Saturday, June 09, 2007

@ 8:48 PM எழுதியவர்: வரவனையான்


தந்தை பெரியார் "மொடெர்ன் ரேசனலிஸ்ட்" என்கிற ஆங்கில பத்திரிக்கை துவங்கியகாலம் அதற்கென தனித்த ஆசிரியர் நியமிக்காத காரணத்தால் குடியரசு ஏட்டின் துணை ஆசிரியர் ஒருவர் அடுத்த நாளுக்கான தலையங்கம் உள்ளிட்ட விடயங்களுக்காக அய்யாவிடம் சென்று "அய்யா நாளைக்கு எதைப்பற்றி தலையங்கம் எழுதுவது" என்று வினவ. கூட்டத்திற்கு அவசரமாக கிளம்பிக்கொண்டிருந்த பெரியார் "இன்றைய இந்து பத்திரிக்கையை எடுத்துக்கோ அவன் எழுதுன தலையங்கத்தை தப்புன்னு எழுது, எதெல்லாம் சரின்னு எழுதிருக்கானோ அதையெல்லாம் தப்புன்னு எழுது " என்றபடி கிளம்பிப்போனார். வெளிப்பார்வைக்கு ஒரு நிகிலிசவாதியின் போக்கினை போல் இது தென்பட்டாலும் இது எவ்வளவு உண்மை என்று காலம் உணர்த்தியபடியே வந்துள்ளது.

அகிலமே யாழ் இடப்பெயர்வு குறித்து கவலையும் வேதனையும் தெரிவித்துக்கொண்டிருந்த வேளையில் சிங்களப்பாட்டாளிகளும் தமிழ்ப்பாட்டாளிவர்க்கமும் இணைந்து ஈழத்தில் பாட்டாளிவர்க்க புரட்சி கொண்டுவரவேண்டும் என கோழி இறகில் காது குடைந்து கொண்டே "ரோசனை" தெரிவித்துக்கொண்டிருந்தார்கள் தோழர்கள் . அதே "மார்க்சிய தோழர்கள்" வீறு கொண்டெழுந்த ஓயாத அலைகளின் போது இந்திய ராணுவம் உடனே அனுப்பபடவேண்டுமென அறிக்கை புயல்களை அள்ளிவிட்டவண்ணம் இருந்தனர். அவர்களில் மிக முக்கியமாய் புலிகளின் வெற்றியை சகிக்காமல் "ஒப்பாரியே" வைத்த பெருமை தோழர் உமாநாத்துக்கே சேரும். மார்க்சியவாதிகளை என்னாதான் அவர்களின் பெயர்களுக்கு பின் இன்னும் சாதி பட்டங்களை விட முடியாமல் சுமந்து திரிந்தாலும் எந்த ஒரு திராவிட இயக் கத்தானும் சாதி ரீதியாய் கருத்து சொல்பவர்கள் என்று கருதுபவதில்லை . அதை பொய்யாக்கி காட்டியவர் தோழர் உமாநாத். அப்போது இதே கருத்து சொன்னவர்கள் மேலும் இருவர் ஒருவர் சனாதான நெறி வளர்க்கும் வெறிகொண்டு திரியும் "சோ"(ம்பேறி ) இன்னோருவர் சந்திரிகாவின் "செல்லம்" "இந்து" ராம்.


தமிழர் தேசம் இதழில் தோழர் தியாகு உமாநாத்க்கு வரலாற்று சிறப்புமிகு பதிலளித்து ஒரு தமிழனின் கடமையை நிறைவேற்றினார்.

இந்து'வின் கொழுப்பு இன்று நேற்று உருவான கொழுப்பல்ல அது ஆயிரமாயிரம் காலமாய் உழைக்காமல் "பருப்பும் நெய்யும்" தின்று வந்த கொழுப்பு. அந்த இந்துவின் ஆசிரியர் ராம். மன்னிக்கவும் இப்படி அறிமுகப்படுத்தினால் உங்களுக்கு தெரியாமல் போகலாம். சந்திரிக்காவின் "அன்பிற்கும்" சிறிலங்காவின் நம்பிக்கைக்கு உரிய, இந்தியாவில் பிறந்தாலும் தன்னை கடவுள் படைத்தது சிறிலங்காவிற்கு ஸேவை செய்யவே என்று நம்பிக்கொண்டிருக்கும் மனிதர் "லங்காரத்னா" எனும் சிறிலங்க தேசிய அரசின் மிக உயர்ந்த விருது பெற்ற "இந்து" ராம். ( மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எச்.எப்.ஐ'யின் பயிற்சியாளர் மற்றும் கட்சியின் உறுப்பினர் )

சரி கழுதை கிடக்கட்டும், என்ன செய்தி என்றால் அது எழுதுகிறது கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியது காவல்துறைத்தலைவர் விக்டர் பெரேரோவின் தன்னிச்சையான நடவடிக்கை என்று . அப்படியே செஞ்சோலை உள்ளிட்ட எல்லாக்கொடுரங்களுக்கும் காரணம் ராணுவம்தானே அன்றி "சமத்து" பிள்ளை மகிந்த அல்ல என்று சொன்னாலும் சொல்லும். ஒரு குறிப்பிட்ட இனத்தவரை இனம் கண்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றும் செயலை நாட்டின் காவல்துறை அதிபரின் தன்னிச்சையான செயலாக "இந்துவின்" வாதத்தின் படி ஏற்றுக்கொண்டாலும், இனவெறி ஒரு நாட்டின் காவல்துறை அதிபருக்கே இந்தளவு இருக்குமானால் காடையர்களின் செயல்களை குற்றம் சொல்லி என்ன பயன்.

கவிஞர். பொதியவெற்பன் கவிதை வரி ஒன்று நினைவுக்கு வருகிறது.

"தமிழா கைகலக்க வேண்டியவனிடம்
கைகுலுக்கிக்கொண்டிருக்கிறாயே"


அங்காளி பங்காளி சண்டைகெல்லாம் அடுத்தவனை கொளுத்தும் தமிழா ! கொளூத்த வேண்டிய இடமே வேறு அல்லவா !

18 மறுமொழிகள்:

 1. பின்னூட்ட உம்மாண்டி பே!!!


  :))))))))))))))))

 1. 11:00 PM  
  Anonymous said...

  தமிழ் அமைப்புக்கள் கொழும்பில் இருந்து தமிழர்களை விரட்டுவதை அவசரப்பட்டு நிறுத்தியது மிகப் பெரிய முட்டாள்தனம். தொடர்ந்து வெளியேற்றி இருந்தால் இலங்கை அரசு உலக நாடுகளின் கடும்கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கும்.

  அமெரிக்காவைத் தொடர்ந்து பல நாடுகள் கண்டித்திருக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. முக்கியமாக இந்தியா, ஐரோப்பிய ஒண்றியம் வாய் திறக்க முன்னர் தமிழர்கள் நீதிமன்றம் சென்றுவிட்டார்கள். சிங்கள நீதீ மன்றம் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னை ஒரு நேர்மையானவர்களாக காட்டிக் கொண்டதுடன், இலங்கை அரசையும் சர்வதேச கண்டனத்தில் இருந்து காப்பாற்றிக்கொண்டது.


  இலங்கை நீதிமன்றம் என்பது இனப்பாரபட்சமற்ற நீதி தேவதையின் ஆலயம்
  என்ற ஒரு பொய்த்தோற்றத்தை உருவாக்க வழக்குத் தொடுத்த தமிழர்களே காரணமாகிவிட்டார்கள்.

  kulakkodan

 1. 11:13 PM  
  நன்கு தெரிந்தவன் said...

  //அந்த இந்துவின் ஆசிரியர் ராம்.//

  அந்த இந்துவின் ஆ(சி)ரியர் ராம்!

  இப்படி இருக்க வேண்டும் !
  :))))))))))))))))))))))))

 1. 11:25 PM  
  உண்மை said...

  இவனுங்களை திருத்த முடியாது, ஒரு வேளை ஆரிய சிங்களனா இருப்பானோ

 1. நண்பா என்னிடம் ம்ட்டும் ஒரு ஆர்.டி எக்ஸ் வெடிகுண்டு இருந்தால், நான் இப்போ சென்னையில்தான் இருக்கேன் அந்த மவுன்ட்ரோடு மகா விஷ்னு அலுவலகத்தில் போட்டுவிட்டு செயிலுக்கு போனாலும் போயிடுவேன்.

 1. 1:16 AM  
  DJ said...

  இப்பதிவுக்கு நன்றி வரவனையான்.

 1. இந்துவின் தலையங்கம் குறித்த விமர்சனம் (புதினம்) ஒன்று. http://www.eelampage.com/?cn=32114

  இந்துவுக்கு இலங்கை அரசிடன் எதுவும் சிறப்பான பாசமோ, பரிவோ இல்லை; மாறாக தமிழ் வெறுப்பே இத்தகைய நிலைப்பாட்டை அது எடுக்கக் காரணம் என்று தோன்றுகிறது. தமிழ்வெறுப்பு என்பது எல்லாம் தளங்களிலும் (உள்நாட்டிலும், இலங்கையிலும், மத்தியிலும்; மார்க்க்சீயர்களிடமும், சங்கரமடத்தவர்களிடமும்) நல்ல பயனளிக்கையில், அதனால் பாராட்டும் விருதும், பணமும் கிடைக்கையில் தமிழ்வெறுப்பு, தமிழின எதிர்ப்புப் பிரச்சாரம் என்பது கரும்பு தின்னக் கிடைத்த கூலி போன்றதுதான்.

  இதில் மாலன் போன்றவர்கள் எல்லோரும் தான் புலிகளை எதிர்க்கிறார்கள்; அதோடு இந்து மொழிவாரி தேசியத்தை ஆதரிக்காது என்பதாலும் அது ஈழப்பிரச்சனையில் புலிக்கு எதிர் நிலை எடுக்கிறது என்று சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். இந்துவின் அரசியல் நிலைப்பாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஒரு பத்திரிக்கையாக அது நடுநிலையாக (அட செய்திகளை முழுவதுமாகவாவது வெளியிட வேண்டாமா?) இருக்கவேண்டியது ஒரு அடிப்படைத் தேவை என்பதைக்கூட இதழியலியளாரான மாலன் உட்பட பலரும் கேள்வி எழுப்புவதில்லை.ஆனால் இந்துவின் நடுநிலை எதனடிப்படையில் இப்படி திரிகிறது அதன் காரணம் என்ன என்பதை உணர்ந்து புரிந்துகொண்டு செயல்படவேண்டிய தேவை எவரையும் விட தமிழர்களுக்கு அதிகமாக இருக்கிறது.


  இந்து அப்படி என்ன செய்தது என்று அறியாமல் கேட்பவர்களுக்கும், அறிந்தே கேட்பவர்களுக்கும் படிக்க நிறையக் கொடுக்கலாம். நான் அவ்வப்போது குறித்துவைத்த சில கீழே.

  http://ntmani.blogspot.com/2003/12/blog-post_01.html
  http://ntmani.blogspot.com/2003/11/i-think-it-is-nonsense-chris-patten.html
  http://ntmani.blogspot.com/2004/02/blog-post_18.html
  http://ntmani.blogspot.com/2004/02/blog-post_12.html
  http://ntmani.blogspot.com/2004/09/blog-post_27.html

 1. 6:09 AM  
  Anonymous said...

  poda mental unnai kolutha vendum.please remove ur photo.if kids happen to see will get scared ;))))))))))

 1. திரு.வரவனையான்,

  இந்து ராம் மற்றும் துக்ளக் சோ-வை சாடுவதை விட்டுவிட்டு நாம் ஆக்கப் பூர்வமாக எதாவது செய்யலாமே?

  ஈழத்தை ஆதரிக்கும் ஊடகத்தை தேர்ந்தெடுத்து ஏன் ஆதரவு தரகூடாது?

  தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நெடுமாறன் அவர்களை ஏன் ஆதரிக்க கூடாது?

  ஈழத்தில் இயங்கும் தமிழ் தேசிய அமைப்பை ஏன் ஆதரிக்கக் கூடாது?

  தமிழர் படும்பாட்டை ஆவணப்படமாய்(ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில்) எடுத்து சர்வதேசத்திற்கு ஏன் பரப்பக் கூடாது?

  சுருங்க சொல்வதென்றால், கூப்பாடு போடாமல் கூடி ஏதாவது செய்யலாமே?

 1. 4:21 PM  
  Anonymous said...

  //கவிஞர். பொதியவெற்பன்//

  இந்த மூஞ்சிக்கு பெயரென்ன?பொதியவெற்பனா?ஏன், பெருங்கள்ளுண்ட பொதியசுமப்பவன்ன்னு பேர் வச்சுரக்கலாமே.இந்த மாதிரி அல்ப்ப மூஞ்சிக்களால் தான் தமிழ்நாடுன்னு சொன்னாலே உலகத்துல எங்க போனாலும் அருவருப்பா பாக்கறாங்க.

 1. This comment has been removed by the author.
 1. 4:55 PM  
  Anonymous said...

  என்ன வரவனையான்,

  நீங்களே பின்னூட்டம் போட்டு நீங்களே நீக்கிடறீங்க?அவ்வளவு கேவலமான பின்னூட்டமா?பின்னூட்டம் மட்டும் தான் கேவலமா?உங்க பதிவுகளூம் தான்;அந்த கண்ராவிகளையும் தூக்கிடுங்களேன்.

 1. FUNNY COMMENTS,,,,gosh i don't get half of em...

 1. 202.153.38.4 என்கிற எண்ணிலிருந்து வரும் ஹைதிராபாத் பரதேசிக்கு பார்த்துகொண்டிருக்கும் வேலை பிடிக்கவில்லை போலிருக்கிறது

 1. 6:18 PM  
  Anonymous said...

  ஆமாங்கய்யா.வேலை பிடிக்கவில்லை அய்யா,வேற வேலை போட்டுக்கொடுங்கய்யா.அதுவும்,உங்களை மாதிரி உழைக்காம காசு பாக்கற மாதிரி வேலையா போட்டுக்கொடுங்கய்யா.

 1. வரவனையான், இப்பதான் உங்க வலைப்பூவுக்கு முதல் முறையா வரேன். ரொம்ப அழகா வடிவமைத்திருக்கீங்க. உங்க பதிவும் அவ்வாறே.

 1. இந்து நாளிதழின் பத்திரிகை தருமத்துக்கு எதிரான போக்கைக் கண்டிப்பதில் நானும் இணைந்து கொள்கிறேன்.

  பல முறை இந்து படிப்பதை விட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தாலும், மற்ற பல பிரச்சனைகளில் அந்த நாளிதழின் விபரங்களுக்காக தொடர்ந்து படிக்கும் நிலை!

  அன்புடன்,

  மா சிவகுமார்

 1. திரு.இவன்

  நீங்கள் சொல்லியுள்ளது நல்ல கருத்து.

  நாம் வசிக்கும் நாடுகளின் இறையாண்மைகளுக்கு துளியேனும் புறம்பாக இல்லாமல், இந்து ராம் போன்றவகள் பற்றி, உண்மையிலேயே " ஒன்றும் தெரியாத " எமது இந்தியத் தமிழர்களுக்கு, யாரென்று படிப்பறிவிக்க (விழிப்புணர்வு)முயற்சிகள் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் உண்டெனில் அதற்கு என் முழு ஆதரவு உண்டு.

  பேச்சுக்கு ஒரு வலைத்தளம் அமைப்பதாய் வைத்துக் கொள்வோம்.


  நிபந்தனைகள்

  1. எந்த சூழலிலும் உணர்ச்சி வசப்பட்டு கட்டுரைகள் எழுதப்பட கூடாது.

  2. திசை திருப்பல்களுக்கு இடம் தரலாகாது.

  எ.கா: பார்ப்பனர்/பிராமணர் சாடல்கள்.

  3.பளீரென்று முகத்தில் அறையும் படி இருக்க வேண்டும் கட்டுரைகள் ஆனால் முதிர்ச்சியுடன் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

  நன்றி.

  vaasus அட் ஜீ மெய்ல்.காம்