Monday, June 25, 2007

@ 11:25 AM எழுதியவர்: வரவனையான்

இருக்கும் மார்க்சியர்களில் கொஞ்சம் தீவிரமாக உண்மையான மக்கள் பணியில் இருப்பவர்கள் ம.க.இ.க தோழர்கள் என்பதில் நமக்கு மாற்று கருத்துகிடையாது. அதே வேளை உலகத்தில் யாரையுமே ஒப்புக்கொள்ளமாட்டோம் ,நாங்கதான் பெரிய புடுங்கி என்றும் பிற இயக்கத்தலைவர்களையும்,இயக்கங்களையும் வாய்க்கு வந்தபடி ஏசுவதுதான் புதிய ஜனநாயகபூர்வமான (அ )!!! புரட்சிகர வழிமுறை என்று கொண்டிருப்பது இலேசான புன்னகையைமட்டுமே வரவழைக்கிறது. இத்தனையாண்டுகாலத்தில் 2000க்கு பிறகே பார்ப்பனியம் என்கிற பதத்தை பிரயோகிக்க துவங்கியதும் கட்சியின் தலைமைப்பொறுப்பில் பார்ப்பனர் இருப்பதும் ஊரரியாத ரகசியங்களா என்ன?

இருந்தும் தோழர்களே, உங்களின் பன்னாட்டு நிறுவன எதிர்ப்பிலும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் "சந்தேகம்" கொள்ளாத தோழர்கள் பெரியாரிய இயக்கங்களிலும் உண்டு. "மாமா" ஆசிரியர் வீரமணியா இல்லை தோழர். மருதையனா என்பது தேவையில்லாத விவாதம்.

44 மறுமொழிகள்:

 1. //தலைமைப்பொறுப்பில் பார்ப்பனர் இருப்பதும் ஊரரியாத ரகசியங்களா என்ன?
  //
  தலை நெஜமாவா?

 1. வழக்கம் போல சூப்பர் பஞ்ச்! :-)))))

 1. திரு. வரவணையான் அவர்களே,

  ம.க.இ.க பார்பனீயம் என்ற பதத்தை 2000த்திற்கு பிறகுதான் பயன்படுத்த தொடங்கியது என்று சொல்லும் உங்களுடைய அறிவை பார்த்தால் எங்களுக்கு சிரிப்புதான் வருகிறது. 1990ல் வந்த இதழ்கள் வேண்டுமா? அதற்கு முன்பு உள்ள இதழ்கள் வேண்டுமா? படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...உங்கள் வரையறையின்படி யார் பார்ப்பனர் என்று தெரிந்து கொள்ளலாமா? பார்ப்பனீயத்தை கடைபிடிக்கும் கருப்பு பார்ப்பனர்களை பற்றி உங்கள் கருத்து என்ன?
  ஸ்டாலின்

 1. 12:48 PM  
  Anonymous said...

  தமிழர் மாமா பட்டம் பெரிய தாடிக்காரருக்கு மட்டுமே உரியது;தலைகீழா நின்னாலும்,மஞ்ச துண்டோ,அல்லது மானமிகுவோ அதை பறிக்க முடியாது.

 1. 1:46 PM  
  Anonymous said...

  வரவனை ம.க.இ.க. மார்க்சிய இயக்கமா? அத கலை. இலக்கிய இயக்கம்னுதானே சொல்றாங்கோ...... அப்புறம் புரட்சி பண்ணப் போறாங்களா? ச்சே... ச்சோ... கட்சி தலைமையில பாப்பானா? இன்னா கட்சிபா அது? வரவனை கொஞ்சம்கூட புரியல....

 1. 1:50 PM  
  Anonymous said...

  ம.க.இ.க. இதல்லாம் சி.ஐ.ஏ. ஏஜன்டுங்கப்பா........ இராமாயணம் பேசிக்குனே இராமர் கோயில இடிக்குறா மாதிரி.... இவனுங்க போலி போல்பாட்டிஸ்டுங்க...

 1. இந்தியச் சூழலில் விமர்சனங்களையும் தாண்டி அர்ப்பணிப்பும் நேர்மையும் உடைய இயக்கம் நக்சல்பாரி இயக்கம். தமிழகத்தில் இயங்கும் நக்சல்பாரி அமைப்புகளில் 'இயங்கும்' அமைப்பாக ம.க.இ.க மட்டுமே இருக்கிறது. ம.க.இ.கவின் தலைமையில் பார்ப்பன்ர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமே அவர்களைப் புறக்கணிப்பதற்குப் போதுமான காரணங்களில்லை. மேலும் 'புடுங்கி' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித் தோழர்களை அவமானப்படுத்தியிருப்பதைக் கண்டிக்கிறேன். நீங்களும் நானும் பிடுங்காத பலவற்றை ம.க.இ.க பிடுங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. 2000க்குப் பிறகுதான் ம.க.இ.க 'பார்ப்பனீயம்' என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியது என்று வரலாறு தெரியாமல் உளறுவதுதான் அபத்தமாக இருக்கிறது.

 1. 3:00 PM  
  Anonymous said...

  //மேலும் 'புடுங்கி' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித் தோழர்களை அவமானப்படுத்தியிருப்பதைக் கண்டிக்கிறேன். //

  தோ பார்றா. புடுங்கின்னு சொன்னது குத்தம்னுட்டாரு. அண்ணே வாங்கண்ணே. கவிதைலயும், கட்டுரைலயும் நீ பேசாத பேச்சாண்ணே. என்னமோ ஊர்ல இருக்கிற கெட்ட வார்த்தை எல்லாம் எனக்குதான் தெரியும்னு எத்தனை ஆட்டம் ஆடியிருக்கீங்க.

  சிவாஜி குப்பை. பெரியார் குப்பை. அவன் மோசம். இவன் கெட்டவன். அது நொல்லை. இது ரொம்ப கேவலம். அவன் பதிவு மொக்கை. இவன் பதிவு டப்பா. நான்தான் உலக மகா அறிவாளின்னு எத்தனை ஆட்டம் ஆடியிருக்கீங்க. புடுங்கின்னு சொன்னது உனக்கு மோசமா போய்டுச்சு இல்லை.

  அது என்னண்ணா உனக்கு ஒரு நியாயம்? ஊருக்கு ஒரு நியாயமாண்ணா?

  ஊரையே நீ குத்தம் சொன்ன. உங்க கூட்டத்தை ஒருத்தர் சொன்னவுடனே உனக்கு எரியுதோ. நீ விதைச்ச. உனக்கே விளையுது.

 1. //மிதக்கும்வெளி சைட்...
  இந்தியச் சூழலில் விமர்சனங்களையும் தாண்டி அர்ப்பணிப்பும் நேர்மையும் உடைய இயக்கம் நக்சல்பாரி இயக்கம். தமிழகத்தில் இயங்கும் நக்சல்பாரி அமைப்புகளில் 'இயங்கும்' அமைப்பாக ம.க.இ.க மட்டுமே இருக்கிறது. ம.க.இ.கவின் தலைமையில் பார்ப்பன்ர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமே அவர்களைப் புறக்கணிப்பதற்குப் போதுமான காரணங்களில்லை. மேலும் 'புடுங்கி' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தித் தோழர்களை அவமானப்படுத்தியிருப்பதைக் கண்டிக்கிறேன். நீங்களும் நானும் பிடுங்காத பலவற்றை ம.க.இ.க பிடுங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. 2000க்குப் பிறகுதான் ம.க.இ.க 'பார்ப்பனீயம்' என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியது என்று வரலாறு தெரியாமல் உளறுவதுதான் அபத்தமாக இருக்கிறது. //

  வெளியே மிதக்கும் அய்யா, நக்சல்பரி இயக்கங்களின் அர்ப்பணிப்பு உணர்வைய் குறைத்தோ மக்களுக்காக அவை போராட தயங்குகிறது என்று எங்கும் குறிப்பிடவில்லை அய்யா. அதில் எமக்கு சந்தேகமோ அவநம்பிக்கையோ இல்லை அய்யா. ம.க.இ.க-வில் பார்ப்பனர் தலைமை பொறுப்பில் இருப்பதையும் ஒரு செய்தியாகத்தான் அய்யா சொல்லியிருக்கிறேன். ( அடித்தட்டு மக்களின் பெயரை புனைப்பெயராக கொண்டிருப்பதையோ கூட சொல்லவும் இல்லை - "வாலேசு அய்யர்") நீங்கள் பிடுங்காதது எப்படி உங்களுக்கு தெரிந்திருக்கிறதோ அதுபோல நான் புடுங்கியது எதுன்னு என் "சிற்றறிவுக்கு" எட்டிய வரை தெரியும் அய்யா. ஒரு இயக்கத்தலைவரை "மாமா"ன்னு சொல்லுவது சரின்னா புடுங்கி ஒன்னும் தப்பில்லை அய்யா. பிஜேபி +ஜெயா கூட்டணிக்கு பின் பார்ப்பனிய பயங்கரவாதம் சொல்லாடல்கள் புழக்கத்தில் வந்ததுதான் அய்யா எனக்கு தெரியும். நீங்க "சின்னபிள்ளையா" இருக்கும்போதே அம்புலிமாமாக்கு பதிலா புதிய கலாச்சாரம் படிச்சது எனக்கு தெரியாம போச்சே அய்யா. நேத்து சரக்கடிக்கல அய்யா இன்னைக்கு அடிக்க வச்சிட்டிங்களே அய்யா....

 1. என்னய்யா நடக்குது இங்க? பத்தவச்சுடீங்களா?

 1. 3:44 PM  
  Anonymous said...

  // ஒரு இயக்கத்தலைவரை "மாமா"ன்னு சொல்லுவது சரின்னா புடுங்கி ஒன்னும் தப்பில்லை அய்யா//

  அப்போ ஒரு இயக்கத் தலைவரான ஜெயலலிதா, நரேந்திர மோடி, வாஜ்பாய், அத்வானி, கோல்வால்கர், ஹெட்கேவார், சாவர்கர் etc., etc.,

  என்று மற்ற எல்லோரையும் இதை விட கடுமையாக விமர்சித்த போது செந்திலுக்கு ஏன் கோபம் வரவில்லை? ஏன் கருணாநிதியையும் வீரமனியையும் விமர்சிக்கும் போது மட்டும் கோபம் வருகிறது? அப்படியானால் மேலே சொன்னவர்களுக்கும் பின்னிருவருக்குமான உங்கள் அளவுகோல் வேறு வேறு அல்லவா? உங்களின் அந்த அனுகுமுறை தவறு என்பதைத் தானே இப்போது விமர்சனமாக அசுரன் முன்வைத்தார். அந்த விமர்சனத்தை நீங்கள் எதிர் கொள்ளும் முறை சரியா என்பதை உங்கள் அனுமானத்திற்கே விடுகிறேன்.

 1. //அப்போ ஒரு இயக்கத் தலைவரான ஜெயலலிதா, நரேந்திர மோடி, வாஜ்பாய், அத்வானி, கோல்வால்கர், ஹெட்கேவார், சாவர்கர் etc., etc.,

  என்று மற்ற எல்லோரையும் இதை விட கடுமையாக விமர்சித்த போது செந்திலுக்கு ஏன் கோபம் வரவில்லை? ஏன் கருணாநிதியையும் வீரமனியையும் விமர்சிக்கும் போது மட்டும் கோபம் வருகிறது? அப்படியானால் மேலே சொன்னவர்களுக்கும் பின்னிருவருக்குமான உங்கள் அளவுகோல் வேறு வேறு அல்லவா? உங்களின் அந்த அனுகுமுறை தவறு என்பதைத் தானே இப்போது விமர்சனமாக அசுரன் முன்வைத்தார். அந்த விமர்சனத்தை நீங்கள் எதிர் கொள்ளும் முறை சரியா என்பதை உங்கள் அனுமானத்திற்கே விடுகிறேன்.//


  நான் திராவிட இயக்கத்தை சார்ந்தவன். மார்க்சிய தோழர்களை சகா'வாக எண்ணுபவன். ஆகையால் அவர்கள் எங்கள் இயக்கங்களை சார்ந்தவர்களை விமர்சிக்கும் போது கேள்வி கேட்க உரிமையுள்ளது. ஆனால் மேற்சொன்ன கோல்வால்கர் இன்னபிற பிறவிகளை அவர் சவுக்கால் விளாசும் போது "ப்போடு.. இன்னும் ரெண்டு அடி" என்றே சொல்ல கடமைப்பட்டவன்.

 1. இந்த நாட்டினுடைய இயற்கை வளத்தையும் மனித வளத்தையும் பன்னாட்டு ஏகாதிபத்தியங்கள் சூறையாட வரும் போது அதற்கு தரகு வேலை பார்க்கும் ஒருவரை 'மாமா' என்று அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது... அதிலும் குறிப்பாக எத்தனையோ கல்லடிகளுக்கும் சொல்லடிகளுக்கும் இடையில் பெரியார் அரும்பாடுபட்டு கட்டிய் மாபெரும் இயக்கத்தினுடைய தலைமை பொறுப்பில் இருப்பவர் இந்த காரியத்தை செய்கிறார் என்றால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்... எந்த ஒரு மனிதனையும் நடைமுறையிலிருந்து பரிசீலிக்க வேண்டும், தோழர் மருதையனுடைய நடைமுறையில் ஏதேனும் விமர்சனம் இருந்தால் சொல்லுங்கள், அவரும் விமர்சனத்துக்கு உட்பட்டவரே அப்படியில்லாமல் இப்படி மாமா வேலை பார்க்கும் வீரமனியை பிறப்பால் சூத்திரன் என்று ஏற்றுக்கொள்வதும் அவர் செய்கின்ற கீழான பனியை தவிர்த்துவிட்டு ம.க.இ.க வின் தலைமையிலிருப்பவர் பார்ப்பனராம் என்று தமிழ் புலனாய்வு பத்திரிக்கைகள் போல லொட்டையாக கிசுகிசு பானியில் பேசுவதும் என்ன வகைப்பட்டது?

 1. //மகேந்திரன்.பெ said...
  என்னய்யா நடக்குது இங்க? பத்தவச்சுடீங்களா? //


  எங்க... பத்தவைக்க விடமாட்டிங்கிறாரு அப்துல் கலாம்


  :)))))))))))))))))))))))))))))

 1. 4:56 PM  
  Anonymous said...

  //நான் திராவிட இயக்கத்தை சார்ந்தவன். மார்க்சிய தோழர்களை சகா'வாக எண்ணுபவன். ஆகையால் அவர்கள் எங்கள் இயக்கங்களை சார்ந்தவர்களை விமர்சிக்கும் போது கேள்வி கேட்க உரிமையுள்ளது.//

  நிச்சயமாக நீங்கள் கேள்வி கேட்க உரிமை உள்ளது தான். அதை மறுக்க வில்லை. ஆனால் நீங்கள் செய்தது என்ன? நக்கீரன்/ஜூவி பாணியில் கிசு கிசு தரத்தில் ம.க.இ.க தலைமை பற்றிய திசை திருப்பல் தானே?

  நீங்கள் அப்படி பிறப்பால் பார்ப்பனனாய் இருந்தாலே அது சர்ச்சைக்கும் சந்தேகத்துக்கும் உரியது என்று சொல்வீர்களானால் உங்களுக்கும் பறையனாய்ப் பிறந்தாலே தீண்டத்தகாதவன் என்று சொல்லும் மனுவாதிக்கும் என்ன வித்தியாசம்?

  அவருடைய நடைமுறையில்/ எதார்த்தத்தில் அவருடைய செயல்பாட்டில்/ பார்ப்பனிய எதிர்ப்பில் சந்தேகம் இருந்திருந்தால் அதைத் தகுந்த தரவுகளோடு முன்வைத்திருக்கலாமே செந்தில்?

  மாறாக நீங்கள் உங்கள் பதிவில் சொன்ன "2000க்குப் பின்னே பார்ப்பனியம் பற்றிய பிரச்சினையை ம.க.இ.க பேச ஆரம்பித்தது" என்னும் அர்த்தம் வரும் வகையில் சொல்லி இருந்ததும் தவறானது என்று பின்னூட்டங்களில் நன்பர்கள் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள்.. அதற்கும் உங்கள் பதில் நழுவல் தொனியில் தானே இருக்கிறது?

  நீங்கள் திராவிட இயக்க தொண்டராகத் தெரிவதை விட திராவிட இயக்கத் தலைவர்களின் ரசிகராகத் தான் தோற்றம் தருகிறீர்கள் - இது தனிப்பட்ட முறையில் எனக்கு கடும் ஏமாற்றத்தை அளிக்கிறது

  உங்களின் இந்தப் போக்கு தி.மு.க & கோ வில் நடந்த பங்காளிச் சண்டையில் மூன்று பிணங்கள் விழுந்து அதைப் புதைக்கும் முன்னே "யோக்கியவான் எடுக்கட்டும் முதல் கல்லை" என்று துருத்திக் கொண்டு முன் வந்தது..

  பெரியார் சிலை உடைப்புக்குப் பின் போர்குணத்துடன் எதிர்வினையாற்றியது நீங்கள் இங்கே கிசு கிசு கிளப்பிய பார்ப்பனத் தலைமை கொண்ட ம.க.இ.க தோழர்களும் பெரியார் இயக்கத் தோழர்களும் தான் களத்தில் இறங்கினார்கள் என்பது மறந்து விட்டதா?

  இப்போது மாமா என்று விமர்சனம் செய்தவுடன் இந்த பகுத்தறிவு, சுயமரியாதை சிங்கங்கள் பதுங்கிய புதர் எது?

  பெரியாரின் மானம் காக்க களத்தில் இறங்கத் திரானியில்லாத வீரமணி, வைக்கோ, கருணாநிதி, ராமதாஸ் இவர்களுக்கு அவர் பெயரை உச்சரித்து அரசியல் வியாபாரம் நடத்தும் உரிமை மட்டும் தான் உண்டா? அதையும் நீங்கள் ரசிப்பீர்களா?

  இப்போதும் வீரமணி & கோ சொந்த நாட்டு வளங்களை அந்நியனுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் காரியத்தில் தானே இறங்கியுள்ளார்.. இதற்கு பெரியாரின் பெயரை வேறு பிராண்டு நேமாக பயன்படுத்தும் காவாளித்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.. இதை மறுக்க முடியுமா உங்களால்?

  ஆம் எனில் இது சம்பந்தமாக எழுதப்பட்டுள்ள "பெரியார் புரா" பதிவில் நடந்த விவாதங்களின் போது ஏன் நீங்கள் குறுக்கிடவில்லை?

  இப்போது நடக்கும் இந்த விவாதங்களின் காரணமாய் பார்ப்புகளுக்கு கொண்டாட்டமாய்த் தான் இருக்கப் போகிறது....

  ஆனாலும் இந்த தேவாசுர யுத்தத்தில் "தேவர்" களுக்கு சரியான, சமரசமில்லாத, அசுர குணம் கொண்ட எதிரி யார் என்பதை தெளிவாகவே காட்டும்

 1. 5:03 PM  
  Anonymous said...

  போங்கடா போங்க...பொசகெட்ட புடுங்கிகளா...பொழப்ப பாருங்க...இந்தியாவுல கம்மூனிசம்ங்கறதே கெடியாது. அவனவன் நேரத்துக்கு தகுந்தா மாதிரி லெனின், கால் மாக்ஸு, ஸ்டாலின், மா சே துங், சே குவாரான்னு டைம் பாஸ் பண்ணிக்கினு இருக்கானுங்க...இதுல வெட்டியா நீங்க ஏண்டாப்பா அடிச்சிக்கிறீங்க?

  கொஞ்ச நாள் நீஸ் பேப்பர்ல பேர் வர்லன்னு சங்கரய்யர் எதுனா போராட்டம்னு சொல்ல சொல்லோ கேரளால நம்பூதிரி "பாடு"ங்கோ குதிக்கும் ஒடனே ஒத்து ஊத "இந்து" ராம் அய்யர் எதுனா எய்துவார் ஒலகத்துலயே ஜனதா விமுக்தி பெரமுனா தான் சரியான கம்முனாட்டி இயக்கம்னு...கம்மூனிசத்தனால இந்தியாவுல எந்த "***" மயிரையும் ஆட்ட இயலாது எண்டு முடிக்கிறோம் அய்யா.

 1. நண்பா,

  கடந்தாண்ட அய்ந்தாண்டுகளில் கருணாநிதியும் திமுகவினரும் தோழர்.வீரமணியை விமர்சித்ததே இல்லையா நண்பா? அப்புறம் என்னை ஏகவசனத்தில் திட்டியதற்கு மேலே உண்மைத்தமிழன் என்று போடமறந்துவிட்டீர்கள் ((--

 1. அப்புறம் அப்துல்கலாம் அடுப்பு பத்தவச்ச கதையை எங்கேயும் சொல்லிடாதீங்க நண்பா!

 1. //அப்புறம் என்னை ஏகவசனத்தில் திட்டியதற்கு மேலே உண்மைத்தமிழன் என்று போடமறந்துவிட்டீர்கள் ((--//

  சாமிகளா.. இதென்ன புதுக் கதையா இருக்கு? நீங்க ரெண்டு பேர் அடிக்கிற மாதிரி அடிச்சுக்கிறது.. கொஞ்சுற மாதிரி கொஞ்சுறதுக்கு நான்தானா இடைல கிடைச்சேன்.. நல்லாயிருக்காங்கப்பா.. நல்லாயிருங்க..

 1. 9:53 PM  
  Anonymous said...

  பதிவர்களே உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி!

  மருதையன் பார்ப்பனரா என்கிற விவாதம் நடக்கிறது
  ஆனால் அதைவிட ஒரு ஸ்பெக்ஷலான சூப்பர் நியூசை
  நான் இங்கே சொல்லப்போகிறேன்..............  நம்ம அசுரன் அய்யாவே சாதுவான......  பார்ப்பனர் தானுங்கோ

 1. 10:12 PM  
  Anonymous said...

  அன்றே வெள்ளைக்காரர்களுக்கு வால்பிடிப்பதற்காகவும், அவர்களது போருக்கு ஆள் பிடிப்பதற்காகவும் மாமா வேலை பார்ப்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்து, வாழ்நாளெல்லாம் உழைத்து, வெள்ளைக்காரனே ஆளவேண்டும் என்று மாமா வேலை பார்த்த மூத்த மாமாவை ஒப்பிடும்போது மற்றவர்கள் எல்லோரும் சுண்டைக்காய் மாமாக்கள்தான் என்று கூற கடமைப்பட்டுள்ளேன் தோழரே.

 1. வழக்குரைஞரும், மனித உரிமைக்காக குரல் கொடுப்பவருமான கண்ணபிரானும் பார்ப்பனர்தான்...அவரையும் சந்தேகிப்பீர்களா?

 1. // //தலைமைப்பொறுப்பில் பார்ப்பனர் இருப்பதும் ஊரரியாத ரகசியங்களா என்ன?
  //
  தலை நெஜமாவா?

  இங்க தலைமை பொறுப்பில் இருக்கும் பார்ப்பனர்னு பாலபாரதிய சொல்றீங்கன்னு பேசிக்கிறாங்களே உண்மையா? (கமுக்கமா இத்த வெளியிட மாட்டியே வரவனை)

 1. மகஇக மாதிரி மானம் கெட்ட கட்சியை ஆதரிக்கணுமான்னு இவ்ளோ நாளா இருந்தேன். ஒரு பார்ப்பனர் தான் அதற்கு தலைவர் என்று தெரிஞ்சதுக்கப்புறம் வழக்கம் போல நான் அடிவருடிட்டு போயிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுடிச்சி.

 1. //உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  //அப்புறம் என்னை ஏகவசனத்தில் திட்டியதற்கு மேலே உண்மைத்தமிழன் என்று போடமறந்துவிட்டீர்கள் ((--//

  சாமிகளா.. இதென்ன புதுக் கதையா இருக்கு? நீங்க ரெண்டு பேர் அடிக்கிற மாதிரி அடிச்சுக்கிறது.. கொஞ்சுற மாதிரி கொஞ்சுறதுக்கு நான்தானா இடைல கிடைச்சேன்.. நல்லாயிருக்காங்கப்பா.. நல்லாயிருங்க.. //


  //n
  உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  மகஇக மாதிரி மானம் கெட்ட கட்சியை ஆதரிக்கணுமான்னு இவ்ளோ நாளா இருந்தேன். ஒரு பார்ப்பனர் தான் அதற்கு தலைவர் என்று தெரிஞ்சதுக்கப்புறம் வழக்கம் போல நான் அடிவருடிட்டு போயிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுடிச்சி. //  அய்யா, புன்னியவானுங்களா... அவரு எங்க ஊருக்காரரு,அதும் போக தனிப்பட்ட முறையில நல்ல மனுசன். பாவம்யா விட்டுடுங்க. அவரு பன்னுற ஒரே தப்பு துக்ளக் படிக்கிறதுதான். அதுக்காக "புதிய"முறையில அவரு போற இடத்திலை எல்லாம் போயி மொக்கை போடுறது நல்லதில்லை.

 1. //அன்றே வெள்ளைக்காரர்களுக்கு வால்பிடிப்பதற்காகவும், அவர்களது போருக்கு ஆள் பிடிப்பதற்காகவும் மாமா வேலை பார்ப்பதற்காகவே ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்து, வாழ்நாளெல்லாம் உழைத்து, வெள்ளைக்காரனே ஆளவேண்டும் என்று மாமா வேலை பார்த்த மூத்த மாமாவை ஒப்பிடும்போது மற்றவர்கள் எல்லோரும் சுண்டைக்காய் மாமாக்கள்தான் என்று கூற கடமைப்பட்டுள்ளேன் தோழரே //


  என்னவோய், அளக்கறீர். நீங்க டுபாஷ் ஆக வேலை பார்த்தது, டாபர் வேலை பார்த்தது எல்லாம் நேக்கு நன்னா தெரியும் ஓய். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முதன் முதலாய் இந்தியாவில் கொண்டு வந்து நீதிக்கட்சி உங்களாவாக்கு அடித்த ஆப்பு இப்படி பேசவைக்கிறது.

 1. உங்களைப் போல் இதை விட படு கோழைத்தனமாக, மானங்கெட்டதனமாக, முதுகெலும்பில்லாத முறைகளில் வேறு எவனாலும் விவாதிக்க முடியாது

  அடத்தூதூதூ... கோழைகளா

  உங்கள் தலைவர்களை விமர்சித்தால் பதிலுக்கு விமர்சிப்பவர்களின் சாதியைத் தான் இழுப்பீர்களா?

  நீங்கள் சாணியடிக்கக் கிளம்பியிருப்பவர்களின் செயல்பாட்டில் எங்காவது பார்ப்பனியத்தின் சாயலையாவது உங்களால் காட்ட முடியுமா? ஆனால் நீங்களோ ஒரு பர்பெக்ட் மனுவாதியைப் போல் நடந்து கொள்கிறீர்கள்..

  தனிப்பட்ட முறையில் உங்கள் மேல் இருந்த நன்மதிப்பும் இத்தோடு தகர்ந்து போனது செந்தில்

  உங்களுக்கும் பாப்பானுக்கும் என்னய்யா வித்தியாசம்?

 1. //பிரபு ராஜதுரை Said....
  வழக்குரைஞரும், மனித உரிமைக்காக குரல் கொடுப்பவருமான கண்ணபிரானும் பார்ப்பனர்தான்...அவரையும் சந்தேகிப்பீர்களா? //

  வக்கீலய்யா, இது வேற சந்தேகம். எங்க பக்கமும் மு.வ, சின்னக்குத்தூசின்னு "பிறப்பால்"மட்டுமே பார்பனர்கள் உண்டு. மு.வ குறித்து ஒருவர் இது போன்று கேள்வி எழுப்பிய போது அண்ணா சொன்னார் " அவர் விதிவிலக்கு : விதிவிலக்குகள் பொதுவிதியாகாது" என்று . இனத்தூய்மை பார்த்திருந்தால் திராவிட இயக்கம் தமிழருகான இயக்கமாக மட்டுமே இருந்திருக்கும்.இம்மண்ணில் காணாமல் போயிருக்கும்.

 1. //
  குரல்கள் சைட்...
  உங்களைப் போல் இதை விட படு கோழைத்தனமாக, மானங்கெட்டதனமாக, முதுகெலும்பில்லாத முறைகளில் வேறு எவனாலும் விவாதிக்க முடியாது

  அடத்தூதூதூ... கோழைகளா

  உங்கள் தலைவர்களை விமர்சித்தால் பதிலுக்கு விமர்சிப்பவர்களின் சாதியைத் தான் இழுப்பீர்களா?

  நீங்கள் சாணியடிக்கக் கிளம்பியிருப்பவர்களின் செயல்பாட்டில் எங்காவது பார்ப்பனியத்தின் சாயலையாவது உங்களால் காட்ட முடியுமா? ஆனால் நீங்களோ ஒரு பர்பெக்ட் மனுவாதியைப் போல் நடந்து கொள்கிறீர்கள்..

  தனிப்பட்ட முறையில் உங்கள் மேல் இருந்த நன்மதிப்பும் இத்தோடு தகர்ந்து போனது செந்தில்

  உங்களுக்கும் பாப்பானுக்கும் என்னய்யா வித்தியாசம்? //
  என்ன தோழரே , ஏன் இவ்வளவு கோபம்


  என் மீது மதிப்பு வைத்திருந்தற்கு நன்றி. என் கருத்துகளால் எற்பட்ட சூழலால் எனக்கும் வருத்தமளிக்கிறது. விமர்சனம் என்பது அவர்களின் செயல்பாட்டை பற்றி என்றால் ஒரு சமுதாய இயக்கத்தின் தலைவரை மாமா என்பது விமர்சனமா என்று தெளிவுபடுத்துங்கள் தோழரே.

 1. 12:00 PM  
  மருதய்யர் said...

  04432539468

  இந்த நம்பரை நோட் பண்ணிக்குங்க. ஒரு ரூபாய் காயின் போட்டு வெட்டிடுவோம், குத்திடுவோம்னு போன் பண்ணுவோம்.

 1. //சமுதாய இயக்கத்தின் தலைவரை மாமா என்பது விமர்சனமா என்று தெளிவுபடுத்துங்கள் தோழரே.//

  நீங்க சொல்வது ராமதாஸ் என்றால்...

  "சமுதாய இயக்கத் தலைவர்" என்கிற புனித வட்டம் எதற்கு? சாதி சங்கத் தலைவன் என்று பச்சையாக சொல்ல வேண்டியது தானே?
  அவருடைய சமுதாயப் பணிகளைப் பார்த்து அந்த "மாமா" விமர்சனம் முன்வைக்கப் படவில்லை. அவர் சிறுவனிகர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய எத்தனிக்கும் கருங்காலித்தனத்தை, கோக் பிரச்சினையில் மாலடிமையில் புள்ளையாண்டான் அடித்த பல்டியை விமர்சித்தே அந்த பதம் படுத்தப்பட்டது. அந்த விமர்சனம் தவறென்றால் விவாதித்து முறியடிக்கலாமே? பதிலுக்கு ஒரு கீழ்த்தரமான மனுவாதியைப் போல் நடந்து கொள்வது சரிதானா?

  நீங்கள் குறிப்பிடுவது வீரமனியென்றால்..

  பெரியார் பெயரைப் பயன்படுத்தி தமிழகத்தின் நெற்களஞ்சியத்தை பன்னாட்டு சதித்திட்டத்தின் அங்கமாக மூங்கில் காடாக மாற்றும் முயற்சியை விமர்சித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெரியார் பெயர் சொல்லி கூட்டிக் கொடுத்த கயமைத் தனத்தை விமர்சித்து சொல்லப் பட்ட வார்த்தை...

  உங்களுக்கு வீரமனியின் செயல் நியாயம் என்று பட்டிருந்தால் அதை விவாதித்து நிறுவியிருக்கலாம்.. ஆனால் நீங்கள் செய்ததோ கோழைகளின் வழக்கத்தை.

 1. செந்தில்,

  மு.வ பார்ப்பனர் கிடையாது, முதலியார். நீங்கள் குறிபிடுவது அண்ணாவால் 'அக்கிரகாரத்தில் ஒரு அதிசயப்பிறவி' என்று அழைக்கப்பட்ட வ.ரா என்று நினைக்கிறேன். நீங்களாக ஒரு வரலாற்றை உருவாக்காதீர்கள். அதேபோல வாலேசு அய்யர் அல்ல, வல்லபேசு அய்யர். அசுரன் கூட பார்ப்பனர் என்று பிரச்சாரம் நடக்கிறது. நானறிந்தவரை அசுரன் பார்ப்பனர் அல்ல.

 1. திருத்தியமைக்கு நன்றி திவாகர், எழுத்து பிழைகள் என் பதிவில் மலிந்துகிடப்பது ஒன்றும் புதில்லையே. ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு எல்லாம் வரலாறை திருத்த பார்க்கிறேன் என்பதெல்லாம். புறாவுக்காக போரா என்பது போல்தான் இருக்கிறது :))))))))))))))

  ஆம் அசுரன் பார்ப்பனர் என்பதெல்லாம், இவர்களாக அவிழ்த்துவிடும் பொய் மூட்டைகள்.

 1. அசுரன் தான் வல்லபேசு அய்யர் என்பதாகவும் பட்சிகள் சொல்லுகின்றன.

 1. //உங்கள் தமிழன் said...
  அசுரன் தான் வல்லபேசு அய்யர் என்பதாகவும் பட்சிகள் சொல்லுகின்றன. //  அடடடா விடுங்கப்பா...

  உங்களுகென்ன கமென்ட் போட்டுட்டு அமுங்கிகுவிங்க, ரீவிட்டு இங்கதானே அடிக்கிறனுக...


  :((((( பயம்ம்ம்ம்மா இருக்கு

 1. //உங்களுகென்ன கமென்ட் போட்டுட்டு அமுங்கிகுவிங்க, ரீவிட்டு இங்கதானே அடிக்கிறனுக...//

  :-)))))))))))))))

  என்னோட போன் நம்பர் 100. தில் இருந்தா எந்த தோழராவது போன் பண்ணி நான் ஆம்பளையான்னு கேட்கட்டும்.

 1. //மிதக்கும்வெளி said...
  செந்தில்,

  மு.வ பார்ப்பனர் கிடையாது, முதலியார் //  இத போலத்தான்யா நானும் ஒரு தகவல சொன்னேன் அதுக்கு அடிக்கறேன்னு சொல்லுறனுங்க. ஹிஹி நான் வேன்னா போன் போட்டு டேய் மு.வ முதலியார்னு எப்படிடா சொல்லபோச்சுன்னு மிரட்டவா உங்களை.

 1. 2:39 PM  
  Anonymous said...

  "மாமா" ஆசிரியர் வீரமணியா இல்லை தோழர். மருதையனா என்பது தேவையில்லாத விவாதம்.

  Do you mean to say that both are
  "மாமா"s ?. If so that is OK.

 1. //Anonymous said...
  .

  Do you mean to say that both are
  "மாமா"s ?. If so that is OK. //


  சரி பன்னாடை, இங்கு ரத்தம் குடிக்கும் உன் வேலை நடவாது

 1. 2:47 PM  
  Anonymous said...

  When any foreigner come to help or give employment you all cre neo colonialism or neo imperialism. what do you have to give for the straving people. There is no water in Cauvery and they have to find replacement crop for rice and that's what they are doing. But you won't back down from what some criminals from Russia said and anyone who speaks up are killed. But sooner or later people will clearly identify you.

 1. 3:06 PM  
  Anonymous said...

  பிரக்ஞை என்ற சிற்றிதழ் தொடங்கப்பட்ட போது அதில் ஆசிரியர் குழுவில் இருந்தவர்தான் பின்னர் மக இகவில் வேறொரு பெயரில் இருப்பவர். மருதையன், வல்ல சபேசன், வீராச்சாமி போன்ற பெயர்கள் எதுவாக இருந்தாலும் நபர்(கள்) கொள்கைப் பிடிப்புடன், சமரசம் செய்யாமல்,
  அதிகார வர்க்கம் காட்டும் சலுகைகளுக்கு விலை போகாமல் இருப்பதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.அவ்வாறு நோக்குங்கால் மக இக, அதன் தலைமை அமைப்பான மால்.லெ கட்சி (மாநில சீரமைப்புக் குழு) இன்னும் சமரசம் செய்து கொள்ளமல் இருப்பதையும், தன்னார்வக் குழுகள் மீது விமர்சனம் வைப்பதையும், சிறு பத்திரிகை இலக்கிய-பண்பாட்டுச் சேற்றில் புதைந்து போகாமல்
  இருப்பதையும் அவதானிக்க இயலும். கொள்கைகள் சரியோ, தவறோ, அவ்வமைப்பும்,
  அதன் முண்ணனி அமைப்புகளும் இன்னும் இயங்குகின்றன. இன்னொரு அமைப்பு, கேடயம்,
  மன ஒசை பத்திரிகைகளை நடத்திய அமைப்பு/மாலெ கட்சி 1991ல் சிதறியதையும், அதற்குப்
  பின் அது தேங்கி, குழுக்களாக பிரிந்துவிட்டதையும் கருத்தில் கொள்க.
  இந்த்துவ பாசிசத்தினை தொடர்ந்து 1980களிலிருந்தே மக இக, அதன் அரசியல் கட்சி
  தலைமை தொடர்ந்து தீவிரமாக எதிர்த்து வந்துள்ளது.பாஜக விலிருந்து பிரிந்து தனியாக இந்த்துவ கட்சி கண்ட உமா பாரதியை தன் கட்சி அலுவலகத்தில் வரவேற்ர வீரமணி எங்கே, மருதையன் எங்கே. மோடியின் இனப்படுகொலையினை
  கண்டிக்காமல் பதவியில் கண்ணும் கருத்துமாக, பாஜகவுசன் அரசியல் சல்லாபம் செய்தவர்கள் கருணாநிதி, வைகோ, மற்றும் ராமதாஸ்,ஜெ காட்டுத்தனமாக அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய போது எந்த எதிர்ப்பும் காட்டாமல் மெளனம் காத்த வீரமணியை விட மருதையன்கள் பெரியாரின் உண்மைத் தொண்டர்கள் என்பதில் ஐயமில்லை.

  வரலாறு தெரியாத
  வரவனையான்கள் தாங்கள் முட்டாள்கள் என்பதை எத்தனை முறைதான் நிருபீப்பார்கள்.

 1. 5:08 PM  
  Anonymous said...

  மொத்தத்துல ம.க.இ.க.வினருக்கு சொந்த முகம் கிடையாது. எல்லாம் முகமூடிகள்தான். அதாவது அனானிகளைப் போல் போலிப் பெயரில் செயல்படும் - கம்யூனிச விரோதிகள். அது மட்டுமா? அந்த மாநில சீரமைப்புக்குழு சார்பாக ஒரே ஒரு இயக்கம் கூட நடத்தாத திண்ணை வேதாந்திகள். எல்லாம் ம.க.இ.க. சர்வமயம். இது ஒரு கும்பமேளா குரூப். ம.க.இ.க.. பு.தொ.வி.மு.. பு.வி.தொ.மு. என க.... முதல் ன வரை இயக்கம் நடத்தும் அனானிகள் எல்லாம் ஒரே முகம்தான். சீர்குலைவுவாதத்தையே தன்னுடைய கட்சியின் கொள்கையாக வைத்திருப்பவர்கள். தற்போது இவர்களது புரட்சிகர வேலை இணையத்தில் ஆள் பிடிப்பது. அனானியா திரியும் இதுகள் அனானிகளுக்க எல்லாம் பதில் சொல்லாத புரட்சிகர வாய்வீச்சு சித்தாந்த வியாதிகள்.

 1. இங்கே ஒரு அன்பர் ஈவெரா அவர்களை ஜஸ்டிஸ் கட்சியை ஆரம்பித்தவர் என்று எழுதியிருக்கிறார். அது உண்மை அல்ல. காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தவும், தங்களுக்கு ஆதரவான கட்சி வேண்டும் என்று பிரிட்டிஷார் ஜஸ்டிஸ் கட்சியை ஆரம்பிக்க உதவியது உண்மைதான். ஆனால், அப்போது ஈவெரா ஜஸ்டிஸ் கட்சியில் இல்லை.

  இரண்டாவது இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தது ஜஸ்டிஸ் கட்சிதான். அது பிரித்தாளும் சூழ்ச்சிக்காக பிரிட்டிஷாரால் முன்மொழியப்பட்டு கொண்டுவரப்பட்டது. 1920இல் சென்னை மாகாணத்தில் ஆட்சிக்கு வந்த ஜஸ்டிஸ் கட்சி இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தது. ஆனால், பெரியார் ஜஸ்டிஸ் கட்சியில் 1925இல் தான் சேர்ந்தார். அதுவரை அவர் காங்கிரஸில்தான் இருந்தார்.

  ஆகவே இட ஒதுக்கீடு சென்னை மாகாணத்தில் வந்ததற்கு ஈவெரா எந்த விதத்திலும் காரணம் அல்ல.

  ஆனால், 1918இலேயே காங்கிரஸ் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை முன் வைத்துவிட்டது

  அதனை பிரிட்டிஷார் பயன்படுத்திக்கொண்டு, அன்றைய ஆதிக்க சாதிகளுக்கு ஒன்றுமில்லை என்ற பிம்பத்தை உருவாக்கி, ஆதிக்க சாதிகள் நிறைந்த ஜஸ்டிஸ் கட்சியை உருவாக்கி, பிரித்தாளும் சூழ்ச்சிக்காக வேறு முறையில் இந்திய மக்களை பிரிக்கும் வண்ணம் பிரச்சாரத்துக்கும் காங்கிரஸை பலவீனப்படுத்தவும் ஜஸ்டிஸ் கட்சி மூலம் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தனர்.

  மேலும் பார்ப்பனர்கள் படித்திருந்தார்கள், மற்றவர்கள் படிப்பறிவை மறுத்தார்கள் என்பதும் பிரிட்டிஷ் கிறிஸ்துவ பிரச்சாரத்தின் படி பெரியார் பிரச்சாரம் செய்தாரே தவிர அது உண்மை அல்ல.

  திண்ணை பள்ளிக்கூடங்கள் மூலம் ஆதிக்க சாதிகள் உள்ளிட்ட அனைத்து சாதிகளுக்கும் கல்வி போதித்ததன் மூலம் வயிறு வளர்த்து வந்த பார்ப்பனர்களை, திண்ணை பள்ளிக்கூடங்க்ளை ஒழித்ததன் மூலம் வேலையற்றவர்களாக ஆக்கி கிராமங்களிலிருந்து துரத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம்.

  ஆதிக்க சாதிகளிடம் வேலை கிடைக்காமல், நகரத்துக்கு வந்தவர்கள் அரசாங்க வேலைகளுக்கு சென்றார்கள். ஆதிக்க சாதிகள் மற்றவர்களிடம் வேலை பார்ப்பவர்கள் அல்லர். அதனால், அரசாங்கத்திடமோ அல்லது மற்றவர்களிடமோ வேலை செய்வதை கீழாக நினைத்தார்கள். பார்ப்பனர்கள் கூலி வேலை செய்தே பழக்கப்பட்டதால், பிரிட்டிஷ் அரசாங்கத்திடமும் வேலைக்குபோனார்கள். ஆனால், மிகவும் சாதுரியமாக இதனை தங்களது பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பயன்படுத்திக்கொண்ட பிரிட்டிஷாரும் கிறிஸ்துவ மிஷனரிகளும், பார்ப்பனர்களை இதில் வில்லன்களாக ஆக்கினார்கள்.

 1. இங்கு கடை மூடப்படுகிறது. தோழர்களை கேள்வி கேட்க விளையும் தோழர்கள், அனானிகள் மற்றும் பார்ப்புகள் அங்கு சென்று கேட்கவும்.