Tuesday, June 26, 2007

@ 12:40 PM எழுதியவர்: வரவனையான்

தோழர்களே, இன்று காலை சரியாய் 11.45க்கு ஒரு பொதுத்தொலைபேசியில் இருந்து அழைப்பு. பேசத்துவங்கியவுடன் தாறுமாறான மொழியில் "எங்கடா இருக்க, மருதையன பத்தி பேசுற அளவிற்கு நீ பெரிய இவனா என்று ஏக வசனம். எங்கட இருக்க இடத்த சொல்லுடா வர்ரோம். த்தா கோடம்பாக்கம் பவர்ஹவுஸுக்கு வாடா, இல்லைன்ன தி.நகர் நடேசன் (முதலியார்ன்னு சொல்லலை :)) ) பார்க்குக்கு வாடா. இப்படி அந்த தோழரே ( ! ) பல்வேறு இடங்களை முடிவு செய்து வந்து அடிவாங்கி செல்லும்படி அழைத்தார். அடிப்பதும் அடிவாங்வதும் நமக்கு பழகிய ஒன்று என்றாகிலும் யாரிடம் அடிவாங்குகிறோம் என்று தெரியாமல் அடிவாங்குவதில் சுவாரசியமில்லை என்பதாலும் தன்னை இன்னாரென்று பேசிய நண்பராலும் வெளிபடுத்திக்கொள்ள இயலாமல் போனது வருத்தமே.

என்னை போனில் அழைத்து வசை மாறி பொழிந்த அந்த அநாமதேய நண்பருக்கு, ம.க.இ.க குறித்து போதிய அறிமுகங்களும் இன்னபிறவும் எமக்கு உண்டு. ஒருவேளை என்னை திட்டுவதாயின் கூட நேரில் வந்துதான் திட்டுவார்கள். அடிப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை (அப்படியாயினும் எமக்கு மகிழ்வே) . நீங்கள் ஒரு வேளை "அரசுப்பணியில்" இருப்பவராய் இருக்கலாம் இல்லை மாற்று மார்க்சிய இயக்கத்தோழராய் இருக்கலாம் என்னை மிரட்ட பயன்படுத்திய அந்த முன்று ரூபாயில் ஒரு டீ யாவது குடித்திருக்கலாமே நண்பரே

14 மறுமொழிகள்:

 1. "டேய் ஆம்பிளையா இருந்தா வாடா.... "

  இந்த வார்த்தைகளே அவர் யாரென்று அடையாளபடுத்தியது.

  :)

 1. அட நீங்களாவது சொல்லுங்க நீங்க அடையாளம் கண்டுபிடித்த அந்த தோழர் யார் என்று ;)

 1. 2:06 PM  
  Anonymous said...

  /*என்னை மிரட்ட பயன்படுத்திய அந்த முன்று ரூபாயில் ஒரு டீ யாவது குடித்திருக்கலாமே நண்பரே*/

  :)

 1. அட வாழ்த்துக்கள் நண்பரே பெரியாளா ஆயிட்டீங்க

 1. 2:25 PM  
  நியாயஸ்தன் said...

  //அந்த 3 ரூபாய்க்கு டீ குடிச்சிருக்கலாம்..//

  அப்ப அந்த 3 ரூபா அவரோடது ன்ற?
  அடப் போய்யா.....
  அத்தக் [ரூ.3] கொடுத்தவன் காலைலே
  நாஷ்டாகூடப் பண்ணியிருக்கமாட்டான்யா...

 1. senthil these kind ppl are real Kozaikal. moreover Dravidian Unity is not visible but it is always there! Carry on with your efforts.

 1. 3:51 PM  
  Anonymous said...

  வேண்டும் அசுர குணம்!

  அசுர குணம் கண்டு நடுங்கும்
  'தேவ' குணத்தோரே
  தேவாசுர யுத்தத்தின் போக்கில் கருங்காலிகளின்
  வாள் எங்கே திரும்பும் என்று தெரியுமெமக்கு

  திருவரங்கத்தில் ஈரோட்டுக் கிழவனின்
  மானம் காக்க தெருவிலிறங்காத
  உமது குணம்..
  எமது மக்களின் வாழ்வை கூவிக் கூவி
  அமெரிக்க வெள்ளைப் பார்ப்பனனுக்கு விற்கும்
  உமது குணம்..
  எமது தேசத்தின் வளங்களனைத்தையும்
  அந்நியனுக்கு அடகு வைக்கும்
  உமது குணம்...
  'தேவ'குணம் தானென்று
  நாம் உணர்ந்தேயுள்ளோம்

  அங்கே உடைந்தது சிலையின்
  தலை மட்டுமல்ல
  உமது மஞ்சள் பிம்பமும் சேர்ந்தே தான்...
  கல்லக்குடி நினைவுகள்
  கனவாய் கரைந்தோடி யுகங்கள் போயின
  இன்னுமெதற்கு அந்த மஞ்சள் திரை?
  கிழித்து எரியுங்களதை
  நீங்கள் அம்மணமாய் நிற்பதை உலகு பார்க்கட்டும்

  எமது சூத்திரப் பட்டம் போக்க
  மூத்திரப் பையை கையில் சுமந்து
  தெருவில் அலைந்த பெரியார் எங்கே.,
  தேசத்தை விபச்சாரத்துக்கு அமெரிக்கனுக்கு
  தாரை வார்க்கும் நீ எங்கே?

  ஆம்! எமக்கு அசுர குணம் தான்!
  தேவகுணம் கொண்ட சொறி நாய்களே
  வாரும் மோதிப் பார்த்து விடுவோம்

 1. 3:58 PM  
  Anonymous said...

  சிங்கங்களே!! ஈரோட்டு கண்ணாடியில் உங்கள் முகத்தை பாருங்கள்
  -----------------------------------

  "சிங்கநிகர் தமிழ்கூட்ட"மே
  "அடலேறுகளே"..
  தமிருவருணி ஆற்றில் மிதந்த பிணங்களென்ன
  வடநாட்டானின் வாரிசுகளா?
  போர் என வந்தால்
  முரசொலிந்து முழங்குவீர்கள்
  இதுவரை
  யாரை நோக்கி நீண்டன உங்கள் கூர்வாட்கள்,
  ஈரோட்டு கிழவனின் தலையை
  இந்துவெறியர்கள் உடைத்த போது
  உங்கள் தேரோட்டம் நின்றதா?
  நெஞ்சம் மூர்க்க குணம் கொண்டதா?
  இல்லையே…
  எங்கள் வாழ்வை பறித்த கூட்டத்தின் நாயகன்
  அந்த கொலைகார ராமனின் படத்தை
  எங்கள் தோழர்கள்
  எரித்த போதுதானே பதைத்து வந்தீர்கள்
  தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பாயச் செய்தீர்கள்..
  "இந்துக்களின் தேசிய நாயகன் இராமன்"
  சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்…
  அவன் படத்தை எரித்தால்
  “தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் "வழக்கு இதன் பொருள் என்ன
  பெரியாரின் முகவரியில்
  குடியிருப்பவர்களே கொஞ்சம் சொல்லுங்கள்!!!
  “பெற்றால் திராவிட நாடு
  இல்லாவிட்டால் சுடுகாடு”
  கர்சித்த சிங்கங்களே
  இப்போது எங்கிருந்து முழங்குகிறீர்கள் சுடுகாட்டிலிருந்தா?
  கருத்துவலிமையற்ற சவலைகுழந்தைகளே
  கருங்காலிக்கூட்டமே, முகவரியை மோப்பம் பிடிக்கும்
  ஈனச்செயலை விட்டுவிட்டு
  அந்த
  ஈரோட்டுக் கண்ணாடியிலே
  உங்கள் முகத்தை பாருங்கள்…
  கோழைத்தனத்தை வெளிப்படுத்தும்,
  கோரமாய் பயமுறுத்தும்….

  by stalin from kedayam blog.

 1. 4:19 PM  
  Anonymous said...

  சுரம் தப்பிய முரசொலி
  -----------------------

  உமது முரசொலியால்
  எமது மக்களின் காது கிழிகிறது..

  உமது தலைவனின் கரங்கள்
  பாஜகாவுக்கு பல்லக்குத் தூக்கிச் சிவந்ததா
  மாஞ்சோலை தொழிலாளியின் ரத்தத்தால் சிவந்ததா?
  பட்டிமன்றம் வைப்போம் பாப்பையாவைக் கூப்பிடுங்கள்.
  பெரியார் கனவில் சொன்னாரோ
  மோடியோடு கூடிப்புணர?

  பெரியார் உங்கள் முகவரியல்ல
  உமது தலைவன் உங்கள் நெற்றியில் போட்ட மூவரி!

  நீர் சொன்னது சரிதான்
  கொள்கைக்காகவல்ல பதவிக்காகவே கொலைகள் -
  கண்ணகி நேசரல்லவா?
  அது தான் மதுரை எரிகிறது போலும்

  "தவறான கட்சியின் நல்ல மனிதர்!"
  சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த வாஜ்பாய்க்கு
  பெரியாரைக் காட்டிக் கொடுத்தவரின் சான்றிதழ்!
  வெகுபொருத்தமிப் பொருத்தம்

  அட,
  இன்னுமெதற்கந்த முகமூடி?
  அழுகி நாறும் உங்கள் முகத்தைக் கொஞ்சம் காட்டுங்களேன்..

  from kuralgal blog

 1. 4:42 PM  
  Anonymous said...

  குரல்கள் said...
  -----------------
  ரத்தம் தேடி இங்கு நுழைந்த பாப்பார நரியே,

  எங்களுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், உனக்குப் பாடைகட்ட மட்டும் எப்போதும் கருத்து ஒற்றுமைதான்..

  எனவே.... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..

  அடுத்த முறை வரும் போது குடுமியை மறைத்து கேப் போட்டு வரவும்

  from kuralgal blog.

 1. 5:07 PM  
  Anonymous said...

  பிரக்ஞை என்ற சிற்றிதழ் தொடங்கப்பட்ட போது அதில் ஆசிரியர் குழுவில் இருந்தவர்தான் பின்னர் மக இகவில் வேறொரு பெயரில் இருப்பவர். மருதையன், வல்ல சபேசன், வீராச்சாமி போன்ற பெயர்கள் எதுவாக இருந்தாலும் நபர்(கள்) கொள்கைப் பிடிப்புடன், சமரசம் செய்யாமல்,
  அதிகார வர்க்கம் காட்டும் சலுகைகளுக்கு விலை போகாமல் இருப்பதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.அவ்வாறு நோக்குங்கால் மக இக, அதன் தலைமை அமைப்பான மால்.லெ கட்சி (மாநில சீரமைப்புக் குழு) இன்னும் சமரசம் செய்து கொள்ளமல் இருப்பதையும், தன்னார்வக் குழுகள் மீது விமர்சனம் வைப்பதையும், சிறு பத்திரிகை இலக்கிய-பண்பாட்டுச் சேற்றில் புதைந்து போகாமல்
  இருப்பதையும் அவதானிக்க இயலும். கொள்கைகள் சரியோ, தவறோ, அவ்வமைப்பும்,
  அதன் முண்ணனி அமைப்புகளும் இன்னும் இயங்குகின்றன. இன்னொரு அமைப்பு, கேடயம்,
  மன ஒசை பத்திரிகைகளை நடத்திய அமைப்பு/மாலெ கட்சி 1991ல் சிதறியதையும், அதற்குப்
  பின் அது தேங்கி, குழுக்களாக பிரிந்துவிட்டதையும் கருத்தில் கொள்க.
  இந்த்துவ பாசிசத்தினை தொடர்ந்து 1980களிலிருந்தே மக இக, அதன் அரசியல் கட்சி
  தலைமை தொடர்ந்து தீவிரமாக எதிர்த்து வந்துள்ளது.பாஜக விலிருந்து பிரிந்து தனியாக இந்த்துவ கட்சி கண்ட உமா பாரதியை தன் கட்சி அலுவலகத்தில் வரவேற்ர வீரமணி எங்கே, மருதையன் எங்கே. மோடியின் இனப்படுகொலையினை
  கண்டிக்காமல் பதவியில் கண்ணும் கருத்துமாக, பாஜகவுசன் அரசியல் சல்லாபம் செய்தவர்கள் கருணாநிதி, வைகோ, மற்றும் ராமதாஸ்,ஜெ காட்டுத்தனமாக அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய போது எந்த எதிர்ப்பும் காட்டாமல் மெளனம் காத்த வீரமணியை விட மருதையன்கள் பெரியாரின் உண்மைத் தொண்டர்கள் என்பதில் ஐயமில்லை.

  வரலாறு தெரியாத
  வரவனையான்கள் தாங்கள் முட்டாள்கள் என்பதை எத்தனை முறைதான் நிருபீப்பார்கள்.

  from kedayam blog.

 1. 5:15 PM  
  Anonymous said...

  ம.க.இ.க.வும் பாசிச சங்பரிவாரமும் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள்தான். ம.க.இ.க. தன்னை மட்டுமே புனிதனாக வேடம் தரித்துக் கொண்டு வேறு யாரையும் மருந்துக்கு கூட மதிப்பதே இல்லை. திட்டுவது. அதுவும் அசிங்கமாக திட்டுவது... இழிவுபடுத்துவது.... இதுவெல்லாம் சங்பரிவாரின் கைவந்த கலை. அதைதேயதான் இந்த ம.க.இ.க.வும் செய்து வருகிறது. இந்த முகமூடிகள் பா.ஜ.க.வை எப்படி எதிர்க்கிறார்கள். வெறும் அறிக்கையில்தான். எங்காவது ஒரு இடத்தில் இவர்கள் மக்களை திரட்டியது உண்டா? பா.ஜ.க.வுக்கு எதிராக என்ன அரசியல் போராட்டம் நடத்துறாங்க. கேட்டா எல்லாம் ஓட்டுப் பொறுக்கிகள். ஓட்டைப் பொறுக்காத இந்த பொறுக்கிகள் மட்டும் சங்பரிவாரத்தை தடுத்து நிறுத்திடும் வல்லமை கொண்டதா? இவனுங்க பேச்சை நம்பினால் நம்ம மக்கள் சங்பரிவார முதலை வாயில் சிக்க வேண்டியதுதான். மொத்தத்துல இவனுங்க சேவை எல்லாம் சங்பரிவார வளர்ச்சிக்குத்தனே ஒழிய வேறில்லை.

 1. இந்த மலச்சிக்கல் பிடித்தவர்கள் வார்த்தைகளால் விடிவு காண்கிறார்கள்.
  கண்டபின் மனச்சிக்கல்களுக்கு விடிவு காணட்டும்.
  சேறு வாரி இறைப்பதனால் சிங்காரவேலர்களாகவோ,ஜீவாக்களாகவோ ஆகிவிட முடியாது.குறைகூற உரிமை உண்டு அது குமட்டும் சாணிகளாக இருக்கக் கூடாது.உண்மை தெரிந்து,தெளிந்த வார்த்தைகளால் சொல்லப் பட வேண்டும்.

 1. இங்கு கடை மூடப்படுகிறது. தோழர்களை கேள்வி கேட்க விளையும் தோழர்கள், அனானிகள் மற்றும் பார்ப்புகள் அங்கு சென்று கேட்கவும்.