஜெயலலிதா. ஓத்து ஊதி அறிக்கை வெளியிட்டார் அரசுகுலத் தலைவர்.

  போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவேன் என்றார் லலிதா. டிரைவர், கண்டக்டரெல்லாம் லோன் போட்டு பஸ் வாங்கி ஓட்டுங்கள் என்றார் அசுரத் தலைவர்.

  கோவில்களின் வருமானத்தில் அறநிலையத்துறை மூலம் பல கல்வி நிறுவனங்கள் உருவாகக் காரணமானவர் பெரியார். அரசு பணத்தில் கோவில்களில் அன்னதானத்திட்டம் கொண்டு வந்தார் லலிதா. எப்படியாவது பெரியார் பல்கலைக்கழகம் பெற்றுத் தாருங்கள் என்று கெஞ்சிக் கிடந்தார் அசுரர் தலைவர்.

  மதம் மாறினால் குற்றமென்ன? என மதமாற்றத்தை வலியுறுத்தி அதை நூலாக வெளியிட்டார் பெரியார். மத மாற்றத் தடைச்சட்டம் கொண்டு வந்தார் லலிதா. அப்போது நடந்த இடைத்தேர்தலில்கூட பார்ப்பன லலிதாவைத்தான் ஆதரித்தார் அசுரகுலத் தலைவர்.

  சாகும்வரை தனித்தமிழ் நாடே என் குறிக்கோள் என முழங்கினார் பெரியார். அப்படியெல்லாம் பெரியார் பேசவில்லை. அவர் இருக்கும் போதே தனித்தமிழ்நாடு கொள்கையை விட்டுவிட்டார் என்றார் தமிழர்தலைவர்.

  காசுமீர்பிரச்சனையைக் காசுமீரிகள் தான் முடிவு செய்யவேண்டுமென்றார் பெரியார். காசுமீரிகளை அழிக்க கார்கில் போருக்கு 5 இலட்சம் நிதி அளித்தார் தோழர் வீரமணி.

  இந்தியா என்று ஒரு நாடு சாஸ்த்திரத்திலோ, புராணத்திலோ, சட்டப்படியோ கூட இல்லை, இந்தியாவுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? எனக் கேட்டுக்கொண்டே உயிர்விட்டார் பெரியார். இந்திய இராணுவத்தோடு கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார் கல்வியாளர் வீரமணி.

  இவ்வாறு பல நூறு எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம். உங்கள் பார்வைக்கு சில.
  பெரியார் கொள்கையை, பெரியார் கொள்கைகளுக்கு அடையாளமான பெரியார் சிலையை, தன்னாலேயே கட்டுப்பாடென்றால் அதற்குப் பெயர் கொளத்தூர் மணி என்றெல்லாம் பாராட்டப்பட்ட ஆற்றல்மிக்க தோழரை, பார்ப்பனத் தலைமைக்குப் பயந்து லலிதாவுக்கு அடிபணிந்து அனைத்தையும் தூக்கி எறிந்து, அனைவரையும் துhக்கி எறிந்து பல்கலைக்கழக அங்கிகாரத்திற்கும், துணைவேந்தர் பதவிக்கும், சுழலும் சிவப்பு விளக்குடன் சைரனுடன் பந்தா பண்ணுவதற்கும் டெல்லியில் அக்ரகார அம்பிகளிடம் பல்லைக்கெஞ்சிக் கொண்டிருக்கும் அசுரகுலத் தலைமையை விட ம.க.இ.க பல மடங்கு பரவாயில்லை.

  ஒரு காலத்தில் அசுரகுலத் தலைவரே என போஸ்டர் அடித்து ஒட்டியவன் தான். எடைக்குஎடை தங்கம் கொடுத்து அழகு பார்த்தவன் தான். இவர் சொல்லுக்காக சிறை சென்றவன் தான் எழுதுகிறேன்.

  1957 இல் பெரியாரின் ஆணையை ஏற்று சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப்பிரிவுகளைக் கொளுத்தி 10000 பேர் கைதானார்கள். காலையில் கைதாகி மாலையில் மாலைமுரசில் செய்தி பார்க்க வெளியே வந்து விடும் போராட்டம் அல்ல, இரண்டாண்டு வரை கடுங்காவல் தண்டனை பெறும் போராட்டம். 18 தோழர்கள் இப்போராட்டத்தில் மரணமடைந்தார்கள். விடுதலை ஆனாலும் கூட பல தோழர்களின் குடும்பங்கள் அனாதை ஆயின. பல குடும்பங்களைக் காணவில்லை. இன்றும்கூட பல ஊர்களில் பிச்சைக்காரர்களாக, அனாதைப் பினங்களாக அந்த சாதி ஒழிப்பு வீரர்கள் பரிதாபமாக அலைகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாக பெரியார் புரா வை நடத்தும் தோழர் வீரமணி அவர்கள் இதே திருச்சி, தஞ்சையில் இன்றும் கை வண்டி இழுத்துப்பிழைக்கும் சாதி ஒழிப்பு வீரனை, மருத்துவ வசதி இல்லாமல் தினம் தினம் செத்துப்பிழைக்கும் சாதி ஒழிப்புப் போராளியை கொஞ்சம் நினைத்தாவது பார்ப்பாரா? என்னவோ பிழைப்பு நடத்தட்டும். பிழைக்கட்டும். எந்தப் பிரதி பலனும் எதிர்பாராமல் கடுமையான போராட்டங்களில் பங்கேற்று குடும்பங்களை – வாழ்க்கையை இழந்து கஞ்சிக்குக்கூட வழியில்லாமல் தெருவில் அலையும் எம் சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு அவர்கள் குடும்பத்தினருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டாமா?

  1958 இல் பெரியாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்க காரணமான பார்ப்பன அரசு வழக்கறிஞரை கொல்லமுயன்று ஆசிட் அடித்த ஆசிட் தியாகராஜனை உங்களுக்கு நினைவிருக்கிறதா தலைவா?

  அந்த தமிழ்நாட்டு பகத்சிங்கின் நண்பன் - பெரியாருக்காக தலைமைறைவாக பல வீரதீரங்களைச் செய்த பீடிசுற்றும் தொழில் செய்துவந்த திருச்சி சின்னச்சாமியை நினைவிருக்கிறதா தலைவா?

  சமீபத்தில் உங்கள் கோட்டையான தஞ்சையில் தஞ்சை அரசு மருத்துவமனையில் மருத்துவ வசதியில்லாமல் செத்து மடிந்தார் சின்னச்சாமி. மாதா கோவிலில் மணியடித்துக் கொண்டு மிகவும் ஏழ்மையான நிலையில் வாழும் கொள்கைக் கோடீஸ்வரன் ஆசிட் தியாகராஜன் தான் மருத்துவ செலவு பார்த்தார் தலைவா!.

  இன்றும் ( 02.07.07 ) திருச்சியில் கைவண்டி இழுத்து நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார் துறையூர் இராமன். அவருக்கு அவருடன் சட்ட எரிப்புப் போரில் பங்கேற்று சிறை சென்ற சாதாரண தோழர்கள் தான் உதவி வருகின்றனர். உங்கள் புராவோ, குருவியோ அதற்குக் கூட பயன்படவில்லையே தலைவா?

  பார்ப்பன லலிதாவுக்கு வீராங்கனை பட்டம் கொடுத்து அழகு பார்த்தாயே தலைவா! உங்கள் கண்ணுக்கு ஆசிட் தியாகராஜனும், சின்னச்சாமியும், இராமனும் இன்னும் இவர்களைப் போன்ற வீரர்களும் கண்ணுக்குத் தெரியவிலையா? இப்போராளிகளைப் பாராட்டி நீங்கள் அசிங்கப்பட வேண்டாம், குறைந்தபட்சம் அவர்களது வீரவரலாற்றை ஏதாவது ஒரு வகையில் பதிவுசெய்தாயா தலைவா? எத்தனை கல்லூரிகள், பள்ளிகள், சொத்துக்கள், வசதிவாய்ப்புக்கள், இணையதளங்கள், அச்சகங்கள், கணினிகள்! என்ன கேடு உங்களுக்கு? 1957 சட்ட எரிப்புப் போராட்டத்தை, போராளிகளின் வரலாற்றை இன்றுவரை ஏன் பதிவு செய்யவில்லை. வருங்கால தலைமுறைக்கு இதைவிட வேறு துரோகம் இருக்கிறதா? வீராங்கனை பட்டம் ஏன் கொடுத்தேன் என்று வீதி வீதியாகக் கூட்டம் போட்டீர்களே, உண்மையான வீரர் வீராங்கனைகள் பற்றி விடுதலையில் கூட விளக்கமாக எழுதாதது ஏன்?

  பொழப்பில்லாமல் பொள்ளாச்சி மனோகரனும், கருமலையப்பனும், பிரகாசும் 1957 போராட்ட வீரர்களைப் படம்பிடித்து, அவர்களது வரலாற்றைப் பதிவு செய்து உங்கள் தஞ்சையில் தான் நூல் வெளியிட்டுள்ளனர். உங்கள் துரோகிகளின் பெரியார் முழக்கம் ஏட்டில் ஆசிட் தியாகராசன் முழங்கியுள்ளார். வாங்கிப்படியுங்கள் என்னைவிட அதிகமாக உங்களுக்கும் கண்ணீர் வரும். சராசரி மனிதனென்றால் கூட கண்ணீர் வர வேண்டும்.

  எத்தனை பார்ப்பான் - பாப்பாத்திகள் உங்கள் நிறுவனங்களால் பயன்பெறுகிறார்கள் தெரியமா? பட்டியல் தரட்டுமா?

  போகட்டும். பார்ப்பான்களும், புதிய பார்ப்பனர்களாகிப் போய்விட்ட உங்கள் முக்கியத் தொண்டரடிப்பொடியாழ்வார்களும் சுருட்டியது போக மிச்சம் மீதி இருந்தால் புராவோ, பருந்தோ எதையோ வைத்து எங்கள் போராளிகளை – சாதி ஒழிப்புப் போராளிகளைக் காப்பாற்றுங்கள். அவர்களது அறிதினும் அறிதான அனுபவங்களை தி.க தோழர்களுக்கு பாடமாக்குங்கள். தமிழர் தலைவர் வாழ்க என்ற வார்த்தையைத் தாண்டி அவர்களுக்கு பழைய வரலாறுகள் எதையாவது சொல்லி வையுங்கள். பல்லாயிரக்கணக்கான உயிர்களின் தியாகத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்கிறீர்கள், பரவாயில்லை. உங்களை இன்னும் செந்தில் போல பலர் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர்களுக்காகவாவது அவர்களது நம்பிக்கைக்காகவாவது எம் மூத்த போராளிகளைக் கொஞ்சம் கவனியுங்கள்.

  இறுதியாக செந்திலுக்கு. ஆசிட் தியாகராஜன் போன்றோரின் உரைகளை www.thozharperiyar.blogspot.com இல் பதிவு செய்துள்ளார்கள். பாருங்கள்.
  மடத்தலைவராகி விட்ட வீரமணிக்காக பெரியாரியலை நோக்கி வந்துகொண்டிருக்கும் ம.க.இ.க வை, பல்வேறு தளங்களில் பெரியாரியலுக்கு ஆதரவாக இருக்கும் ம.க.இ.க தோழர்களை விமர்சனம் செய்ய வேண்டாம். பார்ப்பனத் தலைமை தவறு என்றால், பார்ப்பனருக்கான தலைமையும் தவறுதானே? எமது மானமிகு தோழர் வீரமணி அவர்களது தலைமை பார்ப்பனருக்கான தலைமைதான்.

 1. தெனமும் உங்க பக்கத்துக்கு வந்துட்டுப் போறதே வேலையாப் போச்சி... புகைப்பதை விடமுடியாததப் போல இங்க வருவதையும் விட முடியல

  ஏன்னுதான் தெரியல? என்னமோ போங்க, இந்த மாதிரி உங்க கண்ணுக்குத் தெரியாத ரசிகனுங்க இருக்கிரோம்கிறத மறந்துறாதீங்கப்பு

 1. தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

  தமிழ் ஒலி ஒளி நாடா
  தமிழ் படப்பாடல்
  தமிழ் நகைச்சுவை
  தமிழ் படம்
  தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


  சூரியன் வானொலி.
  தமிழன்
  சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

  ரேடியோ.ஹாப்லாக்.காம்
  ( radio.haplog.com )

  சன் டிவி..............
  கே டிவி..............
  தமிழன்
  உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

  டிவி.ஹாப்லாக்.காம்
  ( Tv.Haplog.Com )
  தமிழ்.ஹப்லாக்.காம்
  (Tamil.Haplog.com)

 1. 4:45 PM  
  Anonymous said...

  சீனிவாச ஐயங்கார் யார்?